செவ்வாய், 26 மே, 2020

மே 26, வரலாற்றில் இன்று.

அப்பல்லோ 10 வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய தினம் இன்று.

அப்பல்லோ விண்வெளித் திட்டம், மனிதன் சந்திரனுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து பத்திரமாக திரும்புவதை நோக்கமாகக்கொண்டு 1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மனிதனை சந்திரனுக்கு கொண்டு செல்வதில் இருந்த சவால்கள் தீவிரமாக ஆராயப்பட்டு தொடர்ச்சியாக நடந்த ஆராய்ச்சியின் முடிவாக அப்பல்லோ விண்வெளி திட்டம் வரையறை செய்யப்பட்டது. அதன் படி 1969-ஆம் ஆண்டு மே-18ல் அப்பல்லோ – 10 விண்கலம் நிலவில் தரையிரங்கும் லூனார் தொகுதியுடன் கார்னென், ஸ்டாஃபோர்டு, யங் என்ற விண்வெளி வீரர்களை சுமந்து கொண்டு அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஏவுதளத்திலிருந்து கிளம்பியது. எட்டு நாட்கள் விண்வெளிப் பயணத்தில் விண்வெளி வீரர்கள் சந்திரனில் பாதுகாப்பாக இறங்கி ஆய்வு செய்வதற்கான ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இதே நாளில்(மே-26) நாளில் அப்பல்லோ-10 பூமிக்கு திரும்பியது. 2002-ஆம் ஆண்டின் கின்னஸ் சாதனையின்படி மனிதனை சுமந்து கொண்டு சந்திரனிலிருந்து மணிக்கு 39,897 கி.மீ வேகத்தில் தரையிறங்கிய விண்கலம் அப்பல்லோ-10 ஆகும்.