வெள்ளி, 15 நவம்பர், 2019
பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அய்ஏஎச் நியமனம் பொருத்தமற்றதாகும். முந்தைய நடைமுறையே தொடரப்படவேண்டும்.இதற்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கப்பட வேண்டும்...
அன்பானவர்களே!வணக்கம்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைஇயக்ககத்துக்கு இந்தியஆட்சிப் பணி அதிகாரி( அய்.ஏ.எச்.,)
நியமனம் செய்வதென்பது
கடந்த காலத்திலும் பேசப்பட்டது;
செய்யப்பட்டது.
அக் காலக்கட்டங்களில் எல்லாம் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் மிகவலுவாக வியூகம் அமைத்துப் போராடி முறியடித்த வரலாறு உண்டு.
சர்வசிக்ச அபியான் என்ற பெயரை அப்படியே இந்தி மொழியில் தமிழகத்தில் நுழைய அனுமதிக்காது அனைவருக்கும் கல்வித்திட்டம் என்று மாற்றம் கண்டவர்கள் தமிழ்நாட்டு தொடக்கக்கல்வி ஆசிரியப்பெருமக்கள்.
அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் (எச்பிடீ)மாநிலத் திட்ட இயக்குநராக இருந்த அய்.ஏ.எச்.,அதிகாரியை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநராக தற்காலிகமாக பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டக்
காலக்கட்டத்தில் மிகக்கடுமையான எதிர்ப்பினை
பதிவு செய்து தொடக்கக்கல்வி இயக்ககப்
பொறுப்பிலிருந்து அய்ஏஎச் அதிகாரியை விடுவிக்கச்செய்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்.
புதியவரைவுக்கொள்கைவரைவறிக்கை 2019ஐ தமிழகத்தில் எவ்விதமான விவாதமும் இன்றி விருப்பம் போல் அமல்படுத்துவதின் ஒருபகுதி இத்தகு அய்ஏஎச் நியமனம் என்பதே யெதார்த்தமான உண்மையாகும். தற்போது தமிழ்நாட்டு ஆசிரியர்கள் எதிர்க்கவேண்டியது; ஆட்சேபிக்க வேண்டியது அய்ஏஎச் நியமனத்தை என்பதைவிட , புதியகல்விக் கொள்கையின் வரைவறிக்கை 2019 என்பதே மிகச்சரியானதாகும்;
மிகப்பொருத்தமானதாகும்.இவ்விலக்குநோக்கி பயணிப்போம்!
தீரமுடன் படைநடத்துவோம்!
சங்கே முழங்கு!
-முருகசெல்வராசன்.
நவம்பர் 15,
வரலாற்றில் இன்று.
ஐசக் பிட்மேன் சுருக்கெழுத்து(short hand)முறையை அறிமுகப்படுத்தின இன்று (1837).
இதுவே மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சுருக்கெழுத்தாகும். 15 மொழிகளில் இது பயன்படுத்தப்படுகிறது. விரைவாக எழுதுவதற்காக சுருக்கமாக எழுதும் முறைகள் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகமாயின.
1588இல் டிமோத்தி ப்ரைட் என்பவர், ஒவ்வொன்றும் ஒரு சொல்லைக் குறிக்கும் 500 குறியீடுகளை அறிமுகப்படுத்தினார். 1590இல் பீட்டர் பேல்ஸ், 1602இல் ஜான் வில்லிஸ், 1618இல் எட்மண்ட் வில்லிஸ், 1626இல் தாமஸ் ஷெல்ட்டன், 1633இல் தியோஃபிலஸ் மெட்கால்ஃபே, 1654இல் ஜெரமியா ரிச், 1682இல் வில்லியம் மேசன், 1720இல் ஜான் பைரோம், 1786இல் சாமுவேல் டேய்லர், 1834இல் ஜெர்மெனியில் ப்ரான்ஸ் காபெல்ஸ்பெர்ஜர் உள்ளிட்டோர் மாறுபட்ட சுருக்கெழுத்து முறைகளை உருவாக்கியுள்ளனர்.
ஆனால் சுருக்கெழுத்து முறைகள் பண்டைய கிரீஸ் நாட்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதை, கி.மு. 4ஆம் நூற்றாண்டுகால மார்பிள் பலகையால் அறிய முடிகிறது. சீனாவில் நீதிமன்ற விசாரணைகளை சுருக்கெழுத்தில் பதிவு செய்யும் முறை இருந்துள்ளது. கையால் எழுதும்போது ஒன்றோடொன்று இணைந்த எழுத்துக்களால் எழுதும் கர்சிவ் எடுத்துமுறையை லாங்ஹேண்ட் என்று குறிப்பிடுவதிலிருந்து ஷார்ட்ஹேண்ட் என்ற சொல் பிறந்தது.
மை தொட்டு எழுதும் பேனாக்களை, காகிதத்திலிருந்து எடுக்காமல் எழுதவே இந்த கர்சிவ் உருவானது. மத்தியக்கால லத்தீன் மொழிச்சொல்லான கர்சிவஸ் என்பதிலிருந்து உருவான, 18ஆம் நூற்றாண்டின் இத்தாலிய மொழிச்சொல் கர்சிவோ என்பதற்கு தொடர்ச்சியான என்று பொருள்.
பிட்மேனுக்குப் பின்னும் பல சுருக்கெழுத்து முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பிட்மேன் சுருக்கெழுத்து முறையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் டீலைன், அமெரிக்காவில் க்ரெக் ஆகிய சுருக்கெழுத்து முறைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
செய்தியாளர், செயலாளர் முதலான பணிகளுக்கு சுருக்கெழுத்துப் பயிற்சி கட்டாயம் என்றிருந்த நிலையை, எளிதில் எடுத்துச் செல்லும் ஒலிப்பதிவுக் கருவிகள், டிஜிட்டல் கேமரா, மொபைல் ஃபோன் ஆகியவற்றின் வளர்ச்சியும், பேச்சை எழுத்தாக மாற்றும் மென்பொருட்களின் வரவும் முடிவுக்கு இட்டுச்சென்றன.

கல்வியாளர் கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) பிறந்த தினம் இன்று.
சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923இல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.

நன்றி சொல்லும் தினம் இன்று.
வாருங்கள் நன்றி சொல்வோம்.
கடைசியா யாருக்கு, எப்பொழுது நன்றி சொன்னீங்கனு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
அன்றாட வாழ்வில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ பலருடைய உதவியும், வழிநடத்தலும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
சில நேரங்களில் அதை நாம் கவனித்து அவர்களுக்கு நன்றி சொல்லி விடுகிறோம்.
ஆனால், பிறந்ததில் இருந்து கடைசி வரை நம்முடன் வரும் உறவுகளுக்கு நன்றி சொல்லியிருப்போமா என்று கேட்டால், அதற்கு பலரின் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். இதுவரை சொல்லாமல் இருந்தாலும் இன்று ஒரு நிமிடம் மன நிறைவோடு உங்கள் நன்றியை தெரிவியுங்கள்.
இன்னைக்கு மட்டும் ஏன் நன்றி சொல்லணும்னு கேட்கிறீங்களா? ஏன்னா இன்னைக்கு 'சர்வதேச நன்றி தெரிவிக்கும் தினம்'.
நாம் பிறந்தது முதல் நமக்கு பிடிச்ச விஷயங்களை மட்டும் செய்யும் இருவர் உண்டு. அவர்கள்தான் அம்மா, அப்பா. நம்மளோட வெற்றிக்கு முதல்ல சந்தோஷப்படுறவங்க நம்மள பெத்தவங்களாதான் இருக்க முடியும். நம்மளோட கோபம், பாசம், வெறுப்புனு எல்லாத்தையும் அவங்ககிட்ட காட்டுவோம். ஆனா, அவங்க நமக்காக பல விஷயங்களை செய்யுறாங்கனு தெரிஞ்சும் அதை பெரிசா பொருட்படுத்த மாட்டோம். நன்றியை எதிர்ப்பார்த்து அவர்கள் அதைச் செய்யாவிட்டாலும், ஒருமுறை பாசத்தோடு அவர்களை கட்டியணைத்து நன்றி கூறிப் பாருங்கள், அவர்களுக்கு ஏற்படும் ஆனந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. முயற்சி பண்ணித்தான் பாருங்களேன் !
அப்பா, அம்மாகிட்ட சொல்ல முடியாத ரகசியங்களைக் கூட, நண்பர்கள் கிட்ட தைரியமா சொல்ல முடியும். யாரிடமாவது பல்ப் வாங்கினதாக இருந்தாலும் சரி, மிகப்பெரிய பாராட்டு பெற்றதாக இருந்தாலும் சரி, அவங்ககிட்ட சொல்லாம இருக்கவே முடியாது. நம்ம போடுற மொக்கை எல்லாத்தையும் தாங்கிகிட்டு, நம்மளோடவே இருக்கும் பாவப்பட்ட ஜென்மங்கள் நம்முடைய நண்பர்கள் மட்டும்தான். அந்த நண்பர்கள், ஒரே பாலினமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதிர் பாலின நண்பர்களாகவும் இருக்கக்கூடும். நாம செய்யுற தப்புகளுக்கு நம்ம நண்பர்களைத் தான் முதலில் திட்டுவார்கள் நம்மளப் பெத்தவங்க. அந்த திட்டுகள எல்லாம் வாங்கிக் கொண்டும், நம்ம கூடவே இருக்குற நண்பர்களுக்கு என்னைக்காவது நன்றி சொல்லி இருப்போமா? அந்த நன்றி ஃபார்மலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தலையில தட்டியோ, கன்னத்தில் அறைந்தோ, உங்களுடைய பாசத்தையும், அன்பையும் எப்படி வெளிப்படுத்த நினைக்கிறீர்களோ அப்படி தெரிவித்தாலே அவர்கள் காலம் முழுக்க உங்களோட இம்சைகளைத் தாங்கும் வலிமையைப் பெற்று விடுவார்கள்.
பெற்றோர், நண்பர்களைத் தாண்டி, அடுத்தபடியாக நம் வாழ்க்கையை அழகாக்கவும், நம்முடைய பொறுப்புகளை அதிகரிக்கவும், இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள வரும் உறவு, வாழ்க்கைத் துணை. இந்த உறவில் அதிகப்படியான புரிதல் கட்டாயம் தேவைப்படும். வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில், வாழ்க்கைத் துணையுடன் உட்கார்ந்து பேசும் வாய்ப்புகள் கூட மிகவும் குறைவாகி விட்டது. இருவரும் ப்ளான் பண்ணி நேரம் செலவிட முடிவெடுத்தாலும், ஏதோ ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு, போட்ட திட்டங்கள் அனைத்தும் சிலநேரங்களில் வீணாகி விடுவதும் உண்டு. பேச நேரம் கிடைக்கவில்லை என இத்தனை நாள் கவலைப்பட்டிருந்தாலும், இன்று இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு, அவர்களுக்குப் பிடித்த இடத்துக்கு அழைத்துச் சென்று, உங்களின் காதலை வெளிப்படுத்துங்கள். வாழ்க்கையில் எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் உங்களுடன் கடைசிவரை வரப் போகும் உறவு என்பதை உணருங்கள். நன்றி என வார்த்தைகளில் சொல்லாவிட்டாலும், அதை அவர்கள் உணரும்படி செய்யுங்கள். இதன்பிறகு எத்தனை முறை நீங்கள் சொதப்பினாலும் அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள்.
மேலே சொன்ன அத்தனை பேரும் நம்முடன் ஏதோ ஒரு பிணைப்பு இருப்பதால், நமக்காக நாம் செய்யும் தவறுகளையும், நாம் காணும் வெற்றிகளையும் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நமக்காக நன்மை செய்வதில் அக்கறை கொண்டு இருப்பவர்கள். இந்த சமூகத்தில் நம்மைச் சுற்றி உள்ள மக்களுக்குக்கு நாம எதுவும் செய்யாவிட்டாலும், இந்த சமூகம் நமக்காக பல விஷயங்களை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அதன் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கிறது. இருசக்கர வண்டியில் 'சைடு ஸ்டாண்ட்' எடுக்காமல் போகும்போது, அதை நமக்கு தெரியப்படுத்தும் நபருக்கு நாம் எந்த விதத்திலும் சொந்தமில்லை. ராணுவத்தில் எல்லைகளில் பணியாற்றும் வீரர்கள் யாரும் தன்னுடைய தனிப்பட்ட குடும்பத்துக்காக போராடி உயிரை இழக்கவில்லை.
நமக்கும் அவர்களுக்கு உறவு எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நமக்காகவும், நம்முடைய சொந்தங்களுக்காவும்தான் நாட்டுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் எந்தவிதக் கவலையும் இன்றி பாட்டு கேட்டுக் கொண்டோ, படம் பார்த்துக் கொண்டோ வருகிறோம், ஆனால் நம்மைப் பாதுகாப்பாக பயணம் செய்ய உதவுகிறார்கள் பேருந்து நடத்துநர்களும், ஓட்டுநர்களும். முக்கியமான ஒரு இடத்துக்கு சீக்கிரமே போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது நாம அதிகம் தேர்ந்தெடுக்கும் வாகனம் ஆட்டோதான். ஏறின அடுத்த நிமிடம் நினைத்த இடத்துக்கு போயாக வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நாம் கொடுக்கும் அவஸ்தைக்கு ஆயிரம் முறைகூட நன்றி சொல்லலாம். மிக முக்கியமாக தலைவலி இருக்கோ இல்லையோ, வேலை பார்க்கிறோமோ இல்லையோ ஆனால் தவறாமல் வேலைக்குச் செல்லும் அனைவரும் விரும்பிச் செல்லும் இடம், அலுவலகத்தில் அல்லது பக்கத்தில் இருக்கும் டீ கடைதான். டீயா, காப்பியா என கண்டுபிடிக்கக் கடினமாக இருந்தாலும், அங்கு சென்றால் இருக்கும் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விட்டது போல உணர்கிறோம். இவர்களுக்கு எல்லாம் எப்போதாவது நாம் நன்றி சொல்லியிருப்போமா? இதுவரை சொல்லாவிட்டாலும் இன்று நன்றி சொல்லுங்கள்! நேரடியாக நம்முடைய நன்றியைத் தெரிவிக்க முடியாவிட்டாலும், அவர்களுக்காகவும், குடும்பத்துகாகவும் தினமும் பிரார்த்தனை செய்யலாமே.
வாழ்க்கை என்பது நாம் எதிர்ப்பார்த்தபடி எல்லா நேரங்களிலும் அமையாது, அப்படி அமையும்போது, கட்டாயமாக நம்மையும் தாண்டி, வேறு சிலருடைய உழைப்பும், அவர்களின் அர்ப்பணிப்பும் கட்டாயம் இருக்கும். முடிந்தவரை நம்முடைய 'ஈகோ-வை' விட்டுவிட்டு, அந்தந்த நேரத்தில் நம்முடன் இருப்பவர்களுடன் அன்பு பாராட்டி, வாழ்க்கையை அழகானதாக மாற்றிக் கொள்ள முயற்சியுங்கள்! கிடைத்த வாழ்க்கையை வரமாக்குவதும், சாபமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது. இதனைப் படித்ததற்கு மிகவும் நன்றி!!

வரலாற்றில் இன்று
மனித உரிமைகள் ஆதரவாளர் வினோபா பாவே நினைவு தினம் இன்று.
மகாத்மா காந்தியுடன் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்டார்.
இந்தியாவில் பெரு நில உரிமையாளர்கள், நிலம் இல்லாதோருக்கு தானாக முன்வந்து நிலம் கொடையாக அளித்தலை 1951ஆம் ஆண்டு வினோபா பாவேயால் தொடங்கப்பட்டது.
வினோபா பாவே இந்தியாவெங்கும் பயணம் செய்து நிலக்கொடை இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்தார். அவருடைய் சர்வோதயா ஆசிரமம் இவ்வியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவ்வியக்கத்தால் கொடையாக சேகரிக்கப்பட்டன.
13 ஆண்டுகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைப்பயணமாகவே வந்து 2,95,054 ஏக்கர் நிலத்தை இயக்கத்திற்காக தானமாகப் பெற்றார்

வியாழன், 14 நவம்பர், 2019
நவம்பர் 14,
வரலாற்றில் இன்று.
ரசகுல்லா தினம் இன்று.
சுவைமிகு ரசகுல்லா, தங்களது பாரம்பர்ய உணவே என்று ஒடிசா மாநிலத்துடன் போராடி வென்ற மேற்கு வங்க அரசு நவம்பர் 14ஆம் தேதியை ரசகுல்லா நாளாக கொண்டாடுகிறது.
கடந்த கால ரசகுல்லா சண்டை?
பாலில் செய்யப்படும் இனிப்பு வகை உணவுப் பொருளான ரசகுல்லா, தங்கள் மாநிலத்தின் கண்டுபிடிப்பே என்று கூறி ஆண்டுதோறும் ’ரசகுல்லா திவாஸ்’ என்ற பெயரில் ஒரு நாள் கொண்டாட்டங்களை ஒடிசா மாநில அரசு கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கியது.
ஒடிசாவின் பூரி நகரில் 13ஆம் நூற்றாண்டிலேயே ரசகுல்லா இருந்ததாகவும், பூரி ஜெகன்னாதருக்கு, லட்சுமி தாயார் ரசகுல்லா கொடுத்ததாக வரலாறு இருப்பதாகவும் ஒடிசா கூறிவந்தது. ரசகுல்லாவின் வரலாற்றைக் கண்டுபிடிக்க ஒரு தனி கமிட்டியே நியமிக்கப்படும் என்று கடந்த 2015இல் ஒடிசாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அப்போதைய அமைச்சர் பிரதீப் குமார் கூறினார்.
ஆனால், ரசகுல்லா தங்கள் மாநிலத்தின் உணவே என்று கூறி மேற்குவங்கம் களத்தில் இறங்கியது. ரசகுல்லாவானது திரிந்த பாலில் செய்யப்படுவது என்றும், திரிவடைந்த பாலானது சுத்தமில்லாததாக் கருதப்படும் நிலையில், அது கடவுளுக்குப் படைக்கப்பட வாய்ப்பே இல்லை என்று மேற்குவங்கம் வாதாடியது. இந்த விவகாரத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று மேற்குவங்க மாநில உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் அப்துர் ரசாக் மோலா கூறியிருந்தார்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இனிப்பு தயாரிப்பாளர் நபீன் சந்திர தாஸ், கடந்த 1868இல் ரசகுல்லாவைக் கண்டுபிடித்ததாகவும் அம்மாநிலம் கூறிவந்தது.
மேற்குவங்க மாநில உணவு கலாசாரத்தின் அடையாளங்களுள் ஒன்று ரசகுல்லா என முதலமைச்சர் மம்தா தொடர்ந்து கூறிவந்தார். இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்துக்கு ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு கிடைத்தது.
புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருள்கள் அந்தந்த பகுதிகளுக்கே சொந்தம்.
ஆக ரசகுல்லா ஒரு வழியாக மேற்கு வங்க மாநிலத்துக்கு சொந்தமானதென கடவுளையும், நீதி மன்றத்தையும் சாட்சியாக வைத்து பெறப்பட்ட ரசகுல்லா உணவு உரிமையை கொண்டாடும் வகையில் நவம்பர் 14ஐ ரசகுல்லா தினமாக அறிவித்துள்ளது மேற்குவங்க அரசு.

ராபர்ட் ஃபுல்டன் பிறந்த தினம் இன்று (1765).
ராபர்ட் ஃபுல்டன் அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார்.
இவர் க்ளெர்மோன்ட் என்ற நீராவிக்கப்பலை உருவாக்கியமைக்காக பரவலாக அறியப்படுகிறார்.
1800ஆம் ஆண்டு இவர் நடாலியஸ் என்ற நீர்மூழ்கியை உருவாக்குவதற்காக நெப்போலியன் போனபார்ட்டால் பணிக்கப்பட்டார்.
வரலாற்றில் இதுவெ முதல் நீர்மூழ்கிக் கப்பலாகும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)