சனி, 25 ஜனவரி, 2020

பள்ளி மாணவர்களின் பெற்றோர் விபத்தில் இறந்து விட்டால் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் சார்ந்த விவரங்கள் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறை நாள்:10.01.2020


Go No:11 Tamil Nadu Transport corporation employees voluntary retirement pension - amendment rules



ஜனவரி 25,
வரலாற்றில் இன்று.

இராபர்ட் வில்லியம் பாயில் பிறந்த தினம் இன்று.

இராபர்ட் வில்லியம் பாயில் (25 ஜனவரி 1627 - 31 டிசம்பர் 1691) ஓர் ஆங்கிலேய-ஐரிசு இனத்தைச் சார்ந்தவர். இயற்கைத் தத்துவவியலாளர், வேதியியலாளர், இயற்பியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளரான இவர் அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் உலகின் முதல் நவீன வேதியியலாளராகக் கருதப்படுகிறார். நவீன வேதியியலுக்கு அடித்தளம் இட்டவர். நவீன சோதனை அறிவியல் முறையின் முன்னோடிகளில் ஒருவர். ஒரு மூடிய அமைப்பில் உள்ள வளிமத்தின் வெப்பநிலை மாறாதிருக்கும் போது அதன் அழுத்தத்திற்கும் கன அளவுக்கும் உள்ள தொடர்பு எதிர் விகிதத்தில் இருக்கும் என்னும் பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்தார். இவரது படைப்புகளில் ஒன்றான தி ஸ்கெப்டிகல் கைமிஸ்ட் என்னும் நூல் வேதியியல் துறையில் ஒரு மூல நூலாக கருதப்படுகிறது.
ஜனவரி 25,
வரலாற்றில் இன்று.

தேசிய வாக்காளர் தினம் இன்று.

ஓட்டுரிமை - நமது கடமை

உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதற்கு முதுகெலும்பாக விளங்கும் இந்திய தேர்தல் ஆணையம், ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு.

இது 1950 ஜனவரி 25இல் உருவாக்கப்பட்டு, 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் வகையில் 2011 முதல், ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஓட்டுப்பதிவை அதிகப்படுத்தி, ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்துவது இதன் நோக்கம்.

தேர்தல் ஆணையம் நவீன வளர்ச்சிக்குப் ஏற்ப, ஓட்டளிக்க மின்னணு எந்திரம், அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை, விரைவாக தேர்தல் முடிவுகள் என புதுமைகளை புகுத்தி வருகிறது.

எனவே அனைவரும் ஜனநாயக கடமையை, கடமை தவறாமலும், செம்மையாகவும் நிறைவேற்றுவோம்...!!

பணி விலகல் தேதியை பதிவு செய்யலாம் ~பிஎப் இணையதளத்தில் புதிய வசதி அறிமுகம்…

பயோமெட்ரிக் வருகை பதிவை முறையாக பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள் 24.01.2020

Public Exam - 8 Standard model question paper