மே 26, வரலாற்றில் இன்று.
சமூக ஆர்வலர் அருணா ராய் பிறந்த தினம் இன்று.
அருணா ராய் 1946 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் 1967 ல் இந்திய ஆட்சி பணிக்கு(ஐ.ஏ.எஸ்) தேர்வானார். முதலில் திருச்சியிலும், பின்னாளில் ஆற்காட்டிலும் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணி புரிந்து பின்னர் 1978 ஆம் ஆண்டு தன் ஐ.ஏ.எஸ் பதவியை துறந்து ராஜஸ்தானில் மஸ்தூர் கிஷான் சக்தி சங்கதன் (MKSS) என்ற இயக்கத்தை தன் கணவனுடன் இணைந்து தொடங்கினார். உழவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக இந்த இயக்கத்தின் சார்பாக போராடினார்.
மக்களுக்காக அரசு ஒதுக்கும் நிதி, முழுமையாக மக்களைச் சென்றடையாமல் இடையே அதிகாரப் படிநிலையில் சுரண்டப்படுவது குறித்து அருணாவின் அமைப்பு கேள்வி எழுப்பியது. ராஜஸ்தானில் நடந்த மக்கள் குறை கேட்பு அமர்வில் அரசாங்க ஆவணத்தில் செய்து முடிக்கப்பட்டதாக இருக்கும் மக்கள் நலத் திட்டங்கள் எவையும் ஒரு செங்கல் அளவுக்குக்கூட வளரவில்லை என்பது அம்பலமானது. அப்போதுதான் அதற்கான வரவு செலவுகளை மக்களுக்கு காண்பிக்க வேண்டும் என அருணா போராட்டத்தைத் தொடங்கினார். எங்கு தவறு நடந்திருக்கிறது என்று பார்க்கத் தகவல்கள் அவசியம். தகவல்களைக் கேட்பது மக்களின் அடிப்படை உரிமை என ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பெரும் பேரணிப் போராட்டத்தை அருணா நடத்தினார்.
உறுதியான போராட்டத்தால் தகவல் அறியும் உரிமைக்கு ராஜஸ்தானில் சட்ட அங்கீகாரம் கிடைத்தது
பின்னாளில் 1997 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையாக நாடு முழுவதும் தகவல் அறியும் உரிமை சட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அளித்தது.,இதன்பேரில் தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இந்த முதல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் குழுவின் தலைவராக சுதர்சன் நாச்சியப்பன் என்ற தமிழர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடிமக்கள் கேட்கும் தகவல்களை கொடுப்பவர் பொது தகவல் அலுவலர் ஆவார்.நாம் எழுதும் மனுக்களில் பெறுநர் என்று குறிப்பிடபடுபவரும் இவரே.,ஒருவேளை தகவல் பெறப்படாத நிலையில் மேல்முறையீடு அலுவலருக்கு மேல்முறையீட்டு மனு எழுதலாம். ஒவ்வொரு 10 பொது தகவல் அலுவலருக்கும் ஒரு மேல்முறையீடு அலுவலர் ஒதுக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி பெறப்படும் தகவல்கள் என்பது மத்திய அரசு அல்லது மாநில அரசு அலுவலகங்களிலோ அல்லது மத்திய மாநில அரசுகள் எடுத்து நடத்துகிற அலுவலங்களிலோ பதிவேடுள் மற்றும் கணிப்பொறியில் பதியப்பட்ட தகவல்கள் ஆகும்.
இந்த சட்டத்தில் சில சிறப்பம்ச சட்டப்பிரிவுகள் உள்ளன அவை பின்வருமாறு:
* பிரிவு 6(2) ன் படி தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துபவரிடம் எதற்காக இந்த தகவல் என்ற கேள்வி கேட்கக்கூடாது.
* பிரிவு 6 (3)ன் படி சரியான தகவலை தவறுதலாக வேறொரு அதிகாரியிடன் கேட்கும்போது அந்த குறிப்பிட்ட அதிகாரி உரிய அதிகாரியிடம் அனுப்ப வேண்டும்.
* பிரிவு 7 ன் படி ஒரு மனுவிற்கு 30 நாட்களுக்குல் பதில் தர வேண்டும் தவறும் பட்சத்தில் பிரிவு 7(6) ன் படி அனைத்து கோப்புகளும் இலவசமாக வழங்க வேண்டும்.
* பிரிவு 8 ன் படி பெறமுடியாத தகவல்களாக இராணுவ ரகசியங்கள் நடந்து கொண்டிருக்கும் சி.பி.ஐ வழக்குகள் உள்ளன, பிரிவு 8(J)ன் படி சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ கொடுக்கப்படும் தகவல்களை கொடுக்கலாம்.
இவ்வாறு கிராமப்புறம் தொடங்கி மத்திய அரசு வரை நடைவெறும் ஒவ்வொரு செயல்பாடும், வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும். என்பதையே இந்த சட்டம் எடுத்துக்காட்டிகிறது. எனவே தகவல் அளிப்பது அரசின் கடமை தகவல் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை ....தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்தி தகவல் பெறுவோம் தவறை துடைப்போம்.