வியாழன், 11 ஜூன், 2020

*🌐ஜூன் 11, வரலாற்றில் இன்று:ஹோவர்கிராப்ட் தனது முதல் பயணத்தை தொடங்கிய தினம் இன்று(1959).*

ஜூன் 11, வரலாற்றில் இன்று.

ஹோவர்கிராப்ட் தனது முதல் பயணத்தை தொடங்கிய தினம் இன்று(1959).

பிரிட்டிஷ் வானூர்தி மற்றும் கப்பல் பொறியியல் நிறுவனம் வடிவமைத்த ஹோவர்கிராப்ட் 1959ஆம் ஆண்டு இதே நாளில்(ஜூன்-11) முதல் பயணத்தை இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையின் சோலண்ட்(Solent) எனும் இடத்தில் ஆங்கிலக் கால்வாயில் தொடங்கியது. நீர், நிலம், சேறு மற்றும் பனித்தளத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானம், கப்பல் மற்றும் தரைத்தள வாகனத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பின் கலவையாக ஹோவர்கிராப்ட் கட்டப்பட்டுள்ளது. 1950 முதல் 1959 வரை நடந்த ஆராய்ச்சியின் விளைவாக ஹோவர்கிராப்ட் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் கடல் மற்றும் தரையில் வேகமாக செல்லக்கூடிய வகையில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சுமந்து செல்லக்கூடியது. பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள், ராணுவப் பயன்பாடு, பயணிகள் சேவை, கடற்படை கண்காணிப்பு போன்ற சேவைகளுக்கு மிகவும் பயன்னுள்ளதாக இருக்கிறது. Blower மூலமாக உயர் அழுத்தக் காற்று ஹோவர்கிராப்டின் hull வழியே வளிமண்டல அழுத்தத்திற்கு சற்று அதிகமாக செலுத்தப்படுவதால் காற்று அழுத்த வேறுபாடு காரணமாக ஹோவர்கிராப்ட் தரையை தொட்டவாறு Propeller உதவியுடன் இயங்குகிறது.

*🌐ஜூன் 11, வரலாற்றில் இன்று:ஜாக்கஸ் காஸ்டியூ பிறந்த தினம் இன்று.*

ஜூன் 11, வரலாற்றில் இன்று.

ஜாக்கஸ் காஸ்டியூ பிறந்த தினம் இன்று.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கடலியல் ஆய்வாளர், புகைப்படவியலாளர் மற்றும் எழுத்தாளரான ஜாக்கஸ் காஸ்டியூ 1910-ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று செயிண்ட் ஆன்ரே நகரில் பிறந்தவர். கடலில் வாழும் உயிரினங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். நீண்ட நேரம் கடலின் ஆழத்தில் இருப்பதற்கான ஸ்கூபா எனும் டைவிங் உபகரணத்தை கண்டுபிடித்தவர்களில் இவரும் ஒருவராவார். கடலில் உள்ள உயிரனங்களின் வாழ்வைப் பற்றிய புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் The Silent World : A Story of Undersea Discovery and Adventure குறிப்பிடத்தகுந்த புத்தகமாகும்.

*🌐ஜூன் 11, வரலாற்றில் இன்று:பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம் இன்று (1995).*

ஜூன் 11, வரலாற்றில் இன்று.

 பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம் இன்று (1995).

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம். இவருடைய பெற்றோர் துரைச்சாமியார்-குஞ்சம்மாள் ஆவர். தொடக்க கல்வியை சேலத்திலும், ஆத்தூரில் பயின்ற இவர், பட்டப்படிப்பை சேலத்தில் பயின்றார். பயின்ற காலத்திலேயே பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். பெருஞ்சித்திரனார், கல்லூரியில் பயிலும்போது கமலம் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

 இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவராக கருதப்படும் இவர், தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆகியோரின் கொள்கையை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாக காத்து அவர்களை வளர்த்தெடுத்தவரும் இவர்தான். தமிழரசன் போன்ற தமிழ் தேசிய தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே.

20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகிறது.

*🌐ஜூன் 11, வரலாற்றில் இன்று:எஃப்.எம். எனப்படும் பண்பலை வானொலி ஒலித்த தினம் இன்று(1935).*

ஜூன் 11, வரலாற்றில் இன்று.

எஃப்.எம். எனப்படும் பண்பலை வானொலி ஒலித்த தினம் இன்று(1935).

இப்போது சகலர் கையிலும் உள்ள செல்போனில் பாடல்கள், நகைச்சுவைத் துணுக்குகள், வானிலை அறிவிப்புகள், திரைநட்சத்திரங்களின் நேர் காணல்கள் என்று பல நிகழ்ச்சிகளை பண்பலை வானொலி மூலம் காலை முதல் இரவு வரை கேட்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால்  25 வருஷத்துக்கு முந்திய ரேடியோ ரசிகர்களுக்கு பண்பலை வரப்பிரசாதம்.

அதிலும் அப்போதெல்லாம் இவ்வளவு வானொலி நிலையங்களும் கிடையாது. ஆல் இண்டியா வானொலி, இலங்கை, சிங்கப்பூர், பி.பி.சி., சீனத் தமிழ் வானொலிகளை இரைச்சலையும் பொருட்படுத்தாது காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்டு ரசிப்பார்கள் அந்தக் கால வானொலி நேயர்கள். இத்தனைக்கும் ஏ.எம். அலைவரிசை, ஷார்ட்வேவ் (குறுகிய அலை) அலைவரிசை என இருவித ஒலி பரப்புகள் இருந்தாலும் இரண்டும் இரைச்சல் கலந்தே ஒலித்தன.அதாவது கல்லையும் அரிசியையும் கலந்து கடித்ததைப் போல இருந்தது அன்றைய ரசிகர்களின் நிலை இதையடுத்து வானொலியின் இரைச்சலைப் பெரிய அளவு குறைக்கும் நோக்கில் எஃப்.எம். ஒலிபரப்பு அறிமுகமானது.
அதனைக் கண்டுபிடித்தவர் எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் (1890-1954). அமெரிக்காவில் பிறந் தவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து அதிலேயே பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்.

1933இல் அவர் எஃப்.எம். ரேடியோவுக்கான காப்புரிமையைப் பெற்றார்.

 1935இல் அதனை நியூஜெர்ஸி மாநிலத்தில் பொதுமக்களுக்காக இதே நாளில் ஒலிபரப்பினார்.

எஃப்.எம். அலைவரிசையைப் பயன்படுத்திப் பலனடைந்த பல தனியார் நிறுவனங்கள், எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங்குக்கான கண்டுபிடிப்புக் கட்டணத்தைத் தராமல், அவரை அலைக்கழித்தன.

 நீதிமன்ற வழக்குகளால் அவர் நிம்மதியிழந்தார்.

 ஒருநாள் வீட்டின் மாடியிலிருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்துக்குப் பிறகு, அவருக்குச் சாதகமாக வழக்குகள் முடிந்தன.நீதிமன்றங்களுக்கு ரேடியோ தொழில்நுட்பங்கள் புரியவில்லை எனக் காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் வாழ்க்கையில் வலிகளை அனுபவித்த எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங், நமக்கு விட்டுச் சென்ற சொத்துதான் பண்பலை வானொலி என்றால் அது மிகையில்லை.

DSE Proceedings_பள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சிஏ பவுண்டேசன் ேதர்வுக்கான online வகுப்புகள் சார்ந்து இயக்குநர் செயல்முறை 10.06.2020




Go(Ms) No:287 date: 09.06.2020நியாய விலைக்கடைகளில் விலையில்லா முகக்கவசங்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியீடு தமிழக அரசு.

DSE Proceeding- பள்ளிக்கல்வி பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் , மாவட்ட கல்வி அலுவலர் நேர் முக உதவியாளர் தகுதி வாய்ந்ேதார் பட்டியல் தயார் செய்தல் சார்ந்து இயக்குனர் செயல்முறை 08.06.2020

தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்று ஆங்கிலத்தில் எழுத உச்சரிக்க அரசாணை வெளியீடு.

Go(Ms) No:288 கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள மாதம்தோறும் 2வது சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மூடப்படும்.. _தமிழக அரசு அறிவிப்பு