சனி, 6 ஜூன், 2020

*🌐ஜூன் 6, வரலாற்றில் இன்று:திரைப்பட பாடலாசிரியர் ஆலங்குடி சோமு நினைவு தினம் இன்று.*

ஜூன் 6,
வரலாற்றில் இன்று.

திரைப்பட பாடலாசிரியர் ஆலங்குடி சோமு நினைவு தினம் இன்று.



ஆலங்குடி சோமு (12 டிசம்பர் 1932 - 6 ஜூன் 1990) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார். இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது (1973 - 1974) பெற்றுள்ளார்.

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். 1960இல் வெளிவந்த யானைப்பாகன் திரைப்படத்திற்காக "ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்" என்பது இவர் எழுதிய முதற்பாடல்.

இவர் எழுதிய பாடல் தமிழக அரசியலில் ஒலிக்கும் பல்லவி


ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை.

சில பிரபல பாடல்கள்

ஆண்டவன் உலகத்தின் முதலாளி... (தொழிலாளி)
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்...
தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை... (அடிமைப் பெண்)
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று... (பத்தாம்பசலி)
ஒரு கொடியில் (காஞ்சித்தலைவன்)
பொட்டிருந்தும் பூவிருந்தும் (பூம்புகார்)
கத்தியை தீட்டாதே (விளக்கேற்றியவள்)
மலருக்கு தென்றல் (எங்க வீட்டுப் பிள்ளை)
என்னடி செல்லகண்ணு (தேன்மழை)
மேகங்கள் திரண்டுவந்தால் (நான் ஆணையிட்டால்)
வெள்ளி நிலா வானத்திலே (காதல் படுத்தும் பாடு)
ஆடலுடன் பாடலைக்கேட்டு (குடியிருந்த கோயில்)
என்னம்மா ராணி (குமரிக்கோட்டம்)
இரவும் பகலும், கார்த்திகை தீபம் ஆகிய படங்களின் பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக