மே 25, வரலாற்றில் இன்று.
உலக தைராய்டு தினம் இன்று.
தைராய்டு பிரச்னை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அந்நோயில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கும் வகையிலும் உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தைராய்டு கூட்டமைப்பு சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மே 25ம் தேதி உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தைராய்டு என்பது கழுத்துப் பகுதியில் காணப்படும் பட்டாம்பூச்சி வடிவில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் ஒன்று. இச்சுரப்பி உற்பத்தி செய்யும்
தைராக்சின் (Thyroxine - T4) மற்றும் டிரியோடோதைரோனின் (Triiodothyronine - T3) போன்ற ஹார்மோன்கள் ரத்த ஓட்டத்தின் வழி உடலின் முக்கிய பாகங்களுக்குச் சென்று முக்கியமான சில பணிகளை செய்கிறது. குறிப்பாக, உடல் எடை, வளர்சிதை மாற்றம், இதயம் மற்றும் செரிமான மண்டலத்தின் பணிகள், மூளை வளர்ச்சி போன்ற பலவற்றில் இந்த ஹார்மோன்களின் பங்குள்ளது. உடலின் தேவைக்கு போதுமான அளவு அயோடினை எடுத்துக் கொள்வது தைராய்டு சுரப்பியைச் சரியான முறையில் செயல்பட வைக்கும்
தைராய்டு குறைபாட்டிற்கான அறிகுறிகள்:
தைராய்டு குறைபாடு என்பது சற்று அதிகமாக காணப்படுகிறது என்றாலும், பெண்களுக்கே இது அதிக அளவில் ஏற்படுகிறது. தைராய்டு குறைபாடு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நோய் எதிர்ப்புசக்தி பிரச்னை, வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதல்கள், நீண்டகால மன அழுத்தம், பரம்பரை, ஹார்மோன் சமநிலை இன்மை போன்ற பல்வேறு காரணங்களால் தைராய்டு சுரப்பி குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு பிரசவத்தின் போதான ஹார்மோன் சமம் இம்மை தைராய்டு பிரச்னை ஏற்பட காரணமாகிறது. தைராய்டு குறைபாடு காரணமாக முன் கழுத்துக் கழலை எனப்படும், கழுத்துப்பகுதியில் கட்டி போன்ற பெரிய வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
தைராய்டின் இரு வகைகள்:
தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன்களின் அளவுகளைக் கொண்டு இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உடலுக்கு தேவையான அளவைவிட அதிக அளவு தைராய்டு சுரப்பியில் இருந்து ஹார்மோன் சுரப்பதன் காரணமாக உருவாகக் கூடியது “ஹைப்பர்தைராய்டு”, உடலின் தேவைக்கும் குறைவான அளவு ஹார்மோன் சுரப்பதால் “ஹைப்போதைராய்டு” உருவாகிறது.
ஹைப்பர்தைராய்டிசம் : எடை குறைதல், முடி உதிர்தல், வெப்பத்தை தாக்கமுடியாத நிலை, மலட்டுத்தன்மை, பயம், பாலியல் இச்சை, கண்களில் நமைச்சல் போன்றவை முக்கிய அறிகுறிகள்
ஹைப்போதைராய்டிசம் : சோர்வாக உணர்தல், குளிர்ச்சியாக உணர்தல், எடை கூடுதல், மலட்டுத்தன்மை, பாலியல் நாட்டமின்மை, கவனக்குறைவு, நினைவுத்திறன் குறைவு, மன அழுத்தம், முடி உதிர்த்தல்
தைராய்டிற்கான அறிகுறிகள் உள்ளோர் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. சிகிச்சை கால அட்டவணை, உடல் பரிசோதனை, தைராய்டு சோதனை போன்றவை மூலம் தைராய்டை அறிய முடியும். தைராய்டின் வகைக் கேற்ப மருத்துவர்கள் சிகிச்சையை பரிந்துரைப்பர். கதிரியக்க சிகிச்சை, தைராய்டு அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
சரியான வாழ்க்கை முறையை கடைபிடித்தல், அயோடின் நிறைந்த உணவுகளான மீன், பால், கோஸ் வகை காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலமும், ஒட்டுமொத்த உடல்நலனை பேணுதல், பரிசோதனைகள் செய்துக் கொள்வதன் மூலமும் தைராய்டு பிரச்னையில் இருந்து ஓரளவு தற்காத்துக்கொள்ள முடியும்.