திங்கள், 18 மே, 2020

தமிழகத்திலேயோ அல்லது வௌிமாநிலங்களிலோ சிக்கி உள்ளவா்கள், அந்தந்த காரணங்களுக்கு சம்பந்தப்பட்ட இணைய தள முகவாியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சொந்த வாகனங்களில் வெளி மாவட்டங்கள் அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கான பயண அனுமதி சீட்டு விண்ணப்பிக்க *https://tnepass.tnega.org/* இணைப்பை பயன்படுத்தவும் தமிழ்நாட்டில் உள்ள வெளிமாநிலத்தவர்கள் அரசு போக்குவரத்தின் மூலம் சொந்த மாநிலத்திற்கு செல்ல விரும்பினால் *https://rtos.nonresidenttamil.org/* இணைப்பை பயன்படுத்தவும் வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்கள் அங்கிருந்து அரசு போக்குவரத்தின் மூலம் தமிழகம் திரும்ப *https://rttn.nonresidenttamil.org/* என்ற இணைப்பை பயன்படுத்தவும் ஏனைய சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள் 9345168402, 9566300846, 9444920525, 9080144760, 9444761625 மற்றும் கட்டணமில்லா உதவி எண் 1070, 1077 18004251333 (காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை) இந்த அவசரகால *போக்குவரத்து அனுமதி சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.*
தமிழகத்திலேயோ அல்லது வௌிமாநிலங்களிலோ சிக்கி உள்ளவா்கள், அந்தந்த காரணங்களுக்கு சம்பந்தப்பட்ட இணைய தள முகவாியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சொந்த வாகனங்களில் வெளி மாவட்டங்கள் அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கான பயண அனுமதி சீட்டு விண்ணப்பிக்க *https://tnepass.tnega.org/* இணைப்பை பயன்படுத்தவும் தமிழ்நாட்டில் உள்ள வெளிமாநிலத்தவர்கள் அரசு போக்குவரத்தின் மூலம் சொந்த மாநிலத்திற்கு செல்ல விரும்பினால் *https://rtos.nonresidenttamil.org/* இணைப்பை பயன்படுத்தவும் வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்கள் அங்கிருந்து அரசு போக்குவரத்தின் மூலம் தமிழகம் திரும்ப *https://rttn.nonresidenttamil.org/* என்ற இணைப்பை பயன்படுத்தவும் ஏனைய சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள் 9345168402, 9566300846, 9444920525, 9080144760, 9444761625 மற்றும் கட்டணமில்லா உதவி எண் 1070, 1077 18004251333 (காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை) இந்த அவசரகால *போக்குவரத்து அனுமதி சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.*
*✒தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக் கிளையின் சார்பில் பரமத்தி ஒன்றியத்தில் 12 தொடக்கப்பள்ளிகளுக்கு தூய்மைப்பணியாளர் ஊதியம் மற்றும்* *பராமரிப்புத் தொகை 16 மாதங்களுக்கு வழங்கிட வேண்டி  07.05.2020 அன்று உதவி இயக்குநர், ( ஊராட்சிகள்)*
*நாமக்கல் அவர்களுக்கு விண்ணப்பம்  அனுப்பப்பட்டது.*
*அம்மனுவின்  மீது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) நாமக்கல் அவர்கள் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு  திட்ட இயக்குநர்,ஊரக வளர்ச்சித் திட்ட முகமை,நாமக்கல் அவர்களுக்கு உதவி இயக்குநர் அவர்களால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.*
*நடவடிக்கை எடுக்க கோரும் கடிதம்* 👉👉👉
மே 18, வரலாற்றில் இன்று.

ஆலிவர் ஹெவிசைடு (18 மே 1850 – 3 பெப்ரவரி 1925) பிறந்த தினம் இன்று.

 ஹெவிசைடு தானே படித்தறிந்த ஆங்கில மின்பொறியாளர், கணிதவியலாளர், மற்றும் இயற்பியலாளர் ஆவார். இவர் மின்சுற்றுக்களை ஆய்வதற்கு சிக்கலெண்களை பயன்படுத்தியவரும், வகையீட்டுச் சமன்பாடுகளை தீர்க்க கணித நெறிமுறைகளைக் (இவை பின்னாள் இலப்பிளாசு மாற்றுக்களுக்கு இணையானவை) கண்டறிந்தவரும், மாக்சுவெல்லின் களச் சமன்பாடுகளை மின்சாரம், காந்தவியல் விசைகளையும் ஆற்றல் பாயத்தையும் கொண்டு சீரமைத்தவரும் தன்னிச்சையாக திசையன் பகுப்பாய்வை வடிவமைத்தவர்களில் ஒருவரும் ஆவார்.

 தனது வாழ்நாளின் பெரும்பகுதியும் அறிவியல் சமூகத்துடன் ஒப்பாது இருந்தபோதும் அறிவியல் மற்றும் கணிதத்தின் அணுகுமுறையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர்.

 அயனி மண்டலத்தின் ஒருபகுதி இவரது பெயரையும் தாங்கியவண்ணம் எவிசைடு-கென்னலி அடுக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மே 18, வரலாற்றில் இன்று.

உலக எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் இன்று.

H.I.V தொற்று மற்றும் எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி மிக அவசியமான, அவசரத் தேவையாக உள்ளது.  எய்ட்ஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பதன் முலம் எய்ட்ஸ் ஆபத்தினை குறைக்க முடியும்.  இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1998ஆம் ஆண்டு முதல் மே-18 அன்று ""உலக தடுப்பூசி விழிப்புணர்வு தினம்"" அனுசரிக்கபடுகிறது.
மே 18,
வரலாற்றில் இன்று.


எழுத்தாளர்
எம். வி. வெங்கட்ராம் பிறந்த தினம் இன்று.

எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 - ஜனவரி 14, 2000) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16ஆவது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய "சிட்டுக்குருவி" என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது.
1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. "விக்ரஹவிநாசன்' என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.


1920 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் வீரய்யர்-சீதை அம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் வெங்கட்ராம். ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம்-சரஸ்வதி குடும்பத்தினர் இவரைத் தத்து எடுத்துக் கொண்டனர். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் எடுத்தவர். தொடக்கத்தில் பட்டுச் சரிகை வணிகம் செய்து கொண்டு மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதினார். 1941-1946 காலப்பகுதியில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார். 1965-1970 காலகட்டத்தில் தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நிறைய மொழி
பெயர்த்திருக்கிறார். 1948 இல் "தேனீ" என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். 'தேனீ ' இதழில் மௌனி போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பதிப்பித்திருக்கிறார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகி
இருக்கின்றன.

பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்துக்காக அறுபது சிறுநூல்களை எழுதினார். நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் தேசபக்தர்களைப்
பற்றிய பள்ளி
மாணவர்களுக்கான நூல்கள் இவை.  எம்.வி.வெங்கட்ராம் எழுதிய இந்நூல்கள் இப்போது நாற்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்துள்ளன

மனைவி ருக்மணி அம்மாள், 4 மகன்கள், 3 மகள்களுடன் பெரிய குடும்பம் இவரது.

 1952-53களில் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.2000ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி அவர் காலமானார்.


புதினங்கள்

நித்தியகன்னி
இருட்டு
உயிரின் யாத்திரை
அரும்பு
ஒரு பெண் போராடுகிறாள்
வேள்வித் தீ
காதுகள்

சிறுகதைத் தொகுதிகள்

குயிலி (1964)
மாளிகை வாசம் (1964)
வரவும் செலவும் (1964)
மோகினி (1965)
உறங்காத கண்கள்(1968)
அகலிகை முதலிய அழகிகள் (1969)
இனி புதிதாய் (1992)
எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகள் (1992)
முத்துக்கள் பத்து (2007)
பனிமுடி மீது கண்ணகி
குறுநாவல்கள் தொகு
நானும் உன்னோடு மற்றும் 6 குறுநாவல்கள்

கட்டுரை தொகுப்புகள்

என் இலக்கிய நண்பர்கள்
நாட்டுக்கு உழைத்த நல்லவர் (40க்கும் மேற்பட்ட நூல்கள்)
ஆனந்த விகடனில் 1970களில் "நஞ்சு" என்ற தொடர் நாவலை எழுதினார். "பாலம்" என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தபோது அதில் அதில் "காதுகள்' நாவலை எழுதினார். 1993-ஆம் ஆண்டு "காதுகள்' புதினத்துக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. "வேள்வித்தீ" என்ற புதினம் சௌராட்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்தது.

விருதுகள்

சாகித்திய அகாதமி விருது (காதுகள், 1993)
தமிழக அரசு விருது (எம்.வி. வெங்கட்ராம் கதைகள்)

சித்த சூரி ரத்ன விருது

லில்லி தேவசிகாமணி விருது

சாந்தோம் விருது

புதுமைப்பித்தன் சாதனை விருது
மே 18, வரலாற்றில் இன்று.

1974ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி  காலை 8 மணிக்கு ஆசியாவிலேயே மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்தேறியது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிறிய பாலைவனக் கிராமமான பொக்ரானில் இந்தியா தனது அணுகுண்டு ஒன்றை வெடித்துப் பரிசோதனை செய்தது.

அதன் சங்கேதப் பெயர் ‘ஆபரேஷன் புன்னகை புரியும் புத்தர்’ (Operation Smiling Buddha).

(இதை பொக்ரான்-I என்பார்கள். நாம் ஏற்கனவே எழுதிய, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு செய்த ரகசிய அணுகுண்டு வெடிப்பு பரிசோதனையை இதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்கள். அது 1998இல் நடைபெற்றது. அது, ‘ஆபரேஷன் ஷக்தி’ என்ற சங்கேதப் பெயருடைய பொக்ரான்-II. இந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிடும் பொக்ரான்-I, 1974இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடந்தது)

“சமாதானத்துக்கான அணுஆயுதம்” என்று இந்தக் குண்டுவெடிப்புப் பற்றி இந்தியா வர்ணித்து கொண்டது.

இந்தியாவின் அணுஆயுதப் பரிசோதனை எங்கே தாக்கத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ, மிக அதிகமான தாக்கத்தை இஸ்லாமாபாத்தில் ஏற்படுத்தியது.

அதுவரை பூட்டோவின் ‘இஸ்லாமிய அணுகுண்டு’ அல்லது ‘பாகிஸ்தானிய அணுகுண்டு’ பரிசோதனைகள் சுமாரான வேகத்தில்தான் சென்று கொண்டிருந்தன. திடீரென திட்டத்தின் வேகத்துக்கு டாப்-கியர் போடவேண்டிய அவசியத்தைப் பாகிஸ்தான் உணர்ந்து கொண்டது.
மே 18, வரலாற்றில் இன்று.

சர்வதேச அருங்காட்சியக தினம் இன்று.

அருங்காட்சியகங்கள் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகிக்கின்றன. உலகளவில் சர்வதேச அருங்காட்சியக ஆலோசனை சபை என்கிற அமைப்பு இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்புடன் உலகில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தொடர்பு வைத்துள்ளன. 1978ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 அன்று கொண்டாடப்படுகிறது.

Kids spelling learning App...

click here for download...

ஓய்வு பெறும் வயதை 58 வயதில் இருந்து 59 ஆக உயர்த்திய உத்தரவு யாருக்கு பொருந்தாது? ~ தமிழக அரசு விளக்கம்…