திங்கள், 25 மே, 2020

மே 25, வரலாற்றில் இன்று.

தமிழறிஞர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை பிறந்த தினம் இன்று.

திருநெல்வேலி மாவட்டம் முந்நீர்ப்பந்தலில் ஆம் 1866ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த மு.சி.பூரணலிங்கப் பிள்ளை தமிழ் மொழியின் தொன்மையையும்,உணர்வையும் பிற மொழியினரும் அறியும் படி செய்தவர்.இவர் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த போதும் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக "ஞான போதினி " என்ற பத்திரிக்கையை தொடங்கி நடத்தி வந்தார்.

பூரணலிங்கம் பிள்ளை தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதி உள்ளார்.இவரது படைப்புகளில் சிறுகதை,நாவல், கவிதை,நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரை, மொழிப்பெயர்ப்பு மற்றும் சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடியும். தமிழ் மொழியின் உயர் சிந்தனைகளை பிற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை  ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.1940ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இயங்கி வந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாவது மாநாட்டிற்க்கு தலைமை தாங்கி வழி நடத்தினார். பூரணலிங்கம் பிள்ளையின் அனைத்து படைப்புகளும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.