திங்கள், 2 டிசம்பர், 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 4.12.2019 ம் தேதி மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு - பொதுச்செயலாளர்


சூரியனைவிட 70 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு...


5, 8ம் வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை ~ தேர்வு துறை வெளியீடு…


உடல் தகுதியை மேம்படுத்த மாணவர்களுக்கு உடற்பயிற்சி ~ இயக்குநர் உத்தரவு…


தமிழகத்திலும் வருகிறது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை...


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் செயல்முறை




Inspired award list 2019-2020

டிசம்பர் 2,
வரலாற்றில் இன்று.

நாடகக் கலைக்குப் புத்துயிர் அளித்தவர்களுள் முக்கியமானவரும் ‘நாடக உலக சக்கரவர்த்தி’ எனப் போற்றப்படுபவருமான எஸ்.ஜி. கிட்டப்பா (S.G.Kittappa) அவர்களின் நினைவு தினம் இன்று.

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த செங்கோட்டையில் பிறந்தவர் (1906). இவரது இயற்பெயர், ராமகிருஷ்ணன். வீட்டில் ‘கிட்டன்’ என்று இவரை அழைப்பார்கள்.

இதுவே பின்னாளில் ‘கிட்டப்பா’ என்றானது. வறுமை காரணமாக இவரது சகோதரர்கள் இருவர் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தனர்.

1911இல் கொட்டாம்பட்டியில் நடைபெற்ற ‘நல்லதங்காள்’ நாடகத்தில் இவரது சகோதரர் நல்லதங்காளாகவும்
5 வயது சிறுவனாக இருந்த இவர், அவரது குழந்தைகளில் ஒருவராகவும் நடித்தனர்.

இதுதான் இவரது முதல் நாடகம். அடுத்த வருடம் மதுரை டவுன் ஹாலில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் முதல்முறையாக பாடல்களையும் பாடி நடித்தார்.

இந்தச் சிறுவனின் அபார இசைஞானத்தைக் கண்டு வியந்த சங்கர தாஸ் சுவாமிகளின் வழிகாட்டுதலில் சிறுவனின் நடிப்பாற்றலும் இசைத் திறனும் புடம்போடப்பட்டன.

சென்னையில் நாடகங்களை நடத்தி வந்த புகழ்பெற்ற கன்னையா நாடகக் கம்பெனியில் 1919இல் சேர்ந்தார். அப்போது இவர் 12 வயது பாலகன்.

இசை, நடிப்பு, காட்சி ஜோடனைகளில் திருப்புமுனையாக அமைந்த ‘தசாவதாரம்’ நாடகத்தில் மோகினியாகவும் ‘ராமாவதாரத்’தில் பரதனாகவும் பாடி, நடித்து ரசிகர்களைக் கொள்ளைகொண்டார்.

18 வயதில் கிட்டம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

அற்புதமான குரல்வளமும் தெய்வீகமான இசைஞானமும் பெற்றிருந்த இவரது நாடகங்கள் சாதாரண மக்களை மட்டுமல்லாமல், கோவிந்தசாமிப் பிள்ளை, நயினாப் பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை, முத்தையா பாகவதர், மகாராஜபுரம் விசுவநாதய்யர் உள்ளிட்ட பல மகாவித்வான்களையும் ஈர்த்தன.

இலங்கையில் நாடகங்களில் நடிக்கச் சென்ற இவரிடம், அங்கே நாடக மேடையில் கொடிகட்டிப் பறந்த கே.பி.சுந்தராம்பாளோடு போட்டிபோட முடியாது என்றும், கிட்டப்பாவுக்கு எதிராக நின்று பாட்டுப்பாடி வெல்ல முடியுமா? என்று அவரிடமும் நாடகக் கலைஞர்கள் சவால் விடுத்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் விஞ்சும் வகையில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றனர்.

இருவரும் இணைந்து நடித்த ‘வள்ளி திருமணம்’ நாடகம் சக்கைப்போடு போட்டது. இதே நாடகம் தமிழகத்திலும் பல இடங்களில் மேடையேறியது.

‘நந்தனார்’, ‘கோவலன்’, ‘ஞானசவுந்தரி’ உள்ளிட்ட நாடகங்கள் இந்த ஜோடியை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றன.

நாடகங்களில் இணைந்த ஜோடி, வாழ்விலும் இணைந்தது. இரு வீட்டாரின் எதிர்ப்புகளுக்கு இடையே இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்குப் பின் ‘ஸ்ரீகானசபா’ என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக நாடகங்களை நடத்தினர்.

அப்பழுக்கற்ற தேசியவாதியான இவர், 1921இல் திலகர் நிதிக்காகவும் 1923இல் மதுரையில் கதர் நிதிக்காகவும், 1930இல் சென்னை உப்பு சத்தியாக்கிரகத்துக்காகவும் நிதி திரட்டிக் கொடுத்தார்

மேடையில் கர்னாடக இசையை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். ‘கோடையிலே இளைப்பாற்றி’ என்ற வள்ளலாரின் விருத்தமும், ‘காயாத கானகத்தே’ என்ற ‘வள்ளி நாடகப் பாடலும், ‘எவரனி’ என்ற கீர்த்தனையும் அமர கீதங்களாகப் புகழ் பெற்றவை.

நீண்ட நெடிய கலைப்பயணத்தில் ஈட்டக்கூடிய பெருமையையும்
புகழையும் குறுகிய ஆயுளுக்குள் சாதித்துவிட்ட தன்னிகரற்ற நாடகக் கலைஞர் எஸ்.ஜி. கிட்டப்பா, 1933ஆம் ஆண்டு தனது 27ஆம் வயதில் காலமானார்.
டிசம்பர் 2,
வரலாற்றில் இன்று


 மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் பிறந்த தினம் இன்று.

இவர் 1885ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் பாஸ்டன் நகரில் பிறந்தார்.

ஆர்த்ரைடீஸ், ரத்தம் உறைதல், ரத்தக் கோளாறுகள், ரத்தப் பரிமாற்றத்தின்போது ஏற்படும் பாதிப்புகள், நிணநீர் திசுக்களின் சீர்குலைவுகள், ரத்த சிவப்பணு செயல்பாடுகள், ரத்தப் புற்றுநோய், ரத்த சோகை தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார்.

ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கும் எலும்பு மஜ்ஜையின் செயலிழப்பு காரணமாகவே ரத்தசோகை ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். உணவுப் பழக்கங்களே இதற்குக் காரணம் என்பதையும் கண்டறிந்தார். புற்றுநோயின் பல்வேறு வகைகள் குறித்து ஆராய்ந்தார்.

குணப்படுத்த முடியாது என்று கருதப்பட்ட பெர்னீஷியஸ் ரத்தசோகைக்கு, கல்லீரல் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தனர். இதற்காக வில்லியம் மர்பி, ஜார்ஜ் விப்பிள் ஆகியோருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசை 1934இல் பெற்றார்.

வாழ்நாள் முழுவதும் ரத்தசோகை பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு, சிறந்த சிகிச்சை முறையை வழங்கியவருமான ஜார்ஜ் மினாட் 1950ஆம் ஆண்டு மறைந்தார்...
டிசம்பர் 2,
வரலாற்றில் இன்று.

Email சிவா ஐயாதுரை பிறந்த தினம் இன்று.


வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963, தமிழ் நாடு, இந்தியா) இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும், தொழில் முனைவோரும் ஆவார்.

 இவர் மின்னஞ்சல் ("EMAIL") என்று பெயரிட்டு பெயருக்கு காப்புரிமை எடுத்த மின்னஞ்சல் மேலாண்மை மென்பொருள் (Email Management System) உருவாக்கியதற்காக அறியப்படுகிறார்.


இவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார்.