செவ்வாய், 28 ஏப்ரல், 2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்திடும் இயற்கை பானம் மற்றும் சூடான பானம் தயாரிப்புக்குறிப்புகள் ~ தமிழக அரசு வெளியீடு…

மத்திய அரசை  காக்காய்ப் பிடித்துத் தன்னாட்சியை தக்கவைத்துக்கொள்ளும் எடப்பாடி அரசே!
ஆசிரியர்-அரசூழியர்களின்
மன உளைச்சலை  இரட்டிப்பாக்காதே!
பழிவாங்கும் நடவடிக்கைகளை -பொய்வழக்குகளை திரும்பப் பெறுக!
அகவிலைப்படிகளை, விடுப்பூதியங்களை " சுவாகா " போடாதே!
அரசியல் கற்பிக்கும் ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் கோருகிறேன்!
*முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர்.* *பாவலர்.திரு.க.மீனாட்சிசுந்தரம் அறிக்கை...*

தமிழக ஆசிரியர்-அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ரத்து மற்றும் ஈட்டிய விடுப்பூதியம் இரத்து செய்த தமிழக அரசுக்கு முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர்.* *பாவலர்.திரு.க.மீனாட்சிசுந்தரம் கண்டனம்.*




திங்கள், 27 ஏப்ரல், 2020

அகவிலைப்படி முடக்கம்! மத்திய அரசின் தன்னிச்சையானப் போக்கிற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை கடும்கண்டனம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு தன்னிச்சையாக முடக்கி உத்தரவிட்டுள்ள மத்திய அரசை கண்டிக்கிறோம்.!

தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், எம்.பி. அறிக்கை

நாட்டில் உயர்ந்துள்ள விலைவாசிப்புள்ளிகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய 4% அகவிலைப்படி உயர்வு உட்பட அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியின் மூன்று தவனைகளை ஒட்டு மொத்தமாக முடக்கிட தன்னிச்சையாக அரசு வெளியிட்ட உத்தரவு,  48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களையும், தங்களது ஓய்வு கால வாழ்க்கையை பென்சன் வருவாயை மட்டுமே நம்பி நகர்த்திக் கொண்டிருக்கிற 65 லட்சம் ஓய்வூதியதாரர்களையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது! கொரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டி நூறாண்டுகளுக்கும் மேலாக போராடிப் பெற்ற உரிமைகளை மறுக்கும் மத்திய அரசின் செயல் ஏற்கத்தக்கதல்ல !

கொரோனா வைரஸுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் சவால்களை எதிர் கொண்டு, எந்தவித ஆபத்துகளையும் பெரிதென நினைக்காமல், போதுமான “பணியாளர் பாதுகாப்பு உபகரணங்கள்” ( PPE ) அரசினால் வழங்கப்படாத போதும் கூட,  24 மணி நேரமும் குடும்பத்தையும் மனைவி மக்களையும்  மறந்து  பணியாற்றுவதன் மூலம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களது அளப்பரிய சேவையை செய்து வருகின்றனர் என்பதை  நாட்டு மக்கள்  நன்கு அறிவார்கள்!
டாக்டர்கள்,மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த நெருக்கடி நேரத்தில் மிகவும் அவசியமான  பல்வேறு “ பணியாளர் பாதுகாப்பு உபகரணங்களை”   ( PPE )  தயாரிப்பதில் ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை ஊழியர்கள் முழு மனதுடன் ஈடுபட்டுள்ளனர், ரெயில்வே, தபால், மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பாதுகாப்பு சிவில் ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை  பிரதமரின் நிவாரன நிதிக்கு வழங்கியுள்ள நிலையில், பாதுகாப்புத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் PM- CARES நிதிக்கு இரண்டு நாட்கள் சம்பளத்தை வழங்கியுள்ளனர். ஆனால் அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் PM-CARES க்கு சேகரிக்கப்பட்ட நிதி கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுமா அல்லது அரசாங்கத்துக்கு அவ்வப்போது தொடர்ந்து நெருக்கடிகளை தந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பயன்படுத்தப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. . அரசு ஊழியர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பைப் புறக்கணித்து, கொரோனாவினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை காரணம் காட்டி அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்வாதாரத்தை நசுக்க முற்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது !

அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் இனாம் அல்ல! மாறாக விலைவாசி உயர்வை ஈடுகட்டுவதற்காகவும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காகவும்  சட்டப்பூர்வமாக ஊழியர்களுக்கு வழங்கப் பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையாகும்! விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் முழுமையாக தோற்றுப்போயிருக்கிற மத்திய அரசு, அகவிலைப்படியை முடக்கியிருப்பது “ குதிரை குப்புற தள்ளியதோடு குழியையும் பறித்த கதையாக” உள்ளது! அண்டை நாடுகளுடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட போர் மற்றும் இயற்கை பேரழிவு உள்ளிட்ட நெருக்கடி நேரங்களில் எல்லாம் அரசுக்கு பக்க பலமாக செயலாற்றிய மத்திய அரசு ஊழியர்களை இந்த உத்தரவின் மூலம் வஞ்சித்துள்ளதோடு அரசு எடுக்கும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கொரோனாவின் பெயரால் அரசு நியாயப்படுத்த முயலுவது கண்டிக்கத்தக்கதாகும்!

 திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு  தொழிலாளர்களின் மீது பொருளாதார தாக்குதலை தொடுப்பதற்கு பதிலாக அரசியல் இலாபத்திற்காக முன்னெடுத்துள்ள, 98 ஆயிரம் கோடி செலவிலான மும்பை- அகமதாபத் அதிவிரைவு புல்லட் ரயில் திட்டத்தையும், புது தில்லியில் எழுப்ப திட்டமிட்டுள்ள 20,ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான புதிய பாராளுமன்றக் கட்டிடம் உட்பட மத்திய விஸ்டா திட்டத்தையும் தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு அத்தொகையை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும். நாட்டு மக்கள் ஒருபுறம் கொரோனா அச்சத்தாலும் மறுபுறம் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினாலும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து , தவித்துக் கொண்டிருக்கும் போது ஏற்கனவே 2063 கோடி ரூபாய் செலவில் பட்டேல் சிலையை நிறுவி தங்களது அரசியல்  நோக்கங்களை நிறைவேற்றி கொண்டதைப் போன்று அல்லாமல் மக்களின் உயிர் காக்கும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட மத்திய அரசு முன்வர வேண்டும் .
தற்போது அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி முடக்கத்தினால் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ஜனவரி 2020 முதல் ஜீன் 2020 வரை 4% ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலான காலத்திற்கு 3% மற்றும் ஜனவரி 2021 முதல் ஜீன் 2021 வரை 3%  ஆக மொத்தம் சம்பளத்தின் 10% இழப்பை ஏற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல ஏழாவது ஊதியக்குழு வழங்கியுள்ள பரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படி இருபத்தைந்து சதவீதத்தை எட்டும் போது , தற்போது அரசு ஊழியர்கள் பெற்று வரும் வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டு தற்போதுள்ள  சென்னை உள்ளிட்ட X  நகரங்களுக்கு 24%,லிருந்து 27% சதவீதமாகவும்,  Y  நகரங்களுக்கு 16% லிருந்து 18% ஆகவும், Z  நகரங்களுக்கு 8% லிருந்து 9% ஆக உயர்த்தி வழங்கப்படுவதும்  அரசின் இந்த உத்தரவினால் தற்போது முடக்கப்பட்டுள்ளது!  அது மட்டுமல்லாமல் அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும், மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் அரசின் இந்த உத்தரவை காரணம் காட்டி அகவிலைப்படி உயர்வு மறுக்கப்படும் அபாயமும் உள்ளது! அரசின் இந்த தாக்குதல் தொழிலாளர்களின் மன உளைச்சலை அதிகப்படுத்தி அவர்களின் செயல் பாடு மற்றும் உற்பத்தி திறனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த அரசு உணர வேண்டும்.
எனவே அரசு தற்போது வெளியிட்டுள்ள உத்தரவை உடனடியாக திரும்ப பெறுவதோடு ஏற்கனவே மார்ச் மாதம் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த 4% அகவிலைப்படியை வழங்குவதற்கான உத்தரவை வெளியிட வேண்டும் என்று தொமுச பேரவையின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக அரசே!போராடிப்பெற்ற உரிமைகளை பறிக்காதே!அகவிலைப்படி, விடுப்பூதியம்
உள்ளிட்ட உரிமைப்பறிப்பை கைவிடுக!   சர்வதிகாரப்
போக்கைக் கைவிடுக!
ஜாக்டோ-ஜியோ வேண்டுகோள்!

Go.Ms.No:231 Date: 23.4.2020 GPF - Rate of interest for the finacial year 2020-2021 With effect from 01.4.2020 to 30.6.2020

Go:No: 231Date:23.4.2020 வருங்கால வைப்பு நிதி
வட்டி விகிதம் 7.9%-லிருந்து 7.1%-ஆக குறைக்கப் பட்டது!
தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Go.Ms.No:232 Date:27.4.2020 தமிழ்நாட்டின் ஆசிரியர், அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 2021சூலை வரை பஞ்சப்படி (DA) நிறுத்திவைப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு

Go.No:232 Date:27.4.2020 தமிழ்நாட்டின் ஆசிரியர், அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 2021சூலை வரை பஞ்சப்படி (DA) நிறுத்திவைப்பு! தமிழக அரசு அதிரடி அரசாணை!
மத்திய அரசை அடியொற்றி தமிழக அரசு பஞ்சப்படியை நிறுத்தம் செய்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது!


40 % வருமான வரி விதிக்க வேண்டும்! வரித்துறை அதிகாரிகள் சங்கம் பரிந்துரை

40 % வருமான வரி விதிக்க வேண்டும்!  வரித்துறை அதிகாரிகள் சங்கம் பரிந்துரை!
::::::::::::::::::::::::::::::::::::
ஆண்டுக்கு
ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விகிதத்தை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
சொத்து வரியை (wealth tax) மீண்டும் அறிமுகப்படுத்தவேண்டும்
ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் (taxable income)  4 சதவீத கோவிட் -19 செஸ் விதிக்க வேண்டும்
ஏழைகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ .5 ஆயிரம் வரை கொடுக்க வேண்டும்
சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், வணிகங்களுக்கும் மூன்று ஆண்டு வரிவிலக்குக் கொடுக்கப்பட வேண்டும்
இவை, பொருளாதாரத்தை மீட்பதற்காக இந்திய வருவாய் சேவையின் (ஐஆர்எஸ்) 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) மற்றும் மத்திய நிதி அமைச்சகத்திற்குச் சனிக்கிழமை வழங்கிய “கோவிட் -19 தொற்றுநோய் நிதித்திட்டம்” என்ற அறிக்கையின் ஒரு பகுதியாக இந்த பரிந்துரைகள் உள்ளன. இந்த பரிந்துரைகள் மத்திய நேரடி வரி வாரியத்திற்கும் (CBDT) அனுப்பப்பட்டுள்ளது.

“பொருளாதாரத்தைப் புதுப்பிக்க அரசாங்கம் கணிசமாக அதிக செலவு செய்ய வேண்டும், அதற்குக் கூடுதல் வருவாயை ஏற்கனவே துன்பத்தில் இருக்கும் சாமானியருக்குச் சுமை ஏற்படாத வழிகளில் திரட்ட வேண்டும். இது போன்ற காலங்களில், பெரும் செல்வந்தர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்குப் பொதுநலனை உறுதி செய்வதில் அதிக கடமை உள்ளது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அரசின் வருமானத்தைக் கூட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின் விவரங்களைச் சுருக்கமாகக் காண்போம்.

பணக்காரர்களுக்கு கூடுதல்வரி:

ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வருமான வரி வீதத்தை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும் அல்லது 5 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட நிகர சொத்து உள்ளவர்களுக்கு செல்வ வரியை (wealth tax)  மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.

பொருளாதாரத்தை புதுப்பிப்பதில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் 5-10 மிக முக்கியமான திட்டங்களை அரசாங்கம் அடையாளம் காண வேண்டும். செல்வந்தர்களுக்கு வரிவிதிப்பதன் மூலம் திரட்டப்படும் கூடுதல் வருவாய் இந்த 5-10  திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 10 லட்சத்திற்கு மேல் வருமானம் (taxable income)  உள்ளோர்க்கு கோவிட் -19 நிவாரணத்தின் அடிப்படையில் 4 சதவீத கூடுதல் செஸ் விதிப்பதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் ரூ .15,000 முதல் 18,000 கோடி வரை இருக்கலாம் என்றும் அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

வரி சலுகைகளை விரிவுபடுத்துவதன் மூலம் கோவிட் -19 நிவாரணத்திற்காக சி.எஸ்.ஆர் நிதிகளை திரட்ட வேண்டும். கோவிட் -19 நெருக்கடியின் போது, வேலையில்லா  நாட்களில் தொடர்ச்சியான ஊதியத்தை வழங்குவதை ஊக்குவிப்பதற்காக ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை சி.எஸ்.ஆரின் கீழ் கணக்கில் காட்ட , கார்ப்பரேட்டுகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

அதிக நிதி திரட்டுவதற்காக, ஒரு புதிய வரி சேமிப்பு திட்டத்தையும் (tax saving scheme) , எடுத்துக்காட்டாக, கோவிட் -19 சேமிப்பு சான்றிதழையும் இந்த அறிக்கை  பரிந்துரைக்கிறது.

(செல்வ வரி என்பது ஒரு நிறுவனத்தின் சொத்துக்களை வைத்திருப்பதற்கான வரி. பணம், வங்கி வைப்பு, ரியல் எஸ்டேட், காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் உள்ள சொத்துக்கள், இணைக்கப்படாத வணிகங்களின் உரிமை, நிதிப் பத்திரங்கள் மற்றும் தனிப்பட்ட அறக்கட்டளைகள் உள்ளிட்ட தனிப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு இதில் அடங்கும்.)

மின்-வர்த்தக  நிறுவனங்களுக்கு சமன்பாட்டு வரியை அதிகரித்தல்:

கொரோனா வைரஸ் பொருளாதாரம் பெரும்பாலும் டிஜிட்டல் / ஆன்லைன் / இ-காமர்ஸ் வழியே இயங்குகிறது என்பதால், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் ஜூம் போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் சமன்பாடு வரி அல்லது “கூகிள் வரி”யை  அதிகரிக்க வேண்டும். விளம்பர சேவைகளுக்கு 6 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகவும், மின்-வர்த்தகப் பணிக்கு 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகவும் வரிகளை உயர்த்த வேண்டும்.

2017-18 நிதியாண்டிற்கான சமன்பாட்டு வரி வசூல் ரூ. 550 கோடியாகவும், 2018-19 நிதியாண்டு ரூ. 939 கோடியாகவும் இருந்துள்ளது. “இத்துறையில் வணிக வளர்ச்சி விகிதத்தின் அதிகரிப்பு வருவாயின் நல்ல தொகையை பங்களிக்கும். மேலும், வரிவிதிப்பு வருமான வரிச் சட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாததால், இது இந்தியாவின் வருமான வரி ஒப்பந்தங்களுக்கு உட்பட்டதாக இருக்காது.”

(நாட்டிற்கு வெளியே இயங்கும் Google,Facebook ,etc போன்ற இணைய சேவையை பயன்படுத்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ள சமநிலைப்படுத்தல் வரியே “Goggle Tax” என்று பிரபலமாக அறியப்படுகிறது)

ஏழைகளுக்கு வருமானத்தை உறுதி செய்தல் :

குறைந்தது ஆறு மாத காலத்திற்கு பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய 12 கோடி குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ .3,000 முதல் 5,000 வரை நேரடி பண பரிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

இந்த நெருக்கடி மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் கிராமப்புற சாலைகள் கட்டுவது, பொது சுகாதார உள்கட்டமைப்பு, ஆரம்ப பள்ளி கட்டிடங்கள்  போன்ற பொதுப்பணித் திட்டங்களை உருவாக்குவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

மிகவும் திட்டமிட்டு செயல்பட்டால், மூன்று மதிப்புமிக்க நோக்கங்களை ஒன்றாக அடைய முடியும்,

வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு மூலம் வருமான ஆதரவை வழங்குதல்
பொது உள்கட்டமைப்பை உருவாக்குதல்
மனித மூலதனத்தில் முதலீடு செய்தல்


சுகாதாரத் துறை மூலம்  பொருளாதாரத்தை இயக்குதல்:

அடுத்த ஆண்டு அல்லது அதற்கு பொருளாதார வளர்ச்சிக்கான உந்து சக்தியாக சுகாதாரத் துறை செயல்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

வரிவிதிப்பு கண்ணோட்டத்தில், சுகாதாரத் துறையில் செயல்படும் அனைத்து கார்ப்பரேட்டுகள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முழுமையான வரிவிலக்கு முன்மொழியப்பட வேண்டும். சுகாதாரத்துறையில் இயக்கும் இந்த நிறுவனங்களுக்கு வரிவிலக்கு வழங்குவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கலாம். அனால் மருந்துகள், முகமூடிகள், கையுறைகள், கவுன், வென்டிலேட்டர்கள், சோதனை ஆய்வகங்கள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுவதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு வரிவிலக்கு கட்டாயமாக உறுதிப்படுத்தப்படவேண்டும்


நுகர்வுத்திறனை அதிகரிக்த்தல்:

நுகர்வுத்திறனை அதிகரிப்பதற்கும், வருமானத்தை அதிகரிப்பதற்கும், பங்குச் சந்தை சரிவின் காரணமாக சில்லறை முதலீட்டாளர்கள் அனுபவிக்கும் குறுகிய கால மூலதன இழப்பை சமாளிக்க சிறப்பு வரிவிலக்கு முறையை அமல்படுத்த வேண்டும்.

ரூ .10 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் அல்லது வேறு எந்த கொடுப்பனவுகளையும்(allowances) வரி விதிக்கக்கூடிய வருமானமாக அரசாங்கம் கருதக்கூடாது.

வேலை இழந்தவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு அல்லது புதிய வேலையே பெறும்வரை வரி செலுத்துதலை ஒத்திவைக்க அனுமதிக்க வேண்டும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆட்டோமொபைல்கள் மற்றும் மின்னணு பொருட்களை வாங்குவதில், வீடு வாங்குவதில் அதிக சலுகைகள் வழங்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நெருக்கடியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ .5 கோடி -10 க்கும் குறைவாக வருமான வரி ஈட்டும் இந்தத் துறைகளுக்கு வரித்தடை விதிக்க வேண்டும்.
# தமிழில்: ராதா

Go. (Ms).No:48 Date:27.4.2020 ஓராண்டு காலத்திற்கு விடுப்பூதியம் நிறுத்திவைப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!



அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

Click here...