ஜூன் 6, வரலாற்றில் இன்று.
இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கிய ஆலன் ஆக்டேவியன் ஹியூம் பிறந்த தினம் இன்று.
ஆலன் ஆக்டேவியன் ஹியூம் இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரில் 1829-ஆம் ஆண்டு ஜூன் 6-ல் பிறந்தார். மரியா மற்றும் ஜோசப் இவரது பெற்றோர் ஆவர். தந்தை இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராவர். ஆலன் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பிரிட்டிஷ் இந்தியாவில் 1850-ல் உத்திரப்பிரதேசத்தில் தம் ஐ.சி.எஸ் பணியைத் தொடங்கினார்.
கிழக்கிந்தியப் படையின் சட்டங்கள் அனைத்தும் இந்திய மக்களின் உழைப்பு, வரி, லாபம் ஆகியவற்றை சுரண்டுவதையே நோக்கமாகக் கொண்டிருந்ததைக் கண்டு ஆலன் ஆக்டேவியன் மனம் வருந்தினார். இந்திய மக்கள் கருத்து சுதந்திரம், ஆங்கிலேயருக்கு நிகரான சம உரிமை, சுரண்டலுக்கெதிரான உரிமை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைப் பெற வேண்டுமானால் அமைப்பு ரீதியாக அனைவரும் ஒன்று சேர்ந்து போராட ஒரு தேசிய அமைப்பு தேவை என்பதை உணர்ந்தார்.
தன் நண்பர் வெட்டர்பர்ன்(மும்பை நகரின் உயர்நீதிமன்ற ஆங்கிலேயே நீதிபதி) ஆலோசனைப்படி இந்தியாவிலேயே எம்.ஜி ரானடே, சுப்பிரமணிய அய்யர், w.c பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்ட முதல் இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28-ல் மும்பையில் நடந்தது. இதன் மூலமாக இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே தலைமையின் கீழ் போராடி சுதந்திரம் பெறுவதற்கு ஆங்கிலேயரான ஆலன் ஆக்டேவியன் ஹியூம் வழிவகுத்துச் சென்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக