சனி, 6 ஜூன், 2020

*🌐ஜூன் 6, வரலாற்றில் இன்று:பீகார் ரயில் விபத்து தினம் இன்று.*

ஜூன் 6, வரலாற்றில் இன்று.

பீகார் ரயில் விபத்து நடந்த தினம் இன்று.

1981 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இந்திய ரயில்வே வரலாற்றில் மிக கோரமான விபத்தை சந்தித்த நாளாகும். மான்சி முதல் சஹார்சா நோக்கி பயணித்த இந்த தொடர்வண்டியில் 9 பெட்டிகளில் சுமார் 800 க்கு மேற்பட்ட பயணிகள் இருந்திருக்கலாம், என்று நம்பப்படுகின்றது.

மான்சிலிருந்து சஹார்சா நோக்கி மிக கடுமையான மழையில் பயணித்து கொண்டிருந்த இந்த ரயில் நேபாள நாட்டின் சிவபுரி எனும் இடத்தில் தொடங்கும் பாக்மதி (இந்தியாவின் கங்கை போன்ற பெருமையை நேபாள நாட்டில் பெற்றுள்ளது ) என்ற ஆற்றின் குறுக்கே பாலகாட் எனுமிடத்தில் கடக்க வேண்டிய பாலத்தில் மாடுகள் குறுக்கே வந்ததில் எஞ்சின் ஓட்டுநரின் மிக கடுமையான பிரேக்கினால் தடம் புரண்டதில் 9 பெட்டிகளும் காட்டாற்று வெள்ளத்தில் விழுந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் பயணித்த பயணிகளில் 400 முதல் 600 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அறியப்படுகின்றது.

1981 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த விபத்தில் 5 நாட்களுக்கு பிறகு 286 சடலங்கள் மீட்கப்பட்டாலும், 300 க்கு அதிகமான மற்றவர்களின் நிலை பற்றிய எந்த தகவலும் இல்லை.

இந்த விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து எங்கேயும் உறுதியான தகவல் வழங்கப்படவில்லை. மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 400 என குறிப்பிடப்படுகின்றது. இந்திய ரயில் வரலாற்றில் மிக கோரமான விபத்தாக கருதப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக