சனி, 6 ஜூன், 2020

நாமக்கல் மாவட்டத்தில் 308 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு...

10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள்ஆன்லைன் மூலம் ஹால்டிக்கெட் பெறலாம்...

*☀Income Tax News - வருமான வரி கணக்குத் தாக்கல் ITR(Filing of Income Tax Return) பணியை தொடங்கலாம்.*

*☀Income Tax News - வருமான வரி கணக்குத் ITR பணியை தொடங்கலாம்.*
*அனைவருக்கும் வணக்கம்!!*


*2019-20 நிதியாண்டிற்கான (Financial Year) அதாவது 2020-21 மதிப்பீட்டு ஆண்டிற்கான (Assessment Year) வருமான வரி கணக்குத் தாக்கல் (Filing of Income Tax Returns) செய்வதற்கான இணையதளம் https://www.incometaxindiaefiling.gov.in தற்போது தயாராக உள்ளது.*

*வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன் Form 26AS ல் நாம் செலுத்திய வருமான வரி சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின் ITR பணியை தொடங்கலாம்.*
*எப்போதும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி  கடைசி நாள் ஆகும். இந்த ஆண்டு கோவிட்-19 காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது*

20 ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் அரியர் வைத்து இருப்பவர்களுக்கு இறுதிவாய்ப்பு- அண்ணா பல்கலைக்கழகம்


முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்க மானியக் கடன்_மாவட்ட தொழில் மையம் அறிவிப்பு


Provident Fund-Letter_No_1074_Subscription for the old period due to age of retirement on superannuation of superior service employees/teachers extended from 58 years to 59 years - Instructions - Regarding.



*🌐மன்ற வரலாற்றில்இன்று: கடந்தாண்டு.இதே நாளில் (06.06.2019)இனக்காவலர்-.பாவலர் திரு.க.மீ.,அய்யா அவர்களுடன் நாமும்.நாமக்கல் மாவட்டமும்...*

*

🌐மன்ற வரலாற்றில்இன்று: கடந்தாண்டு
இதே நாளில் (06.06.2019)இனக்காவலர்-பாவலர் திரு.க.மீ.,அய்யா அவர்களுடன்  நாமும்.நாமக்கல் மாவட்டமும்...

*🌐ஜூன் 6, வரலாற்றில் இன்று:திரைப்பட பாடலாசிரியர் ஆலங்குடி சோமு நினைவு தினம் இன்று.*

ஜூன் 6,
வரலாற்றில் இன்று.

திரைப்பட பாடலாசிரியர் ஆலங்குடி சோமு நினைவு தினம் இன்று.



ஆலங்குடி சோமு (12 டிசம்பர் 1932 - 6 ஜூன் 1990) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார். இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது (1973 - 1974) பெற்றுள்ளார்.

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். 1960இல் வெளிவந்த யானைப்பாகன் திரைப்படத்திற்காக "ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்" என்பது இவர் எழுதிய முதற்பாடல்.

இவர் எழுதிய பாடல் தமிழக அரசியலில் ஒலிக்கும் பல்லவி


ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை.

சில பிரபல பாடல்கள்

ஆண்டவன் உலகத்தின் முதலாளி... (தொழிலாளி)
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்...
தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை... (அடிமைப் பெண்)
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று... (பத்தாம்பசலி)
ஒரு கொடியில் (காஞ்சித்தலைவன்)
பொட்டிருந்தும் பூவிருந்தும் (பூம்புகார்)
கத்தியை தீட்டாதே (விளக்கேற்றியவள்)
மலருக்கு தென்றல் (எங்க வீட்டுப் பிள்ளை)
என்னடி செல்லகண்ணு (தேன்மழை)
மேகங்கள் திரண்டுவந்தால் (நான் ஆணையிட்டால்)
வெள்ளி நிலா வானத்திலே (காதல் படுத்தும் பாடு)
ஆடலுடன் பாடலைக்கேட்டு (குடியிருந்த கோயில்)
என்னம்மா ராணி (குமரிக்கோட்டம்)
இரவும் பகலும், கார்த்திகை தீபம் ஆகிய படங்களின் பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதியுள்ளார்.

*🌐ஜூன் 6, வரலாற்றில் இன்று:பீகார் ரயில் விபத்து தினம் இன்று.*

ஜூன் 6, வரலாற்றில் இன்று.

பீகார் ரயில் விபத்து நடந்த தினம் இன்று.

1981 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இந்திய ரயில்வே வரலாற்றில் மிக கோரமான விபத்தை சந்தித்த நாளாகும். மான்சி முதல் சஹார்சா நோக்கி பயணித்த இந்த தொடர்வண்டியில் 9 பெட்டிகளில் சுமார் 800 க்கு மேற்பட்ட பயணிகள் இருந்திருக்கலாம், என்று நம்பப்படுகின்றது.

மான்சிலிருந்து சஹார்சா நோக்கி மிக கடுமையான மழையில் பயணித்து கொண்டிருந்த இந்த ரயில் நேபாள நாட்டின் சிவபுரி எனும் இடத்தில் தொடங்கும் பாக்மதி (இந்தியாவின் கங்கை போன்ற பெருமையை நேபாள நாட்டில் பெற்றுள்ளது ) என்ற ஆற்றின் குறுக்கே பாலகாட் எனுமிடத்தில் கடக்க வேண்டிய பாலத்தில் மாடுகள் குறுக்கே வந்ததில் எஞ்சின் ஓட்டுநரின் மிக கடுமையான பிரேக்கினால் தடம் புரண்டதில் 9 பெட்டிகளும் காட்டாற்று வெள்ளத்தில் விழுந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் பயணித்த பயணிகளில் 400 முதல் 600 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அறியப்படுகின்றது.

1981 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த விபத்தில் 5 நாட்களுக்கு பிறகு 286 சடலங்கள் மீட்கப்பட்டாலும், 300 க்கு அதிகமான மற்றவர்களின் நிலை பற்றிய எந்த தகவலும் இல்லை.

இந்த விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து எங்கேயும் உறுதியான தகவல் வழங்கப்படவில்லை. மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 400 என குறிப்பிடப்படுகின்றது. இந்திய ரயில் வரலாற்றில் மிக கோரமான விபத்தாக கருதப்படுகின்றது.