ஞாயிறு, 17 மே, 2020

மே 17, வரலாற்றில் இன்று.

1498ஆம் ஆண்டு இதே நாளில் தான் போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா இந்தியாவில் காலெடுத்து வைத்தார்.

இந்திய சரித்திரத்தில், இந்த நாள் பிற்காலத்தில் ஏற்படுத்த இருக்கும் கலாச்சார, அரசியல் மாற்றங்களைப் பற்றி ஒருவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

ஆம்! அன்றுதான். பார்த்தலோமிய டயஸ் காட்டியிருந்த நல்வழியைப் பயன்படுத்திக் கொண்டு, நன்னம்பிக்கை முனையைத் தாண்டி, இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரம், கேரளப் பகுதியின், கள்ளிக்கோட்டைக்கு (கோழிக்கோடு) வாஸ்கோடகாமா எனும் போர்த்துக்கீசியர் முதன் முதலில் வந்து சேர்ந்த தினம்.

யார் இந்த வாஸ்கோடகாமா? எதற்கு இவர் இந்தியாவிற்கு வந்தார்? எப்படி இங்கு வந்தார்? எதனால் இவரது வருகை முக்கியத்துவம் வாய்ந்தது? என்று பல கேள்விகள் எழுகிறதல்லவா. இந்த கேள்விகளுக்குப் பதில் தேடி காலச்சக்கரத்தில் ஏறி சற்றேப் பின்னோக்கிச் சென்று பார்ப்போம்.

கி.பி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து, 16 ஆம் நூற்றாண்டு வரையிலான ஐந்நூறு ஆண்டுகளில், இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையே இருந்த வர்த்தக உறவுகள் வலுவானதாய் இருந்தன. குறிப்பாக ஐரோப்பாவில் அதிகம் உட்கொள்ளப் படும் அசைவ உண்வுகளுக்கு சுவையூட்டும் ஏலம், மிளகு, மிளகாய், இலவங்கம் போன்ற வாசனைப் பொருட்களிற்கு, ஐரோப்பிய சந்தைகளில் தேவை மிக அதிகமாக இருந்தது.15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கும், மேலை நாடுகளிற்குமிடையே வணிகம் நடைபெற மூன்று கடல் வழி மார்க்கங்கள் இருந்தன.

1.எகிப்தின் வழியாக ஐரோப்பாவை அடையும் மார்க்கம்.

2.ஆக்ஸஸ், காஸ்பியன் மற்றும் கருங்கடல் வழியாக ஐரோப்பாவை அடையும் வடக்கு வழி மார்க்கம்.

3.சிரியாவிலிருந்து மத்திய தரைக்கடல் மூலம் ஐரோப்பாவை அடையும் இடைப்பட்ட மார்க்கம்.

ஆனால் இம்மூன்று வியாபார மார்க்கங்களும், துருக்கிப் பேரரசின் கட்டுப்பாட்டிற்குக் கீழே இருந்தன. எனவே துருக்கியர்கள் விதித்த தீர்வைக்குட்பட்டே எவரும் வணிகம் செய்ய வேண்டி இருந்தது மட்டுமின்றி, ஐரோப்பிய, துருக்கி அரசுகளுக்கிடையேயிருந்த பகைமை உறவும் பெரும் பிரச்சினையாய் இருந்தது.

இந்த காரணங்களால், ஐரோப்பாவிற்கும், இந்தியாவிற்குமிடையேயான புதிய மற்றும் நேரடி கடல் வழி மார்க்கத்தை கண்டு பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. இந்த முயற்சியை முதன் முதலில் தொடங்கியவர்கள் ஸ்பானியரும், போர்த்துக்கீசியருமே. ஆனால் இதில் முதலில் வெற்றி கண்டவர்கள் போர்த்துக்கீசியர்களே.

அப்போதைய இளவரசர் ஹென்றி இதற்குத் தேவையான முழு உதவியையும், ஆதரவையும் வழங்கினார்.இதனைப் பயன்படுத்திக்கொண்டு, ஆப்பிரிக்கக் கடற்கரைப் பகுதியில் காலூன்றி, பின்னர் 1471ல் பூமத்திய ரேகையைக் கடந்தனர். 27 வருட கடும் முயற்சிக்குப் பின்னர் 1498 ல் இந்தியாவை வந்தடைந்தனர்.

கோழிக்கோடுக்கு வாஸ்கோடகாமா வந்தடைந்த போது, இங்கு நிலவிய அரசிய்ல் சூழ்நிலை போர்த்துக்கீசியருக்கு சாதகமாகவே இருந்தது. அப்போது “ஜமோரின்“ எனப்படும் இந்து மத அரசரால் ஆளப்பட்டு வந்தது. கோழிக்கோடுத் தவிர கொச்சி, கண்ணனூர், விசயநகரம் ஆகிய இடங்கள் இந்து மத அரசர்களாலும், டில்லி,பீஹார், குஜராத், பீஜப்பூர், அகமது நகர் ஆகிய இடங்கள் முஸ்லீம் அரசர்களாலும் ஆளப்பட்டு வந்தன.

இவற்றுள் இந்து மன்னர்கள் கோலோச்சி வந்த கேரளக் கடற்கரைப்பகுதியில் வாஸ்கோடகாமா காலடி வைத்ததால், அப்பிரதேச மன்னர்களின் ஆதரவு எடுத்த எடுப்பிலேயே போர்த்துக்கீசியருக்கு கிட்டியது. அது வரை கடல்வழியின் மூலம் இந்திய நாட்டின் வர்த்தக முற்றுரிமையை (Trade Monopoly) முஸ்லீம் வர்த்தகர்களே பெற்றிருந்ந்தனர்.

அந்த சமயத்தில் வாஸ்கோடகாமா கண்டு பிடித்த கடல் மார்க்கமும், இந்து அரசர்களிடம் அவர் பெற்ற ஆதரவும் இந்த முற்றுரிமைக்கு சவால் விடுவதாய் இருந்தது. இது முஸ்லீம் அரசர்களுக்கு, இந்து அரச்ர்களிடமும், போர்த்துக்கீசியர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதைத்தான் “இந்தியவுக்குச் செல்வதற்கென கண்டுபிடிக்கப்பட்ட புதிய கடல் மார்க்கம் பண்பாட்டு உலகத்தின் மீது ஏற்படுத்திய விளைவுகளைப் போன்று வேறெந்தச் செயலும் இடைக்கால வரலாற்றில் ஏற்படுத்தியிருக்க வில்லை” என்று சர்.டெனிஸன் ராஸ் எனும் அறிஞர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறாக வாஸ்கோடகாமாவின் கண்டுபிடிப்பும், வருகையும், இந்திய அரசியலிலும், வாணிகத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவை ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் கீழ் கொண்டு வருவதற்கான, அடிமைத்தனத்திற்கான விதை தெரிந்தோ தெரியாமலோ, வாஸ்கோடகாமாவால் மெல்ல அன்று விதைக்கப்பட்டது.
மே 17, வரலாற்றில் இன்று.

இங்கிலாந்தை சேர்ந்த அறிவியலாளரும், பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவருமான எட்வர்டு ஜென்னர் (Edward Jenner) பிறந்த தினம் இன்று.

 எட்வர்ட் ஜென்னர் இங்கிலாந்தின் பெர்க்லே நகரில் 1749ஆம் ஆண்டு பிறந்தார்.

தந்தை மதச் சடங்குகள் செய்பவர். வோட்டன், சிரென் செஸ்டர் ஆகிய இடங்களில் ஜென்னர் பள்ளிக் கல்வி பெற்றார். 14-வது வயதில் டேனியல் லட்லாவ் என்ற அறுவை சிகிச்சை நிபுணரிடம் சேர்ந்து 7 ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி பெற்றார். மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக மாறினார்.

 கவ் பாக்ஸ் (Cow-pox) நோய் கண்டவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கருத்தில் ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர் 1765-ல் ஒரு கட்டுரை எழுதி லண்டன் மருத்துவக் கழகத்துக்கு அனுப்பினார். அதற்கு அவரால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை.

 பெரியம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தே தீருவது என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார்.   1792இல் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். இயற்கையை அதிகம் நேசித்தார். குயில்களின் வாழ்க்கை முறை குறித்து ஆய்வு மேற்கொண்டு பல கட்டுரைகளை வெளியிட்டார்.

1796இல் கவ் பாக்ஸ் நோய் கண்ட பெண்ணின் விரலில் இருந்து கிருமியை எடுத்து *ஜிம்மி பிப்ஸ்*  என்ற 8 -வயது சிறுவனுக்கு
*முதன் முதலாக 1796 - ம் ஆண்டு மே 14  அன்று செலுத்தினார்* சிறுவனும் நோயால் தாக்கப்பட்டான். 7 வாரங்கள் கழித்து பெரியம்மையால் தாக்கப்பட்டவர் உடலில் இருந்து கிருமியை எடுத்து அதே சிறுவன் உடலில் செலுத்தினார். ஆனால், அந்த சிறுவனை பெரியம்மை தாக்கவில்லை.

தொடர்ந்து பலரிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றியடைந்தது. கவ் பாக்ஸ் கிருமிகளை மென்மைப்படுத்தி ஊசிமூலம் ஒருவரது உடலில் செலுத்தினால் அவரை பெரியம்மை தாக்காது என்பதை திட்டவட்டமாக நிரூபித்தார்.

ஆராய்ச்சி முடிவுகளை 1778இல் வெளியிட்டார். இயற்கையையும் மனிதகுலத்தையும் அளவுகடந்து நேசித்த இவர் *தனது இந்த அரிய கண்டுபிடிப்புக்கு எந்த காப்புரிமையும் பெறாமல் இலவசமாக வழங்கினார்*

அம்மை குத்துதல் குறித்தும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார். ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக அம்மை ஊசி குத்தினார். தினமும் இவரது அறைக்கு முன்பு சுமார் 300 பேர் வரிசையில் நின்று அவரிடம் அம்மை தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

 ஜென்னரை கவுரவித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802இல் 10 ஆயிரம் பவுண்டுகள் வழங்கியது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் 20 ஆயிரம் பவுண்டுகளை வழங்கியது. அந்தத் தொகையை கொண்டு 1808இல் தேசிய தடுப்பூசிக் கழகத்தை நிறுவினார். இவரது தடுப்பூசி முறை பின்னர் பல ஆபத்தான நோய்களுக்கு தடுப்பு மருந்து கண்டறிய முன்னோடியாக அமைந்தது.

 பெரியம்மை தடுப்பூசியால் ஜென்னரின் புகழ் உலகெங்கும் பரவியது. அம்மை நோயை முழுவதுமாக விரட்டியவர் என்று இவரை உலகம் போற்றியது.

*1979 - ம் ஆண்டு டிசம்பர் - 09 - ம் தேதி உலக சுகாதார நிறுவனமானது (WHO)  பெரியம்மை நோயை உலகம் முழுவதுமே முற்றிலும் ஒழித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது*

மருத்துவ உலகுக்கு தன்னிகரில்லாத கொடையை வழங்கி, கோடிக்கணக்கான உயிர்களைக் காத்தவரும் நோய் *தடுப்பூசிகளின் தந்தை* என்று போற்றப்படுபவருமான ஜென்னர் 74 வயதில் ஜனவரி 26, 1823ஆம் ஆண்டு காலமானார்.
,மே 17, வரலாற்றில் இன்று.

உலக உயர் ரத்த அழுத்த தினம் இன்று.

ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இதைவிட 140/90 அல்லது அதற்கும் மேலாக அளவு தொடர்ந்து இருந்தால், அதை உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தக் கொதிப்பு என, அழைக்கப்படுகிறது.

இத்தகைய உயர் ரத்த அழுத்தம் கொண்ட நபர்கள், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே, உயர் ரத்த அழுத்தம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, உலகம் முழுவதும் மே 17ம் தேதி உயர் ரத்த அழுத்த தினமாக, அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

உலக சுகாதார நிறுவனம் கார்டியோவாஸ்குலர் இறப்பு விகிதத்திற்கான முன்னணி காரணமாக உயர் இரத்த அழுத்தத்தைக் குறிப்பிட்டிருக்கிறது. 85 தேசிய உயர் இரத்த அழுத்த சங்கங்கள் மற்றும் குழுக்களின் அம்ப்ரல்லா அமைப்பான தி வேர்ல்ட் ஹைபர்டென்ஷன் லீக் (டபிள்யூஹெச்எல்), உலகம் முழுவதிலுமுள்ள உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களின் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய நிலை குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தெரிவிப்பதற்கு, உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005 ஆம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது என்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதியை உலக உயர் இரத்த அழுத்த தினமாக (டபிள்யுஹெச்டி) அறிவித்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, அதிக தேசிய சமூகங்கள் உலக சுகாதார நிறுவனத்தில் ஈடுபட்டிருக்கின்றன என்பதுடன் பொதுமக்களிடத்தில் செய்தியைக் கொண்டு செல்ல தங்களது நடவடிக்கைகளில் படைப்பாக்கத்தோடு செயல்படுகின்றன.

2007 ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனத்தின் 47 உறுப்பு நாடுகள் கலந்து கொண்ட சாதனை பங்கேற்பு நடைபெற்றது. உலக உயர் இரத்த அழுத்த தின வாரத்தின் போது, இந்த நாடுகள் அனைத்தும் – தங்களுடைய உள்ளூர் அரசாங்கங்கள், தொழில்முறை சமூகங்கள், அரசுசாராத அமைப்புக்கள் மற்றும் தனியார் தொழிற்துறைகளுடன் இணைந்து – சில ஊடகம் மற்றும் பொதுமக்கள் பேரணி மூலமாக உயர் இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தியிருக்கின்றன.

இணையத்தளம் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஜனரஞ்சக ஊடகத்தைப் பயன்படுத்துவதால் இந்தச் செய்தி 250 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களிடத்தில் சென்று சேர்கிறது. இந்த இயக்கம் வருடா வருடம் அதிகரிக்கையில், அதிகரித்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 1.5 பில்லியன் மக்களை சென்று சேரும் என்று உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது

1. உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக நம் நாட்டு மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளரும். ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி (Silent Killer) என்று அழைத்தால் அது மிகையாகாது.

இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது?

நாம் நடுத்தர வயதைக் (35 To 40) கடக்கும் போது நம் உடலில் உள்ள சிறிய சுத்த இரத்தக குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்கின்றன. மேலும் நமது தவறான உணவுப் பழக்கங்களினால் இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பு வகைகளினால் தடிப்பு ஏற்பட்டு உள் அளவு சுருங்குகிறது. இதனால் இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகிறது. இந்த நிலையைத் தான் நாம் “இரத்தக் கொதிப்பு” என்று கூறுகிறோம்.

இரத்தக் கொதிப்பு என்பது நோயல்ல. ஆனால் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுபிடித்துத் தடுக்கவில்லை என்றால் மெதுவாக நமது உடலின் பல்வேறு முக்கிய உறுப்பு மண்டலங்களை பாதித்து, அவற்றில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இரத்தக் கொதிப்பு அமைந்துவிடும்.

உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள் யாவை?
1. நாம் உண்ணும் உணவின் தன்மை.
2. மன அழுத்தம்.
3. எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.
4. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம்.
5. உடல் எடை அதிகரித்தல்.
6. ஹார்மோன் சுரப்பியில் நிகழும் கோளாறுகள்.
7. சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள்.
8. உடற்பயிற்சி இல்லாமல் சோம்பி இருப்பது.
9. சத்தம் அதிகம் உள்ள இடங்களில் வெகுநாட்கள் குடியிருத்தல்.
10. பரம்பரைத் தன்மை. (Genetic Predirposition)

இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் யாவை?

இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் நாம் இன்னும் முழுவதும் அறியவில்லை
மே 17, வரலாற்றில் இன்று.

இன்று உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் இன்று.

உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) என்று ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

உலக தகவல் சமூக நாளின் முதன்மையான நோக்கம் உலகளவில் புதிய தகவல் தொழில் நுட்பங்களாலும் இணையத்தாலும் ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை வளர்ப்பதாகும்.
*✳அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரத் தேவையில்லை - அரசாணை எண் 239, Revenue and Disaster Management Dept. நாள்: 15.05.2020ன் படி விகிதாச்சார அடிப்படையில் 21.05.2020 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து தேர்வு தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளலாம் - ஏற்கனவே வழங்கிய செயல்முறைகளில் திருத்தம் செய்து _தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!*👆

சனி, 16 மே, 2020