திங்கள், 25 மே, 2020

மே 25, வரலாற்றில் இன்று.

‘தங்கத் தாத்தா’ என்று போற்றப்பட்ட இலங்கை தமிழறிஞரான சோமசுந்தர புலவர் (Somasundara Pulavar) பிறந்த தினம் இன்று.

# இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் (1878) பிறந்தார். தந்தையிடமும், நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் கற்றார். உறவினர் ராமலிங்க உபாத்தியாயரிடமும் மானிப்பாய் மாரிமுத்து விடமும் ஆங்கிலம் கற்றார்.

# சிறு வயதிலேயே பேச்சாற்றலும், விவாதத் திறமையும் ஒருங்கே பெற்றி ருந்தார். ஏராளமான பாடல்கள் இயற்றினார். அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருஊஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை உள்ளிட்ட நூல்கள் இவர் இளம் வயதில் இயற்றியவை.

# ஆசிரியப் பணியிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து ஆங்கிலப் பாடசாலை தொடங்கினார். அங்கு 40 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், இதிகாசம் கற்பித்தார். ‘சைவ வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சமயப் பாடங்களைக் கற்பித்தார்.

# ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும்கூட, மாணவர்களுக்கு சைவ சித்தாந்தம் உள்ளிட்ட இலக்கிய வகுப்புகளை நடத்தி தமிழ்த் தொண்டு ஆற்றினார். கலித்தொகை, திருக்குறள், திருக்கோவையார், சிவஞான போதம், கந்தபுராண செய்யுள்களைத் தெளிவாகவும், அழகாகவும், நகைச்சுவையுடனும் நடத்தி மாணவர்களுக்கு விளங்க வைப்பார்.

# பதிகம், ஊஞ்சல், கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா என பல வடிவில் பாடல்கள் பாடியுள் ளார். 400-க்கும் மேற்பட்ட அடிகள் கொண்ட கலிவெண்பா பாவகையில் அமைந்த தாலவிலாசம் மிகவும் பிரசித்தம்.

# யாப்பிலக்கணங்கள் கற்பதற்கு முன்பாகவே பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இதனால், இவரை ‘வரகவி’ என்று அழைத்தனர். ‘உயிரிளங்குமரன்’ என்ற நாடகமும் எழுதியுள்ளார். இது அட்டகிரி கந்தசுவாமி கோயிலில் அரங்கேற்றப்பட்டது.

# ‘சைவபாலிய சம்போதினி’ என்ற சைவ சித்தாந்த மாத இதழை 1910-ல் தொடங்கி, 5 ஆண்டுகள் நடத்தினார். 1927-ல் ஈழத்து தென்னிந்தியத் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் பொற்கிழியும் புலவர் பட்டமும் வழங்கினர்.

# ஆங்கில ஆட்சியை எதிர்த்து தேசிய விழிப்புணர்வைத் தூண்டும் பாடல்களை எழுதினார். கந்தவனக் கடவை நான்மணிமாலை, தந்தையார் பதிற்றுப்பத்து, நல்லையந்தாதி, நல்லை முருகன் திருப்புகழ், கதிரைமலை வேலவர் பதிகம் ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள்.

# குழந்தைகளுக்கான ஆடிப்பிறப்பு, கத்தரிவெருளி, புளுக்கொடியல், பவளக்கொடி, இலவுகாத்தகிளி உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றி சிறுவர் இலக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். தாடி அறுந்த வேடன், எலியும் சேவலும் உள்ளிட்ட இவரது கதைப் பாடல்கள் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை.

# தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகப் போற்றினார். ஏறக் குறைய 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக இவர் பாடிய பாடல்கள் ‘சிறுவர் செந்தமிழ்’ என்ற பெயரில் 1955-ல் நூலாக வெளிவந்தது. சிலேடை வெண்பா இயற்றுவது இவரது தனிச்சிறப்பு. தமிழுக்காக 60 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டாற்றிய ‘தங்கத் தாத்தா’ நவாலியூர் சோமசுந்தர புலவர் 75ஆவது வயதில் (1953) காலமானார்.
மே 25, வரலாற்றில் இன்று.

உலக தைராய்டு  தினம் இன்று.

தைராய்டு பிரச்னை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அந்நோயில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கும் வகையிலும் உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தைராய்டு கூட்டமைப்பு சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மே 25ம் தேதி உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தைராய்டு என்பது கழுத்துப் பகுதியில் காணப்படும் பட்டாம்பூச்சி வடிவில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் ஒன்று. இச்சுரப்பி உற்பத்தி செய்யும்
தைராக்சின் (Thyroxine - T4) மற்றும் டிரியோடோதைரோனின் (Triiodothyronine - T3) போன்ற ஹார்மோன்கள் ரத்த ஓட்டத்தின் வழி உடலின் முக்கிய பாகங்களுக்குச் சென்று முக்கியமான சில பணிகளை செய்கிறது. குறிப்பாக, உடல் எடை, வளர்சிதை மாற்றம், இதயம் மற்றும் செரிமான மண்டலத்தின் பணிகள், மூளை வளர்ச்சி போன்ற பலவற்றில் இந்த ஹார்மோன்களின் பங்குள்ளது. உடலின் தேவைக்கு போதுமான அளவு அயோடினை எடுத்துக் கொள்வது தைராய்டு சுரப்பியைச் சரியான முறையில் செயல்பட வைக்கும்

தைராய்டு குறைபாட்டிற்கான அறிகுறிகள்:

தைராய்டு குறைபாடு என்பது சற்று அதிகமாக காணப்படுகிறது என்றாலும், பெண்களுக்கே இது அதிக அளவில் ஏற்படுகிறது. தைராய்டு குறைபாடு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நோய் எதிர்ப்புசக்தி பிரச்னை,  வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதல்கள், நீண்டகால மன அழுத்தம், பரம்பரை, ஹார்மோன் சமநிலை இன்மை போன்ற பல்வேறு காரணங்களால் தைராய்டு சுரப்பி குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு பிரசவத்தின் போதான ஹார்மோன் சமம் இம்மை தைராய்டு பிரச்னை ஏற்பட காரணமாகிறது. தைராய்டு குறைபாடு காரணமாக முன் கழுத்துக் கழலை எனப்படும், கழுத்துப்பகுதியில் கட்டி போன்ற பெரிய வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தைராய்டின் இரு வகைகள்:

தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன்களின் அளவுகளைக் கொண்டு இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உடலுக்கு தேவையான அளவைவிட அதிக அளவு தைராய்டு சுரப்பியில் இருந்து ஹார்மோன் சுரப்பதன் காரணமாக உருவாகக் கூடியது “ஹைப்பர்தைராய்டு”, உடலின் தேவைக்கும் குறைவான அளவு ஹார்மோன் சுரப்பதால் “ஹைப்போதைராய்டு” உருவாகிறது.

ஹைப்பர்தைராய்டிசம் : எடை குறைதல், முடி உதிர்தல், வெப்பத்தை தாக்கமுடியாத நிலை, மலட்டுத்தன்மை, பயம், பாலியல் இச்சை, கண்களில் நமைச்சல் போன்றவை முக்கிய அறிகுறிகள்

ஹைப்போதைராய்டிசம் : சோர்வாக உணர்தல், குளிர்ச்சியாக உணர்தல், எடை கூடுதல், மலட்டுத்தன்மை, பாலியல் நாட்டமின்மை, கவனக்குறைவு, நினைவுத்திறன் குறைவு, மன அழுத்தம், முடி உதிர்த்தல்

தைராய்டிற்கான அறிகுறிகள் உள்ளோர் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. சிகிச்சை கால அட்டவணை, உடல் பரிசோதனை, தைராய்டு சோதனை போன்றவை மூலம் தைராய்டை அறிய முடியும். தைராய்டின் வகைக் கேற்ப மருத்துவர்கள் சிகிச்சையை பரிந்துரைப்பர். கதிரியக்க சிகிச்சை, தைராய்டு அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
சரியான வாழ்க்கை முறையை கடைபிடித்தல், அயோடின் நிறைந்த உணவுகளான மீன், பால், கோஸ் வகை காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலமும், ஒட்டுமொத்த உடல்நலனை பேணுதல், பரிசோதனைகள் செய்துக் கொள்வதன் மூலமும் தைராய்டு பிரச்னையில் இருந்து ஓரளவு தற்காத்துக்கொள்ள முடியும்.
மே 25, வரலாற்றில் இன்று.

தமிழறிஞர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை பிறந்த தினம் இன்று.

திருநெல்வேலி மாவட்டம் முந்நீர்ப்பந்தலில் ஆம் 1866ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த மு.சி.பூரணலிங்கப் பிள்ளை தமிழ் மொழியின் தொன்மையையும்,உணர்வையும் பிற மொழியினரும் அறியும் படி செய்தவர்.இவர் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த போதும் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக "ஞான போதினி " என்ற பத்திரிக்கையை தொடங்கி நடத்தி வந்தார்.

பூரணலிங்கம் பிள்ளை தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதி உள்ளார்.இவரது படைப்புகளில் சிறுகதை,நாவல், கவிதை,நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரை, மொழிப்பெயர்ப்பு மற்றும் சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடியும். தமிழ் மொழியின் உயர் சிந்தனைகளை பிற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை  ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.1940ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இயங்கி வந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாவது மாநாட்டிற்க்கு தலைமை தாங்கி வழி நடத்தினார். பூரணலிங்கம் பிள்ளையின் அனைத்து படைப்புகளும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.
மே 25, வரலாற்றில் இன்று.

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் இன்று.

காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 25ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது

எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இட்டன் பாட்ஷ் அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் வழியில் காணாமல் போய்விட்டான். இட்டன் பாட்ஷின் தந்தை, புகைப்படக் கலைஞராக இருந்ததால் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டது.
ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979-ம் ஆண்டில் இருந்து 1981-ம் ஆண்டு வரையில் குளம், ஆறு போன்ற இடங்களில் அடையாளம் தெரியாமல் காணாமல் போன 29 குழந்தைகள் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையொட்டி 1983 ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ரீகன் மே 25-ம் தேதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய தினமாக அறிவித்தார்.
அன்றிலிருந்து மே 25-ம் தேதி காணாமல் போகும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 இந்தியாவில் ஆண்டுதோறும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகமும் இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.

ஞாயிறு, 24 மே, 2020

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட தகவல் தொழில் நுட்பக்குழுவின் சார்பில் ஆசிரியர் இனக்காவலர், பாவலர்.திரு.க.மீ., அய்யா அவர்களின் புகழ் வணக்கம் கூட்டம் கபிலர்மலை ஒன்றிய (பரமத்தி-வேலூர்) அலுவலகத்தில் 24.05.2020 (ஞாயிறு) பிற்பகல் 03.30மணியளவில்  மாவட்டச்செயலாளர் திரு.மெ.சங்கர் தலைமையில்  நடைபெற்றது.

ஆசிரியர் இனக்காவலர் ,
பாவலர் திரு.க.மீ., அவர்களின் திருஉருவப்படத்தினை மாநிலச்செயலாளர் திரு.முருகசெல்வராசன் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தி  புகழ்வணக்கம்  படைத்தார்.

மாவட்ட தகவல் தொழில் நுட்பக் குழுவின்  அமைப்பாளர்களான மாவட்டத்துணைச்செயலாளர்  திரு.வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி ,
சேந்தமங்கலம் ஒன்றியத்தலைவர் திரு.கா.செல்வம்,
பரமத்தி் ஒன்றியச்செயலாளர் திரு.க.சேகர், கபிலர்மலை ஒன்றியத் துணைச் செயலாளர்
திரு.இர.மணிகண்டன்  மற்றும்
கபிலர்மலை ஒன்றியத் துணைத்தலைவர் திரு.வி.சிவக்குமார் ஆகியோர் அய்யா அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி புகழ்வணக்கம் படைத்தனர்.







இணையத்தின் வழியில் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யலாம் !
நீதிமன்ற பதிவாளர் அவர்களின் கடிதம் !
மே 24, வரலாற்றில் இன்று

அலெக்சாண்ட்ரினா விக்டோரியா பிறந்த தினம் இன்று.

👰 இந்தியாவின் முதல் பேரரசியான அலெக்சாண்ட்ரினா விக்டோரியா 1819ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

👰 இவர், தனது 18வது வயதில் இங்கிலாந்தின் ராணியானார். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகள் 7 மாதங்களாகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

👰 இவரது காலம் தொழிற்புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராஜ்ஜியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசாகவும் திகழ்ந்தது.

👰 'ஐரோப்பாவின் பாட்டி' எனும் பட்டப் பெயரை கொண்ட விக்டோரியா மகாராணி, 81வது வயதில் (1901) காலமானார்.
மே 24, வரலாற்றில் இன்று.

புரூக்ளின் பாலம் திறக்கப்பட்ட தினம் இன்று.

புரூக்ளின் பாலம் ஐக்கிய அமெரிக்காவில் நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழைமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது மன்ஹாட்டனிலிருந்து இருந்து புரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3, 1870-ல் தொடங்கியது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மே 24, 1883-ல் இது கட்டிமுடிக்கப்பட்டு, திறக்கப்பட்டது. முதல் நாள், மொத்தம் 1,800 ஊர்திகளும் 150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர்.
மே 24, வரலாற்றில் இன்று.

கேப்ரியல் பாரன்ஹீட் பிறந்த தினம் இன்று( 1686) .

டேனியல்கேப்ரியல் பாரன்ஹீட்  டச்சு
பொறியாளர். ஆல்கஹால்
தெர்மாமீட்டர் மற்றும் மெர்குரி
தெர்மாமீட்டரைக் கண்டுபிடித்தவர்.
மே 24, வரலாற்றில் இன்று.

1844ஆம் ஆண்டு இதே நாளில் தான் கட் - கட எனும் சங்கேத ஒலிகள் கொண்ட தந்தி முறையைக் கண்டு பிடித்த சாமுவேல் மோர்ஸ் உலகின் முதலாவது தந்திச் செய்தியினை அனுப்பினார். அமெரிக்க தலைநகரான வாஷிங்டனிலிருந்து மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகரிலிருந்த தனது உதவியாளர் ஆல்பிரட் வெய்லுக்கு உலகின் முதலாம் தந்தி செய்தியை அனுப்பினார். மோர்ஸ் அனுப்பிய அந்த முதலாம் தந்திச் செய்தி: "கடவுள் என்ன செய்தார்?" என்பதாகும்.
"What hath God wrought?" – (Bible, Numbers 23:23) மோர்ஸ் உருவாக்கி அதனை இவ்வாறு நடைமுறைப்படுத்திய இந்த தந்தி முறை தகவல் தொடர்பில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.