சனி, 2 மே, 2020

02.05.2020 ஆம் நாளைய  தமிழ்நாடு அமைச்சரவை கூட்ட முடிவுகள்!
04.05.2020 முதல் 17.05.2020முடிய ஊரங்கில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் !தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு உள்ளார்கள்!





02.05.2020 ஆம் நாளைய  தமிழ்நாடு அமைச்சரவை கூட்ட முடிவுகள்!
04.05.2020 முதல் 17.05.2020முடிய ஊரங்கில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் !தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு உள்ளார்கள்!





கோவிட்-19 மருத்துவப்பணி அல்லாத பணிகளில் ஐம்பதுவயதுக்கும் குறைவுள்ள
பள்ளி ஆசிரியர்களை
தன்னார்வலராக பயன்படுத்திக்கொள்ளுதல்!அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் பள்ளிக்கல்வித்
துறைச்செயலாளர் கடிதம்!
பள்ளிகள் கட்டண வசூலுக்கு க்ரீன் சிக்னல்!

பத்தாம் வகுப்புத் தேர்வு நடக்கவில்லை; ப்ளஸ் டூ ரிசல்ட் வரவில்லை; புதிய அட்மிஷனும் போட முடியாது; இருக்கிற மாணவர்களிடம் கட்டணமும் கேட்க முடியாது என்கிற நிலையில் கல்வித் துறையின் முக்கியப் புள்ளியிடமும் கோட்டை நிர்வாகியிடமும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சந்தித்து தங்கள் குறைகளைக் கொட்டியிருக்கிறார்கள். கூடவே ஒரு பள்ளிக்கு இவ்வளவு எனச் சொல்லி `படியளந்தும்’ விட்டார்களாம்.

 இதனால், `ஆன்லைன் மூலம் பள்ளிகள் அட்மிஷன் போட்டுக்கொள்ளலாம். படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களிடம் இந்தாண்டுக்கான கட்டணத்தை வசூல் செய்யலாம்’ என்று உத்தரவு வரப்போகிறதாம். கொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசின் செயல்பாட்டைப் பாராட்டி தனியார் பள்ளிகள் சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

 எப்படியெல்லாம் சம்பாதிப்பது என்பதைச் சொல்லிக்கொடுப்பதற்கு இவர்களே ஒரு பள்ளிக்கூடம் திறக்கலாமே என்று சத்தமின்றிச் சிரிக்கிறார்கள் பள்ளி நிர்வாகிகள்.

-கழுகார், ஜூனியர் விகடன்
பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் இயங்கிடும் அனைத்து
ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் விடுபடுதல் இன்றி  தூய்மைப்பணியாளர்கள்  நியமிக்கப்பட வேண்டும்!அனைத்துப்பள்ளிகளிலும் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கும் மாதாந்திர ஊதியம் மற்றும் மாதாந்திர தூய்மைப்பொருள்களுக்கான தொகை இ்டையீடின்றி வழங்கப்படவேண்டும்!
பரமத்தி ஒன்றியத்தில்  12  சத்துணவு எடுப்புப்பள்ளிகளுக்கு தூய்மைப்பணியாளர் ஊதியம் கிடையாது என்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  ஆட்சேபிக்கிறது. மேற்கண்ட 12 சத்துணவு எடுப்புப்பள்ளிகளின் தூய்மைப்பணிகளை மேற்கொள் வது யார்!? என்று வினா எழுவதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சுட்டிக்காட்டுகிறது.
நாமக்கல் மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை உதவி இயக்குநரிடம்  தமிழ்நாடு தொடக கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் ,பரமத்தி ஒன்றிய அமைப்பு வலியுறுத்திக் கோருகிறது!

அகவிலைப்படி உயர்வு ரத்து, சரண் விடுப்பு ஊதியம் ரத்து # தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கண்டனம்



வெள்ளி, 1 மே, 2020

தேர்வுக்கு_அவசரம்_என்ன? பள்ளி_கல்லூரிகளைக்_கடைசியாக யோசிக்கலாம் #தமிழ் இந்து தலையங்கம்

தமிழ் இந்து தலையங்கம்

மே 1, 2020.

#தேர்வுக்கு_அவசரம்_என்ன?

#பள்ளி_கல்லூரிகளைக்_கடைசியாக #யோசிக்கலாம்

ஊரடங்கு முடிந்தவுடன் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அன்றாட ஒழுங்கு குலைக்கப்பட்ட இந்நாட்களில், ஒரு பொதுத் தேர்வை நடத்துவதில் அவசரம் ஏன்?

 கரோனா ஊரடங்குக்குப் பிந்தைய மீட்சி நாட்களில் கடைசி வரிசையில் சிந்திக்க வேண்டிய பள்ளி, கல்லூரிகள் இயக்கத்தை முன்கூட்டி நடத்த அரசு முற்படுவதே வினோதமாக இருக்கிறது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் ஒரு கோடி. தமிழக மக்கள்தொகையில் ஏறக்குறைய எட்டில் ஒரு பங்கினரான மாணவர்களைக் கல்வி நிலையங்களை நோக்கி நகர்த்தும் எந்த நடவடிக்கையும் ஒட்டுமொத்த இயக்கத்திலும் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிடும். ஏனெனில், ஒரே நேரத்தில் சென்றடைய வேண்டிய அவர்களுடைய புறப்பாடு, வீடுகளின் சமையலறைகளிலிருந்து சாலைகள் வரை பரபரப்பை உண்டாக்குவதோடு, நெரிசலையும் உண்டாக்கும். நெரிசல் மிக்க நம்முடைய கல்வி நிலையங்களில் இதுவரையில் அரசு வலியுறுத்திவரும் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் கடும் சவாலாக இருக்கும், ஒழுங்கை அது குலைக்கும். கரோனாவின் இலக்குக்கு ஆளாவதில் இளம்வயதினர் பின்வரிசையில் இருக்கலாம். ஆனால், அவர்கள் கிருமி கடத்துநர்களாகிவிடும் பெரும் அபாயம் இருப்பதை அரசு புறந்தள்ளக் கூடாது. இத்தகு நிலையில், குறைந்தது ஜூன் 17 வரையில் பள்ளிகள் திறக்கப்படாது என்ற ஒடிஷா அரசின் முடிவு தெளிவானதாகத் தெரிகிறது.

அப்படியென்றால், தேர்வுகளை என்ன செய்வது? பள்ளி இறுதித் தேர்வுதான் முக்கியமானது. அதை ஏற்கெனவே தமிழகம் நடத்தி முடித்துவிட்டது. பதினோராம் வகுப்பைப் பொறுத்தமட்டில் ஒரே ஒரு தேர்வு மிச்சம் இருக்கிறது; அதைப் பன்னிரண்டாம் வகுப்பின் காலாண்டுத் தருணத்தில் சேர்த்துக்கூட நடத்திக்கொள்ளலாம். பத்தாம் வகுப்புத் தேர்வுகளைப் பொறுத்தமட்டில் கடந்த ஆண்டில் 95% மாணவர்களுக்குத் தேர்ச்சி அளித்திருக்கிறது தமிழக அரசு. இந்த வருடம் தேர்வையே ரத்துசெய்துவிட்டு, 100% தேர்ச்சி அளிப்பதில் என்ன பிரச்சினை என்று கேட்கிறார்கள் கல்வியாளர்கள். அரசு விரும்பாவிடில், இன்னும் இரு மாதங்கள் கழித்துக்கூடத் தேர்வை நடத்தட்டும். எப்படியும் அடுத்த இரு மாதங்களில் தேர்வு நடத்துவதை யோசிப்பது தேர்வுக்கான மனநிலையின் முக்கியத்துவத்தைப் புறந்தள்ளுவது; அதை அரசு செய்யக் கூடாது. இப்போதைக்கு இணைய வழிக் கல்வியை அரசு தொடரட்டும். அதற்கு வாய்ப்பற்றோருக்கு அந்த வாய்ப்பை உருவாக்கிடும் திட்டங்களை யோசிக்கட்டும்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 14 நாட்கள் ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு. மே-17 ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு‍ Press Release statement








இடம் விட்டு இடம் நகருவதற்கு அனுமதி சீட்டுபெறுதல் சார்ந்தது உள்ளிட்ட பல்வேறுபுதிய வழிகாட்டும் நெறிமுறைகள்வெளியீடு!தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அனைத்து அரசு செயலாளர் மற் றும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் கடிதம்









மே விழா! அதை எங்ஙனம் மறக்க முடியும்? -பேரறிஞர் அண்ணா