வியாழன், 21 மே, 2020

மே 21, வரலாற்றில் இன்று.

எலக்ட்ரோ என்செபலோகிராபி
(Electro EncephaloGraphy)யை கண்டுபிடித்த நரம்பியல் வல்லுநர் ஹான்ஸ் பெர்கர் பிறந்த தினம் இன்று.

இவர் 1924இல் எலக்ட்ரோ என்செபலோகிராபி "மூளை அலைகளைப் பதிவு செய்யும் முறை"யைக் கண்டுபிடித்தார்.

ஆல்பா அலைச்சீரைக் கண்டறிந்த இவரது பெயரால் அந்த அலை "பெர்கர் அலை" என அழைக்கப்படுகிறது.
மே 21, வரலாற்றில் இன்று.

எலிசபெத் ஃபிரை பிறந்த தினம் இன்று.

எலிசபெத் ஃபிரை (Elizabeth Fry, 21 மே 1780 – 12 அக்டோபர் 1845) ஆங்கிலேயச் சிறைச்சாலை சீர்திருத்தவாதி். இவர் சமூக சேவகர், கிறித்தவ வள்ளல் எனப் பன்முகங்களைக் கொண்டவர். இவரை "சிறைகளின் தேவதை" எனவும் அழைத்தனர். ஃபிரை கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்தை உருவாக்க பாடுபட்டார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிமாநிலம்/வெளிமாவட்டத்தில் தங்கி இருக்கும் முதுகலை/பட்டதாரி ஆசிரியர் விபரம் கோரும் பள்ளக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..

மே 21, வரலாற்றில் இன்று.

பிபா தொடங்கப்பட்ட தினம் இன்று.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான பிபா 1904-ம் ஆண்டு இதே நாள் ஆரம்பிக்கப்பட்டது. உலக அளவில் நடக்கும் முக்கியமான கால்பந்துப் போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இந்த அமைப்பிற்கே உள்ளது.

தொடக்கத்தில் 7 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்த இந்த அமைப்பில், தற்போது 209 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமையகம் ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் உள்ளது.
மே 21,
வரலாற்றில் இன்று.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் இன்று (1991).

ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அதில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவர் விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் இந்தியா இலங்கை உள்நாட்டு போரில், இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெற்றிருந்த காலம்.

Tamil Nadu Information Commission Appeals fied by Senior Citizens-Early hearing of Second Appeals- Orders-Issued...

மணிக்கணக்கில் இடைவிடாமல் தொடர்ந்து கம்ப்யூட்டர், மொபைல் பார்ப்பதால் கடுமையான கண் பிரச்னை ஏற்படும்...

கடன் தவணை செலுத்துவதிலிருந்து மேலும் 3 மாதங்களுக்கு விலக்களிக்கப்படலாம் ~ எஸ்பிஐ...

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கடன் தவணை செலுத்துவதிலிருந்து மேலும் 3 மாதங்களுக்கு விலக்களிக்கும் நடவடிக்கையை ரிசா்வ் வங்கி மேற்கொள்ள வாய்ப்புள்ளது என பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐயின் எக்கோராப் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஏதுவாக கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி பொது முடக்க அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டாா். இதையடுத்து, கடன் வாங்கியோரின் நலனை கருத்தில் கொண்டு கடன் செலுத்தும் தவணைக் காலத்தை மாா்ச் 1 முதல் மே 31 ஆம் தேதி வரையில் மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது.

இந்த நிலையில், தற்போது நான்காம் கட்டமாக ஊரடங்கை மேலும் மே 31-ஆம் தேதி வரையில் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கடனை திரும்பச்செலுத்தும் தவணைக் காலத்தை ரிசா்வ் வங்கி மேலும் 3 மாதங்களுக்கு தள்ளிவைக்கும் என எதிா்பாா்ப்பதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மே 21,
வரலாற்றில் இன்று.

கிரேக்கத் தத்துவவியலாளர் பிளாட்டோ பிறந்த தினம் இன்று(கி.மு.427).

பிளேட்டோ (Plato, கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்ரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் அறிஞராவார். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவ தர்க்கங்களை எழுதியுள்ளார். இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் அகாடமியை நிறுவினார். இவர்  சாக்ரடீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டிலின் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.


பிளாட்டோவின் இயற்பெயர் அரிஸ்டோக்கிளீஸ். அவரே விரும்பி தனது புனை பெயராக பிளாட்டோ என வைத்துக்கொண்டார் .

"பிளாட்டோ' என்றால் பரந்த, விரிந்த என்று பொருள்படும். இச்சொல்லில் இருந்து தான்  Flat எனும் ஆங்கில சொல் வந்தது.

பெயருக்கு ஏற்ப பரந்த சிந்தனைக்கு சொந்தக்காரர் அவர் .

ஒரு அரசு  எப்படி இருக்க வேண்டும்.
அது எப்படி ஆள வேண்டும் என தனது அனுபவங்கள், எண்ணங்களை வைத்து  பிளேட்டோ எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல் தான்  "The Republic".

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து எழுதப்பட்ட நூல்தான் அது.

EMIS - U DISE + படிவத்தில் ஆசிரியர்கள், BRTEs மற்றும் BEOs மேற்கொள்ள வேண்டிய பணிகள்..

அனைத்து வகை பள்ளிகள் சார்பான விவரங்கள் EMIS login- ல் U DISE + படிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளி சார்பான விவரங்களில் விடுபட்ட விவரங்களை பதிவேற்றம் செய்யவும் மற்றும் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை சரிபார்க்கவும் தற்போது இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கீழ்காண் அறிவுரைகளை பின்பற்றி சார்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் இப்பணியினை பிழைகளின்றி முழுமையாக முடித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்: - 

பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடம் மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

 Teacher's Profile அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்களின் விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

 CWSN குழந்தைகளின் விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

RTE குழந்தைகளின் விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

 தேர்ச்சி விவரம் , Vocational Students Details Vocational Instructor விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

School Profile- யை பதிவிறக்கம் செய்ய வேண்டும் ,  பதிவேற்றம் செய்துள்ள அனைத்தும் சரியாக பதிவிறக்கத்தில் வந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து விவரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை தலைமையாசிரியர் Certify செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் தலைமையாசிரியர் ONLINE யில் செய்திட வேண்டும்.

ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் : 

27.05.2020 க்குள் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியினை சரிபார்த்து Certify செய்துள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.

School Profile -யை Download செய்து அதில் School Profile Details- யில் வரும் ( Block Category , Type , Management Constituency etc ) என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளியில் பதிவேற்றம் செய்துள்ள Buliding , Teacher Profile , Students Profile சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதில் ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியர்களிடம் தகவல் தெரிவித்து உடனடியாக சரிசெய்யுமாறு வழிகாட்டுதல் அவசியம்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் BRTE / BEO Certify செய்ய வேண்டும்.