வெள்ளி, 17 ஏப்ரல், 2020

கல்,மண் தோன்றாத காலத்திலேயே உதித்தெழுந்த மூத்த மொழி தான் நாம் பேசும் ,நேசிக்கும்,சுவாசிக்கும் தமிழ் மொழி. உலக மொழிகளின் தாய் தமிழ் என்பரும் அநேகர். சீரிளமைநிறைந்த செம்மொழியை "மொழி உலகு"எனும் பொருளில் அளவில்லாத மேற்கோள்களுடன் நிலைநிறுத்துகிறார் நம் மறவர் திரு.வெ.இராமச்சந்திரன் அவர்கள். உலகெனும் பெருநிலத்தில் இனத்தின் அடையாளத்தோடும், தமிழோடும் வாழுங்கள்!


கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும் எனும் அய்யன் திருவள்ளுவரின் சொல்படி வாழுங்களேன் என்பதைத்தான் நேரலையில் பகிர்கிறார் மறவர். திரு.பெ.பழனிசாமி அவர்கள் உரை


உங்களுடைய Whatsapp கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்யவும்(Two-step Verification மூலமாக)...

வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம் (Whatsapp Verification Scam) என்ற பெயரில், வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படும் மோசடி ஊரடங்கில் அதிகரித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் வாட்ஸ்அப் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வாட்ஸப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. வாட்ஸ் -அப் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய, சில ஆப்ஷன்களையும் அந்நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

மொபைல் பயனாளர்களின் அத்தியாவசிய அப்ளிகேஷனாக வாட்ஸ் அப் மாறியிருக்கும் சூழலில், வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம் என்ற மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்...

வாட்ஸ்அப் கணக்கை தொடங்குவதற்கு, ஒன் டைம் பாஸ்வேர்ட் (one time password) எனப்படும் ஓடிபி (OTP) எண் கட்டாயத்தேவையாக இருக்கும் சூழலில், யாரோ ஒரு மர்மநபர், ஒரு குறுஞ்செய்தியை உங்களுக்கு அனுப்புவார், அதில் ஒரு ஓடிபி தவறுதலாக உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஓடிபி தன்னுடைய கணக்கிற்குள் நுழைவதற்கானது எனச் சொல்லி அவர் உங்களிடம் அந்த 6 இலக்க ஓடிபி எண்ணை தனக்கு அனுப்புமாறு சொல்வார். அவரை நம்பி நீங்கள் அதை அனுப்பிவிட்டால், அந்த நொடியே உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கின் ஒட்டுமொத்த கண்ட்ரோலும் அவரால் ஹேக் செய்யப்படும்.

 அதன்பின்னர், உங்களுடைய வாட்ஸ்அப்பிற்கு வரும் அனைத்து குறுஞ்செய்திகள், புகைப்படங்களை நீங்கள் பார்ப்பதுபோல் நேரடியாக அவராலும் பார்க்க முடியும். அதேபோல் உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கு மூலம், தவறான செய்திகளையும் அவரால் பகிரமுடியும். எனவே எந்த ஓடிபி எண்களையும் யாரிடமும் பகிராதீர்கள். வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம்-ல் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், உங்களுடைய வாட்ஸப் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்யவும், டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (two-step verification) ஆப்ஷனை எனேபுள் (enable) செய்துகொள்ள வாட்ஸ் அப் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

அதாவது, வாட்ஸ் அப் அப்ளிகேஷனை திறந்ததும் மேலே உள்ள 3 புள்ளிகளை அடையாளமாகக் கொண்ட மெனுவை (menu)க்ளிக் செய்யுங்கள். அதில் வரும் Account ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள், அதில் டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன்-ஐ கிளிக் (click) செய்து எனேபுள் ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளுங்கள். அப்போது நீங்கள் ஒரு 6 இலக்க ரகசிய (PIN) எண்ணை அமைக்க வேண்டும். இதை எனேபுள் செய்த பிறகு நீங்கள் அல்லது வேறு யார் வேண்டுமானாலும் வாட்ஸ்அப் கணக்கிற்குள் நுழையவேண்டும் என்றால், இந்த பின் நம்பரை கட்டாயம் கொடுக்க வேண்டும். இதனால் உங்களுடைய வாட்ஸ் அப் கணக்கை பாதுகாக்கலாம்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வு அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும் ~ செய்தி வெளியீடு...

10ம் வகுப்பு பாடங்கள் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு...

வியாழன், 16 ஏப்ரல், 2020

*ஆங்கில வழிக் கல்வி:*
*ஆந்திர அரசின் அரசாணை கள் ரத்து.உயர்நீதிமன்றம் உத்தரவு.*
மாத ஊதியம் வங்கித்தகவல்:
""""""""""""""""""""""""""""""
 * அரசு ஊழியர்களின் ஏப்ரல் மாத
சம்பள நாள்:28.04.2020.

* ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய  நாள்:29.04.2020

*பாரத ஸ்டேட் வங்கி கிளைகளுக்கு சுற்றறிக்கை...

மாத ஊதியம் வங்கித்தகவல்: """""""""""""""""""""""""""""" * அரசு ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பள நாள்:28.04.2020. * ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய நாள்:29.04.2020 *பாரத ஸ்டேட் வங்கி கிளைகளுக்கு சுற்றறிக்கை...


மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபுதிய வருமான வரியைபின்பற்ற விருப்பமா?~ வரிகள் ஆணையம் வேண்டுகோள்...

கொரோனாவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்~ஆயுர்வேத முறைகளை பரிந்துரை செய்த ஆயுஷ் அமைச்சகம்…