வியாழன், 23 ஜனவரி, 2020

ஜனவரி 23,
வரலாற்றில் இன்று.


ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் தீ விபத்து நிகழ்ந்த தினம் இன்று (2004).

நல்ல நாள் என்று நாள் குறிக்கப்பட்டு கொடூர நாள் ஆன தினம் அது!

பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை உலுக்கிய ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மணமகன் குருராஜ் உட்பட திருமணத்துக்கு வந்திருந்த 64 பேர் எரிந்து கரிக்கட்டையான கொடூரம் அது.


2004ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி. ஸ்ரீரங்கம், ரெங்க நகரில் அமைந்துள்ள பத்மபிரியா திருமண மண்டபம். பெங்களூரைச் சோந்த குருராஜ் - ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ஜோடி திருமண சடங்குகளுக்காக மண்டபத்தின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தனர். ஹோமம் வளர்த்து புரோகிதர் மந்திரங்கள் ஓதிய போது, திடீரென பந்தலில் தீப்பிடித்து எரிந்தது. தீயில் இருந்து தப்பிக்க ஓடியவர்கள், மாடியில் இருந்த ஒரே ஒரு சிறிய படிக்கட்டு வழியாக தப்பிக்க முயன்று, நெரிசலில் சிக்கினர். அந்தக் களேபரத்தில் தப்பிக்க முடியாமல் சிக்கி, தீயின் கோர தாண்டவத்துக்கு 64 பேர் பலியானார்கள். 33 பேர் காயம் அடைந்தனர். 'வீடியோ கேமரா லைட்டில் இருந்து வெப்பம் பரவியும், வீடியோ கேமராமேன் பயன்படுத்திய மின் வயர்கள் வழியே மின்கசிவு ஏற்பட்டும் தீ விபத்து நடந்தது’ என தெரிய வந்தது