சனி, 4 ஜூலை, 2020

*🌐ஜூலை 4, வரலாற்றில் இன்று:சர்வேயர் மற்றும் புவியியல் வல்லுநர் சர்.ஜார்ஜ் எவரெஸ்ட் பிறந்த தினம் இன்று!*

ஜூலை 4, வரலாற்றில் இன்று.

சர்வேயர் மற்றும் புவியியல் வல்லுநர் சர்.ஜார்ஜ் எவரெஸ்ட் பிறந்த தினம் இன்று!

ஒரு நான்கு அடி நிலம் அளப்பதற்கே எவ்வளவு அக்கப்போர்களை பார்க்கிறோம் நாம்.

 இந்திய துணைக்கண்டத்தை சர்வே செய்வது எப்படிப்பட்ட பணியாக இருந்திருக்கும்?
ரென்னேல் எனும் அதிகாரி துல்லியமில்லாத ஒரு வரைபடத்தை உருவாக்கி தந்திருந்தார்; அதை வைத்தே பலகாலம் நகர்த்தினார்கள் ஆங்கிலேயர்கள். ஒழுங்காக நிலஅளவை செய்ய வேண்டும் என்று மைசூர் போருக்கு பின்னர் உணர்ந்தார்கள் அவர்கள். லாம்ப்டன் எனும் ஆங்கிலேய அதிகாரி சென்னை பரங்கிமலையில் அந்த நில அளவையியல் பணியை தொடங்கினார். அவரின் வாழ்க்கையே சுவாரசியமானது. ஆனால், நாம் பேசப்போவது அவருக்கு உதவ நியமிக்கப்பட்ட எவரெஸ்ட் பற்றி. லாம்ப்டன் பரங்கிமலையில் தொடங்கி விந்திய மலை வரை அளந்து முடித்திருந்தார்.

இங்கிலாந்தில் இருந்து லாம்ப்டனுக்கு உதவ வந்த எவரெஸ்ட் அவருக்கு பிறகு இந்தியாவை அளக்கும் பணியை தொடர நினைத்தால் நிலைமை படுமோசம். அந்த அளக்கும் கருவியான தியோடலைட் சேதமாகி இருந்தது. ஸ்க்ரூ கழன்று, இரும்பு சங்கிலி தேய்ந்து போய் பல் இளித்தது. இங்கிலாந்து வரைக்கும் போய் கருவியை மீண்டும் கொண்டுவந்தார் இவர். கூடவே கருவி பழுதுபட்டால் சரி செய்ய ஒரு ஆளையும் கூட்டிக்கொண்டு வந்தார்.

டைபாய்டு காய்ச்சல், மலேரியா என்று உடம்பை புரட்டிப்போட்டன வியாதிகள். மனம் தளராமல் இயங்கினார் எவரெஸ்ட். “இந்த தேசத்தை அளந்துவிட வேண்டும் என்கிற கனவு மட்டுமில்லை என்றால் இங்கே ஒரு கணம் கூட இருக்க மாட்டேன்!” என்று படுக்கையில் இருந்தபடியே முனகினார் அவர். இந்தியாவில் மக்கள் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தார்கள். தியோடலைட் கருவிக்கு பொட்டு வைத்து டீ சாப்பிடப்போன நேரத்தில் கடவுளாக்கி இருந்தார்கள். கொள்ளைக்காரர்கள் புதையல் தேட உதவும் என்று நம்பி கருவியைக் கொண்டு போய் பார்த்துவிட்டு கடுப்பாகி அலுவலர்களின் கை கால்களை உடைத்துப்போட்டார்கள். ஜலீம் சிங் எனும் நிலச்சுவான்தார் பெண்கள் வீட்டுக்குள் குளிப்பதை பார்க்க இந்தக்கருவி உதவும் என்று நம்பி வாங்கிப்போய் பார்த்து அலுத்துப்போனான். உருவங்கள் தலைகீழாக தெரிந்ததில் இதில் மாய மந்திர சக்திகள் இருப்பதாக வேறு கிளப்பிவிட்டார்கள்.

இத்தனை இடர்பாடுகளுக்கு நடுவே எல்லையில்லாத ஆர்வம் செலுத்த அவர் இயங்கினார். குமரியில் துவங்கி முசூரி வரை அளவையை வெற்றிகரமாக நடத்தினார் அவர். கச்சிதமான வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு தவறு இருந்தாலும் திருப்பி வேலையை செய்ய வைத்தார். சிரோஞ் எனும் ஊரில் இருந்து அளக்கப்பட்ட அளவும், டெஹ்ராடூனில் அளந்த அளவும் ஒரு மீட்டர் அளவுக்கு மாறுபட்டது. மீண்டும் அளந்தார் இவர்; இரண்டு பகுதிகளுக்கும் அதிக தூரமில்லை நானூறு மைல்கள் தான். மொத்தமாக இந்தியாவில் இருந்த காலத்தில் இரண்டரை லட்சம் சதுர மைல்களை அளந்து சாதித்திருந்தார் எவரெஸ்ட்
தென் ஆப்பிரிக்காவில் படுத்துக்கொண்டு உடல் நலமின்மையால் அவதிப்பட்ட பொழுது அவர் எழுதியிருக்கும்குறிப்பு என்ன தெரியுமா?
“லாம்ப்டன் 18º 3′ 15, 24º 7′ 11, 20º 30’48′
என்று அளந்திருக்கும் வளைவில் இரண்டு பகுதிகளுக்கு இடையே தவறாக உள்ளது. மீண்டும் சோதித்து சரி செய்ய வேண்டும் !” அவருக்கு அடுத்து வந்த ஆண்ட்ரூ வாக் இவரின் எதிர்ப்பையும் மீறி உலகின் உயரமான சிகரத்துக்கு எவரெஸ்ட் என்று பெயர் வைத்தார். அதை எவரெஸ்ட் பார்த்ததே இல்லை. தான் அளந்து கண்டறிந்த பல்வேறு நிலப்பகுதிகளுக்கு அப்பகுதி மக்களின் மொழியிலேயே பெயர் வைக்கிற பண்பு அவரிடம் இருந்தது.

*🌐ஜூலை 4, வரலாற்றில் இன்று:இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவரான பிங்கலி வெங்கைய்யா (ஆகஸ்டு 2, 1876 - சூலை 4, 1963) நினைவு தினம் இன்று.*

ஜூலை 4, வரலாற்றில் இன்று.

 இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவரான பிங்கலி வெங்கைய்யா (ஆகஸ்டு 2, 1876 - சூலை 4, 1963) நினைவு தினம் இன்று.

வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசிலிபட்டி என்னும் ஒர் ஊரில் பிறந்தார். மசிலிபட்டியில் தனது மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கேம்பிரிட்ஜ் (சீனியர் கேம்பிரிட்ஜ்) பட்டத்தை முடிக்க கொழும்பிற்குச் சென்றார்.

பின் இந்தியா திரும்பியதுடன், அவர் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தார். அதன்பின், லாகூரில் உள்ள ஆங்கிலேய-வேத உயர்நிலைப் பள்ளியில் உருது மற்றும் ஜப்பானியம் படிக்கச் சேர்ந்தார்.

நிலவியலில் பட்டம் பெற்று, ஆந்திரப் பிரதேசத்தில் வைரச் சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் 'வைரம் வெங்கய்யா' என்று அழைக்கப்பட்டார்.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போரில் இவர் இந்திய-பிரித்தானிய படையில் சேர்ந்து பணியாற்றினார். அப்பொழுது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

காக்கி நாடாவில் இந்திய தேசிய காங்கிரசின் சந்திப்பின்பொழுது, தனிபட்ட ஓர் கொடியை உருவாக்க அறிவுறுத்தினார் மகாத்மா காந்தி வெங்கைய்யாவை கொடியின் அடவை உருவாக்க வேண்டினார். விஜயவாடாவின் தேசிய மாநாட்டின்போது தேசியக் கொடியை அறிமுகப் படுத்தினார்.

முதலில் கொடியின் நடுவில் ஓர் ராட்டை இருந்தது, பின் அவ்விடத்தில் அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. இந்திய தேசியக்கொடியை பருத்தி துணியில் மட்டுமே கையால் தைக்கவேண்டும் என்று அப்போது பரிந்துரைக்கப்பட்டது. வேறு துணிகளை உபயோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

*🌐ஜூலை 4, வரலாற்றில் இன்று:சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று(1902).*

ஜூலை 4,  வரலாற்றில் இன்று.

சுவாமி விவேகானந்தர்  நினைவு தினம் இன்று(1902).


19ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர். இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடைய செய்வதாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் பல்வேறு சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

1893ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற
உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள் உலகப் புகழ் பெற்றவையாகும். இவர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரே! ஆசிரியர்களின் வேதனைக்குரல் கேட்கலையா?! உந்தன் மனம் இரங்கலையா?! ஊக்க ஊதிய உரிமையை மறுப்பதும், பெற்றுவரும் ஊதியத்தை குறைப்பதும் பெரும் அநீதி இல்லையா?!

பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரே!

ஆசிரியர்களின் வேதனைக்குரல் கேட்கலையா?!
உந்தன் மனம் இரங்கலையா?!

ஊக்க ஊதிய உரிமையை மறுப்பதும்,
பெற்றுவரும்  ஊதியத்தை குறைப்பதும் பெரும் அநீதி இல்லையா?!

சொந்த(சுய) கெளரவத்திற்கும்,
சொந்த நலனுக்கும்,
பழிவாங்கலுக்கும், தான்பிடித்த முயலுக்கு  மூன்று கால்கள்
என்று சாதிப்பதற்கும்
கல்வித்துறை விதிகளை  சாகடிக்கலாமா?!
ஊக்க ஊதிய விதிகளை காற்றினில்
பறக்க விடலாமா?!
நடைமுறை மரபுகளை புறந்தள்ளலாமா!?

வெள்ளி, 3 ஜூலை, 2020

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவுப்பொருட்களை பள்ளித் தலைமையாசிரியர் /தலைமையாசிரியைகளின் மேற்பார்வையில் வழங்குமாறு தமிழக அரசு உத்தரவு!

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவுப்பொருட்களை பள்ளித் தலைமையாசிரியர் /தலைமையாசிரியைகளின்  மேற்பார்வையில்  வழங்குமாறு  தமிழக அரசு உத்தரவு!


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி ஒன்றிய அமைப்பின் சார்பில் பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் மூன்று அம்சக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்திடும் வகையில் இன்று (03.07.2020-வெள்ளி) முற்பகல் 11.45 மணியளவில் வேலூரில் (கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்மன்ற அலுவலகம்) செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, பரமத்தி ஒன்றியத்தலைவர் நா.ரங்கசாமி, ஒன்றியச்செயலாளர் க.சேகர், ஒன்றியம் பொருளாளர் கு.பத்மாவதி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மா.மலர்விழி உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மாநிலச்செயலாளர் திரு. முருகசெல்வராசன் செய்தியாளர்களை சந்தித்தார். ஊடகத்துறையினருக்கு பேட்டி அளித்தார். அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம் ஆகியவற்றின் சார்பில் செய்தியாளர்கள் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர். மெ.சங்கர், மாவட்டச்செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  பரமத்தி ஒன்றிய அமைப்பின் சார்பில் பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் மூன்று அம்சக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்திடும் வகையில்
 இன்று (03.07.2020-வெள்ளி)
முற்பகல் 11.45 மணியளவில் வேலூரில்
(கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்மன்ற  அலுவலகம்) செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர்,
மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, பரமத்தி ஒன்றியத்தலைவர் நா.ரங்கசாமி, ஒன்றியச்செயலாளர் க.சேகர்,
ஒன்றியம் பொருளாளர் கு.பத்மாவதி,
ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மா.மலர்விழி உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மாநிலச்செயலாளர் திரு. முருகசெல்வராசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஊடகத்துறையினருக்கு பேட்டி அளித்தார்.

அச்சு ஊடகம் மற்றும்
மின்னணு ஊடகம் ஆகியவற்றின் சார்பில் செய்தியாளர்கள்  இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

மெ.சங்கர்,
மாவட்டச்செயலாளர்.

பரமத்தி ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 07.07.2020 -ல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆர்பாட்டம்

முன்  ஊதிய உயர்வு  வேறு!
ஆசிரியர் பெருமக்களின்
உயர்கல்விக்கான ஊக்க ஊதியஉயர்வு வேறு!

இரண்டையும் ஒன்றாக்கி ஆசிரியர்களை வாட்டி வதைக்கும் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலருக்கு வன்மையான கண்டனம்!

தூய்மைப்பாரதம் !தூய்மைப்பள்ளி!என்பதெல்லாம் ஏட்டளவிலா?!
பேச்சளவிலா?! முழு சுகாதாரத் தமிழகத்தில்
12 தொடக்கப்பள்ளிகளின் சுகாதாரம் கணக்கில்லையா ?!

2019-2020 நிதியாண்டும்,
கல்வியாண்டும்  கடந்து போனது தெரியலையா?!
கொரோனாவின் கோரத்தாண்டவக்காலத்தில் தொகுப்பூதியம் வழங்கத் தோணலையா?!
பசிப்பிணியின் தாக்கம் உரைக்கலையா?!

வியாழன், 2 ஜூலை, 2020

*Inspire Awards 2020 - மாணவர்களுக்கு அழைப்பு ! (www.inspireawards-dst.gov.in )* *மத்திய அரசின், நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருது பெற விண்ணப்பிக்குமாறு, பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.*

Inspire Awards 2020 - மாணவர்களுக்கு அழைப்பு ! (www.inspireawards-dst.gov.in )
மத்திய அரசின், நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருது பெற விண்ணப்பிக்குமாறு, பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில், நவீன கண்டுபிடிப்புக்கான விருதுகள் வழங்கப்படும். இதற்கு, பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும்.இந்த ஆண்டு, கொரோனா பிரச்னை உள்ளதால், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனவே, நேரடியாக அறிவியல் கண்காட்சி நடத்தமுடியாத நிலை உள்ளது.இந்நிலையில், அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருதுக்கு,மாணவர்களின் எண்ணங்களை, 'ஆன்லைனில்' பெற்று விருது வழங்க, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இந்த போட்டியில் பங்கேற்கலாம். புதிய கண்டுபிடிப்புகள் குறித்த, தங்கள் எண்ணங்களை, www.inspireawards-dst.gov.in என்ற, இணையதளத்தில், செப்., 30க்குள் பதிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உட்பட, 22 மொழிகளில், ஏதாவது ஒன்றில், கண்டுபிடிப்பு குறித்த கட்டுரையை அனுப்பலாம். ஒரு லட்சம் சிறந்த கண்டுபிடிப்பு கட்டுரைகளுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில், நவீன கண்டுபிடிப்புக்கான விருதுகள் வழங்கப்படும். இதற்கு, பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும்.இந்த ஆண்டு, கொரோனா பிரச்னை உள்ளதால், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனவே, நேரடியாக அறிவியல் கண்காட்சி நடத்தமுடியாத நிலை உள்ளது.இந்நிலையில், அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருதுக்கு,மாணவர்களின் எண்ணங்களை, 'ஆன்லைனில்' பெற்று விருது வழங்க, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இந்த போட்டியில் பங்கேற்கலாம். புதிய கண்டுபிடிப்புகள் குறித்த, தங்கள் எண்ணங்களை, www.inspireawards-dst.gov.in என்ற, இணையதளத்தில், செப்., 30க்குள் பதிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உட்பட, 22 மொழிகளில், ஏதாவது ஒன்றில், கண்டுபிடிப்பு குறித்த கட்டுரையை அனுப்பலாம். ஒரு லட்சம் சிறந்த கண்டுபிடிப்பு கட்டுரைகளுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

IFHRMS மூலம் ஜூலை மாத ஊதியப் பட்டியல் - கருவூலகங்களில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு 👆👆👆

IFHRMS மூலம் ஜூலை மாத ஊதியப் பட்டியல் - கருவூலகங்களில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை: ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலக் கல்வி அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ நேற்று பேசினார்.