செவ்வாய், 5 நவம்பர், 2019

*🌏நவம்பர் 5,*
*வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------------
 *உலக சுனாமி விழிப்புணர்வு தினம் இன்று.*

*2016ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 5ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட உள்ளது.*

*2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் எடுக்கப்பட்ட முடிவின் படி,  நவம்பர் 5ஆம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது.*

*எப்போதாவது ஒரு முறை அதிசயமாக நேரக்  கூடிய ஒரு இயற்கை சீற்றம்தான் சுனாமியாகும்.*

*ஆனால் மிகவும் பயங்கரமானது.*

*கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட 58 சுனாமிகளால்  மட்டும் 2 லட்சத்து 60ஆயிரம் பேர்  மாண்டிருக்கிறார்கள்.*

*சராசரியாக ஒரு சுனாமிக்கு 4600 பேர் என்ற வீதத்தில்  பலியாகியிருக்கின்றனர்.*

*முன்கூட்டியே கணித்து துரித அறிவிப்பு செய்வதன் மூலம் நம்மால் சுனாமியினால் உண்டாகும் உயிர்பலிகளைக் குறைக்க முடியும்.*

*ஆனால் அதை செய்வதற்கு தனி நபர் மற்றும் சமுதாய விழிப்புணர்வு என்பது அவசியமான ஒன்றாகும்.*

EMIS ல் வார வாரம் TIME TABLE பதிவு செய்துவிட்டீர்களா!

Click here for video...
https://youtu.be/jGEGP46Fk2Y

திங்கள், 4 நவம்பர், 2019

புதிய எல்லையுடன் இந்திய வரைபடம் ~ மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு…

*🌷நவம்பர் 4,*
*வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------------
 *தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் நினைவு தினம் இன்று.*

*'தமிழ்த் தாத்தா' உ.வே.சாவின் மாணவரான இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்கு நூல்களை எழுதியவர்களில் இவர் குறிப்பிடத் தகுந்தவர்.  இவர் எழுதிய வீரர் உலகம் எனும் நூலுக்கு 1967 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது.*
*🌷நவம்பர் 4,*
*வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------------
 *இயற்கையை நேசித்த பேராசிரியர் ஜானகி அம்மாள் பிறந்த தினம் இன்று.*


*ஜானகி அம்மாள்* *(நவம்பர் 4, 1897 - பிப்ரவரி 1984)*
*கேரள மாநிலம், தலச்சேரியைச் சேர்ந்தவர்.*

 *சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியையாகப் பணியாற்றியவர்.*

 *கோயம்புத்தூரில் 1930இல் கரும்பு, மூங்கில் ஆகியவற்றின் மரபணு ஆராய்ச்சியில் இவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது.*

 *1935இல் இந்திய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இளம் மாணவர்களையும் அறிவாளிகளையும் ஊக்கப்படுத்த 1999இல் ஜானகி அம்மாள் விருது உருவாக்கப்பட்டது.*
*🌷நவம்பர் 4,*
*வரலாற்றில் இன்று.*
------------------------------------------------------
*அறிவியல் இதழான நேச்சர் முதல் முறையாக வெளியிடப்பட்ட தினம் இன்று (1869).*


*நேச்சர் (Nature) என்பது 1869ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் தொடங்கி இன்றும் தொடர்ந்து ஆங்கில மொழியில் வெளிவந்து கொண்டிருக்கும் உயர்தரமான ஓர் அறிவியல் ஆய்விதழ்.*

 *இது இங்கிலாந்திலிருந்து வெளியாகும் இதழ்.*

 *உலகின் மிக உயர்ந்த உள்ளொழுக்கமுள்ள அறிவியல் ஆய்விதழ்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.*

 *பெரும்பாலான அறிவியல் சார்ந்த ஆய்விதழ்கள் தற்காலத்தில் தனிச்சிறப்பு பெற்றுள்ளன.*

 *அவற்றுள் நேச்சர் போன்ற சில ஆய்விதழ்களான, சயன்சு மற்றும் த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு போன்ற, மற்ற கிழமை (வார) ஆய்விதழ்களையும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இவை இன்றளவும் அறிவியல் சார்ந்த துறைகளில் நேர்த்தியான ஆய்வுக்கட்டுரைகளைப் பெருமளவில் வெளியிட்டு வருகின்றன. பல்வேறு அறிவியல் சார்ந்த ஆய்வுத்துறைகளில் மேற்கொள்ளப்படும் முக்கிய வளர்ச்சி மற்றும் நேர்த்தியான ஆய்வு உள்ளிட்ட நிகழ்வுகள் நேச்சர் ஆய்விதழில் கட்டுரையாகவோ அல்லது கடிதம் (மடல்) அல்லது செய்திக்குறிப்பு வடிவிலோ வெளியிடப்படுகிறது.*

ஞாயிறு, 3 நவம்பர், 2019

நிலாவில் புதிய வாயு~ இஸ்ரோ கண்டுபிடிப்பு…

இணையதளத்தின் மூலம் பி.எப் கணக்கு எண்ணை ஊழியரே உருவாக்கலாம்...

*🌷நவம்பர் 3,*
*வரலாற்றில் இன்று.*
------------------------------------------------------
*காந்திஜி பற்றிய ஆவணப்படத்தை எடுத்தவரும், பயண இலக்கியத்துக்கு முன்னோடியுமான ஏ.கே.செட்டியார் பிறந்த தினம் இன்று(1911).*

*திருவண்ணாமலை அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்தவர்.*

 *இவரது இயற்பெயர் கருப்பன்.*
*திருவண்ணாமலையில் நடுநிலைப் பள்ளிக் கல்வி வரை பயின்றார். சிறுவயது முதலே எழுதும் ஆர்வம் கொண்டிருந்தார். 17ஆவது வயதில் இவர் எழுதிய ‘சாரதாம்பாள் - சிறு தமாஷ்’* *என்ற கதை ஆனந்தவிகடனில் வெளிவந்தது.*
*பர்மாவில், 1930இல்* *'தனவணிகன்’ என்ற மாத இதழின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார்.* *1935இல் ஜப்பான் இம்பீரியல் ஆர்ட்ஸ் கழகத்தில் சேர்ந்து புகைப்படக் கலையைப் பயின்றார்.* *அதில் சிறப்புப் பயிற்சி பெற நியுயார்க் சென்று ஃபோட்டோகிராபிகல்* *இன்ஸ்ட்டிடியூட்டில் ஓராண்டு டிப்ளமோ பெற்றார்.*
*முதன்முதலாக மகாத்மா காந்தியைப் பற்றிய வரலாற்று ஆவணப்படம் எடுத்தார். 1937இல்* *தென்னாப்பிரிக்கா சென்றார். மேலும் பல நாடுகளுக்குச் சென்று அந்நாட்டு அரசு மற்றும் தனியார்களிடம் இருந்து காந்திஜி வாழ்க்கை தொடர்பாக சுமார் 50,000* *அடிப் படச்சுருள்களைச் சேகரித்தார்.*
*3 ஆண்டு காலமாகத் தான் திரட்டிய தகவல்கள்,* *ஆவணங்களின் அடிப்படையில், ‘மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கை சம்பவங்கள்’ என்ற* *படத்தைத் தமிழில் தயாரித்து, 1940ஆம் ஆண்டு வெளியிட்டார்.* *இதன்மூலம் முதன்முதலாக மகாத்மா காந்தி பற்றிய ஆவணப்படம் எடுத்தவர் என்ற பெருமையைப்* *பெற்றார். அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு பயந்து திரையரங்குகள் இதைத் திரையிட முன்வரவில்லை.*
*இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ஆம் ஆண்டு, சுதந்திர தினத்தன்று புதுடில்லியில் இந்தி மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதையே 1953இல் ஆங்கிலத்தில்* *தயாரித்து ஹாலிவுட்டில் வெளியிட்டார்.*
*1912இல் கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், காந்தியுடனான அவரது சந்திப்பு, நேருஜி கைராட்டினம் சுற்றும் காட்சி, உப்பு சத்தியாக்கிரகத்தை* *முடித்துக்கொண்ட காந்தியடிகள், தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் ஆவணப் படத்தில் இடம்பெற்றிருந்தன.*


*பல நாடுகளுக்கும் தான் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி நூல்கள் எழுதி வெளியிட்டார்.* *‘உலகம் சுற்றும் தமிழன்’ என்று இவர் எழுதிய நூற்பெயரே இவரது அடை மொழியாகவும் சிறப்புப் பெயராகவும் மாறியது. மேலும் ‘பிரயாண நினைவுகள்’, ‘மலேயா முதல் கனடா வரை’, ‘கயானா முதல் காஸ்பியன் கடல்வரை’, ‘குடகு’, ‘இட்ட பணி’, ‘ஐரோப்பா வழியாக’, ‘ஜப்பான் கட்டுரைகள்’ ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.*
*விளம்பரத்தை விரும்பாதவர் என்பதால், இவரது புகைப்படம் கிடைப்பதுகூட அரிதாக இருந்தது. பாரதியிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அவரது தொகுக்கப்படாத படைப்புகளைக் கண்டெடுத்து வெளியிடுவதில் பெரும்பங்காற்றினார்.* *1943இல் ‘குமரி மலர்’ என்ற மாத இதழை வெளியிட்டார்.*
*ச.வையாபுரிப் பிள்ளை, க.அ.நீலகண்ட சாஸ்திரி, டி.எஸ்.சொக்க லிங்கம், ஏ.என். சிவராமன், பாரதிதாசன், டி.கே.சி., வ.ரா., தி.ஜ.ர., கல்கி, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரிசாமி உள்ளிட்ட பல இலக்கியவாதிகள் இதில் தொடர்ந்து எழுதி வந்தனர்.*
*1850 முதல் 1925ஆம் ஆண்டு வரை பல்வேறு இதழ்களில் வெளிவந்த 140 கட்டுரைகள் அடங்கிய ‘தமிழ்நாடு பயணக் கட்டுரை’ என்ற நூலைத் தொகுத்து வெளியிட்டார்.*

*தமிழில் பயண இலக்கியத்தைத் தொடங்கி வைத்தவர் என்ற பெருமைக்குரிய ஏ.கே.செட்டியார், 1983ஆம் ஆண்டு, 72ஆவது வயதில் காலமானார்.*
*🌷நவம்பர் 3,*
*வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------------
 *பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பிறந்த தினம் இன்று.*

*+அமர்த்தியா சென் (Amartya Sen)* *இந்தியாவைச் சேர்ந்த ஒரு-* *பொருளாதார* *அறிஞர் ஆவார்.*

*இவர் 1998இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999இல் பாரத ரத்னா விருதும் பெற்றார்.*

 *இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.*