வெள்ளி, 8 நவம்பர், 2019

*🌷நவம்பர் 8,*
*வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------------------

*திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல்,* *ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி* *பெயர்த்த*
*வீரமாமுனிவர் பிறந்த* *தினம் இன்று (1680)*

*கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது இவரின் இயற்பெயர்.*

*கிறிஸ்துவ மதத்தை இங்கே பரப்ப வந்தவர் அதற்கு இம்மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்தவர் தமிழ் மீது தீராக்காதல் கொண்டார் என்பது வரலாறு.*

*தைரிய நாதசாமி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டு பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார்.*

*23 நூல்களை தமிழில் இயற்றிய இவர்*
*கிறிஸ்துவின் கதையை தேம்பாவணி என எழுதினார்.*
*அந்நூலில் கதை மாந்தர்களின் பெயர்களை தமிழப்படுத்தினார்.*

 *எடுத்துக்காட்டாக ஜோசப் என்பதை வளன் என்று மாற்றினார். இதற்கு மூல மொழியின் அர்த்தத்தை பயன்படுத்தினார் என்பது அவரின் உழைப்பை விளக்கும். திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார் .*