புதன், 6 நவம்பர், 2019

அரசு சிறப்பு செயலாளர் அரசு ஊழியர்கள் சம்பளம் தொடர்பாக கருவூலத்துறைக்கு கடிதம்


சாரண சாரணீய இயக்கப் பொறுப்பாசிரியர்களுக்கு மாநில அளவிலான அடிப்படை / முன்னோடிப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுதல் - சார்பு....

நாமக்கல் மாவட்டம் - பள்ளிக் கல்வித் துறை (Jal Shakthi Abiyan ) - மரம் நடுதல் - புகைப்படங்களை பதிவேற்றம் செய்த விபரங்கள் வேண்டுதல் - சார்பு...



*🌷நவம்பர் 6,*
*வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------------------
*கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் பிறந்த தினம் இன்று.*

*இவர் 1861ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி கனடாவில் பிறந்தார்.*

*இவர் ஒரு கனடா விளையாட்டு கல்வி ஆசிரியரும், அமெரிக்க கால்பந்தாட்டத்தின் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். 1891ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார். இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.*

*இவர் 1891ல் மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டை கண்டுப்பிடித்தார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 1904ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு, 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு இருந்தது.*

*1898ல் நெய்ஸ்மித் கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரும், முதல் கூடைப்பந்து பயிற்றுனராவும் ஆனார். இவர் 1939ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி காலமானார்.*
*🌷நவம்பர் 6,*
*வரலாற்றில் இன்று.*
---------------------------------------------------------
  *ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் இன்று (1860).*

 *இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார். செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்தான் ஆபிரகாம் லிங்கன். சிறு வயது முதலே பல தோல்விகளை சந்தித்தார் . தோல்வி என்பது அவரின் வாழ்கையின் ஒரு நிரந்தர நிகழ்வாக இருந்தது. இருப்பினும் தனது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார்.*
நவம்பர் 6,
வரலாற்றில் இன்று.

தென்னாபிரிக்காவில் காந்தி,
இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட தினம் இன்று (1913).

இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீதான 3 பவுண்ட் வரி, இந்து மற்றும் முஸ்லிம் திருணங்களை செல்லாததாக்கும் அரசு உத்தரவு ஆகியவற்றுக்கு எதிராக, 1913இல் காந்தி தனது ஆதரவாளர்களுடன் நடைப்பயணம் தொடங்கினார். இவர்கள் நடால் மாகாண எல்லையை கடந்து டிரான்ஸ்வால் மாகாண எல்லைக்குள் நுழைந்த போது, காந்தியும் உடன் சென்ற அனைவரும் கைது செய்யப்பட்டு வாக்ஸ்ரஸ்ட் சிறையில் அடைக்கப்பட்டனர்

செவ்வாய், 5 நவம்பர், 2019

5,8வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுதல்_உரிய பயிற்சிகள் வழங்கிட தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தல்



*🌷நவம்பர் 5,*
*வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------------
*தேசபந்து சித்தரஞ்சன்* *தாஸ் பிறந்த தினம் இன்று.*

*சித்தரஞ்சன் தாஸ் (நவம்பர் 5, 1870 - ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.* *தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும்* *அன்புடன் அழைக்கப்பட்ட*
*இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்.* *1917ஆம் ஆண்டிலிருந்து 1925ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர். இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.*

*இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு.*
*அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் தாஸ் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.*

*1925ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று டார்ஜிலிங்கில் தனது 55ஆவது வயதில் காலமானார்.*
*அவரது உடல் கல்கத்தாவுக்குக் கொண்டுவரப்பட்டு மக்களின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.* *இரண்டு மைல் நீளத்திற்கு மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்தனர். தாகூர்,* *சித்தரஞ்சன் தாஸைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அவரது தியாகமும் ஆக்க சக்தியும் நம்மை வழிநடத்தும் என்று கூறுகிறார். அவரது தாராள குணம் நினைத்துப்* *போற்றத்தக்கது. அவரது இல்லம் "சித்தரஞ்சன் சேவாசதன்" என்ற பெயரில் மருத்துவமனையாகச் செயல்படுகிறது.*
*மேற்கு வங்கத்தில் முக்கிய புள்ளியாக இருந்த இவர் 1919-1922 காலப் பகுதியில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து பிரித்தானியரின் ஆடைகளைப் புறக்கணிக்க முன்னின்று உழைத்தார். மோதிலால் நேருவுடன் இணைந்து சுயாட்சிக் கட்சியை ஆரம்பித்தார்.*

*ஃபோர்வார்ட் (Forward) என்ற செய்திப் பத்திரிகையை பிரித்தானிய ஆட்சியாளருக்கு எதிராக ஆரம்பித்து நடத்தினார். இப்பத்திரிகை பின்னர் விடுதலை (liberty) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இவர் பல கவிதைகளையும் இயற்றியுள்ளார். இவரது கவிதைத் தொகுப்பு சாகர் சங்கீத் என்ற பெயரில் புகழ் பெற்றவை.*
*📱நவம்பர் 5,*
*வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------------
*செல்பேசியில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் வெளியிடப்பட்ட தினம் இன்று(2007)*
*🌏நவம்பர் 5,*
*வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------------
 *உலக சுனாமி விழிப்புணர்வு தினம் இன்று.*

*2016ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 5ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட உள்ளது.*

*2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் எடுக்கப்பட்ட முடிவின் படி,  நவம்பர் 5ஆம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது.*

*எப்போதாவது ஒரு முறை அதிசயமாக நேரக்  கூடிய ஒரு இயற்கை சீற்றம்தான் சுனாமியாகும்.*

*ஆனால் மிகவும் பயங்கரமானது.*

*கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட 58 சுனாமிகளால்  மட்டும் 2 லட்சத்து 60ஆயிரம் பேர்  மாண்டிருக்கிறார்கள்.*

*சராசரியாக ஒரு சுனாமிக்கு 4600 பேர் என்ற வீதத்தில்  பலியாகியிருக்கின்றனர்.*

*முன்கூட்டியே கணித்து துரித அறிவிப்பு செய்வதன் மூலம் நம்மால் சுனாமியினால் உண்டாகும் உயிர்பலிகளைக் குறைக்க முடியும்.*

*ஆனால் அதை செய்வதற்கு தனி நபர் மற்றும் சமுதாய விழிப்புணர்வு என்பது அவசியமான ஒன்றாகும்.*