சனி, 18 ஏப்ரல், 2020
1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கான SPOKEN ENGLISH வீடியோக்கள்...
SPOKEN ENGLISH VIDEOS... Click here...
வெள்ளி, 17 ஏப்ரல், 2020
கல்,மண் தோன்றாத காலத்திலேயே உதித்தெழுந்த மூத்த மொழி தான் நாம் பேசும் ,நேசிக்கும்,சுவாசிக்கும் தமிழ் மொழி. உலக மொழிகளின் தாய் தமிழ் என்பரும் அநேகர். சீரிளமைநிறைந்த செம்மொழியை "மொழி உலகு"எனும் பொருளில் அளவில்லாத மேற்கோள்களுடன் நிலைநிறுத்துகிறார் நம் மறவர் திரு.வெ.இராமச்சந்திரன் அவர்கள். உலகெனும் பெருநிலத்தில் இனத்தின் அடையாளத்தோடும், தமிழோடும் வாழுங்கள்!
உங்களுடைய Whatsapp கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்யவும்(Two-step Verification மூலமாக)...
வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம் (Whatsapp Verification Scam) என்ற பெயரில், வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படும் மோசடி ஊரடங்கில் அதிகரித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் வாட்ஸ்அப் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வாட்ஸப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. வாட்ஸ் -அப் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய, சில ஆப்ஷன்களையும் அந்நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
மொபைல் பயனாளர்களின் அத்தியாவசிய அப்ளிகேஷனாக வாட்ஸ் அப் மாறியிருக்கும் சூழலில், வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம் என்ற மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்...
வாட்ஸ்அப் கணக்கை தொடங்குவதற்கு, ஒன் டைம் பாஸ்வேர்ட் (one time password) எனப்படும் ஓடிபி (OTP) எண் கட்டாயத்தேவையாக இருக்கும் சூழலில், யாரோ ஒரு மர்மநபர், ஒரு குறுஞ்செய்தியை உங்களுக்கு அனுப்புவார், அதில் ஒரு ஓடிபி தவறுதலாக உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஓடிபி தன்னுடைய கணக்கிற்குள் நுழைவதற்கானது எனச் சொல்லி அவர் உங்களிடம் அந்த 6 இலக்க ஓடிபி எண்ணை தனக்கு அனுப்புமாறு சொல்வார். அவரை நம்பி நீங்கள் அதை அனுப்பிவிட்டால், அந்த நொடியே உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கின் ஒட்டுமொத்த கண்ட்ரோலும் அவரால் ஹேக் செய்யப்படும்.
அதன்பின்னர், உங்களுடைய வாட்ஸ்அப்பிற்கு வரும் அனைத்து குறுஞ்செய்திகள், புகைப்படங்களை நீங்கள் பார்ப்பதுபோல் நேரடியாக அவராலும் பார்க்க முடியும். அதேபோல் உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கு மூலம், தவறான செய்திகளையும் அவரால் பகிரமுடியும். எனவே எந்த ஓடிபி எண்களையும் யாரிடமும் பகிராதீர்கள். வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம்-ல் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், உங்களுடைய வாட்ஸப் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்யவும், டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (two-step verification) ஆப்ஷனை எனேபுள் (enable) செய்துகொள்ள வாட்ஸ் அப் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
அதாவது, வாட்ஸ் அப் அப்ளிகேஷனை திறந்ததும் மேலே உள்ள 3 புள்ளிகளை அடையாளமாகக் கொண்ட மெனுவை (menu)க்ளிக் செய்யுங்கள். அதில் வரும் Account ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள், அதில் டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன்-ஐ கிளிக் (click) செய்து எனேபுள் ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளுங்கள். அப்போது நீங்கள் ஒரு 6 இலக்க ரகசிய (PIN) எண்ணை அமைக்க வேண்டும். இதை எனேபுள் செய்த பிறகு நீங்கள் அல்லது வேறு யார் வேண்டுமானாலும் வாட்ஸ்அப் கணக்கிற்குள் நுழையவேண்டும் என்றால், இந்த பின் நம்பரை கட்டாயம் கொடுக்க வேண்டும். இதனால் உங்களுடைய வாட்ஸ் அப் கணக்கை பாதுகாக்கலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)