புதன், 20 மே, 2020

மே 20, வரலாற்றில் இன்று.

சுதந்திர போராட்ட வீரர் பிபின் சந்திர பால் நினைவு தினம் இன்று.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் 'லால்-பால்-பால்' என்ற திரிசூலமாகக் கருதப் பட்டவர்கள் லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர், *பிபின் சந்திர பால்* ஆகியோர்.

 சுதந்திரம்_என்பது பிச்சையிட்டு வாங்குவது அல்ல;
போராடிப் பெற வேண்டிய பிறப்புரிமை என்பது, இவர்களது உபதேசத்தால் தான் அடிமைப்பட்ட மக்களுக்குத் தெரிய வந்தது.

இவர்களில், ஆசிரியர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர்,
 நூலகர்,
எழுத்தாளர் போன்ற பன்முகங்களுக்கு சொந்தக்காரர், வங்கத்தில் பிறந்த  பிபின் சந்திர பால்.

 'வந்தேமாதரம்' என்ற பத்திரிகையை நடத்திய பிபின் சந்திரர், தமிழகத்தின் வ.உ.சி,
 பாரதி,
சிவா அணிக்கு உத்வேகம் அளித்தவர். புரட்சிவீரர் அரவிந்தருக்கு எதிராக சாட்சியம் அளிக்க மறுத்ததற்காக ஆறுமாத சிறைத் தண்டனை பெற்றவர்.

அந்நியத் துணி எரிப்பு,
 அந்நியப் பொருள் பகிஷ்கரிப்பு,
சுதேசி சிந்தனை ஆகியவை பிபின் சந்திரரின் போதனைகள். மகாத்மா காந்தி காங்கிரசில் ப
இடம் பெறும்வரை பிபின் சந்திரரின் முக்கியத்துவம் மிகுந்திருந்தது. 1921 ல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிபின் சந்திரர், ''என்னிடம் மந்திரமோ, மாயமோ இல்லை; இயல்புநிலையை உத்தேசித்தே நான் போராட்டங்களை வகுக்கிறேன். கண்களை மூடிக்கொண்டு என் பின்னால் வரும்படி என்னால் யாருக்கும் உபதேசிக்க முடியாது'' என்று காந்தியின் அஹிம்சையைக் கண்டித்துப் பேசினார் பிபின்.

காங்கிரஸ் கட்சியில் காந்தியின் ஆளுமை அதிகரித்தது, முஸ்லிம் லீகை தாஜா செய்தது, கிலாபத் இயக்கத்தில் காங்கிரஸ் பங்கேற்பு ஆகிய காரணங்களால், தீவிர அரசியலிலிருந்து விலகிய பிபிப் சந்திரர், ஏழ்மையான நிலையில், 1932 , மே 20இல் காலமானார்.

 முற்போக்காளரான பிபின் சந்திரர், விதவையை மறுமணம் செய்வதற்காக குடும்பத்தையே பிரிந்தவர். இவரது எழுத்துகள், சுதந்திர வேட்கையைப் பரப்பிய அக்னிப் பூக்களாக நாடு முழுவதும் வலம் வந்தன. இந்திய பத்திரிகையாளர்
களுக்கு முன்னுதாரணம் பிபின் சந்திரர் என்றால் மிகையில்லை.
மே 20, வரலாற்றில் இன்று.

முதல் நிலவரைபடம்(அட்லஸ்) வெளியிடப்பட்ட தினம் இன்று(1570).

 முதலாவது நவீன அட்லஸ் எனப்படும் உலக வரைபடத்தை நெதர்லாந்தை சேர்ந்த ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார். அதன் பிறகு அந்த அட்லஸில் தொடர்ச்சியாக பல திருத்தங்கள் செய்யப்பட்டன.
இன்று பல நிலப்படத் தொகுப்புகள் இணையப் பக்கங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. நிலப்படத் தொகுப்புப் புத்தகத்தில் பூமியிலுள்ள புவியியல் அமைப்புகள் மற்றும் அரசியல் எல்லைகள் இடம்பெறுவதோடு பெரும்பாலும் அரசியல், சமூகம், வேளாண்மை, மதம் மற்றும் பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்கள் இடம்பெறும். வெறும் வரைபடங்கள் மட்டுமல்லாது இடங்கள் மற்றும் அது குறித்த தகவல் தரவுகள் பலவற்றை ஒரு வரைபடப் புத்தகம் தருகிறது.
.

செவ்வாய், 19 மே, 2020

19/05 இல் இ-மெயில் அனுப்பி
20/05 இல் மருத்துவப்படிப்பில் வந்து சேர்ந்துக்கொள்ளனும்!.

இதெல்லாம்,
சரியான நடைமுறையா?! சாரே!
தேர்ச்சி அறிவித்தல்:
*********************
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 004010/ஜெ1/2020 நாள் :                      25.3.2020 உத்திரவின்படி ( கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு - ஒழுங்குமுறைகள் ) அனைத்துவகைப்பள்ளிகளில் 2019 - 2020 கல்வியாண்டில் தொடர்ந்து பள்ளியில் பயின்றுவந்த 1 முதல் 8 ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மதிப்பெண்பதிவேட்டில், CCE பதிவேடுகளில் , வகுப்பாசிரியர்கள் பதிவேட்டில் உள்ள Formative (a) க்கு 20 மதிப்பெண்கள், Formative (b)க்கு 20 மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்யவும். Summative தேர்வு நடத்தாததால்  அந்தக் கலங்களில் (கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு - ஒழுங்குமுறைகள் - அனைத்து மாணவர்களும் தேர்ச்சி)  என எழுதவும்.  குறிப்பு கலத்தில் ஒவ்வொரு மாணவர் பெயருக்கு நேராக தேர்ச்சி என எழுதவும.
             
தேர்வு விதிகள்:
******************
தமிழக அரசு அறிவிப்பின்படி
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஒழுங்குமுறைகள் 2019 - 2020 கல்வியாண்டில் தொடர்ந்து பயின்றுவந்த 1முதல் 8ஆம் வகுப்புவரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது  என எழுதுமாறு அனைத்துவகைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

“20 லட்சம் கோடி என்பது ஏமாற்று; வெறும்
 1 லட்சத்து 86 ஆயிரம் கோடிதான்” - ப.சிதம்பரம் தாக்கு!

“பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூபாய் 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து பல்வேறு துறைகளை, மக்களை மீட்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார அறிவிப்புகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதன்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
5 நாட்களாக திட்டங்களை அறிவித்துள்ளார்.

பொருளாதார முடக்கத்திலிருந்து மீள்வதற்கு ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நேரடியாகப் பணத்தை மத்தியஅரசு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தால் நாட்டில் 89 சதவீத மக்களின் வாராந்திர வருவாய் பூஜ்ஜியமாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவை நடத்தியஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களுக்கு செல்லும் போது வேலை கிடைத்தது. இப்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பும்போது, அவர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கவலைக்குரியதாக மாறியிருக்கிறது.


ஏழை மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் நேரடியாக பணத்தை மத்திய அரசு வழங்கவேண்டும் என்ற கருத்தை தொழிலதிபர்கள் அசிம் பிரேம்ஜி, வேணு ஸ்ரீனிவாசன் இருவரும் ஆதரிக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் சற்று முன்னர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ப.சிதம்பரம், “பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூபாய் 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான்.

ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்.


மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.91 சதவீதமான 1,86,650 கோடி ரூபாய் நிதி ஊக்கத்தொகை பொருளாதார நெருக்கடி சூழ்நிலையைப் பொறுத்தவரை முற்றிலும் போதாது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் 12 கோடி பேர் ஏழை ஆவார்கள்.
தி.மு.க இளைஞரணி - மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டத்தில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது!இக்கூட்டத்தில் பாவலர்.திரு.க.மீ.,அவர்களுக்கு புகழ்அஞ்சலி செலுத்தி உள்ளது!

தி.மு.க இளைஞரணி - மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை பின்வருமாறு :

1. பாவலருக்கு இரங்கல்!

சமீபத்தில் காலமான பாவலர் க.மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தை நிறுவி அதன் பொதுச் செயலாளராக இருந்தவர்.
தி.மு.க சார்பில் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருமுறை பொறுப்பு வகித்துத் திறம்பட பணியாற்றியவர். ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து அ.தி.மு.க அரசின், அரசு ஊழியர்களுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து நின்றவர். இத்தனைக்கும் மேலாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆருயிர் இளவல். அவரின் மறைவுக்கு இளைஞரணி-
மாணவரணியின் இந்த மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

காஜாபீர்மைதின் அவர்களுக்கு இரங்கல்!

பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் டி.பி.எம்.மைதீன்கான் அவர்களின் மகன் டி.பி.எம்.காஜாபீர்மைதின் உடல்நிலைக்குறைவு காரணமாக அகால மரணமடையதார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினோம். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது இக்கூட்டம்.

ஜெயஸ்ரீக்கு நீதி வேண்டும்!

முன்விரோதத்தின் காரணமாக அ.தி.மு.கவைச் சேர்ந்த கிளைக்கழக செயலாளர், முன்னாள் கவுன்சிலர் ஆகிய இருவரால் கைகால்கள் கட்டப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட விழுப்புரம் சிறுமதுரையைச் சேர்ந்த ஏதும் அறியா அப்பாவி மாணவி ஜெயஸ்ரீயின் மறைவுக்கு இந்தக் கூட்டம் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் காலம் தாழ்த்தாமல் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என்றும் தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது.

2. வாக்களித்த வடமாநிலத்தவர்களுக்காகவாவது மனமிரங்கு!

வெயிலின் வெப்பம் தாங்காமல் இறந்தவர்கள், சாலை விபத்தில் பலியானவர்கள், பசியில் இறந்தவர்கள் என இந்த ஊரடங்கில் சொந்த ஊர் செல்ல இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாக நடந்தே கடக்க நினைத்து மரணத்தைத் தழுவிய வட மாநிலத் தொழிலாளர்களுக்கு இந்த இளைஞரணி-மாணவரணி அமைப்பாளர்கள் கூட்டம் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவர்களுக்கான நிவாரணங்களை வழங்காமல், போக்குவரத்துக்கான வாகன வசதிகளை ஏற்படுத்தித்தராமல், வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு அவர்களைச் சாகக்கொடுத்த மத்திய பா.ஜ.க அரசையும், அவர்களுக்கான சரியான அடிப்படை வசதிகளைக்கூட செய்துத்தராத அடிமை அ.தி.மு.க அரசையும் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை இனியாவது செய்துதருமாறு மத்திய-மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது.

விசாகப்பட்டினம் விபத்து - இரங்கல்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் வேதியியல் தொழிற்சாலையில் வேதி வாயு கசிவு காற்றில் கலந்து ஏற்பட்ட விபத்தில் இறந்த 10க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு இக்கூட்டம் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

3. இட ஒதுக்கீடு சலுகையல்ல, உரிமை!

அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. மருத்துவ படிப்பில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிறுவனங்களில் மட்டுமல்லாமல் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தும்.
இது சட்டப்படி பெற்ற நம் உரிமை. ஆனால் இந்த ஆண்டு அகில இந்தியத் தொகுப்புக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு எந்த அறிவிப்பும் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கு எதிரான மத்திய அரசின் இச்செயலை வன்மையாக இக்கூட்டம் கண்டிக்கிறது. இதுகுறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கள்ள மவுனம் காக்கும் அடிமை அ.தி.மு.க அரசுக்கும் இக்கூட்டம் தன் கண்டனத்தைப் பதிவுசெய்கிறது. இத்தவறு உடனடியாக சரிசெய்யப்படவேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

4. இந்த அரசு மக்களுக்கானதா, தனியாருக்கானதா?

இந்திய வான் எல்லையைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது, விமான நிலையங்களில் தனியாரின் பங்களிப்பை அதிகரிப்பது, செயற்கைக்கோள் தயாரிப்பதிலும் அவற்றை ஏவுவதிலும் தன
மே 19, வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் பிறந்த தினம் இன்று (1934).

ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) பிரித்தானிய வம்சாவளியில் பிறந்த ஒரு இந்திய எழுத்தாளராவார். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் ஆகியோரிடையே ஒரு தனிப்பெரும் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.

ரஸ்கின் பாண்ட் இமாச்சல பிரதேசத்தில் கசோலி என்ற இடத்தில் 1934 ம் ஆண்டு இதே நாளி்ல்  பிறந்தார்.
 அவருக்கு எல்லன் மற்றும் வில்லியம் பாண்ட் என்ற சகோதரியும் சகோதரரும் உண்டு.

ரஸ்கினுக்கு 8 வயதான போது, அவருடைய பெற்றோரிடையே மணமுறிவு ஏற்பட்டது.  தந்தை நோய்வாய்பட்டு இறந்த பின்னர் ரஸ்கின் தன்னுடை பத்து வயதில் டெஹ்ராவில் உள்ள தன் பாட்டியிடம் சென்றுவிட்டார்.

தனது குழந்தைப் பருவத்தை இளைஞர் பருவத்தையும் சிம்லா, ஜாம்நகர், மசூரி, டெராடூன், மற்றும் லண்டன் ஆகிய ஊர்களில் கழித்ததால் அவரின் பெரும்பாலான படைப்புகள் இப்பகுதிகளை மையப்படுத்தி இருக்கும்.

அவருடைய பல படைப்புகள் இமயமலை அடிவாரத்தில் உள்ள மலை நகர வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டவை.

அவரின் முதல் புதினமான "த ரூம் ஆன் த ரூஃப்" ( The Room on The Roof) 17 வயதான போது எழுதப்பட்டு அவருக்கு 21 வயதாகும் போது பிரசுரிக்கப்பட்டது. அது டெஹ்ராவில் கூரை மீது உள்ள அறை ஒன்றில் அவருடைய நண்பர்களுடன் வாடகைக்குத் தங்கி இருந்த அனுபவங்கள் சிலவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட புதினர். இப்புதினத்திற்காக அவருக்கு 1957 ஆம் ஆண்டுக்கான ஜான் லெவ்லின் ரைஸ் நினைவுப் பரிசைப் வழங்கப்பட்டது.

அவர் முன்னூற்றுக்கும் அதிகமான சிறு கதைகள், கட்டுகரைகள், புதினங்களும், குழந்தைகளுக்கான 30 நூல்களும் எழுதியுள்ளார்.

அவர் "த ஆங்ரி ரிவர்" (The Angry River)   "த ப்ளூ அம்ரல்லா" (The Blue Umbrella) உள்ளிட்ட  புத்தகங்களால்
குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.அவரின் The Cherry Tree உள்ளிட்ட சிறுகதைகள் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

தனது சுயசரிதையினை இரு பாகங்களாக வெளியிட்டுள்ளார் - ”சீன்ஸ் பிரம் எ ரைட்டர்ஸ் லைஃப்”( Scenes from a Writer's Life) என்ற பாகத்தில் ஆங்கிலேய-இந்தியாவில் அவர் வளர்ந்த பருவ வருடங்கள் பற்றி விவரிக்கிறார்.

" த லாம்ப் இஸ் லிட்” ( The Lamp is Lit ) என்ற பாகத்தில் இதழ்களில் வெளியான அவருடைய கட்டுரைகள் மற்றும் தொடர்களைத் தொகுத்துள்ளார்.

1992இல் ”அவர் ட்ரீஸ் ஸ்டில் குரோ இன் டெஹ்ரா” (Our trees still grow in Tehra) என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்திய சாகித்திய காதமியின் சாகித்ய அகாடமி விருது பெற்றார். 1999 இல் குழந்தைகள் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ் விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

தற்போது தனது குடும்பத்துடன் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள முசோரியில் வாழ்ந்து வருகிறார்.
மே 19,
 வரலாற்றில் இன்று.

தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர்
ஜானகி இராமச்சந்திரன் நினைவு தினம் இன்று.

ஜானகி ராமச்சந்திரன்(1924 செப்டம்பர் 23 – 1996 மே 19) என அழைக்கப்படும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை , முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனின் மனைவி ஆவார். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்றார். பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவரது அமைச்சரவை 24 நாட்களில் கலைக்கப்பட்டது.
மே 19,
வரலாற்றில் இன்று.


ஹோ சி மின் பிறந்த தினம் இன்று.

ஹோ சி மின்
(மே 19, 1890 – செப்டம்பர் 2, 1969) வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர், பின்னர் வடக்கு வியட்நாமின் பிரதமராகவும் (1946–1955), அதிபராகவும் (1946–1969) இருந்தவர்.

ஹோ வியட் மின் விடுதலை இயக்கத்தை 1941 இலிருந்து முன்னின்று நடத்தி, 1954 இல் பிரெஞ்சுப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார். அவ்வெற்றி அவருக்கு கம்யூனிச நாடாக வடக்கு வியட்நாமை அமைக்க உதவியது. வியட்நாம் போரை அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார். ஆறு ஆண்டுகளின் பின்னர் வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்ததுடன் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன. தெற்கு வியட்நாமின் தலைநகராயிருந்த சாய்கோன் (Saigon) நகரம் ஹோவின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி வியட்நாமுக்கு கிடைத்த விடுதலையை அமெரிக்கா கம்யூனிச எதிர்ப்பு என சொல்லிக்கொண்டு உலகப்போரில் செலுத்திய குண்டுகளை விட அதிகம் செலுத்தி பறிக்க முயன்றது அமெரிக்கா.  அப்பொழுது மக்களை வழிநடத்தி கொரில்லா போர் முறையால் நாட்டை வெற்றிப்பாதை நோக்கி அழைத்து சென்ற நிஜத்தலைவன் ஹோ சி மின்.

வியட்நாம் குட்டி தேசம் ; நெடுங்காலம் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த தேசம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்துக்கு உள்ளானது . உலகப்போர் சமயத்தில் நாஜிக்களின் பொம்மை அரசாங்கம் நாட்டை ஆண்டது ;பின் அங்கிருந்து ஆட்சி ஜப்பானுக்கு பாஸ் ஆனது .பிரான்ஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க படைகளை அனுப்பியது . அங்கிள் ஹோ காட்டிய வழிகாட்டுதலில் தீர்க்கமாக மக்கள் போராடினார்கள் . கூடவே சோவியத் ரஷ்யாவின் உதவியும் சேர்ந்து கொண்டது . ஒன்பது ஆண்டுகளுக்கு பின் நாடு வடக்கு வியட்நாம்,தெற்கு வியட்நாம் என பிரித்து கொள்ளப்பட்டது.

அங்கிள் ஹோ என அழைக்கப்பட்ட ஹோ சி மின் பேசினாலே மக்கள் கண்ணீர் விட்டார்கள் ; அவரின் சிந்தனை மக்களை ஒன்றிணைந்த வியட்நாமை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை வார்த்து எடுத்தது . அமெரிக்கா யார் இவர் என்று பார்த்தது ; கம்யூனிஸ்ட் என்று தெரிந்தது .படைகளை அனுப்பிக்கொண்டே இருந்தது .எளிய மக்களின் வீடுகளில் போய் ஹோ சி மின் ஆதரவு திரட்டினார் ; கொரில்லா போர் முறையை பின்பற்றினார்கள் .

வருகிற எல்லா அமெரிக்க அதிபரும் போரை நிறுத்துவதாக அறிவித்து விட்டு தொடர்ந்து போர் செய்துகொண்டே இருந்தார்கள் . இரண்டாம் உலகப்போரில் போடப்பட்ட குண்டுகளை விட அதிக எண்ணிக்கையில் மக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன . ஹோ சி மின் எங்கே போனார் என்றே தெரியவில்லை ,அவ்வப்பொழுது தோன்றுவார் ;
தொடர்ந்து ஊக்கப்படுத்திக்
கொண்டே இருந்தார்.