வியாழன், 23 ஜனவரி, 2020
*🌷DEE - 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட இயக்குநர் உத்தரவு.*
*26.01.2020 ஞாயிறு அன்று குடியரசு தினவிழாவினை மகிழ்ச்சியும் , எழுச்சியும் மிக்க விழாவாகக் கொண்டாடுதல் வேண்டும்.*
*பள்ளி வளாகத்தை வண்ணக் காகிதங்களாலும் , மலர்களாலும் நன்கு அலங்கரித்தல் வேண்டும்.*
*தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.*
*கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் , பள்ளி புரவலர்கள் , சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்கு பெறச் செய்தல் வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.*
*மேலும் தேசியக் கொடியினை காட்சிப்படுத்தும் போதும் , பயன்படுத்தும் போதும் நெகிழித் தாள்களில் ( Plastics ) உள்ள கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் , தேசியக் கொடிகளை பயன்படுத்துவது குறித்து பிரிவு IX of Flag Code of India 2002 - ன்படி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*
*மேற்கண்ட விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி குடியரசு தினவிழாவினை அனைத்துப் பள்ளிகளிலும் தவறாமல் சிறப்பாகக் கொண்டாடிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*
*தொடக்கக் கல்வி இயக்குநர்*

சிறைச்செம்மல்களே! வேலைநிறுத்தப்போராளிகளே! ஊதிய வெட்டுக்கு ஆளான மறவர்களே!மறத்தியர்களே! கோடானுகோடி பாராட்டு மாலைகளை - படைக்கிறேன்...
ஆசிரியர் மன்றத்தின் மானமிகு
மறவரே!மறத்தியரே!தங்களுக்கு என் வீரவணக்கம்.
சனவரி 22,2019இல் தொடங்கியகால வரையற்ற வேலைநிறுத்தத்தில் தாங்கள் ஈந்துள்ள
தங்களின் அளப்பரிய தியாகம் என்றும் வீண்போகாது. தங்களின் தியாகம் விதைக்கப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் பூத்துக்காய்த்து கனிந்து எல்லோருக்கும் பலனும்,பயனும் பெருமளவில் வாரிவழங்கும்.
இன்னும் சொல்லப்போனால் போராட்டக்காலத்தில் வர்க்க எதிரிகளாக, விரோதிகளாக, துரோகிகளாக, கருங்காலிகளாக
சோரம் போனவர்களுக்கும் சேர்த்தே
பலனும்,பயனும் பெற்றுத்தரும் வல்லமைமிக்கவர்கள் தாங்கள்.
இத்தகு வசந்தகாலத்திற்காக தாங்கள் எல்லோரும் அடைந்துள்ள இன்னல்கள்
சொல்லிமாளதவைகளாகும்.
தங்களுக்கும்,
தங்களது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ ., அவர்களின் சார்பில் என் சிரம் தாழ்த்தி இருகரம் குவித்து தங்களுக்கு கோடானுகோடி வாழ்த்தும் -பாராட்டும் நிறைந்த மலர்ஆரங்களை சூட்டுகிறேன்.
தங்களின்பாதக் கமலங்களில் கோடானுகோடி நன்றிமலர்களை காணிக்கையாக்கி படைக்கிறேன்.
நாம் நிச்சயம் வெல்வோம்! நம்பிக்கையோடு களமாடுங்கள்!
பள்ளிக்கல்விப் பணிகளையும், ஆசிரியர்மன்றப் பணிகளையும் அரசியல் சித்தாந்தத்தோடு ஆர்வமுடன்ஆற்றுங்கள்!
தங்களோடு ஆசிரியர்மன்றம் முப்பொழுதும் உற்றத்துணைவனாக என்றும் உடன் நிற்கும்.
#நாளைநமதே!
-முருகசெல்வராசன்.
ஜனவரி 23,
வரலாற்றில் இன்று.
ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் தீ விபத்து நிகழ்ந்த தினம் இன்று (2004).
நல்ல நாள் என்று நாள் குறிக்கப்பட்டு கொடூர நாள் ஆன தினம் அது!
பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை உலுக்கிய ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மணமகன் குருராஜ் உட்பட திருமணத்துக்கு வந்திருந்த 64 பேர் எரிந்து கரிக்கட்டையான கொடூரம் அது.
2004ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி. ஸ்ரீரங்கம், ரெங்க நகரில் அமைந்துள்ள பத்மபிரியா திருமண மண்டபம். பெங்களூரைச் சோந்த குருராஜ் - ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ஜோடி திருமண சடங்குகளுக்காக மண்டபத்தின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தனர். ஹோமம் வளர்த்து புரோகிதர் மந்திரங்கள் ஓதிய போது, திடீரென பந்தலில் தீப்பிடித்து எரிந்தது. தீயில் இருந்து தப்பிக்க ஓடியவர்கள், மாடியில் இருந்த ஒரே ஒரு சிறிய படிக்கட்டு வழியாக தப்பிக்க முயன்று, நெரிசலில் சிக்கினர். அந்தக் களேபரத்தில் தப்பிக்க முடியாமல் சிக்கி, தீயின் கோர தாண்டவத்துக்கு 64 பேர் பலியானார்கள். 33 பேர் காயம் அடைந்தனர். 'வீடியோ கேமரா லைட்டில் இருந்து வெப்பம் பரவியும், வீடியோ கேமராமேன் பயன்படுத்திய மின் வயர்கள் வழியே மின்கசிவு ஏற்பட்டும் தீ விபத்து நடந்தது’ என தெரிய வந்தது

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)