செவ்வாய், 26 மே, 2020

மே 26, வரலாற்றில் இன்று.

அப்பல்லோ 10 வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய தினம் இன்று.

அப்பல்லோ விண்வெளித் திட்டம், மனிதன் சந்திரனுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து பத்திரமாக திரும்புவதை நோக்கமாகக்கொண்டு 1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மனிதனை சந்திரனுக்கு கொண்டு செல்வதில் இருந்த சவால்கள் தீவிரமாக ஆராயப்பட்டு தொடர்ச்சியாக நடந்த ஆராய்ச்சியின் முடிவாக அப்பல்லோ விண்வெளி திட்டம் வரையறை செய்யப்பட்டது. அதன் படி 1969-ஆம் ஆண்டு மே-18ல் அப்பல்லோ – 10 விண்கலம் நிலவில் தரையிரங்கும் லூனார் தொகுதியுடன் கார்னென், ஸ்டாஃபோர்டு, யங் என்ற விண்வெளி வீரர்களை சுமந்து கொண்டு அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஏவுதளத்திலிருந்து கிளம்பியது. எட்டு நாட்கள் விண்வெளிப் பயணத்தில் விண்வெளி வீரர்கள் சந்திரனில் பாதுகாப்பாக இறங்கி ஆய்வு செய்வதற்கான ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இதே நாளில்(மே-26) நாளில் அப்பல்லோ-10 பூமிக்கு திரும்பியது. 2002-ஆம் ஆண்டின் கின்னஸ் சாதனையின்படி மனிதனை சுமந்து கொண்டு சந்திரனிலிருந்து மணிக்கு 39,897 கி.மீ வேகத்தில் தரையிறங்கிய விண்கலம் அப்பல்லோ-10 ஆகும்.
மே 26, வரலாற்றில் இன்று.

பன்மொழிப்புலவர்    கா.அப்பாத்துரை நினைவு தினம் இன்று.

கா. அப்பாத்துரை (ஜூன் 24, 1907 - மே 26, 1989) தமிழ்நாட்டு மொழியியல்  வல்லுநர்களுள் ஒருவர். பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவர். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம்  ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.

அப்பாத்துரையார் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார். அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள்  ஆகியவை தலையாயனவாகக் கருதப்படுகின்றன. தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார்.
மே 26, வரலாற்றில் இன்று.

மாவீரன் செண்பகராமன்
நினைவு தினம் இன்று!

1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புத்தன் சந்தை என்ற ஊரில் பிறந்தவர் செண்பகராமன். தந்தை சின்னசாமிப்பிள்ளை; தாயார் நாகம்மாள்.

 இளம் வயதிலேயே விளையாட்டிலும் சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினார். திருவனந்தபுரம் மன்னர் உயர் நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கினார்.
ஆறாம் படிவம் படித்துக் கொண்டிருந்த போது இந்தியாவில் விடுதலைக் கனல் எரியத்தொடங்கிய காலம். செண்பகராமனையும் விடுதலைத்தீ பற்றிக்கொண்டது. அச்சிறிய வயதிலேயே தம்முடன் பயின்ற மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு "ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம் " ஏற்படுத்தி 'வந்தே மாதரம்' என உரிமை முழக்கம் இட்டார். அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கத்தை முதல் முதலில் எழுப்பினார்.

இதைக் கேட்ட நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார். விடுதலைப் போரில் இவர் காட்டிய தீவிரம் காரணமாக ஆங்கில ஆட்சியின் காவல் துறையினர் செண்பகராமனைக் கண்காணிக்கத் தொடங்கினர்.

சர் வால்டர் வில்லியம் என்ற ஜெர்மானியர், தம்மை விலங்கியல் மருத்துவர் எனக் கூறிக்கொண்டு, இந்தியாவில் ஆங்கில ஆட்சியைக் கண்காணிக்கும் ஒற்றராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இவருடன் செண்பக ராமனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. தன் பெற்றோர் அனுமதியோடு சர் வால்டர் வில்லியம்ஸின் உதவியுடன் யாரும் அறியாமல் செண்பக ராமன் ஐரோப்பா சென்றார். அங்கு இத்தாலி, சுவிட்சர்லாந்து, பெர்லின் போன்ற பல்கலைக் கழகங்களில் படித்துப் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

சுவிட்சர்லாந்தில் மாணவராக இருந்த போது இந்திய நாட்டில் ஆங்கிலேயர் கையாண்ட அடக்குமுறைகள் பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார். டாக்டர் பட்டம் பெற்ற பின்னர், ஐரோப்பாவில் இருந்தபடியே இந்திய விடுதலைப்போரில் தீவிரமாகப் பங்கேற்றார். பெர்லினில் இந்திய சர்வதேசக் குழுவை நிறுவினார். ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவைக் குறித்து ஆங்கிலேயர் செய்து வந்த பொய்ப்பிரசாரத்தை இக்குழுவின் உதவியுடன் முறியடித்தார்.

'புரோ இந்தியா' என்ற இதழைத்தொடங்கி இந்தியர்களின் நிலைகளையும், ஆங்கிலேயரின் இந்தியர்களைப் பற்றிய பொய்யான வதந்திகளையும் வெளிப்படுத்தினார்.

 சீனா, தென் ஆப்பிரிகா, மியான்மர் முதலான நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டி இந்தியாவிற்கு ஆதரவைத் திரட்டினார்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து காபூலின் ' ராஜா மஹேந்திர பிரதாப்' அவர்களை அதிபராகவும், 'மவுலானா பர்கத் 'அவர்களை பிரதம மந்திரியாகவும் கொண்டு இந்தியர்கள் தாங்களே நடத்துகின்ற போட்டி அரசை 1915- ல் ஆப்கானிஸ்தானில் நிறுவினர். இவ்வரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக செண்பகராமன் பிள்ளை பணியாற்றினார்.
1914 -ல் உலகப்போர் மூண்ட போது இங்கிலாந்தை எதிர்த்து ஜெர்மனி போரிட்டது.
.
 இங்கிலாந்தின் கடற்படையைக் கலங்க வைக்க ஜெர்மனியர்கள் நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தினர். 'எம்டன்' என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் செண்பகராமன் உதவிப் பொறியாளராகப் பணியாற்றினார். வங்காள விரிகுடாவிற்கு வந்த ஹிட்லரின் ஜெர்மனியக் கடற்படையின் நாசகாரிக் கப்பலான “எம்டன்”, ஆங்கில அரசுக்குச் சொந்தமான இரு பெரிய எண்ணெய்க் கிடங்குகளின் மீதும் சென்னைத் துறைமுகத்தின் மீதும், புனித ஜார்ஜ் கோட்டையிலும், திருகோணமலைத் துறைமுகத்தின் மீதும் பீரங்கித் தாக்குதல் நடத்தியது.
முதல் உலகப்போருக்குப் பின் ஜெர்மனியில் நாட்சிக்கட்சி ஹிட்லர் தலைமையில் உருவாகி வளர்ந்தது. ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார். ஒரு சமயம் ஹிட்லருடன் செண்பகராமன் பேசிக் கொண்டிருந்த போது "இந்தியர்கள் அடிமையாக இருக்கவே தகுந்தவர்கள். இந்தியாவுக்கு விடுதலைக் கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே " என்று கூறினார். ஹிட்லர் கூறியதைக் கேட்ட செண்பக ராமன் கொதித்தெழுந்தார். ஹிட்லருக்கு எதிராகத் திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்தார்.
தங்கள் தலைவரை வாதாடி வென்ற செண்பகராமனை, நாஜிக்கள் வெறுத்தனர். எனவே, அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டபடி நஞ்சைக் கலந்தனர். அந்த நஞ்சு நாளடைவில் மெல்ல மெல்ல செண்பகராமனை நோயாளியாக்கி, படுத்த படுக்கையில் வீழ்த்தியது. 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாளன்று செண்பக ராமனின் உயிர் பிரிந்தது
செண்பகராமன் உயிர் பிரியும் முன் "நான் இறந்த பிறகு என் சாம்பலை இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சாம்பலின் ஒரு பகுதியை என் தாயாரின் சாம்பலைக் கரைத்த திருவனந்த புரத்திலுள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு
வயலில் தூவ வேண்டும்
என்றார்வி.அவரது விருப்பப்படி அவரது இறப்புக்குப்பின் 32 ஆண்டுகள் அவரது சாம்பலை வைத்திருந்து சுதந்திர இந்தியாவில் 1966 ஆம் ஆண்டு அவரது விருப்பத்தினை
அவரது மனைவி
ஜான்சி நிறைவேற்றினார்.

திங்கள், 25 மே, 2020

இந்தியாவில் வேலை நேரம் 8 மணியில் இருந்து 12 மணிநேரமாக  உயர்த்தப்பட்டு இருக்கிறது!

தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகிறது!நசுக்கப்படுகிறது!

இந்தியாவின் இத்தகு தொழிலாளர் விரோத நடவடிக்கையில் அகில உலக  தொழிலாளர் அமைப்பு (ILO)விரைந்து தலையிட வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்றப் பேரவை (LPF)  உள்ளிட்டு 10 இந்திய தொழிற்சங்கங்கள் கூட்டுக்கடிதத்தின் வழியில் கோரிக்கைகளை ஐஎல்ஓ விடம் வலியுறுத்தியது!

இந்திய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஐஎல்ஓ ஏற்றுக்கொண்டுள்ளது!

இந்திய அரசுக்கு ஐஎல்ஓ கடிதம் எழுதி உள்ளது!
தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்களை தபால் அலுவலகத்திலேயே கொடுக்க முடியுமா?

தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் ஏதாவது தகவல் கேட்க எண்ணுகிறீர்களா? ஆனால் அந்த அலுவலகத்தின் முகவரி தெரியவில்லையா அல்லது அதை நேரில் தேடிக் கண்டுபிடித்து அதற்கான மனுவை அனுப்ப அவகாசமில்லையா அல்லது அதற்கான பதிவுத் தபால் கட்டணத்தை மிச்சப்படுத்த எண்ணுகிறீர்களா?

நீங்கள் எங்கும் அலைய வேண்டாம். உங்களுக்கு அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் அந்த மனுவைக் கொடுத்து விட்டால் போதும். அவர்களே சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விடுவார்கள்!

நம்ப முடியவில்லையா? சந்தேகமே வேண்டாம், சட்டம் அப்படித்தான் சொல்கிறது.

ஆனால் பல தபால் நிலையங்களில் நீங்கள் மனுவைக் கொண்டு கொடுத்ததும் வாங்க மறுப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அப்படி ஒரு விதிமுறை இருப்பதே தெரியாது. ‘புதிய தலைமுறை’ அஞ்சல்துறை அதிகாரிகளிடம் இதைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் சொன்ன பதில், ‘இப்படி ஒரு சுற்றறிக்கை இருப்பதே எங்களுக்குத் தெரியாது’.!

 இதற்கான ஆணைகள் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதமே பிறப்பிக்கப்பட்டு விட்டன. அஞ்சலகங்கள் மத்திய அரசு, மத்திய அரசின் அமைச்சகங்கள், அவை சார்ந்த துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் மத்திய உதவிப் பொதுத் தகவல் அதிகாரிகளாக (Central Assistant public information officers - CAPIO) செயல்பட வேண்டும் எனப் பிரதமர் ஆணையிட்டார். இதற்கான விரிவான சுற்றிக்கையை 17.10.2005 அன்று அஞ்சல் துறையின் துணை டைரக்டர் ஜெனரலாக இருந்த கல்பனா திவாரி, அப்போது தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் அதிகாரியாக இருந்த திருமதி. வத்சலா ரகுவிற்கு அனுப்பியுள்ளார்  (Do.No.3&38/05&PG). அவரும் (Chief Postmaster General) ’அவசரம்... கோட்ட அஞ்சல் அதிகாரிகளுக்கு இதைத் தெரியப்படுத்துங்கள்’  என்று 2005ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி குறிப்பெழுதியிருக்கிறார்.

சரி, அந்த சுற்றிக்கை சொல்வது என்ன?

1.மத்திய அரசிடம் தகவல் கோரி வரும் விண்ணப்பத்தின் மூன்று நகல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பம் சரியாக நிரப்பப்பட்டுள்ளதா எனச் சரி பார்க்க வேண்டும். மனு     தெளிவாக இல்லை என்றால் அதைத் தெளிவாக     எழுத உதவ வேண்டும்.

2.மூன்று நகல்களில் ஒரு நகலில் ஒப்புதல் அளித்து அப்போதே விண்ணப்பதாரரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

3.விண்ணப்பத்தோடு தகவல் பெற செலுத்தப்படும் கட்டணம் வங்கி வரைவோலையாகவோ, போஸ்டல் ஆர்டராகவோ, நீதிமன்ற ஸ்டாம்ப்பாகவோ இருக்கலாம். அவை எல்லாமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை. அதனால் கட்டணம் இப்படித்தான் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனச் சொல்லி அலைக்கழிக்கக் கூடாது

4.மற்றொரு நகலை எந்த அலுவலகத்திற்கு அனுப்பி விட வேண்டுமோ அந்த அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் அஞ்சல் அலுவலகமே அனுப்பிவிட்டு விண்ணப்பதாரருக்கு அந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும். இதற்காக அஞ்சல் அலுவலகம் தனிப்பதிவேடுகளையும் விண்ணப்பதாரரால் ஒப்படைக்கப்பட்ட மூன்று     நகல்களில் ஒரு நகலையும் பராமரிக்க வேண்டும்.

5.இதே நடைமுறையில் முதல் மேல்முறையீடு     விண்ணப்பதையும் புதுடெல்லியில் இயங்கும் மத்திய தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு விண்ணப்பத்தையும் அஞ்சல்     அலுவலகத்திலேயே ஒப்படைத்துவிடலாம். இந்தப் பணிகள் எதற்கும் கூடுதல் கட்டணம் ஏதும் அஞ்சல் அலுவலகத்திற்கு செலுத்த வேண்டியது இல்லை.

அஞ்சல் அலுவலகங்கள் செய்தாக வேண்டிய இந்த மக்கள் சேவை மக்களுக்குத் தெரியாது. ஏன், அஞ்சல் துறையில் பணியாற்றும் 70 சதவிகித அதிகாரிகளுக்குத் தெரியாது. கோட்ட, மண்டல, மாநில அளவிலான தலைமை அஞ்சல் அலுவலகங்களில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சின்னத்திரையில் எல்லாவற்றையும் காட்டும் அஞ்சல்துறை இதை மட்டும் இன்றுவரை ஒளிபரப்பு செய்ததே இல்லை.

“95 சதவிகித அஞ்சல் அலுவலகங்களில் இப்படி ஒரு சுற்றறிக்கை எங்களுக்கு வரவில்லை. ஆகவே நாங்கள் தகவல் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை வாங்க மாட்டோம் என மிக எளிதாகச் சொல்லி முகத்தில் அடிக்கிறார்கள். இது இந்தச் சட்டத்தின் உயர் நோக்கத்திற்கு எதிரான செயல்” என்கிறார், இந்தியன் குரல் சட்ட விழிப்புணர்வு அமைப்பின் நிறுவன உறுப்பினர் எம்.சிவராஜ்.

ஆனால் வேலூரில் உள்ள தலைமை தபால் நிலையம் இந்தச்  சேவையை செய்து கொண்டிருக்கிறது  இதைக் குறித்து வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் விசாரித்தபோது, “மாதத்திற்கு நான்கு, ஐந்து விண்ணப்பங்களைப் பெற்று உரிய பொதுத்தகவல் அலுவலருக்கு அனுப்பி வைக்கிறோம். சிறு கிராமங்களில் இருந்து பெற்று கூட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கிருந்து உரிய இடங்களுக்கு அஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கான பதிவேடுகளையும் பராமரித்து வருகிறோம்” என்கின்றனர்.

ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திலும் இதனை தெளிவுபடுத்தும் வகையில் தகவல் பலகை ஒன்று ஏன்வைக்கக்கூடாது?

ஒரு வேளை அஞ்சல் துறையினர் இதுபோன்ற தகவல் பலகை வைக்க நிதியில்லை எனில் தொண்டு நிறுவனங்கள் உதவி பெற்று போர்டு  வைக்க அனுமதிக்கலாமே!
திறந்தவெளிக் கல்விமுறையில் சட்டப்படிப்புகள்!30.06.2020 க்குள் விண்ணப்பம் செய்ய அழைப்பு!
தமிழ்நாடு மாநில பணியாளர் தேர்வாணையத்தேர்வு !
 இலவச பயிற்சி வகுப்பு !
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு !
சிலப்பதிகார
காவியக்காட்சிகள் கண்முன்னே !
கண்ணகியின் கால்தடத்தில்!

காவியக் காதைகள் கல்வெட்டில்!  காவிய
மரங்கள் பூங்காவில்!
01.06.2020 அன்று முதல் மதுரையில் சிலப்பதிகாரப்பூங்கா!
மேதகு.அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆணை!

வேலைநேரம்  உயர்த்தும் அரசாணை வாபசு !

உத்திரப்பிரதேசத்தில் எசுமா சட்டம் !
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு சூன் 15 இல் தொடங்குகிறது!
மாநிலத்தில் 12,600 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது!
தேர்வு குறித்து ஐயம்-அச்சம்  கொள்வோருக்கு 9266617888 அலைபேசி எண் அளிப்பு!
அழைப்பு கொடுத்தால் மனநல ஆலோசனை  குரல்பதிவுவழியில் அளிப்பு!