ஞாயிறு, 8 மார்ச், 2020
சனி, 7 மார்ச், 2020
08.03.2020(ஞாயிறு) நாமக்கல் நகரில் நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைப்பு- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
ஆசிரியர் மன்றத்தின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு
------------------------------
தமிழ்நாட்டின் மேனாள் கல்வி-நிதிஅமைச்சர் ,
சுயமரியாதைச் செம்மல்,
திராவிட இயக்க முன்னோடி,
திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர், இனமானப் பேராசிரியர் பெருந்தகை க.அன்பழகனார் அவர்களின் மறைவிற்கு இன்று (07.03.2020) கூடிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட முப்பெரும் விழாக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஒருவாரக் காலத்திற்கு துக்கம் கடைப் பிடிக்குமாறும், ஒன்றியத் தலைநகரில் புகழஞ்சலி கூட்டங்கள் நடத்திடுமாறும் கேட்டுக்கொள்கிறது. மேலும்,
08.03.2020 ஆம் நாள் அன்று நாமக்கல்லில் நடைபெற இருந்த முப்பெரும் விழாவினை ஒத்திவைத்து அறிவிக்கிறது.
-முருகசெல்வராசன் ,
விழாக்குழுத் தலைவர்
மற்றும்
மெ.சங்கர்,
விழாக்குழுச் செயலாளர்.

இனமானப் பேராசிரியருக்கு புகழஞ்சலி:
இனமானப் பேராசிரியருக்கு புகழஞ்சலி:
திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர்,தமிழகத்தின் மேனாள் கல்வி அமைச்சர்,
தமிழகத்தின் மேனாள் நிதி அமைச்சர் , சட்டமன்ற மேலவை உறுப்பினர்
,நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் என ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்புகளில் எல்லாம் திறம்படப் பணியாற்றியவர் இனமானப்பேராசிரியர் திரு.க.அன்பழகனார் அவர்கள்.
தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்,
எழுத்தாளர்,
இதழாளர்,
தமிழ்-தமிழர் சார்ந்து மிக வலுவான கருத்தாளர்- செயற்பாட்டாளர்,
சுயமரியாதைச் செம்மல் மறைந்த திரு.க.அன்பழகனார் அவர்கள் ஆவார்.
இனமானப் பேராசிரியர் எனச் அழைக்கப்படுபவர்,
சிறப்பிக்கப்படுபவர் மறைந்த திரு. க.அன்பழகனார் அவர்கள்.
உலகத் தமிழர்களின் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும்,பெரு வணக்கத்திற்கும் உரியவர் திரு.க.அன்பழகனார்அவர்கள் .
திரு. க.அன்பழகனார் உடல் நலக்குறைவின் காரணமாகவும், வயோதிகம் காரணமாகவும் மருத்துவச் சிகிச்சைகள் பலனின்றி மரணம் அடைந்தார் என்பது மிகுந்த வேதனையை.
தீராத் துயரத்தை,
பெருத்த கவலையைத் தருகிறது.
தமிழர்களின்-
தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறைக் காட்டி , சுற்றிச் சுழன்று செயலாற்றிய
இனமானப் பேராசிரியருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனமானப் பேராசிரியர் பெருந்தகைக்கு புகழஞ்சலி - புகழ் வணக்கம் செலுத்துகிறேன். இனமானப் பேராசிரியர் காட்டிய நல்வழியில் பயணிக்க திடமான உறுதிகொள்கிறேன்.
-முருகசெல்வராசன்.

வெள்ளி, 6 மார்ச், 2020
வியாழன், 5 மார்ச், 2020
மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகளின் பட்டியல் வெளியீடு.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான தொடக்க பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
இது சம்பந்தமாக மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 14 பக்கங்கள் கொண்ட அந்த சுற்றறிக்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறு நடத்த வேண்டும், அதற்கு எந்தெந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை பதிவாளர் ஜெனரல் விவேக் ஜோஷி கண்காணிக்க உள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடக்கிறது. வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை முதல் கட்ட பணியும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 2-வது கட்ட பணியும் நடைபெற உள்ளது.
முதல்கட்ட பணியோடு சேர்த்து தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) கணக்கெடுப்பு நடத்தப்படும். முதல் கட்ட பணியில் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படும். 2-வது கட்ட பணியின்போது நேரடியாக அவர்களிடம் கேள்வி கேட்கப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்தம் 34 கேள்விகள் இடம்பெற இருக்கின்றன. இவற்றில் 31 கேள்விகளின் விவரத்தை மத்திய பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 3 கேள்விகளின் விவரம் வெளியிடப்படவில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 34 கேள்விகளின் விவரம் வருமாறு:-
1. வீட்டு எண், 2. மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு வழங்கிய வீட்டு எண், 3. வீட்டின் தரை, சுவர், கூரைக்கு பயன்படுத்திய கட்டுமான பொருட்கள், 4. கணக்கெடுப்பு நடத்தப்படும் வீட்டின் பயன்பாடு, 5. வீட்டின் தற்போதைய நிலவரம், 6. வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, 7. தற்போது வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, 8. குடும்ப தலைவரின் பெயர், 9. குடும்ப தலைவரின் பாலினம், 10. குடும்ப தலைவர் தாழ்த்தப்பட்டவரா? பழங்குடியினரா? வேறு பிரிவினரா? 11. வீட்டின் உரிமையாளர் விவரம், 12. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, 13. வீட்டில் வசிக்கும் திருமணமான நபர்கள், 14. குடிநீர் கிடைக்கும் வழிகள்.
15. எவ்வளவு குடிநீர் கிடைக்கிறது? 16. விளக்கு வசதி கிடைக்கும் விவரம்? 17. கழிவறை உள்ளதா? 18. எந்த வகை கழிவறை? 19. மற்ற வகை தண்ணீர் தேவை எப்படி கிடைக்கிறது? 20. குளியலறை வசதி உள்ளதா? 21. சமையல் அறைக்கு எரிவாயு இணைப்பு உள்ளதா? 22. சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள். 23. ரேடியோ, டிரான்ஸ்சிஸ்டர் உள்ளதா? 24. டெலிவிஷன் இருக்கிறதா? 25. இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா?
26. லேப்டாப், கம்ப்யூட்டர் இருக்கிறதா? 27. டெலிபோன், மொபைல், போன், ஸ்மார்ட்போன் உள்ளதா? 28. சைக்கிள், ஸ்கூட்டர், மொபட், மோட்டார் சைக்கிள் இருக்கிறதா? 29. கார், ஜீப், வேன் உள்ளதா? 30. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு தானியம், 31. மொபைல் போன் எண் போன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளது.
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரமும் தனியாக சேகரிக்கப்படுகிறது. அதில் 14 கேள்விகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில், 1. பெயர், 2. மக்கள் தொகை பதிவேட்டில் இடம் பெற வேண்டிய பெயர், 3. குடும்ப தலைவருக்கு உறவு, 4. பாலினம், 5. பிறந்த தேதி, 6. திருமணமான விவரம், 7. கல்வித்தகுதி, 8. தொழில், 9. தந்தை, தாய், கணவர், மனைவி பெயர். 10. பிறந்த இடம், 11. குடியுரிமை, 12. தற்போது குடியிருக்கும் முகவரி. 13. தற்போதைய முகவரில் தங்கியுள்ள காலம், 14. நிலையான முகவரி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)