திங்கள், 9 டிசம்பர், 2019

டிசம்பர் 9,
வரலாற்றில் இன்று.


 இந்தியாவின் முதல் பெண் போட்டோ கிராஃபர் ஹோமை வியாரவல்லா பிறந்த தினம் இன்று.

ஒரு நாட்டின் வரலாற்றை... ஒரு மாமனிதனின் வாழ்க்கையை வார்த்தைகளால் வர்ணிக்கலாம், ஓவியங்களால் எழுதலாம், சிலைகளால் வடிவமைக்கலாம். புகைப்படங்களாலும் பேசவைக்கலாம் என நிரூபித்தவர், இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகைப்படக் கலைஞர் ஹோமை வியாரவல்லா.

1840இல்தான் போட்டோகிராஃபி இந்தியாவுக்கு வந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் சர்வேயராக நியமிக்கப்பட்ட மெக்கென்சி,
கேமரா தொழில்நுட்பம் தெரிந்தவர்களை வேலைக்கு அமர்த்தினார். அரசாங்கத்தினர் மட்டுமே பயன்படுத்திவந்த கேமராக்களை, 1910இம் ஆண்டுவாக்கில் ஒரு சில ஆண்கள் மட்டும் பொழுதுபோக்காகப் பயன்படுத்தினர்.

போட்டோகிராஃபி என்பது நேர்த்தியாக உருவாக்கப்பட்ட கருவியின் உத்தி என்பதைத் தாண்டி, இயற்கையின் உயிர்ப்பைப் பிரதி எடுப்பது... இரண்டு நபர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துவது... ஒரு நிகழ்ச்சியைப் பதிவுசெய்வது...  உண்மையை நிரூபிப்பது என்ற பல அர்த்தங்களைத் தன் புகைப்படங்கள் மூலம் எடுத்துகாட்டியவர்தான், வியாரவல்லா.

ஹோமை வியாரவல்லா, குஜராத்திலுள்ள நவசாரி என்ற இடத்தில் 1913 டிசம்பர்  9இல் பிறந்தார். இவரது தந்தை உருது-பார்சி நாடகக் கம்பெனியின் நடிகர். 13 வயதிலேயே இவருக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் ஏற்பட்டது. தனது மேற்படிப்பை மும்பையில் முடித்தார். ஜே.ஜே.ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டில் டிப்ளோமா பெற்றார். கல்லூரித் தோழர் மானக்க்ஷாவை மணந்தார். புகைப்படம் எடுப்பதில் தணியாத தாகம் கொண்ட கணவர் மானக்ஷா தந்த பேராதரவு உற்சாகம் அளிக்க, தன் பணியை மேலும் சிறப்பாக்கிக்
கொண்டார். மும்பை 'பெண்கள் கிளப்' சுற்றுலாக் குழுவை, இவர் எடுத்த முதல் புகைப்படம், 'மும்பை கிரானிக்கல்' என்கிற பத்திரிகையில் 1930இல் வெளிவந்தது. அதற்காக இவர் பெற்ற தொகை, ஒரு ருபாய்.

இந்திய விடுதலைக்கான போராட்டக்காலத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள் முக்கிய நிகழ்வுகள் பலவற்றையும் புகைப்படங்களாகத் தன் கேமராவுக்குள் பிடித்தவர் இவர்.

1947 ஆகஸ்ட் 15இல் மௌன்ட்பேட்டன் பிரபு இந்தியாவை விட்டுக் கிளம்பியபோது எடுத்த புகைப்படம், செங்கோட்டையில் சுதந்திர இந்தியாவின் முதல் கோடியேற்றத்தை 1947 ஆகஸ்டு 15இல் புகைப்படமெடுத்ததோடு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம், மகாத்மா காந்தியின் இறுதிச் சடங்கில் எடுத்த புகைப்படங்கள், லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியும் ஜான் கென்னடியும் இருக்கும் புகைப்படம், முதல் குடியரசு தின அணிவகுப்புப் படங்கள் என ஹோமை எடுத்த புகைப்படங்கள் சரித்திரப் புகழ் வாய்ந்தவை.

ஹோமையின் வாழ்க்கை இன்றைய ஊடகப் பெண்களைப்போல எளிதாக வாய்த்ததல்ல. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடியில் சிக்கியிருந்த இந்தியாவில், வெகு சில பெண்களே கல்விபெற வாய்ப்பிருந்த காலத்தில், தன் கடும் உழைப்பாலும் விடாமுயற்சியாலும் போட்டோ ஜர்னலிஸ்ட்டாக தனது சேவையைத் தொடங்கினார். "6 பவுண்டுக்கு மேல் எடைகொண்ட கேமராவைத் தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடி, பத்திரிகைகள் கேட்கும் விதங்களில் படங்களை எடுத்துக்கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல" என வியாரவல்லாவே கூறியுள்ளார். பார்சி இனப் பெண், துணிச்சலுடன் இந்தத் துறையைத் தேர்தெடுத்து சாதித்தது ஆச்சர்யம்.

தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக இவர் பதித்த புகைப்பட முத்திரைகள், இந்தியாவின் சமூக அரசியல் நிகழ்வுகளை நெகிழ்ச்சியுடன் நமக்கு இன்றும் நினைவுட்டும் விதமாகத் தொடர்கிறது. மௌன்ட்பேட்டன் பிரபுவின் நினைவுகளை மௌனமாய்ப் பேசும் இவரது புகைப்படத் தொகுப்புகளோடு, 1959இல் தலாய் லாமா கால்பதித்த சுவடுகளையும் இவர் கேமரா பதிவு செய்யத் தவறவில்லை. இந்திய-பாகிஸ்தான்  பிரிவினையில் வாக்களிக்க வந்த  எலிசபெத் ராணியைப் புகைப்படமாக்கிய பெருமையும் ஹோமைக்கு உண்டு. ஆண்களின் மத்தியில் தனித்துத் தெரியும்படி நிகழ்ச்சிகளின் முகப்பில் நின்று துணிச்சலுடன் புகைப்படம் எடுத்த அந்த நாளில், எதிர்கால இந்தியாவின் ஆவணங்களாய்  அந்தப் புகைப்படங்கள் மாறப்போகிறது என்பதை இவர் அறிந்திருக்கவில்லை.

டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் ஹை கமிஷனில் தனது புகைப்பட ஜர்னலிஸ்ட் பணியைத் தொடர்ந்ததோடு, வெளியிலும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொடுத்துள்ளார். பண்டிட் ஜவஹர்லால் நேருவை நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்திருக்கும் ஹோமையை, ''மிகச்சிறந்த போட்டோஜெனிக் பர்சனாலிட்டி' என்று நேரு குறிப்பிட்டுள்ளார். இவர் எடுத்த அந்த அரிய படங்கள் எல்லாம் அரசு ஆவணக் காப்பகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

புகைப்படக்கலைஞராக 1938இல் தொடங்கிய பயணத்தை, 35 ஆண்டுகள் தளராமல் தன்னிறைவோடு பயணித்தார்.

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

பயோமெட்ரிக் - தொட்டுணர்வு வருகை பதிவு குறித்த வழிகாட்டல்கள் மாவட்ட கல்வி அலுவலர்



மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் நினைவு விழா கொண்டாட்டம் மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் (Revised Guidelines) - மாநில திட்ட இயக்குநர் செயல்முறை




விலையில்லா நலத்திட்ட பொருட்கள் பள்ளிகளுக்கு வழங்குதல்_நிதி ஒதுக்கீடு_ECS மூலம் அனுப்புதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை நாள் 5.12.2019


How to Mark Teacher's Attendance in Emis One App ~ video…

ஆசிரியர் பணியில் உள்ள மனஅழுத்தங்களை பாராளுமன்றத்தில் *அழுத்தமாக* பதிவு செய்து தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார் - மாண்புமிகு. திருச்சி சிவா அவர்கள்


சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு...


டிசம்பர் 9,
வரலாற்றில் இன்று.

 சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் இன்று.

இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்சினைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக் கூடியது.
ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழல் பரவாமல் தடுக்கக்கூடிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக டிசம்பர் 9ஆம் நாள் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி - சென்னை அறிவியல் விழா - மாணவர்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன இயக்குநர் செயல்முறை








டிசம்பர் 8,
வரலாற்றில் இன்று.


ஒளிச்சேர்க்கையை (Photosynthesis)
கண்டறிந்த ஜன் இங்கென்ஹௌஸ் (Jan Ingenhousz) பிறந்த தினம் இன்று(1730).

உலகம் முழுவதிலும் தாவரங்கள் வளர்வதற்கும், பரவி இருப்பதற்கும் முக்கியக் காரணமே ஒளிச்சேர்க்கையாகும். மேலும், தாவரங்கள் கரியமில வாயுவை உட்கொண்டு பிராணவாயுவை வெளியிடுவதும் ஒளிச்சேர்க்கை என்னும் செயலால் தான் நிகழ்கின்றது.

 விஞ்ஞானி ஜன் இங்கென்ஹௌஸின் ஒளிச்சேர்க்கையை பற்றிய அரிய கண்டுபிடிப்பு நாம் புவியின் காற்றுமண்டலத்தில் கரியமில வாயு மற்றும் பிராண வாயுவைப் பற்றி அறிந்து கொள்ள பெரிதும் உதவிகரமாக இருந்தது.

1730ம் ஆண்டு நெதர்லாந்தின் ப்ரேடா எனுமிடத்தில் பிறந்தார் ஜன் இங்கென்ஹௌஸ். ஒரு மருத்துவராகப் பட்டம் பெற்று தன் மருத்துவச் சேவையை அந்த ஊரிலேயே துவங்கினார் இளம் ஜன் இங்கென்ஹௌஸ்.

 1774இல் பிரிஸ்ட்லி ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்த தன் ஆய்வின் போது ஒரு குடுவைக்குள் ஆக்ஸிஜனை நிரப்பி அதற்குள் ஒரு குச்சியை எரிய வைத்து அதுவாக அணைந்து போகச் செய்தார். இதனால் அந்தக் குடுவைக்குள் வெறும் கரியமில வாயு மட்டுமே இருந்தது. அதற்குள் ஒரு நீரில் மிதக்கும் மிண்ட் செடியைக் காட்டி அந்த வாயுவால் செடிக்கு ஏற்படும் விளைவைக் கண்டறிய முற்பட்டார். அந்தச் செடி சாகாமல் பிழைத்துக் கொண்டது. இரண்டு மாதங்கள் கழித்து அதற்குள் ஒரு எலியை விட்டுப் பார்க்கும் போது எலி பிழைத்திருக்கக் கண்டார். இதன் மூலம் மிண்ட் செடி கரியமில வாயுவில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்கியது கண்டறியப்பட்டது. ஆனால், இது எல்லா சமயங்களிலும் இதே போலவே நடைபெறவில்லை! பல சமயங்களில் தோல்வியிலும் முடிந்தது! எனவே இது புதிரான ஒன்றாக இருக்கின்றது என்று ப்ரிஸ்ட்லி சோதனையைக் கைவிட்டார்.

இதைப் பற்றி அறிந்த ஜன், இந்தப் புதிரை எப்படியாவது விடுவிப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 500 சோதனை முயற்சிகளில் ஈடுபட்டார் ஜன். எப்படியெல்லாம் சோதனை செய்ய முடியுமோ, என்னென்ன மாற்றங்களுக்கெல்லாம் ஈடுபடுத்த முடியுமோ எல்லாவற்றிலும் முயற்சி செய்தார். அவர் ஒரு தாவரம் வெளியிடும் வாயுவைப் பிடிப்பதற்கு இரண்டு வழிமுறைகள் வைத்திருந்தார். ஒன்று தாவரத்தைச் சுற்றி ஒரு குடுவையை வைத்திருப்பது. மற்றொன்று தாவரத்தை நீரில் மூழ்க வைத்துச் சோதனை செய்வது.

இதில் அவரால் நீரில் மூழ்க வைத்துச் சோதனை செய்வதில் தான் எளிதாக வாயுவைப் பிடிக்க முடிந்தது. ஏனெனில் தாவரங்களிலிருந்து வாயு வெளியாகும் போது சிறு குமிழிகள் தோன்றுவதை நேரடியாகக் கண்ணால் காண முடிந்தது. ஒவ்வொரு முறை வாயுவைப் பிடிக்கும் போது அது மெழுகுவர்த்தியை எரிய விடுகின்றதா அணைத்து விடுகின்றதா என்று சோதனை செய்தார்.

அப்போது தான் அவர் ஒரு அரிய உண்மையைக் கண்டறிந்தார். மனிதர்கள்/விலங்குகள் ஆக்ஸிஜனை உட்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகின்றார்கள். தாவரங்கள் அப்படியே தலைகீழாக மாற்றிச் செய்கின்றன. சூரிய ஒளியில் இருக்கும் தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளிவிடுகின்றன. அதே சமயத்தில் இரவு நேரத்திலும், நிழலிலும் இருக்கும் தாவரங்கள் மனிதர்களைப் போலவே ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்ஸைடை வெளிவிடுகின்றன என்று கண்டறிந்தார் ஜன்.

ஆனால் அவை வெளிவிடும் ஆக்ஸிஜன் அவை உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகும். சூரிய ஒளியில் நீரில் மூழ்கி இருக்கும் தாவரம் சுத்தமான ஆக்ஸிஜனை நீர்க்குமிழியாக வெளியிடுவதை நேராகக் காண முடிந்தது. இரவானதும் எந்த நீர்க்குமிழியும் உருவாகவில்லை. ஆனால், வெகுநேரம் கழித்து கார்பன் டை ஆக்ஸைடு வெளியாக ஆரம்பிக்கின்றது. இந்த வாயு மெழுகுவர்த்தியை எரிய விடாமல் அணைத்து விட்டது! அதே செடியை சூரிய ஒளியில் வைத்ததும் உடனே ஆக்ஸிஜனை வெளிவிட ஆரம்பித்து விடுகின்றது.

ஆக, இந்த வாயுக்கள் வெளியிடுவது சூரிய ஒளியைச் சார்ந்து இருக்கின்றது என்று கண்டறிந்தார் ஜன். இதுவரை எல்லோரும் நம்பியிருந்த தாவரங்கள் புதிய இலைகள், தண்டுகளை உருவாக்க நிலத்திலிருந்து நிறையை (Mass) எடுத்துக் கொள்கின்றன என்ற கொள்கை தவறானது என்று முதன்முதலில் கண்டறிந்தவராகின்றார் ஜன். மாறாகத் தாவரங்கள் சூரிய ஒளியைக் கொண்டு தான் உறிஞ்சும் கார்பன் டை ஆக்ஸைடிலுள்ள கார்பனை (Mass) வளர்வதற்காக எடுத்துக் கொண்டு, ஆக்ஸிஜனைப் பிரித்து வெளிவிடுகின்றன என்று கண்டறியப்பட்டது!

போட்டோ சிந்தசிஸ் எனப்படும் சொல் சில ஆண்டுகள் கழித்தே தாவரங்களின் இந்தச் செயல்பாட்டுக்கு வழங்கப்பட்டது.

ஒளிச்சேர்க்கையைக் கண்டறிந்ததன் மூலம் ஜன் இங்கென்ஹௌஸ் ஒரு அரிய அறிவியல் உண்மையை உலகம் அறிந்து கொள்ள வழி செய்துள்ளர்.