மே 17, வரலாற்றில் இன்று.
இங்கிலாந்தை சேர்ந்த அறிவியலாளரும், பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவருமான எட்வர்டு ஜென்னர் (Edward Jenner) பிறந்த தினம் இன்று.
எட்வர்ட் ஜென்னர் இங்கிலாந்தின் பெர்க்லே நகரில் 1749ஆம் ஆண்டு பிறந்தார்.
தந்தை மதச் சடங்குகள் செய்பவர். வோட்டன், சிரென் செஸ்டர் ஆகிய இடங்களில் ஜென்னர் பள்ளிக் கல்வி பெற்றார். 14-வது வயதில் டேனியல் லட்லாவ் என்ற அறுவை சிகிச்சை நிபுணரிடம் சேர்ந்து 7 ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி பெற்றார். மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக மாறினார்.
கவ் பாக்ஸ் (Cow-pox) நோய் கண்டவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கருத்தில் ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர் 1765-ல் ஒரு கட்டுரை எழுதி லண்டன் மருத்துவக் கழகத்துக்கு அனுப்பினார். அதற்கு அவரால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை.
பெரியம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தே தீருவது என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார். 1792இல் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். இயற்கையை அதிகம் நேசித்தார். குயில்களின் வாழ்க்கை முறை குறித்து ஆய்வு மேற்கொண்டு பல கட்டுரைகளை வெளியிட்டார்.
1796இல் கவ் பாக்ஸ் நோய் கண்ட பெண்ணின் விரலில் இருந்து கிருமியை எடுத்து *ஜிம்மி பிப்ஸ்* என்ற 8 -வயது சிறுவனுக்கு
*முதன் முதலாக 1796 - ம் ஆண்டு மே 14 அன்று செலுத்தினார்* சிறுவனும் நோயால் தாக்கப்பட்டான். 7 வாரங்கள் கழித்து பெரியம்மையால் தாக்கப்பட்டவர் உடலில் இருந்து கிருமியை எடுத்து அதே சிறுவன் உடலில் செலுத்தினார். ஆனால், அந்த சிறுவனை பெரியம்மை தாக்கவில்லை.
தொடர்ந்து பலரிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றியடைந்தது. கவ் பாக்ஸ் கிருமிகளை மென்மைப்படுத்தி ஊசிமூலம் ஒருவரது உடலில் செலுத்தினால் அவரை பெரியம்மை தாக்காது என்பதை திட்டவட்டமாக நிரூபித்தார்.
ஆராய்ச்சி முடிவுகளை 1778இல் வெளியிட்டார். இயற்கையையும் மனிதகுலத்தையும் அளவுகடந்து நேசித்த இவர் *தனது இந்த அரிய கண்டுபிடிப்புக்கு எந்த காப்புரிமையும் பெறாமல் இலவசமாக வழங்கினார்*
அம்மை குத்துதல் குறித்தும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார். ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக அம்மை ஊசி குத்தினார். தினமும் இவரது அறைக்கு முன்பு சுமார் 300 பேர் வரிசையில் நின்று அவரிடம் அம்மை தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஜென்னரை கவுரவித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802இல் 10 ஆயிரம் பவுண்டுகள் வழங்கியது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் 20 ஆயிரம் பவுண்டுகளை வழங்கியது. அந்தத் தொகையை கொண்டு 1808இல் தேசிய தடுப்பூசிக் கழகத்தை நிறுவினார். இவரது தடுப்பூசி முறை பின்னர் பல ஆபத்தான நோய்களுக்கு தடுப்பு மருந்து கண்டறிய முன்னோடியாக அமைந்தது.
பெரியம்மை தடுப்பூசியால் ஜென்னரின் புகழ் உலகெங்கும் பரவியது. அம்மை நோயை முழுவதுமாக விரட்டியவர் என்று இவரை உலகம் போற்றியது.
*1979 - ம் ஆண்டு டிசம்பர் - 09 - ம் தேதி உலக சுகாதார நிறுவனமானது (WHO) பெரியம்மை நோயை உலகம் முழுவதுமே முற்றிலும் ஒழித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது*
மருத்துவ உலகுக்கு தன்னிகரில்லாத கொடையை வழங்கி, கோடிக்கணக்கான உயிர்களைக் காத்தவரும் நோய் *தடுப்பூசிகளின் தந்தை* என்று போற்றப்படுபவருமான ஜென்னர் 74 வயதில் ஜனவரி 26, 1823ஆம் ஆண்டு காலமானார்.