புதன், 10 ஜூன், 2020

G.O (Ms) No: 54 date: 9.6.2020 பள்ளிக்கல்வி 2019-20 ஆம் கல்வி ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தல் ~அரசாணை: 54 , நாள் 9.6 .2020.

*📘பொதுத் தேர்வுகள் ரத்து- வரவேற்புக்குரிய முடிவு#இந்து_தமிழ்நாளிதழ் தலையங்கம் 10/06/2020

பொதுத் தேர்வுகள் ரத்து-
வரவேற்புக்குரிய முடிவு

#இந்து_தமிழ் நாளிதழ் தலையங்கம்
10/06/2020

ஒருவழியாகப் பத்து, பதினோராம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ரத்துசெய்வதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கால தாமதமான முடிவு என்றாலும், இது மிகுந்த வரவேற்புக்குரியது. இதன் மூலம் பல லட்சம் மாணவர்கள் கூடுதல் தொற்று அபாயத்திலிருந்து தப்பித்திருக்கிறார்கள். முக்கியமாக, பெரும் மன அழுத்தத்திலிருந்து மாணவர்களோடு சேர்த்து, பெற்றோர்களும் ஆசிரியர்களும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வரலாறு கண்டிராத பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கும் கரோனா தொற்று போன்ற ஒரு கொள்ளைநோயை எதிர்கொள்வதில் அரசுகள் திட்டமிடலில் சறுக்குவது புரிந்துகொள்ளக் கூடியது. கிருமியின் போக்கும், அது உண்டாக்கும் விளைவுகளும் வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறாக இருக்கின்றன. அதிலும், இந்தியாவில் ஒன்றிய அரசே பெரும்பாலான அதிகாரங்களைத் தன் கையில் வைத்திருக்கும் நிலையில், மாநில அரசுகளானவை பல்வேறு விஷயங்களையும் அனுசரித்தே ஒவ்வொரு முடிவையும் எடுக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் மிகச் சிறந்த வழிமுறை என்னவென்றால், முன்னுரிமைகளை வரிசைப்படுத்துவதும், அவற்றில் சம்பந்தப்பட்ட தரப்புகள் அனைத்தின் ஆலோசனைகளையும் பெற்று முடிவுகளை மேற்கொள்வதும்தான். ஏனென்றால், எவ்வளவு சிறந்த முடிவுகளையும்கூட நாசமாக்கிவிடக் கூடிய வல்லமை இன்று கிருமியின் போக்கில் இருக்கிறது. ஆக, அரசானது தன்னளவில் வேறு கூடுதல் சிக்கல்களை உண்டாக்கிக்கொள்ளக் கூடாது.

கொள்ளைநோய் காலகட்டத்தில் இயல்பாகவே கல்வி நிலையங்கள் கடைசி வரிசைக்குச் சென்றுவிடுகின்றன. கட்டுப்பாட்டுக்குள் தொற்று வரும் வரை பள்ளிக்கூடங்கள் இயக்கத்தைப் பற்றிய பேச்சுக்கே இடம் இல்லை என்ற முடிவை முன்பே தமிழக அரசு எடுத்திருந்தால் மக்களுக்கும் இவ்வளவு அலைக்கழிப்புக்கு இடம் இல்லை; அரசுக்கும் தேவையற்ற அழுத்தங்கள் இல்லை. எதிர்க்கட்சிகள், ஆசிரியர் சங்கங்கள், பொது நல அமைப்புகள், ஊடகங்கள், நீதிமன்றம் என்று பல தரப்பு எதிர்ப்பின் விளைவாகவே இப்போதும் தேர்வை ரத்துசெய்யும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும், பெரும்பான்மையினரின் கருத்துகளுக்குத் தமிழக முதல்வர் மதிப்பளித்திருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். அதேபோல, இந்தப் பிரச்சினைக்காகத் தீவிரமாகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் பாராட்டுக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.

இயல்பான காலகட்டத்தைவிடவும் மோசமான ஒரு காலகட்டத்தில், அரசானது எல்லோருடைய அக்கறையான குரல்களுக்கும் செவி மடுப்பது முக்கியமானது. ஒரு சமூகமாக நாம் செயல்படுவதிலுள்ள பெரிய அனுகூலம் அனைவரின் கூட்டுத் திறனும் சேர்வதன் வழியே நம்மை நாமே பலப்படுத்திக்கொள்வதுதான். கூட்டுச் சிந்தனைக்கு முக்கியத்துவம் அளிப்போம்!

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் MLA மறைவு - தி.மு.க மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு- தலைமை கழக அறிவிப்பு


சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

*மு.க.ஸ்டாலின் இரங்கல்:*

“என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை!”

இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா காலை நேரத்தில் வரவேண்டும்? திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் செல்ல மகன், தலைவர் கலைஞரின் அன்பையும் ஆதரவையும் அளவின்றிப் பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர், சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தே விட்டார் என்ற செய்தியை ஏற்க ஏனோ என் மனம் மறுக்கிறது.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க, தி.மு.கழகம் முன்னெடுத்த செயல்திட்டங்களைச் சிறப்புடன் நிறைவேற்றுவதற்காக சிறிதும் ஓய்வின்றி களப்பணியாற்றி, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்கள்,  சிகிச்சை பலனின்றி இன்று (10-6-2020)  நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.

கழக ரத்தம் பாய்ந்த உடல், கலைஞர் ஒருவரே தலைவர் என்ற உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் தகுதி மிக்க துணிவு, மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காமல் போராடும் வீரம், மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கும் வல்லமை என உறுதியுள்ள உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாது செயல்பட்டவர் சகோதரர் ஜெ.அன்பழகன்.

மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, அதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்தி, பொதுவாழ்வின் தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் ஜெ.அன்பழகனை நான் எப்படி மறப்பேன்? என்னை நானே தேற்றிக் கொள்ள முடியாமல் தேம்பி அழும் நிலையில், சகோதரர் அன்பழகன் அவர்தம் குடும்பத்தார்க்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்,  கழக உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது அவருடைய பாசமுகம் காண்பேன்?

ஜெ.அன்பழகனின் பொதுவாழ்வு – கழகப்பணி - தியாக உணர்வுக்குத் தலைவணங்கி, கண்ணீர் பெருக்குவதன்றி, வேறு வழி எனக்குத் தெரியவில்லை. கழகத்தின் தீரமிக்க உடன்பிறப்பு - மக்கள் பணியிலேயே தன்னுயிர் ஈந்த அன்புச்சகோதரர் ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கழகத்தின் சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. கழகக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதுடன், கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்து, ஜெ.அன்பழகன் அவர்களின் தியாக வாழ்வைப் போற்றுவோம்! திராவிட இயக்கம் மறவாது அந்தத் திருமுகத்தை !

*பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2019-2020ம் கல்வியாண்டில் பணியாற்றிய உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மற்றும் சிறப்பாசிரியர்கள் ஆகியோர்கள் (02.06.2019 முதல் 01.05.2020 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற) 31.05.2020 வரை மறுநியமன அடிப்படையில் பணிபுரிந்தவர்கள் சார்பாக ஓய்வூதியக் கருத்துருக்கள் மாநிலக் கணக்காயர்/அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு அனுப்பிய விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு- நாள்:08.06.2020.!!!* 👇

*பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2019-2020ம் கல்வியாண்டில் பணியாற்றிய உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மற்றும் சிறப்பாசிரியர்கள் ஆகியோர்கள் (02.06.2019 முதல் 01.05.2020 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற) 31.05.2020 வரை மறுநியமன அடிப்படையில் பணிபுரிந்தவர்கள் சார்பாக ஓய்வூதியக் கருத்துருக்கள் மாநிலக் கணக்காயர்/அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு அனுப்பிய விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு- நாள்:08.06.2020.!!!*
👇





🌐ஜூன் 10,வரலாற்றில் இன்று:எழுத்தாளர் எட்வின் அர்னால்டு பிறந்த தினம் இன்று.

ஜூன் 10,
வரலாற்றில் இன்று.


எழுத்தாளர்
எட்வின் அர்னால்டு பிறந்த தினம் இன்று.


சர் எட்வின் அர்னால்டு (Sir Edwin Arnold) (10 சூன் 1832 – 24 மார்ச் 1904) ஆங்கிலக் கவிஞர், ஊடகவியலாளர் மற்றும் இதழாசியர் எனும் பன்முகங்கொண்ட இங்கிலாந்து நாட்டவர் ஆவார்.

கௌதம புத்தரின் வரலாற்றை ஆசியாவின் ஜோதி எனும் பெயரில் நூல் எழுதியமைக்காக உலக முழுவதும் அறியப்பட்டவர்.

இங்கிலாந்து நாட்டு ஆங்கிலேயரான எட்வின் அர்னால்டு, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்தவர். பின்னர் 1856இல் இந்தியாவில் உள்ள புனே சமசுகிருத மொழிக் கல்லூரியின் முதல்வராக ஏழு ஆண்டுகள் பணி புரிந்தார்.

பின்னர் இங்கிலாந்து திரும்பிய எட்வின் அர்னால்டு, 1861இல்
த டெயிலி டெலிகிராப் நாளிதழில் ஊடகவியலாளராகச் சேர்ந்து, அந்நாளிதழின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார்.


கௌதம புத்தரின் வாழ்க்கை குறித்து இவர் எழுதிய உலகப் பெற்ற படைப்பான ஆசியாவின் ஜோதி அல்லது பெருந்துறவு எனும் கவிதை நூல், இந்தி மற்றும் பிற உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.


 இவரது ஆசியாவின் ஜோதி நூல் மூலம், மேற்கு உலக மக்கள் புத்தரின் தத்துவங்களை முதன் முதலாக அறிந்து கொள்ள முடிந்தது.

இந்நூலை தேசிக விநாயகம் பிள்ளை, தமிழில் ஆசிய ஜோதி எனும் பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.

🌐ஜூன் 10,வரலாற்றில் இன்று:குமிழ் முனைப் பேனா(Ball point pen) தினம் இன்று.

ஜூன் 10,
வரலாற்றில் இன்று.

குமிழ் முனைப் பேனா(Ball point pen) தினம் இன்று.


குமிழ்முனைப் பேனாவிற்கு காப்புரிமை வழங்கப்பட்ட தினம் இன்று(1943).

June 10, 1943 - Laszlo Biro patented his ballpoint pen.

🌐ஜூன் 10,வரலாற்றில் இன்று:மாவீரன் அலெக்சாண்டர் நினைவு தினம் இன்று.

ஜூன் 10,
வரலாற்றில் இன்று.

மாவீரன் அலெக்சாண்டர் நினைவு தினம் இன்று.

மாஸிடோனியா மாவீரன் அலெக்சாண்டர்!
(Alexander the Great)

தோற்றம் : கி.மு 20 ஜூலை 356
மறைவு : கி.மு 10 ஜூன் 323 (33 வயது)
அப்பா : பிலிப்ஸ்
ஆசிரியர் : அரிஸ்டாடில்
குதிரை : ஃபுஸிபேலஸ்

மன்னன் பிலிப்ஸ் கொலை செய்யப்பட்ட பிறகு தனது 20 ஆவது வயதில் அரியனை ஏறினார் அலெக்ஸாண்டர். அடுத்த 13 ஆண்டுகளில் துருக்கி, எகிப்து, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பல நாடுகளை தன் காலடியில் கொண்டு வந்தார். அவரின் கடைசி ஆண்டுகளில் அவரது கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. இந்து சமவெளியை கடந்து பஞ்சாப் மன்னன் ஃபோரஷை கடுமையான போருக்குப்பின் முறியடித்தார் அலெக்ஸாண்டர்.

பின்னர் ஃபோரஷிடம் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அலெக்ஸாண்டர் கேட்க ஒரு மன்னனைப்போல் நடத்த வேண்டும் என்று ஃபோரஷ் கூறினார். உடனே தான் கைப்பற்றிய தேசத்தை அவரிடமே ஒப்படைத்து அதனை மாஸிடோனியாவின் பாதுகாப்பு உட்பட்ட தேசமாக அறிவித்தார் நன்னெஞ்சம் கொண்ட அலெக்ஸாண்டர்.

பல நாடுகளை வென்ற அலெக்சாண்டர் தன் நாடு திரும்புகையில் கடும் நோய்வாய்ப்பட்டார். மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர். மரணம் நெருங்கிக் கொண்டிருப்பதை அறிந்த அலெக்சாண்டர் தம் படைத் தலைவர்களை அழைத்து, "நான் இறந்தவுடன், திறந்து இருக்கும் எனது கைகள் வெளியே தெரியுமாறு சவப்பெட்டி செய்யுங்கள் என்றார். எல்லோரும் என்னை அந்தக் கோலத்தில் பார்த்தபிறகு அடக்கம் செய்யுங்கள்" என்றார். வியப்படைந்த படைத்தலைவர்களில் ஒருவர், "அரசே... எதற்காக இப்படி செய்யச் சொல்கிறீர்கள்?"என்று கேட்டார். அதற்கு அலெக்சாண்டர், "உலகையே வென்ற பேரரசனாகிய அலெக்சாண்டர், வெறுங்கையுடன்தான் மேலுலகம் சென்றுள்ளான் என்பதை மக்கள் உணர்வதற்காகத்தான்" என்று பதில் சொன்னார்.

🌐ஜூன் 10,வரலாற்றில் இன்று:நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் பிறந்த தினம் இன்று*

ஜூன் 10,
வரலாற்றில் இன்று.

 நூலகத்துறையின் முன்னோடி
வே.தில்லைநாயகம் பிறந்த தினம் இன்று.

✍ தமிழக நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் 1925ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தார்.

✍ இவர் 1949ஆம் ஆண்டு அரசு உதவியுடன் நூலகப் பயிற்சி பெற்று, பொதுக்கல்வித்துறை இயக்க முதல் நூலகரானார்.

✍ ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நூலகத்துறை இயக்குநராக பதவி வகித்து, தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலமாக மாற்றிய இவர் 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

✍ இவர் எழுதிய 'இந்திய நூலக இயக்கம்" என்ற நூலுக்காக உலக பல்கலைக்கழகம் 1982ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

✍ தமிழில் 'வேதியம் 1008" உட்பட சில நூல்களை எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் தமிழக அரசின் முதல் பரிசை பெற்றவை.

✍ தமிழக பொது நூலக இயக்கத்தின் தந்தை வே.தில்லைநாயகம் 87ஆவது வயதில் (2013) காலமானார்.