வெள்ளி, 8 நவம்பர், 2019

*🌷நவம்பர் 8,*
*வரலாற்றில் இன்று.*
---------------------------------------------------------
*தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவரும், தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான பிச்சமூர்த்தி பிறந்த தினம் இன்று.*

*தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி.*

 *வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர்.*
*🌷நவம்பர் 8,*
*வரலாற்றில் இன்று.*
---------------------------------------------------------
*‘500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம். பணமில்லாப் பரிவர்த்தனையை இந்தியாவின் பிரதானமாக்குவோம்’  என்று பிரதமர் மோடி அறிவித்த தினம் இன்று(2016).*


*சாமான்யர்கள் இரண்டாயிரம் ரூபாய்க்காக அழைந்ததையும், அதிகாரத்தில் இருந்தவர்கள் இரண்டாயிரம் ரூபாய் கட்டுகளாக வாங்கி வைத்திருந்ததையும் மறக்க முடியுமா?*
*🌷நவம்பர் 8,*
*வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------------------

*திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல்,* *ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி* *பெயர்த்த*
*வீரமாமுனிவர் பிறந்த* *தினம் இன்று (1680)*

*கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது இவரின் இயற்பெயர்.*

*கிறிஸ்துவ மதத்தை இங்கே பரப்ப வந்தவர் அதற்கு இம்மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்தவர் தமிழ் மீது தீராக்காதல் கொண்டார் என்பது வரலாறு.*

*தைரிய நாதசாமி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டு பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார்.*

*23 நூல்களை தமிழில் இயற்றிய இவர்*
*கிறிஸ்துவின் கதையை தேம்பாவணி என எழுதினார்.*
*அந்நூலில் கதை மாந்தர்களின் பெயர்களை தமிழப்படுத்தினார்.*

 *எடுத்துக்காட்டாக ஜோசப் என்பதை வளன் என்று மாற்றினார். இதற்கு மூல மொழியின் அர்த்தத்தை பயன்படுத்தினார் என்பது அவரின் உழைப்பை விளக்கும். திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார் .*

புதன், 6 நவம்பர், 2019

பள்ளிக் கல்வி - பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு சார்பான அறிவுரைகள் வழங்குதல் - சார்பு...

பள்ளிக்கல்வி_தந்தை பெரியார் பிறந்தநாள் விழா_வினாடி வினா போட்டி பள்ளிமாணவர்களுக்கு அனுமதி அளித்தல் சார்ந்த இயக்குநர் செயல்முறை நாள் 01.11.2019


ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெற வசதி ~ விரைவில் அறிமுகம்...

40 ஆண்டுகள் பயணத்துக்கு பின் விண்மீன் மண்டலத்தை அடைந்தது வாயேஜர்-2...

சாரண சாரணீய இயக்கப் பொறுப்பாசிரியர்களுக்கு மாநில அளவிலான அடிப்படை / முன்னோடிப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுதல் - சார்பு....

உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களுக்கு உலகத் திறனாய்வுத் தேர்வு (World Beaters Test) நடத்திட மாற்றுப் பணியில் பணிபுரிய நியமனம் செய்தல் சார்பு...



பள்ளிக்கல்வி-குழந்தைகள் தினம் கொண்டாடுதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை