வியாழன், 21 மே, 2020
கடன் தவணை செலுத்துவதிலிருந்து மேலும் 3 மாதங்களுக்கு விலக்களிக்கப்படலாம் ~ எஸ்பிஐ...
பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கடன் தவணை செலுத்துவதிலிருந்து மேலும் 3 மாதங்களுக்கு விலக்களிக்கும் நடவடிக்கையை ரிசா்வ் வங்கி மேற்கொள்ள வாய்ப்புள்ளது என பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்பிஐயின் எக்கோராப் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஏதுவாக கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி பொது முடக்க அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டாா். இதையடுத்து, கடன் வாங்கியோரின் நலனை கருத்தில் கொண்டு கடன் செலுத்தும் தவணைக் காலத்தை மாா்ச் 1 முதல் மே 31 ஆம் தேதி வரையில் மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது.
இந்த நிலையில், தற்போது நான்காம் கட்டமாக ஊரடங்கை மேலும் மே 31-ஆம் தேதி வரையில் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கடனை திரும்பச்செலுத்தும் தவணைக் காலத்தை ரிசா்வ் வங்கி மேலும் 3 மாதங்களுக்கு தள்ளிவைக்கும் என எதிா்பாா்ப்பதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மே 21,
வரலாற்றில் இன்று.
கிரேக்கத் தத்துவவியலாளர் பிளாட்டோ பிறந்த தினம் இன்று(கி.மு.427).
பிளேட்டோ (Plato, கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்ரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் அறிஞராவார். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவ தர்க்கங்களை எழுதியுள்ளார். இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் அகாடமியை நிறுவினார். இவர் சாக்ரடீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டிலின் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.
பிளாட்டோவின் இயற்பெயர் அரிஸ்டோக்கிளீஸ். அவரே விரும்பி தனது புனை பெயராக பிளாட்டோ என வைத்துக்கொண்டார் .
"பிளாட்டோ' என்றால் பரந்த, விரிந்த என்று பொருள்படும். இச்சொல்லில் இருந்து தான் Flat எனும் ஆங்கில சொல் வந்தது.
பெயருக்கு ஏற்ப பரந்த சிந்தனைக்கு சொந்தக்காரர் அவர் .
ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும்.
அது எப்படி ஆள வேண்டும் என தனது அனுபவங்கள், எண்ணங்களை வைத்து பிளேட்டோ எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல் தான் "The Republic".
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து எழுதப்பட்ட நூல்தான் அது.

EMIS - U DISE + படிவத்தில் ஆசிரியர்கள், BRTEs மற்றும் BEOs மேற்கொள்ள வேண்டிய பணிகள்..
அனைத்து வகை பள்ளிகள் சார்பான விவரங்கள் EMIS login- ல் U DISE + படிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளி சார்பான விவரங்களில் விடுபட்ட விவரங்களை பதிவேற்றம் செய்யவும் மற்றும் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை சரிபார்க்கவும் தற்போது இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கீழ்காண் அறிவுரைகளை பின்பற்றி சார்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் இப்பணியினை பிழைகளின்றி முழுமையாக முடித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்: -
பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடம் மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
Teacher's Profile அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களின் விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
CWSN குழந்தைகளின் விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
RTE குழந்தைகளின் விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தேர்ச்சி விவரம் , Vocational Students Details Vocational Instructor விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
School Profile- யை பதிவிறக்கம் செய்ய வேண்டும் , பதிவேற்றம் செய்துள்ள அனைத்தும் சரியாக பதிவிறக்கத்தில் வந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து விவரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை தலைமையாசிரியர் Certify செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட அனைத்தும் தலைமையாசிரியர் ONLINE யில் செய்திட வேண்டும்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :
27.05.2020 க்குள் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியினை சரிபார்த்து Certify செய்துள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.
School Profile -யை Download செய்து அதில் School Profile Details- யில் வரும் ( Block Category , Type , Management Constituency etc ) என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளியில் பதிவேற்றம் செய்துள்ள Buliding , Teacher Profile , Students Profile சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதில் ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியர்களிடம் தகவல் தெரிவித்து உடனடியாக சரிசெய்யுமாறு வழிகாட்டுதல் அவசியம்.
மேற்குறிப்பிட்ட அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் BRTE / BEO Certify செய்ய வேண்டும்.
புதன், 20 மே, 2020
*☀மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மதிப்பீட்டு பணிகள் சார்ந்த வழிகாட்டுதல்கள், நாமக்கல் மாவட்டத்தில் மதிப்பீட்டுப்பணி நடைபெறும் மையங்கள் மற்றும் போக்குவரத்து சார்ந்த வழிகாட்டுதல்கள்.மற்றும் 10 வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைப்பு... ஆசிரியர்கள் 21.05.2020 அன்று வரத் தேவையில்லை ஆகிய விபரங்கள் சார்பான நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*👇👇👇
*கரெண்டைக் கூட விடமாட்டார்கள் ,போலும்!* *எல்லாமும் விற்பனைமயம்!*
*21நாள்களுக்குள் கருத்து வேறு சொல்லுனுமாம்! *நல்லாபடிங்கோ!உறைக்கிற மாதிரிகருத்துச்சொல்லுங்கள்!*
----------------------------------
மின்சாரத் துறை – ஒரு தரம்!
இரண்டு தரம்!
மூன்று தரம்!
------------------------------------
மின்சாரத் திருத்த சட்டம் 2020, மோடி 2.0 அரசின் மற்றுமொரு மக்கள் விரோத கார்ப்ரேட் நல பொருளாதார சீர்திருத்த கொள்கையை வெளிப்படுத்துகிறது. இந்த திருத்த சட்டம் ஒரு பக்கம் மாநில அரசுகளின் அரசியல் பொருளாதார அதிகாரத்தை பறிப்பதோடு நாட்டு மக்களின் மின்சார நுகர்வு உரிமையையும் இந்தியாவின் ஏகபோக கார்ப்பரேட் கும்பலிடம் அடமானம் வைக்கிறது.
முன்னதாக பாதுகாப்புத் துறையில் ரபேல் விமான தயாரிப்பிற்கு அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை நுழைத்து, அரசுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் நிறுவனம் ஓரம் கட்டப்பட்டது. தொலைத்தொடர்பு துறையில் BSNL ஐ ஒழித்து அம்பானியின் ஜியோ நிறுவனத்தை மோடி அரசு ஏகபோகமாக வளர்த்துவிட்டது. எண்ணெய் சுத்திகரிப்பு துறையிலும் லாபகரமாக இயங்கிய BPCL தனியார்மயமாக்கியது. தற்போது கொரோனா நெருக்கடிகாலத்தில் விண்வெளித்துறை (இஸ்ரோ), ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, அணு சக்தி துறை என தேசப் பாதுகாப்பில் முக்கியமாக உள்ள துறைகளையும் கூட விட்டு வைக்காமல் அந்நிய நிறுவனங்களுக்கும் இந்திய ஏகபோக நிறுவனங்களுக்கும் கையளிக்கப்படுகின்றன. இதற்கு சுய பொருளாதாரம் என்ற புதிய விளக்கம் வேறு!
பொருளாதார அறிஞர்களையும் கிறக்கமடையச் செய்கிற மோடி அரசின் இந்த
சுயச் சார்பு பொருளாதார அலையில் மின்சாரத் துறையும் தப்பவில்லை! தற்போது இந்தியா எங்கிலும்
மின் பகிர்மான துறையில் அதானியையும் அம்பானியையும் டாடாவையும் பிர்லாவையும் நுழைத்து மாநில மின் பகிர்மான கழகங்களுக்கு சவக்குழி தோண்டப்படவுள்ளது.
மின் திருத்த சட்டம் 2020 அதைத்தான் முன்னறிவிக்கின்றது!
பிரதமரின் பேச்சை நம்பி வீட்டின் விளக்கை ஐந்து நிமிடத்திற்கு அனைத்த நாட்டு மக்களுக்கு ‘மின்சார சட்ட திருத்த மசோதா – 2020’ எனும் அற்புத பரிசை மோடி வழங்கியுள்ளார். 2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல முக்கிய திருத்தங்களைச் செய்து புதிய திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான வரைவு சட்ட அறிக்கையை ஏப்ரல் 17ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, வெறும் 21 நாட்களுக்குள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் இருந்தால் கூறலாம் என்கிறது.
பேரிடர் காலத்தில் முக்கிய திருத்த சட்ட அறிமுகம், அதுவும் குறுகிய கால அவகாசத்திற்குள் மாநில அரசுகள் கருத்து கூறவேண்டும் என கெடு விதிப்பது என மத்திய அரசு இந்த திருத்தத்திற்கு அவசரம் காட்டுகிறது.
இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மூன்று முக்கிய மாற்றங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.
இலவச மின் மானியம் ரத்து
புதிய திருத்த சட்டத்தின் பிரிவு 65 இன் கீழ் மின் மானியம் ஒழிக்கப்பட்டு நேரடி பணப் பட்டுவாடா அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தற்போது தமிழகத்தில் முதல் நூறு யூனிட்டுக்கு கட்டணமில்லா இலவச மின்சாரக் கொள்கை அமலில் உள்ளது.மேலும் குடிசைகள், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு முற்றிலும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 19 லட்சம் விவசாய பம்ப்செட் மின் இணைப்புகள் உள்ளன. உலகமயத்தால் தமிழகத்தின் வேளாண் பொருளாதாரம் கால் நூற்றாண்டு காலமாக சீரழிந்து வந்தாலும், காவேரி நீர் பங்கீட்டு உரிமை தமிழகத்திற்கு மறுக்கப்பட்டு வந்தாலும் இலவச மின்சார பம்ப் செட் மோட்டார் பயன்பாடே (ஒப்பீட்டளவில்) டெல்டாவின் விவசாயப் பொருளாதாரத்தை முற்றிலும் சீர்குலையாமல் காத்து வருகிறது.
தற்போதைய புதிய திருத்த சட்டத்தின் மூலமாக மானிய சலுகைகள் முற்றிலும் ஒழிக்கப்படுவதால், பம்ப் செட் மின்சார செலவை முதலில் விவசாயி தன் சட்டைப்பையில் இருந்து வழங்கவேண்டும். காசில்லாமல் கட்டத் தவறினால் மின் இணைப்பு பறிக்கப்பட்டு மீண்டும் பணம் கட்டி இணைப்பிற்கு அலையவேண்டும். மேலும், தமிழகத்தில் சுமார் நாற்பது ஐம்பதாண்டு காலமாக விவசாய பம்ப் செட் மின் இணைப்புகள் உள்ளன. இவை பெரும்பாலும் பயனாளிகள் பெயரில் இல்லாமல் வேறு நபர்கள் பெயரில் இருக்கும். இவ்வளவு காலத்தில் நிலம் பல கைகளுக்கு மாறியிருக்கும்.குத்தகைகள் கூட மாறியிருக்கும். அவ்வாறு உள்ள நிலையில் இந்த மானியத் தொகை எவ்வாறு முறையான பயனாளிகள் கையில் சேரும்? தமிழக அரசே நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் திணறி வருகிற நிலையில் சாராயக் கடைகளை நம்பியே ஆட்சி நடத்துகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் வரை சென்று போராடுகிறது. இந்நிலையில் மானியத் தொகையை மாநில அரசு எவ்வாறு வழங்கவியலும்? மேலும்மாநில வருவாயை ஜிஎஸ்டி மூலமாக மத்திய அரசிடம் இழந்ததோடு,15 ஆவது நிதி ஆணையப் ப

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)