புதன், 17 ஜூன், 2020





☀பரமத்தி ஒன்றியச் செற்குழுக்கூட்ட முடிவுகள் நாள் :15.06.2020 -ன்படி மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழுகட்ட தொடர் நடவடிக்கைகளின் முதல் நடவடிக்கையாக இன்று 17.06.2020 பிற்பகல் 3.30  மணியளவில் பரமத்தி உதவி சார்நிலைக் கருவூல அலுவலர் அவர்களை  பரமத்தி சார்நிலைக் கருவூல அலுவலகத்தில் சந்திக்கப்பட்டது.

இச்சந்திப்பில் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் வீ.மாலதி,ஒன்றியப் பொருளாளர் கு.பத்மாவதி ,ஒன்றியச் செயலாளர் க.சேகர்,மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

பரமத்தி ஒன்றியத்தில் அரசாணை 37 ஐக் காரணம் காட்டி  ஊக்க ஊதிய உயர்வு முன்தணிக்கை செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்து ஊக்க ஊதியம் அரசாணை 42 - ன் படி அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஊக்க ஊதிய உயர்வு அரசு  விதிப்படி உரிய அரசாணையின் படி ஆவன செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

க.சேகர்.
ஒன்றியச் செயலாளர்.

ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத காலத்தை வரன்முறை படுத்துவது தொடர்பான அரசாணை.




ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத காலத்தை வரன்முறை படுத்துவது தொடர்பான அரசாணை.

இணையவழி கல்வி ஆபத்தானது - எதிர்க்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் கண்டனம்



*🌐ஜூன் 17, வரலாற்றில் இன்று:பிரபல தமிழ்ப் படைப்பாளியும் பத்திரிகையாளருமான மீ.ப.சோமசுந்தரம் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 17, வரலாற்றில் இன்று.
 

பிரபல தமிழ்ப் படைப்பாளியும் பத்திரிகையாளருமான மீ.ப.சோமசுந்தரம்  பிறந்த தினம் இன்று.



* திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சி புரத்தில் (1921) பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழில் வித்வான் பட்டம் பெற்றார். அகில இந்திய வானொலியில் 40 ஆண்டு காலம் பணியாற்றினார். தென் மாநிலங்களுக்கான தலைமை அமைப்பாளர், பண் ஆராய்ச்சி ஒருங்கிணைப் பாளராகப் பணியாற்றினார்.

* இளம் பருவத்திலேயே நல்ல எழுத்தாற்றல் பெற்றிருந்தார். ‘ஆனந்த விகடன்’ இதழில் இவரது சிறுகதைக்கு தங்கப் பதக்கம் கிடைத்த பிறகு, சிறந்த படைப்பாளியாகப் புகழ்பெற்றார். ‘கல்கி’ இதழின் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணி யாற்றினார். ‘நண்பன்’ என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தினார்.

* தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்தார். சர்வதேச இலக்கிய அமைப்புகளில் தமிழ் இலக்கியம் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றி, தமிழின் பெருமைகளைப் பரப்பினார். பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு, அந்த அனுபவங்களை பயணக் கட்டுரைகள், நூல்களாகப் படைத்தார்.

* சொல்வளம், சரளமான பேச்சுநடையால் சிறந்த சொற்பொழிவாளராகப் பிரபலமானார். சிறுகதை, நாவல், நாடகம், பயண இலக்கியம், கவிதை, இசை ஆய்வுக் கட்டுரை என இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தவர். தமிழ்க் கலைக் களஞ்சிய வெளியீட்டிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

* தத்துவச் சிந்தனை சார்ந்த மரபுக் கவிதைகள் படைப்பதில் வல்லவர். ராஜாஜி, டி.கே.சி. ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றார். இவர் புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். இவரது நாடகங்கள் டி.கே.எஸ். குழுவினரால் மேடையேற்றப்பட்டு பிரபலமடைந்தன.

* கல்லறை மோகினி’, ‘திருப்புகழ் சாமியார்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், ‘கடல் கண்ட கனவு’, ‘நந்தவனம்’ உள்ளிட்ட நாவல்கள், ‘இளவேனில்’ போன்ற கவிதைத் தொகுப்புகள், ‘ஐந்தருவி’, ‘பிள்ளையார் சாட்சி’ போன்ற கட்டுரைத் தொகுதிகள், ‘அக்கரை சீமையிலே’ என்ற பயண நூல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரவிசந்திரிகா’ நாவல், தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது.

* ஆன்மிகத்திலும் இளம் வயது முதலே நாட்டம் கொண்டிருந்தார். திருமூலரின் திருமந்திரம் உட்பட ஏராளமான சித்தர் பாடல்கள் இவருக்கு தலைகீழ் பாடம். சித்தர் பாடல்களில் ஆழ்ந்த அறிவும், ஞானமும் பெற்றவர்.

* அதில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ‘சித்தர் இலக்கியச் செம்மல்’ எனப் போற்றப்பட்டார். சிக்கனம்பாறை கண்ணப்ப சுவாமிகள் என்ற சித்தரிடம் ஆன்மிகப் பயிற்சிகளைக் கற்றவர். தொடர்ந்து அவற்றைப் பயிற்சி செய்து வந்தார். இசையிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

* சாகித்ய அகாடமி விருதை 1962-ல் பெற்றார். எம்ஏஎம் அறக்கட்டளை பரிசு, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பரிசு, தமிழக அரசு விருது உட்பட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். பல்கலை வித்தகர், இசைப் பேரறிஞர் உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றார். பண் ஆராய்ச்சி மையத்தின் கவுரவ இயக்குநராகவும் செயல்பட்டார்.

* இறுதிக் காலத்திலும்கூட தமிழ் இலக்கியத்தில் பண் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார். ‘தமிழ் மட்டுமே என்னை என்றும் பிரியாத நிரந்தரத் துணை’ என்று கூறுவார். இறுதி வரை தமிழுக்கும், தமிழின் வளர்ச்சிக்கும் மகத்தான பங்களிப்புகளை வழங்கிவந்த மீ.ப.சோமசுந்தரம் 78ஆவது வயதில் (1999) காலமானார்.

*🌐ஜூன் 17, வரலாற்றில் இன்று:மும்தாஜ் மஹால் நினைவு தினம் இன்று.*

ஜூன் 17, வரலாற்றில் இன்று.

மும்தாஜ் மஹால் நினைவு தினம் இன்று.

மும்தாஜ் மஹால்
(செப்டம்பர் 1, 1593 – சூன் 17, 1631)
தாஜ்மகாலை உருவாக்கிய முகலாயப் பேரரசு மன்னனான ஷாஜகானின் மனைவி ஆவார்.

இவரது இயற்பெயர் அர்சுமந்த் பானு பேகம், 1593 இல் இந்தியாவில் ஆக்ராவில் பிறந்தவர்.

இவரது தந்தை பார்சி இனத்தவரான அப்துல் அசன் அசாஃப் கான் ஜகாங்கீர் மன்னரின் மனைவியான நூர் ஜகானின் சகோதரர் ஆவார்.

மும்தாஜ் தனது 19வது வயதில் 1612, மே 10இல் குர்ராம் என்ற இளவரசனைத் திருமணம் செய்தார். குர்ராம் பின்னர் முகாலாயப் பேரரசின் மன்னனாகி ஷாஜகான் என்ற பெயரைப் பெற்றார்.

மும்தாஜ் ஷாஜகானின் மூன்றாவது மனைவியானாலும் அவருக்கு மிகவும் விருப்பமுடைய மனைவியாயிருந்தார்.

இவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பர்ஹான்பூரில் தனது 14ஆவது மகப்பேறின் போது காலமானார்.

 இவரது நினைவாக ஷாஜகானால் கட்டப்பட்ட தாஜ்மகால் நினைவு மண்டபத்தில் மும்தாஜின் உடல் இறுதியாக அடக்கம் செய்யப்பட்டது.

அவர்களின் 19 வருட மண வாழ்க்கையில் பதினான்கு குழந்தைகள் பெற்றார்கள் ..அதில் எட்டு ஆண் மற்றும் ஆறு பெண் குழந்தைகள்.

*🌐ஜூன் 17, வரலாற்றில் இன்று:உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் இன்று.*

ஜூன் 17, வரலாற்றில் இன்று.

உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் இன்று.
(World Day to Combat Desertification and Draught)

மனிதனாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும் பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதன்மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க முடியும். இதனை உணர்ந்த ஐ.நா. சபை 1994ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.

அனைத்துவகை பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் சார்ந்து சென்னை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாள்: 16.6.2020


*🌐ஜூன் 17, வரலாற்றில் இன்று: 'போராடி இறப்பது அடங்கிக்கிடப்பதை விட மேல்'' என்று ஆங்கிலேயரை எதிர்த்து உயிர் விட்ட ஜான்சி ராணி லட்சுமி பாய் நினைவு தினம் இன்று..*

ஜூன் 17, வரலாற்றில் இன்று.

''போராடி இறப்பது அடங்கிக்கிடப்பதை விட மேல்'' என்று ஆங்கிலேயரை எதிர்த்து உயிர் விட்ட ஜான்சி ராணி லட்சுமி பாய் நினைவு தினம் இன்று..

 பித்தூர் மாவட்ட பெஷ்வாவிடம் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார் இவரின் தந்தை. அங்கே சுட்டிப்பெண்ணாக அவரை ஈர்க்கவே இவரை தன் சொந்த மகள் போல பெஷ்வா வளர்த்தார்.

 மணிகர்ணிகா என்று இளம் வயதில் அழைக்கப்பட்ட அவர் ஜான்சியின் அரசர் கங்காதர் ராவுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார்.

 பிறந்த ஆண் குழந்தை நான்கே மாதங்களில் இறந்து போனது. அதற்கு பின் வாரிசு இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக உறவுக்கார பையனை தத்தெடுத்து தாமோதர் ராவ் என்று பட்டம் சூட்டினார்கள்.

டல்ஹவுசி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆகியிருந்தார். ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியா முழுக்க பரப்ப வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த அவர். ஏற்கனவே கப்பம் கட்டிக்கொண்டும், அடிபணிந்தும் கொண்டிருந்த அரசுகளை கைப்பற்ற கிளம்பினார். வாரிசுகளை தத்தெடுக்க கூடாது ; அப்படியே எடுத்தாலும் அதற்கு ஆங்கிலேய ஆட்சி அனுமதி தரவேண்டும். அப்படி தரப்படவில்லை என்றால் அந்த அரசு ஆங்கிலேயர் வசம் போய்விடும் என்பது அவரின் புதுக்கொள்கையாக இருந்தது. இதை அவகாசியிலிக் கொள்கை என்று அழைத்தார் அவர்.

சத்தாரா, செய்ப்பூர், சம்பல்பூர் , நாக்பூர் என்று அரசுகளை அள்ளிப்போட்டுக் கொண்டார் டல்ஹவுசி. ஜான்சியும் மன்னரைஇழந்து ஜான்சி ராணி வசம் வந்திருந்தது. அதே காரணத்தை சொல்லி வாரிசை ஏற்காமல் அரியணையை விட்டு நீக்கி அறுபாதாயிரம் ஓய்வுத்தொகை என்றும் அறிவித்தார்கள்.

 அமைதியாக அப்பொழுது இருந்தாலும் காத்திருந்தார் லட்சுமி பாய்
எண்பத்தி ஏழு காலத்துக்குள் பசி என்றால் என்னவென்றே அறியாத இந்தியாவின் பல பகுதிகளில் பெரிதாக பன்னிரெண்டு பஞ்சங்கள் ஏற்பட்டு இருந்தன . முக்கியமான காரணம் இந்தியாவின் விவசாயம் மற்றும் கைவினைத்தொழில்களை ஆங்கிலேய அரசு ஒட்டுமொத்தமாக காலி செய்து இருந்தது . நிலவரியை ஏகத்துக்கும் ஏற்றியது . ஜமின்தார்களிடம் சிக்கிக்கொண்டு இருந்த மக்கள் இப்பொழுது லேவாதேவி காரர்களிடம் சிக்கி நிலங்களை இழந்தார்கள் .

 அரசர்களின் இடங்கள் பறிக்கப்பட்ட பொழுது அங்கே வேலை செய்தவர்கள் நடுத்தெருவில் நின்றார்கள். அரசின் சதி ஒழிப்பு முதலிய நடவடிக்கைகள் மற்றும் கிறிஸ்துவ மிஷினரிகளின் மத பிரச்சாரம் நாட்டில் அச்சத்தை உண்டு செய்தது.
சிப்பாய்களுக்கு சம்பளம் குறைவாக இருந்தது ; கடல் கடந்து போகவும் சொல்லி மதநம்பிக்கைக்கு எதிராக கட்டாயப் படுத்தினார்கள். பன்றி மற்றும் மாட்டு கொழுப்பால் ஆகியிருந்த கேட்ரிட்ஜை லோட் செய்ய மறுத்து மீரத்தில் புரட்சி வெடித்தது. மத்திய மற்றும் வட இந்தியாவில் புரட்சி பரவியது
ஜான்சியில் இருந்த ஆங்கிலேயே அதிகாரி எர்கினிடம் தன்னுடைய பாதுகாப்புக்கு படைகள் உருவாக்கிக்கொள்ள ஜான்சி ராணி அனுமதி கேட்டார். கிடைத்தது. ஒரு விழா நடத்தி ஆங்கிலேய அரசை பார்த்து பயப்பட வேண்டாம் என்று மறைமுகமாக மக்களுக்கு கோடிட்டு காட்டினார்.
ஆங்கிலேய படைகள் மற்ற இடங்களில் புரட்சியை அடக்கிவிட்டு ஜான்சி நோக்கி வருவதற்குள் ஜான்சியில் ஆயுதங்கள் பெருக்கப்பட்டு கோட்டை ராணியின் வசம் வந்திருந்தது. ஹூக் ரோஸ் சரணடைய சொல்லி கேட்ட பொழுது ,"போராடி வென்றால் வெற்றி இல்லையேல் மோட்சம் !" என்று கம்பீரமாக விடை அனுப்பினார் ஜான்சி ராணி.
கோட்டையை சுற்றி போர் நடந்து சுவர் தகர்க்கப்பட்டு ஆங்கிலேய அரசு உள்ளே நுழைந்தது. பெண்கள்,குழந்தைகள் என்று பலரும் ஆயுதம் ஏந்தி போர் புரிந்தார்கள். பெண்கள் ஆயுதங்களை தீட்டுவதும்,குதிரைகளை இயக்குவதும் ஆச்சரியம் தருகிறது என்று பதிவு செய்கிறார்கள் ஆங்கிலேயர்கள். சுவரேறி தன் வளர்ப்பு மகனோடு தப்பினார் ஜான்சி ராணி
குவாலியரை தாந்தியா தோப் உதவியோடு கைப்பற்றினார் லட்சுமி பாய். ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த மகாராஜா சிந்தியா இவரை எதிர்த்த பொழுது சிந்தியாவின் படைகள் அவரை கைவிட்டு இவரோடு இணைந்து வீர முழக்கம் கொட்டின. மீண்டும் ஆங்கிலேயருடன் போர் வந்தது. பிள்ளையை பின்பக்கம் குதிரையில் வைத்துக்கொண்டு போர் செய்தார் ஜான்சி ராணி. பின்புறம் இருந்து ஒருவன் தாக்கி அவரை கொன்றான். அவருடன் அவரின் அந்தரங்க காவலாளியாக இருந்த முஸ்லீம் பெண்ணும் இறந்து போனாள்
இன்னமும் ஜான்சி ராணியைப்பற்றிய வீரக்கதைகள்,நாட்டுப்பாடல்கள் அப்பகுதிகளில் பாடப்பட்டும் சொல்லப்பட்டும் வருகின்றன. அவற்றையெல்லாம் தொகுத்து மகாஸ்வேதா தேவி ஒரு நூலாக்கினார்.

12 மறுத்ேதேர்வு மாணவர்களிடம் இருந்து விருப்பக்கடிதம் பெறுதல் சார்ந்து தேர்வுகள் துறை இயக்குநர் செயல்முறை நாள்: 16.6.2020

10 ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் ஒப்படைத்தல் சார்ந்து ேதர்வுகள் துறை இயக்குநர் செயல்முைறை நாள்: 16.6.2020