வியாழன், 31 அக்டோபர், 2019

நடப்பாண்டில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ~ தேர்வு மையம் அமைப்பது குறித்து வழிமுறைகள் வெளியீடு...

சேமிப்பின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்~ பெற்றோர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…


2019 - 2020 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு / அரசு நிதியுதவிப் பெறும் பள்ளிகளுக்கான நவம்பர் 2019 ஆம் மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி விவரப்பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

*🌷அக்டோபர் 31, வரலாற்றில் இன்று.*
---------------------------------------------------
*முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியான தினம் இன்று(1931).*


*இது தமிழின் முதல் பேசும்படம் என்று சொல்லப்பட்டாலும் தமிழில் வெளியான தனித்தமிழ் பேசும் படமல்ல; தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பேசிய பாடிய படமும்கூட.*


      *இப்படத்தை இம்பீரியல் மூவிடோன் நிறுவனம் சார்பாக தயாரித்தவர் இந்தியாவின் முதல் பேசும்படமான 'ஆலம் ஆரா'வைத் தயாரித்திருந்த பூனாவைச் சேர்ந்த அர்தேஷிர் இரானி என்பவராவார்.*
     *'காளிதாஸ்' திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் அன்றைக்கு தென்னிந்திய நாடக மேடைகளில் புகழ் பெற்றிருந்த டி.பி.ராஜலட்சுமி ஆவார். கதையின் நாயகனாக நடித்திருந்தவர் வெங்கடேசன். இப்படத்தில் துணை நடிகர்களுள் ஒருவராக நடித்திருந்தவர் பின்னாளில் திரையுலக ஜாம்பவனாகக் கருதப்பட்ட L.V.பிரசாத் அவர்கள்.*
       *1931 அக்டோபர் 31 அன்று சென்னை கினிமா செண்ட்ரல் ( பின்னாளில் ஸ்ரீமுருகன்) திரையரங்கில் வெளியான 'காளிதாஸ்' திரைப்படம், எட்டாயிரம் ரூபாய் செலவில், எட்டு நாளில் தயாரிக்கப்பட்டு, 75000 ரூபாய் வசூலித்ததாக தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் பிரபல எழுத்தாளர் அறந்தை நாராயணன்.*


       *H.M.ரெட்டி இயக்கியிருந்த இவ்வெற்றிப் படத்தின் மூலம் தமிழ்த்திரையின் முதல் நாயகியாக அறிமுகமான T.P.ராஜலெட்சுமி அவர்கள் 'சினிமாராணி', 'டாக்கி ராணி' என்கிற பட்டங்களையெல்லாம் பின்னாளில் பெற்றார் என்பது வரலாறு.*
*🌷அக்டோபர் 31, வரலாற்றில் இன்று.*
------------------------------------------------------
 *இந்திரா காந்தி,  தனது இரண்டு பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று(1984).*

*இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமரும் மூன்றாவது பிரதமரும் ஆவார்.*


*அமிர்தசரஸ் பொற்கோயிலினுள் பதுங்கியிருந்த ஆயுதம் ஏந்திய காலிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை மூலம் சுட்டுக் கொன்ற காரணத்தால் சீக்கிய மக்கள் இந்திரா காந்தி மீது கோபம் கொண்டிருந்தனர். அதன் விளைவாகவே இந்திரா காந்தி தனது இரண்டு சீக்கிய பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து புது டில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.*
*🌷அக்டோபர் 31, வரலாற்றில் இன்று.*
----------------------------------------------------

*தேசிய ஒற்றுமை தினம் இன்று.*

🏁 *சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரிக்கிறது.*

🏁 *நம் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் விஷயங்களை எதிர்த்து நிற்க, நமக்குள் இருக்கும் உள்ளார்ந்த வலிமையையும், எதிர்த்து நிற்கும் திறனையும் உறுதி செய்ய, இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.*

⚑ *இந்தியாவின் 'இரும்பு மனிதர்" என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி குஜராத்தில் பிறந்தார்.*

⚑ *அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சனைகளுக்கு உதவி பிரபலமானார். 1917ஆம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.*

⚑ *குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்து வரியை ரத்து செய்தது. படேலின் முதல் வெற்றி இது!*

⚑ *பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் 'சர்தார்" என்று அன்போடு அழைக்கப்பட்டார்.*

⚑ *சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.*

⚑ *நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார். இவர் 75ஆவது வயதில் (1950) இறந்தார்.*


 *1991இல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.*

இனி laptop தேவையில்லை. laptop-இல் open ஆகும் அனைத்து பக்கங்களும் இனி நமது ஆண்ட்ராய்டு மொபைலிலும் open ஆகும்...



அதற்கு தேவை puffin web browser எனும் App... 

Steps...

1.Google Play Store...➡ puffin web browser....➡ install. 

2.Apps Open...➡click 3 dots...➡ click settings🔆...➡ click Webpage preference....➡ click  Request desktop site.... 
           
அவ்வளவு தான்.இனிமேல் EMIS open செய்து login கொடுத்து எதனை update செய்ய வேண்டுமோ அதனை update செய்யலாம்.

Click here for install...

https://play.google.com/store/apps/details?id=com.cloudmosa.puffinFree

புதன், 30 அக்டோபர், 2019