வியாழன், 9 ஜூலை, 2020

*📘EMIS Online TC - Identification Mark List Details ( Tamil & English ) NEW, ONLINE TC Entries.*

*📘EMIS Online TC - Identification Mark List Details ( Tamil & English ) NEW, ONLINE TC Entries.*


*EMIS Online TC - Identification Mark List :*


*( உங்கள் தேவைக்கேற்ப EDIT செய்து பயன்படுத்திக் கொள்ளவும் )*

*1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம் A mole on the left palm*

*2.நெற்றியில் ஒரு மச்சம் A mole on the forehead*

*3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம் A mole on the index finger*

*4.இடது முட்டியில் ஒரு தழும்பு A scar on the left knee*

*5.வலது கணுக்காலில் ஒரு வடு A scar in the right ankle*

*6.வலது முழங்கையில் ஒரு வடு A scar in the right elbow*

*7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம் A mole on the left thumb*

*8.வலது தொடையில் ஒரு தழும்பு A scar on the right thigh*

*9.வலது கன்னத்தில் ஒரு மச்சம் A mole On the right cheek*

*10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம் A mole on the left shoulder*

*11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு A scar on the right eyebrow*

*12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் A mole on the back of the right ear*

*குறிப்பு : உங்கள் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்*

*🌐ஜூலை 9, வரலாற்றில் இன்று:இந்திய வன உயிரிகள் வாரியம் பரிந்துரையின் பேரில், 'டைகர் பாந்தெரா டைகிரிஸ்" என்ற அறிவியல் பெயர் கொண்ட வங்காள புலி தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் இன்று(1969).*

ஜூலை 9, வரலாற்றில் இன்று.

இந்திய வன உயிரிகள் வாரியம் பரிந்துரையின் பேரில், 'டைகர் பாந்தெரா டைகிரிஸ்" என்ற அறிவியல் பெயர் கொண்ட வங்காள புலி தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் இன்று(1969).

*🌐ஜூலை 9,* *வரலாற்றில் இன்று:முதன் முதலாக வர்த்தக ரீதியிலான இயற்கை எரிவாயு 1815ஆம்* *ஆண்டு,அமெரிக்காவின் மேற்கு வெர்ஜ்ஜினியாவின் சார்லஸ்டன் எனும் இடத்தில் கண்டறியப்பட்ட தினம் இன்று.*

ஜூலை 9, வரலாற்றில் இன்று.

முதன் முதலாக வர்த்தக ரீதியிலான இயற்கை எரிவாயு 1815ஆம்
 ஆண்டு, அமெரிக்காவின் மேற்கு வெர்ஜ்ஜினியாவின் சார்லஸ்டன் எனும் இடத்தில் கண்டறியப்பட்ட தினம் இன்று.

 உப்புநீர்க் கிணறுக்காக துளையிட்டபோது  எதிர்பாராத விதமாக  தீப்பிடித்தது. அதன் காரணத்தை ஆராய்ந்த போது, இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டது. இது, தொழிற்புரட்சியின் போது உருவான தொழிற்சாலைகளுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை நிவர்த்தி செய்தது.

*🌐ஜூலை 9,* *வரலாற்றில் இன்று:பெரியார்-மணியம்மை திருமணம் நடந்த தினம் இன்று.*

ஜூலை 9, வரலாற்றில் இன்று.

பெரியார்-மணியம்மை திருமணம் நடந்த தினம் இன்று.

ஈ.வெ.ராமசாமி மணியம்மையை மணம் முடிப்பதில் அப்போதைய திராவிடர் கழக இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. திருமண ஏற்பாட்டை கைவிடக்கோரும் தீர்மானம் திராவிடர் கழக நிர்வாகிகளால் 1949 ஜூலை 10-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1949 ஜூலை 9ஆம் தேதியே ஈ.வெ.ராமசாமி – மணியம்மை திருமணம் சென்னையில் ஈ.வெ.ரா-வின் நண்பர் நாயகம் வீட்டில் பதிவாளர் வரவழைக்கப்பட்டு, ரகசியமாக நடந்தேறிவிட்டது.

இந்த செய்தி, திருச்சியில் திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக்குழுவில் தீர்மானம் நிறைவேறியபின் தந்தி மூலம் வந்து சேர்ந்தது. அதிர்ச்சியும் ஆயாசமும் அடைந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு அண்ணா ஆறுதல் கூறி, இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம் என ஊக்குவித்தார். ஈ.வெ.ரா-வின் முடிவை ஏற்காதவர்கள் எத்தனை பேர் என்று கண்டறியும் முயற்சியை மேற்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

தலைவர்(ஈ.வெ.ரா) தமது முடிவை மாற்றிக் கொள்ளாதவரை திராவிடர் கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்பது என்று முன்னரே தீர்மானிக்கப் பட்டிருந்ததால் கட்சிப்பணிகள் யாவும் நின்றுபோய் கட்சியே ஸ்தம்பித்து விட்டது.

ஈ.வெ.ரா இதனால் சினமடைந்து தமது விடுதலை நாளிதழில் அனுதினமும் அண்ணாவையும், அவரை ஆதரிப்பவர்களையும் பலவாறு தூற்றத் தொடங்கினார். அவர்கள் மீது பலவாறான பழிகளை சுமத்தவும் தொடங்கினார்.

1949 ஜூலை 13-ஆம் தேதி விடுதலை நாளிதழில் ஈ.வெ.ராமசாமி எனக் கையொப்பமிட்டு திருமண எண்ணத் தோற்றத்துக்குக் காரணமும் அவசர முடிவும் என்ற தலைப்பில் திடுக்கிட வைக்கும் அறிக்கையொன்று வெளியாகியது. அதில், தம்மைக் கொல்வதற்கு யாரோ சதி செய்து வருவதாக ஈ.வெ.ரா குறிப்பிட்டிருந்தார். சதி செய்யும் நபர் அண்ணா தான் என்று படிப்பவர்கள் யூகித்துக் கொள்ள இயல்வதுபோல மறைமுகமான அடையாளங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அதேபோல் சம்பத்தை குறித்தும் அவர் கொலை செய்ய முயற்சி செய்பவர்களுக்கு துணையாக இருக்கிறார் என்பது போலத் தகவல்கள் காணப்பட்டன.

தம்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை நீக்கிக் கொள்வதற்காக ஈ.வெ.ரா மீது அவதூறு வழக்குத் தொடுத்தார் அண்ணா. அவருக்காக வழக்கறிஞர் ஜகநாதனும் ஈ.வெ.ரா சார்பில் வழக்கறிஞர் கைலாசமும் நீதிமன்றத்தில் வழக்காடினார்கள். நீதிமன்றத்துக்கு ஈ.வெ.ரா., அண்ணா இருவரும் வந்திருந்தனர்.

ஈ.வெ.ரா-வின் வழக்கறிஞர் எடுத்த எடுப்பிலேயே தமது கட்சிக்காரர் அண்ணாவை மனதில் கொண்டு அந்தக் கட்டுரையை எழுதவில்லை எனக் கூறினார். எனவே அண்ணா வழக்கைத் தொடர விரும்பவில்லை. அவரது வழக்கறிஞரிடம் நீதிபதி உங்கள் கட்சிக்காரர் என்ன கருதுகிறார் என்று கேட்டார். அண்ணாவிடம் கலந்து பேசிய வழக்கறிஞர ஜகநாதன், கட்டுரையில் குறிப்பிட்டது எனது கட்சிக்காரரைப் பற்றி அல்ல என்று பிரதிவாதி வாக்குமூலம் அளிக்கும் பட்சத்தில் வழக்கைத் தொடர விருப்பமில்லை எனக் கூறினார். அதன் பயனாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஈ.வெ.ரா – மணியம்மை ஆகிய இருவர் மீதுமே சம்பத் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். வயதை உத்தேதித்து, ஈ.வெ.ரா-வுக்கு நீதிமன்றத்துக்கு வராமல் இருக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மணியம்மை வந்தாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது ஈ.வெ.ரா – மணியம்மை, இருவருமே வருத்தம் தெரிவித்தனர். எனவே அந்த வழக்கு சம்பத் ஒப்புதலுடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

பிற்காலத்தில் ஈ.வெ.ராவின் பழிச்சொற்களை மறுப்பதற்காகவே “மாலைமணி” என்ற பத்திரிக்கை அண்ணாவால் தொடங்கப்பட்டது  வரலாறு.

மலர்மன்னன் எழுதிய  “தி.மு.க உருவானது ஏன்?” என்ற புத்தகத்திலிருந்து.

*🌐ஜூலை 9,* *வரலாற்றில் இன்று:நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும்,* *சென்னை மாகாணத்தின் இரண்டாவது* *முதலமைச்சருமான, "பனகல் அரசர்" பனங்கன்டி ராமராய நிங்கார் பிறந்த தினம் இன்று(1866).*

ஜூலை 9, வரலாற்றில் இன்று.

நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது
முதலமைச்சருமான, "பனகல் அரசர்" பனங்கன்டி ராமராய நிங்கார் பிறந்த தினம் இன்று(1866).

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிராமண ஆதிக்கம் உச்சத்தில் இருந்த சமயத்தில் இந்தியா முழுக்க  கல்லூரிகளிலும் பள்ளிகளிலும்    சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டமிருந்தது.

1921ல் நீதி கட்சியின் முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் சென்னை பல்கலைகழகத்தில் மசோதா கொண்டு வந்து இந்த சட்டத்தை நீக்கினார்.

கோயில் சொத்துக்களை ஒரு சிலரே அனுபவித்து வருவதைத் தடுக்கும் வகையில்,
கோயில் என்பது அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானது என்று, கோயில்களுக்கென தனி துறையை, பல தரப்பினரின் எதிர்ப்புகளை சமாளித்து உருவாக்கினார். அதுதான் "இந்து அறநிலையத்துறை"

மருத்துவப் படிப்பு படிக்க வேண்டுமானால் சமஸ்கிருதம் கட்டாயமாக கற்றிருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. அந்த  நிலையில்தான், "மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை" என உத்தரவிட்டு, அனைத்து சமூகத்தவரும் டாக்டராகும் வாய்ப்பை உருவாக்கி வைத்தார்.

கிராமப்புறம் உள்பட பல இடங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை கிடைக்க வழிவகை செய்தார்.

தொழில்துறையை ஊக்குவிக்கவும் சட்டத்தைக் கொண்டுவந்ததுடன், வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.

இவரது நினைவாக சென்னை தி.நகரின் மையப்பகுதியில் உள்ள பூங்கா "பனகல் பூங்கா" என்றும், சைதாப்பேட்டை
யிலுள்ள மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம் "பனகல் மாளிகை" என்றும் அழைக்கப்படுகின்றன.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை தனக்குக் கிடைத்த குறைந்த அதிகாரம் கொண்ட ஆட்சியின் மூலம் நிறைவேற்றிக் காட்டியவரை தமிழர்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

*📘தொடக்கக் கல்வி-சிறப்புத் தணிக்கை-திருச்சி மண்டல துறைத் தணிக்கையாளரால் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.தணிக்கைத்தடைகளை நிவர்த்தி செய்யக் கோரி மேல்முறையீடு விண்ணப்பம் அளித்தது சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*


*📘தொடக்கக் கல்வி-சிறப்புத் தணிக்கை-திருச்சி மண்டல துறைத் தணிக்கையாளரால் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.தணிக்கைத்தடைகளை நிவர்த்தி செய்யக் கோரி மேல்முறையீடு விண்ணப்பம் அளித்தது சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*

*✒பள்ளிக்கல்வி -மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம்-தேசிய வருவாய் வழி திறன் தேர்வு-2019-20 ஆகிய ஆண்டுகளில் உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவ-மாணவிகளின் வங்கிக்கணக்கு விபரங்களை அனுப்பி வைக்கக் கோருதல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்*

*✒பள்ளிக்கல்வி -மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம்-தேசிய வருவாய் வழி திறன் தேர்வு-2019-20 ஆகிய ஆண்டுகளில் உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவ-மாணவிகளின் வங்கிக்கணக்கு விபரங்களை அனுப்பி வைக்கக் கோருதல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்*

📱மருத்துவக் காப்பீட்டுத் திட்ட (NHIS)அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் அலைபேசி எண்கள்...

TPA Coordinator name CUG

1 Ariyalur Mr. S.Dhavabalan 7373703101
2 Chennai Mr. sangamanathan  7373703102
3 Coimbatore Mr. S.Thangarasu 7373703104
4 Cuddalore Mr. D. Arul Murugan 7373703105
5 Dharmapuri Mr. V.Mahendiran 7373703106
6 Dindigul Mr.S.Bharathiraja 7373703107
7 Erode Mr.M.Manikandan 7373703108
8 Kanchipuram Mr. E.Prabhu 7373703109
9 Kanyakumari Mr.M.Suresh Kumar 7373703110
10 Karur Mr.S. Felix Premelia 7373703112
11 Krishnagiri Mr.GVenkatesan 7373703113
12 Madurai Mr. B.Palani 7373703114
13 Nagapatinam Mr. P. Veeramani 7373703115
14 Namakkal Mr.R. Bakiaraj 7373703116
15 The Nilgiris Mr.C.Lokesh Kumar 7373703117
16 Perambalur Mr.P.Balu 7373703118
17 Pudukkotai Mr.G. Paramaleeshwaran 7373703119
18 Ramnathapuram Mr. N.Usman Ali 7373703123
19 Salem Mr.R.Jameer 7373703124
20 Sivagangai Mr.K. Balaji 7373703125
21 Thanjavur Mr.D. Gopinathan 7373703126
22 Theni Mr. A.Sarfraz 7373703127
23 Thiruvarur Mr. M.Vivekanandhan 7373703136
24 Tirunelveli Mr.M.Ramasamy 7373703132
25 Tiruppur Mr. K.Murugan 7373703133
26 Tiruvallur Mr.S.Sudharsan 7373703128
27 Tiruvanamalai Mr. A.K.Fayaz Ahmed 7373703135
28 Trichy Mr. M.Rajamanickam 7373703180
29 Tuticorin Mr. K.Ukkirapandi 7373703129
30 Vellore Mr. S.VinyagaMoorthy 7373703137
31 Villupuram Mr.D.Raju 7373703138
32 Virudhunagar Mr. J. Rabik Raja 7373703139

*📘சி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைப்பு;* *இந்துத்துவ சனாதன கோட்பாடு வன்முறை திணிப்பு.*

சி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைப்பு;
இந்துத்துவ சனாதன கோட்பாடு வன்முறை திணிப்பு.

_________

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வித் துறையும் முடங்கி உள்ளதால், நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது.

இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு குறைப்பதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்திருக்கிறது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் செய்தி வெளியிட்டார். மேலும் சி.பி.எஸ்.இ. இயக்குநரும் 2020-21 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டம் குறைப்புத் தொடர்பாக சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதாகக் கூறி உள்ளார்.

சி.பி.எஸ்.இ. 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (Political Science) பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி (Federalism), குடியுரிமை (Citizenship), தேசியம் (Nationalism), மற்றும் மதச் சார்பின்மை (Secularism) ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன.

மேலும், “உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும்? (Why do we need Local Governments?), இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி (Growth of Local Government in India)” ஆகிய அத்தியாயங்களையும் நீக்கி உள்ளது.

பாடத் திட்டம் குறைப்பு எனும் பெயரில் பா.ஜ.க. அரசு திட்டமிட்டு மேற்கண்ட பாடங்களை நீக்கி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

நாஜி பா.ஜ.க.வின்  சொந்த விருப்பங்களைத் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம் பெற்றிருக்கும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டை நீக்க வேண்டும் என்று நீண்டகாலமாகவே இந்துத்துவ சனாதன சக்திகள் கோரி வருகின்றன.

கடந்த 2014 இல் அதற்கான முயற்சிகளில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற சனாதன கூடாரம் முயற்சி செய்கிறது.

தற்போது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே கல்வி என்கின்ற சனாதன வன்முறையை செயல்படுத்த பா.ஜ.க. அரசு தீவிரமாக இருக்கிறது.

இந்நிலையில்தான் பாடத்திட்டத்தில்கூட ‘மதச் சார்பின்மை’ என்ற வார்த்தையே இடம் பெறக் கூடாது என்ற பாசிச சிந்தனை பா.ஜ.க. அரசுக்கு வந்திருக்கிறது. அனைத்து அதிகாரங்களையும் டெல்லியில் குவித்து வைத்துக் கொண்டு ‘ஒற்றையாட்சி’ எதேச்சதிகார ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வகையில் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது.

நஞ்சு கலக்கும் வகையில் கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம் போன்ற பாடங்களை நீக்கி இருக்கிறது.

இந்தியாவில் மக்களாட்சி அபாயகட்டத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் சான்றுகளாகும்.

பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு அதன் அடையாளங்களைத் திட்டமிட்டு அழித்தால் இந்தியா எனும் அமைப்பே கேள்விக்குறியாகிவிடும்.

கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்து, சி.பி.எஸ்.இ. பாடங்களைக் குறைக்க வேண்டுமேயொழிய, பா.ஜ.க. அரசு கல்வித் துறையில் இந்துத்துவ சனாதனக் கோட்பாடுகளைப் புகுத்தக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

-அஸ்வத் ஷரீஅத்தி
ஃபிரெட்டர்நிட்டி இயக்கம்
தமிழ்நாடு.

*✒+2 இறுதி நாள்(24.03.2020) தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27.07.2020 அன்று மறுதேர்வு - பள்ளிக் கல்வி அமைச்சர்*

*✒+2 இறுதி நாள்(24.03.2020) தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27.07.2020 அன்று மறுதேர்வு - பள்ளிக் கல்வி அமைச்சர்*