திங்கள், 2 டிசம்பர், 2019

டிசம்பர் 2,
வரலாற்றில் இன்று


 மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் பிறந்த தினம் இன்று.

இவர் 1885ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் பாஸ்டன் நகரில் பிறந்தார்.

ஆர்த்ரைடீஸ், ரத்தம் உறைதல், ரத்தக் கோளாறுகள், ரத்தப் பரிமாற்றத்தின்போது ஏற்படும் பாதிப்புகள், நிணநீர் திசுக்களின் சீர்குலைவுகள், ரத்த சிவப்பணு செயல்பாடுகள், ரத்தப் புற்றுநோய், ரத்த சோகை தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார்.

ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கும் எலும்பு மஜ்ஜையின் செயலிழப்பு காரணமாகவே ரத்தசோகை ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். உணவுப் பழக்கங்களே இதற்குக் காரணம் என்பதையும் கண்டறிந்தார். புற்றுநோயின் பல்வேறு வகைகள் குறித்து ஆராய்ந்தார்.

குணப்படுத்த முடியாது என்று கருதப்பட்ட பெர்னீஷியஸ் ரத்தசோகைக்கு, கல்லீரல் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தனர். இதற்காக வில்லியம் மர்பி, ஜார்ஜ் விப்பிள் ஆகியோருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசை 1934இல் பெற்றார்.

வாழ்நாள் முழுவதும் ரத்தசோகை பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு, சிறந்த சிகிச்சை முறையை வழங்கியவருமான ஜார்ஜ் மினாட் 1950ஆம் ஆண்டு மறைந்தார்...