செவ்வாய், 26 மே, 2020

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 24.3 சதவீதமாக உயரும் ஆபத்து

இந்தியாவில்
வேலையின்மை விகிதம்
24.3 சதவீதமாக உயரும் ஆபத்து
-------------------------------
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 24.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கோவிட்-19 பரவல் காரணமாக, கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில், பொது போக்குவரத்து  மற்றும் தொழில்துறைகள் அனைத்தும் முடக்கப்பட்டன.

பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இதனால் வேலையின்மை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் 8.8 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், தற்போது 24.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.