வியாழன், 23 ஜனவரி, 2020

அரசு தேர்வுகள் இயக்ககம் _பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் 2020 - 75%வருகைப் பதிவு இல்லாத பள்ளி மாணவர்கள் விவரம் கோருதல் சார்ந்து தேர்வுகள் இயக்ககம் இயக்குநர் செயல்முறை 22.01.2020


மாநிலத்திட்ட இயக்குநரின் 21.01.2020 ஆம் நாள் கூட்ட வழிகாட்டல்கள்

தொடக்கக்கல்வி -பள்ளிகளின் பழுதடைந்த சுற்றுச்சுவர் மாணவர்கள் பாதுகாப்பு கருதி தக்க நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் செயல்முறை



*🌷DEE - 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட இயக்குநர் உத்தரவு.*


*26.01.2020 ஞாயிறு அன்று குடியரசு தினவிழாவினை மகிழ்ச்சியும் , எழுச்சியும் மிக்க விழாவாகக் கொண்டாடுதல் வேண்டும்.*

*பள்ளி வளாகத்தை வண்ணக் காகிதங்களாலும் , மலர்களாலும் நன்கு அலங்கரித்தல் வேண்டும்.*

*தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.*

*கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் , பள்ளி புரவலர்கள் , சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்கு பெறச் செய்தல் வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.*

*மேலும் தேசியக் கொடியினை காட்சிப்படுத்தும் போதும் , பயன்படுத்தும் போதும் நெகிழித் தாள்களில் ( Plastics ) உள்ள கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் , தேசியக் கொடிகளை பயன்படுத்துவது குறித்து பிரிவு IX of Flag Code of India 2002 - ன்படி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*

*மேற்கண்ட விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி குடியரசு தினவிழாவினை அனைத்துப் பள்ளிகளிலும் தவறாமல் சிறப்பாகக் கொண்டாடிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*

             *தொடக்கக் கல்வி இயக்குநர்*

தொடக்கக்கல்வி_பள்ளிகளில் குடியரசு தின விழா 26.01.2020 காலை 9.00மணிக்கு கொடி ஏற்றி பிளாஸ்டிக் இல்லாத வகையில் கொண்டாடுதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை


பள்ளிக்கல்வி_கணினி பயிற்றுனர் நிலை1 பணியிடங்கள் தோற்றுவித்தல்_திருந்திய சுற்றறிக்கை அனுப்புதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை 21.01.2020









மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்_உபரி காலிப்பணியிடங்களை இயக்குநர் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தலை ஏற்பளித்து ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை நாள் 10.01.2020

சிறைச்செம்மல்களே! வேலைநிறுத்தப்போராளிகளே! ஊதிய வெட்டுக்கு ஆளான மறவர்களே!மறத்தியர்களே! கோடானுகோடி பாராட்டு மாலைகளை - படைக்கிறேன்...



ஆசிரியர் மன்றத்தின் மானமிகு
மறவரே!மறத்தியரே!தங்களுக்கு என் வீரவணக்கம்.

சனவரி 22,2019இல் தொடங்கியகால வரையற்ற வேலைநிறுத்தத்தில் தாங்கள் ஈந்துள்ள
தங்களின் அளப்பரிய தியாகம் என்றும்  வீண்போகாது. தங்களின் தியாகம் விதைக்கப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் பூத்துக்காய்த்து கனிந்து எல்லோருக்கும் பலனும்,பயனும் பெருமளவில் வாரிவழங்கும்.

இன்னும் சொல்லப்போனால் போராட்டக்காலத்தில்  வர்க்க எதிரிகளாக, விரோதிகளாக, துரோகிகளாக, கருங்காலிகளாக
சோரம் போனவர்களுக்கும் சேர்த்தே
 பலனும்,பயனும் பெற்றுத்தரும் வல்லமைமிக்கவர்கள் தாங்கள்.

இத்தகு  வசந்தகாலத்திற்காக  தாங்கள் எல்லோரும் அடைந்துள்ள இன்னல்கள்
சொல்லிமாளதவைகளாகும்.

 தங்களுக்கும்,
தங்களது  குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ ., அவர்களின்  சார்பில்   என் சிரம் தாழ்த்தி இருகரம் குவித்து தங்களுக்கு  கோடானுகோடி வாழ்த்தும் -பாராட்டும் நிறைந்த மலர்ஆரங்களை சூட்டுகிறேன்.
தங்களின்பாதக் கமலங்களில் கோடானுகோடி நன்றிமலர்களை காணிக்கையாக்கி படைக்கிறேன்.

 நாம் நிச்சயம் வெல்வோம்! நம்பிக்கையோடு களமாடுங்கள்!
பள்ளிக்கல்விப் பணிகளையும், ஆசிரியர்மன்றப் பணிகளையும் அரசியல் சித்தாந்தத்தோடு ஆர்வமுடன்ஆற்றுங்கள்!

 தங்களோடு ஆசிரியர்மன்றம் முப்பொழுதும் உற்றத்துணைவனாக என்றும் உடன் நிற்கும்.
#நாளைநமதே!
-முருகசெல்வராசன்.
ஜனவரி 23,
வரலாற்றில் இன்று.


ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் தீ விபத்து நிகழ்ந்த தினம் இன்று (2004).

நல்ல நாள் என்று நாள் குறிக்கப்பட்டு கொடூர நாள் ஆன தினம் அது!

பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை உலுக்கிய ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மணமகன் குருராஜ் உட்பட திருமணத்துக்கு வந்திருந்த 64 பேர் எரிந்து கரிக்கட்டையான கொடூரம் அது.


2004ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி. ஸ்ரீரங்கம், ரெங்க நகரில் அமைந்துள்ள பத்மபிரியா திருமண மண்டபம். பெங்களூரைச் சோந்த குருராஜ் - ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ஜோடி திருமண சடங்குகளுக்காக மண்டபத்தின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தனர். ஹோமம் வளர்த்து புரோகிதர் மந்திரங்கள் ஓதிய போது, திடீரென பந்தலில் தீப்பிடித்து எரிந்தது. தீயில் இருந்து தப்பிக்க ஓடியவர்கள், மாடியில் இருந்த ஒரே ஒரு சிறிய படிக்கட்டு வழியாக தப்பிக்க முயன்று, நெரிசலில் சிக்கினர். அந்தக் களேபரத்தில் தப்பிக்க முடியாமல் சிக்கி, தீயின் கோர தாண்டவத்துக்கு 64 பேர் பலியானார்கள். 33 பேர் காயம் அடைந்தனர். 'வீடியோ கேமரா லைட்டில் இருந்து வெப்பம் பரவியும், வீடியோ கேமராமேன் பயன்படுத்திய மின் வயர்கள் வழியே மின்கசிவு ஏற்பட்டும் தீ விபத்து நடந்தது’ என தெரிய வந்தது
ஜனவரி 23, வரலாற்றில் இன்று.

முத்துராமலிங்க சேதுபதி நினைவு தினம் இன்று.

வீரம் செறிந்த நமது தமிழ் மண்ணில், இந்திய சுதந்திரத்திற்காக வித்தூன்றிய, இலட்சக் கணக்கான தியாகச்சுடர்களில் மறவர் குலத்தின் இறுதி மன்னராக விளங்கிய முத்து விஜயரகுநாத முத்து ராமலிங்க சேதுபதி மிக முக்கியமானவர்

இராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதி மன்னருக்கு சகோதரி மகனாக 30.3.1760இல் இராமநாதபுரம் அரண்மனையில் பிறந்தவர் அவர்.
அவர் பிறந்த 72 ஆம்நாளிலேயே அவருக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது.1772 மே திங்களில் ஆர்க்காடு நவாப் மகன் உம்ரத்துல் உம்ரா ஆங்கிலத் தளபதி ஜோசப் ஸ்மித் ஆகியோர் இணைந்து இராமநாதபுரம் கோட்டையைத் தாக்கிய போரில் ஆயிரக்- கணக்கான வீர மறவர்கள் மடிந்தார்கள்.

12 வயது சிறுவனாக இருந்த இளவரசரும், அவரது அன்னையாரும், சகோதரிகளும் திருச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே சிறை
வைக்கப்பட்டார்கள்.அவர் சிறையிலே இருந்த 10 ஆண்டு காலத்தில் மறவர் சீமையில் தொடர்ந்து கலவரங்களும், குழப்பங்களும் கொந்தளித்ததால் 1782இல் இளவரசர் சேதுபதி 22 வயதில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, இராமநாதபுரம் மன்னராகப் பொறுப்பேற்றார்.

சேது நாட்டை ஆக்கிரமித்து, தன்னையும், தனது குடும்பத்தாரையும் பத்தாண்டு காலம் சிறையிலடைத்த ஆர்க்காடு நவாப்பையும்,
ஆங்கிலேயக் கும்பெனியாரையும், பழிவாங்கத் துடித்த இளஞ்சிங்கம் சேதுபதி, டச்சுக் காரர்களின் உதவியுடன், இராமநாதபுரத்திற்கு அருகிலே இருந்த காட்டுப்பகுதியில் பெரிய பீரங்கிகள் தயாரிக்கும் ஆயுதச் சாலையைத் தொடங்கினார்;

அதன் மூலம் தனது படைபலத்தையும் பெருக்கினார்.அந்நிலையில் ஆற்காடு நவாபிடம் இருந்து தென்பாண்டிச் சீமையில் வரி வசூலிக்கும் உரிமை பெற்ற கும்பெனியார் சேதுபதி மன்னரிடம் ஆதிக்கம் செலுத்த முனைந்தார்கள்.மறவர் சீமை கைத்தறித்துணிகள் உற்பத்தியில் சிறந்து விளங்கியதால் அங்கு உற்பத்தியாகும் கைத்தறித் துணிகள் அனைத்தையும் தமக்கே விற்பனை செய்ய வேண்டும் என்று கும்பெனியார் வைத்த கோரிக்கையை சேதுபதி மன்னர் ஏற்க மறுத்து விட்டார்!

அதேபோலச் சேதுபதிச் சீமையில் தானியங்களை விற்பனை செய்வதில் சுங்கவரி விதித்தல் கூடாது என்ற கும்பெனியாரின் கோரிக்கையையும் முத்துராமலிங்க சேதுபதி மறுத்துவிட்டார்!ஆங்கிலேய வணிகக் கப்பல்கள் தூத்துக்குடிதுறைமுகத்திலிருந்து கைத்தறித் துணிகளையும், மிளகு போன்ற பொருள்களையும் ஏற்றிக் கொண்டு சென்னைத் துறைமுகத்திற்குச் சேதுபதி மன்னருக்கு உரிமையான பாம்பன் நீர் வழியே செல்லும்போது; அந்தக் கப்பல்களை வரிசையில் நிறுத்தி, சுங்கச் சோதனை செய்வதையும், அதற்குச் சுங்கவரி விதிப்பதையும் நீக்க வேண்டுமென்ற வெள்ளைக்காரர்களின் கோரிக்கையையும் நிராகரித்தார் முத்துராமலிங்க சேதுபதி மன்னர்.

இப்படி ஆங்கிலேயர் விடுத்த கோரிக்கைகளை அனைத்தையும் மறுத்த முத்துராமலிங்க சேதுபதி அவர்களை, விசாரணைக்கு வருமாறு
திருநெல்வேலியில் இருந்த கலெக்டர் பவுனி சம்மன் அனுப்பினார்.வாணிகம் செய்து பிழைக்க வந்தவர்கள் தனக்கு ஆணையிடுவதா எனக் கொதித்த சேதுபதி அந்த ஆணையைப் புறக்கணித்தார்.

அடுத்து, சென்னை கோட்டையிலிருந்த கும்பெனி கவர்னர், கலெக்டர் அனுப்பும் கடிதப்படி அவர்முன் சென்று ஆஜராகும்படி சேதுபதி
மன்னருக்கு ஆணையிட்டார். அதையும் சேதுபதி மன்னர் பொருட்படுத்தவில்லை.

இவை காரணமாக – எரிச்சலடைந்த ஆங்கிலேயர், அவரை “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” எனக் கோபத்துடன் கூறத்தொடங்கினர். அவரை அடக்கி, மறவர் சீமையை கைப்பற்றத் திட்டமிட்டர்கள்.

இத்திட்டப்படி 1795 பிப்ரவரி 8ஆம் நாள், இராமநாதபுரம் அரண்மனையைக் கும்பெனிப் படை முற்றுகையிட்டு, சேதுபதி மன்னரைக் கைது செய்து திருச்சியிலும், பின்னர் இங்கே சென்னைக் கோட்டையிலும் சிறையிலடைத்தது.  அதனைத் தொடர்ந்து, மறவர் சீமையில் எழுந்த கிளர்ச்சிகளையெல்லாம் அடக்கியது, சேதுபதிமன்னரை விசாரணை எதுவுமின்றி 13 ஆண்டு காலம் சிறையிலேயே வைத்திருந்தது.
அடங்காத விடுதலை வேட்கையோடு சிறைக் கூடத்தில் அடைபட்டிருந்த நிலையில், 23.1.1809 அன்று தன்னுடைய 49ஆம் வயதில் சேதுபதி மன்னர் உலக வாழ்வை நீத்தார்.

தாயகத்து உரிமையை மதித்து அதனை நிலைநாட்ட முனைந்ததற்காக 49 ஆண்டுகால வாழ்வில் ஏறத்தாழ சரிபாதி 24 ஆண்டுகளை, அந்நியர் சிறையில் கழித்து மறைந்த வீரத் தியாகி ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் அஞ்சல் தலையை  அரசு வெளியிட்டது.