ஞாயிறு, 19 ஜூலை, 2020

*🌐ஜூலை 19, வரலாற்றில் இன்று:சி.டி. ஸ்கேன், இங்கிலாந்து இன்ஜினி யரான காட்ஃப்ரே ஹான்ஸ்ஃபீல்ட் மற்றும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் அலன் கார்மாக் ஆகிய இருவரின் கூட்டு முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று (1989).*

ஜூலை 19, வரலாற்றில் இன்று.

சி.டி. ஸ்கேன், இங்கிலாந்து இன்ஜினி யரான காட்ஃப்ரே ஹான்ஸ்ஃபீல்ட் மற்றும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் அலன் கார்மாக் ஆகிய இருவரின் கூட்டு முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று (1989).

 உடலுக்குள் இருக்கும் உறுப்புக்கள் என்ன நிலவரத்தில் இருக்கின்றன என்பதைப் படம் பிடித்துக் காட்டும் எக்ஸ்ரேவின் அடுத்த அவதாரம்தான் சி.டி. ஸ்கேன்(C T Scan).

 சாதாரண எக்ஸ்ரே ஓர் ஒற்றைப் பரிமாண பரிசோதனை முறை.இதில் கதிர்வீச்சின் அளவும் அதிகம் என்பதால் பரிசோதனை செய்துகொள்பவருக்கு ரிஸ்க்கும் அதிகம். இந்தப் பிரச்னையைக் கவனத்தில் கொண்டு, ஒருமுறை பரிசோதிக்கும்போதே இரண்டு பரிமாணத்தில் (2டி முறை) கண்டு பிடிக்கும் வகையில் சி.டி. ஸ்கேன் வடிவமைக்கப்பட்டது. . எக்ஸ்ரேவைவிட இன்னும் தெளிவாக, விரைவாக முடிவுகளைப் பெற முடியும் என்பதும் சி.டி. ஸ்கேனின் இன்னொரு சிறப்பு.

*🌐ஜூலை 19, வரலாற்றில் இன்று:சிப்பாய் புரட்சிக்கு வித்திட்ட மங்கள் பாண்டே பிறந்த தினம் இன்று.*

ஜூலை 19, வரலாற்றில் இன்று.

சிப்பாய் புரட்சிக்கு வித்திட்ட மங்கள் பாண்டே பிறந்த தினம் இன்று.

1827, ஜூலை 19 -இல் பூமிஹார் பிராமண வகுப்பில் உத்தரபிரதேசத்தில்,  பல்லியா மாவட்டம், நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார் மங்கள் பாண்டே. 

1849-இல் கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் சேர்ந்தார். மிக ஒழுக்கமான இளைஞர். கொல்கத்தாவின் பாரக்பூர் எனும் இடத்தில் சிப்பாய்கள் கொந்தளிப்புடன் இருப்பதாக , லெஃப்டினென்ட் பாக்கிற்கு செய்தி வருகிறது.  உடனே குதிரையில் ஏறி புறப்பட்டான் பாக்.  மங்கள் பாண்டேவைப் பற்றி பாக்கிற்குச் சொல்லப்பட்டது.

மங்கள் பாண்டே குறி பார்த்துச் சுட, பாக் தப்பித்தான்.  குதிரையைப் பதம் பார்த்தது புல்லட். குதிரையும், மேலிருந்த அதிகாரியும் கீழே விழ, தன் வாளால் பதம் பார்த்தான் பாண்டே. மற்றொரு சிப்பாய் ஷேக் பல்டு தலையிட்டு, பாண்டேவை கட்டிப் பிடித்தான். இதனிடையே சார்ஜென்ட் மேஜர் ஹீயூசன் மங்கள் பாண்டேவால் தாக்கப்பட்டார்.

ஹூயூசன் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாண்டேவை, மற்றவர்கள் பிடித்துக் கொடுக்க வேண்டும் என கதறி வேண்டுகோள் விடுத்த பல்டுவை ஏனைய சிப்பாய்கள் மறுத்து, சுட்டு விடுவதாக மிரட்டினர். பல்டுவுக்கும் காயம்;  பாக், ஹியூசன் ஆகியோருக்கும் அடி பலம். காமாண்டிங் ஆபீஸர் ஜெனரல் ஹியர்சே வருகிறார். துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, ‘எல்லோரும் மங்கள் பாண்டேவைப் பிடிக்க உதவ வேண்டும். இல்லையேல்
அவமதிக்கும் முதல் மனிதனைச் சுட்டு விடுவேன்’ என மிரட்டுகிறார்.

பாண்டே நிலமையைப் புரிந்து கொண்டு தன்னைத் தானே சுட்டுக் கொள்ள, ரத்த வெள்ளம். அடி பலம் என்றாலும் உயிருக்குப் பாதகம் இல்லை. நட்ந்தது  விசாரணை. விடுவானா வெள்ளைக்காரன்? தூக்கு தண்டனை கிடைத்தது.  அன்று ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டுக் கிடந்த பாரதத்தில் அது தான் கதி. அரசை எதிர்த்தால் தூக்குதான்.

ஆனால் மங்கள் பாண்டேவுக்கு   மக்களிடத்தில் இருக்கும் வரவேற்பை மோப்பம் பிடித்தது ஆங்கில அரசு. ஊர் அறிய தூக்கிவிட்டால் பெரிய கிளர்ச்சி வெடிக்கும் என யூகித்து, குறித்த நாளுக்கு ஒரு வாரம் முன்பே யாருக்கும் தெரியாமல் தூக்கில் தொங்க விட்டது பிரிட்டீஷ் அரசு.

ஒரு சிறு பொறி தான் மங்கள் பாண்டே. அக்னிக் குஞ்சினை பொந்திடை வைத்தாயிற்று. வெந்து தணிந்தது காடு. அது தான் முதல் இந்திய சுதந்திரப் போர் (1857).

துப்பாக்கி புல்லட்டில் பன்றிக் கொழுப்பும், மாட்டு இறைச்சியும் தடவித் தந்ததாக சிப்பாய்கள் மத்தியில் பரவியது செய்தி. ஏற்கனவே உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தவர்கள் கொதித்து எழுந்தனர். ஒரு வதந்தி பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணிற்று. இந்தியர்களின் மனநிலையை பாதிக்க வேண்டும் என்ற துர் எண்ணத்துடன் ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டனர் என நம்மவர்கள் நம்பினர்.

மாட்டுக் கொழுப்பு என்பதால் ஹிந்துக்களும், பன்றிக் கொழுப்பு என்பதால் இஸ்லாமியரும் மனம் புண்பட்டனர், வெறுத்தனர்;  கிளர்ந்து எழுந்தனர்.  ‘சிப்பாய் மியூட்டினி’  (சிப்பாய் கலகம்) என வரலாறு பதிவு செய்து கொண்டது. அதுவே முதல் இந்திய சுதந்திரப் போர் ஆகும். அதற்கு வித்திட்டவர்  மாவீரர் மங்கள் பாண்டே.

1857, ஏப்ரல் 8-ம் நாள் பாரக்பூரில் தூக்கிலிடப்பட்ட போது மங்கள் பாண்டேவுக்கு 29 வயது! அவரை கௌரவிக்கும் விதமாக, இந்திய அரசு ஒரு நினைவு தபால் தலையை  1984 அக்டோபரில் வெளியிட்டது. கொல்கத்தாவில் பாண்டே நினைவாக ஒரு பூங்கா எழுப்பப்பட்டது.

இந்த தனிமனிதன் காட்டிய வீரம், எதிர்ப்பு, நியாயமான கோபம் – இவை எளிதில் பற்றிக் கொண்டது அன்று எல்லோரையும். ஆங்கிலேயர்களை உரசிப் பார்க்கும் துணிவை நமக்குத் தந்தவனான அந்த "தனி ஒருவன்" மங்கள் பாண்டே பிறந்த தினம் இன்று.

சனி, 18 ஜூலை, 2020

*🖥️உங்கள் ஜி மெயில் ஸ்டோரேஜ் நிரம்பி விட்டதா ...அதனை சரி செய்ய எளிய வழிமுறை...*

*🖥️உங்கள் G MAIL ஸ்டோரேஜ்் நிரம்பி விட்டதா.. அதனை சரி செய்ய எளிய வழிமுறை..*

*உங்கள் G MAIL ஸ்டோரேஜ்் நிரம்பி விட்டதா.. அதனை சரி செய்ய எளிய வழிமுறை..*

*நம் ஜிமெயில் கணக்கில் சேமிப்பக சிக்கல்களில் பல முறை நாம் சிக்கி இருப்போம். ஜிமெயில் கணக்கின் சேமிப்பிடம் நிரம்பியிருப்பதாகவும், புதியவற்றைப் பெறுவதற்கு அஞ்சல்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பைப் பெற்ற நேரங்கள் உள்ளன. கூகுள் பயனர்களுக்கு மொத்தம் 15 GB சேமிப்பிடத்தை இலவசமாக வழங்குகிறது. இது டிரைவ் ஃபைல்கள், மின்னஞ்சல்கள், வாட்ஸ்ஆப், பேக்அப்ஸ் போன்றவற்றிற்கான சேமிப்பிடமாகும். உங்களிடம் ஆன்டுராய்டு தொலைபேசி இருந்தால், 15 GB நிரப்புவது மிகவும் எளிதானது.*

*கூகுள் ஃபோரம் சேமிப்பக முழு சிக்கல்கள் தொடர்பான வினவல்களால் நிரப்பப்படுகின்றன.* *மேலும் இரண்டு பதில்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன.*
*முதலாவதாக, கூகுளில் இருந்து கூடுதல் கிளவுட் ஸ்டோரேஜை 100 GBக்கு மாதத்திற்கு ரூ. 130 க்கு வாங்குவது, இரண்டாவதாக புதிய மெயில்களுக்கு இடமளிக்க சிறிது இடத்தை சுத்தம் செய்வது.*

*கூடுதல் சேமிப்பிடத்தை வாங்க, நீங்கள் விரும்பும் சேமிப்பிடத்தின் அளவைத் தேர்ந்தெடுத்து, வாங்குவதற்கு உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களைச் சேர்க்க வேண்டும். ஒருமுறை இதைச் செய்தபின், கூகுள் உங்கள் கணக்கிலிருந்து தொடர்ச்சியான கட்டணத்தை அமைக்கும். மேலும் சந்தாவை முடிக்க முடிவு செய்யும் வரை கூடுதல் இடம் கிடைக்கும். இருப்பினும், புதிய தரவைச் சேர்க்க அல்லது புதிய மின்னஞ்சல்களைப் பெற நீங்கள் சேமிப்பிடத்தை அழிக்க வேண்டும் மற்றும் உங்கள் கணக்கு பயன்படுத்தும் இடத்தின் அளவை 15 GBக்குக் கீழே கொண்டு வர வேண்டும்.*

*உங்கள் கூகுள் கணக்கில் இடத்தை விடுவிக்க மூன்று வழிகள் உள்ளன: கூகுள் டிரைவில் ஃபைல்களை நீக்கு, அஞ்சல்களை நீக்கு, கூகுள் புகைப்படங்கள் ஆகியவை ஆகும்.*

*கூகுள் டிரைவில் அளவு அடிப்படையில் ஃபைல்களை நீக்குதல்:*

*டெஸ்க்டாப் பிசி யிலிருந்து https://drive.google.com/#quota.என டைப் செய்யவும்.*

*உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழைக.*

*அங்கு உங்கள் எல்லா ஃபைல்களையும் இட அடிப்படையில் வரிசையில் பட்டியலிடும்.*


*இனி உங்களுக்குத் தேவையில்லாத ஃபைல்களை நிரந்தரமாக நீக்குங்கள்.*

*அஞ்சல்களை நீக்குதல்:*

*Gmail.com க்குச் சென்று உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைக.*

*தேடல் பட்டியில், "has: attachment larger: 10M" என டைப் செய்க*

*இது 10MB க்கும் அதிகமான அளவிலான இணைப்புகளைக் கொண்ட அனைத்து மின்னஞ்சல்களையும் கொண்டு வரும்.*

*உங்களுக்குத் தேவையில்லாத மின்னஞ்சல்களைத் தேர்ந்தெடுத்து டெலீட் பட்டனைத் தட்டவும்.*

*இப்போது டிராஷ்க்கு சென்று, உங்கள் கணக்கில் இடத்தை விடுவிக்க எம்ப்டி டிராஷ் பட்டனைத் தட்டவும்.*

*இப்போது இடது நேவிகேஷன் பாரில் இருந்து ஸ்பேம் ஃபோல்டருக்குள் செல்லுங்கள்.*

*இப்போது 'டெலீட் ஆல் ஸ்பேம் மெசேஜஸ் நௌ’ என்பதைக் கிளிக் செய்து, பின்னர் உறுதிப்படுத்தவும்.*

*கூகுள் புகைப்படங்கள்:-*

*கணினியில் https://photos.google.com/settings க்குச் செல்லவும்.*

*உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைக.*

*பதிவேற்றும் தரத்தை ஒரிஜினலில் இருந்து ஹை குவாலிட்டிக்கு மாற்றவும்.*

*உங்கள் சேமிப்பிடத்தை மீட்டெடுக்க வேண்டுமா என்று கூகிள் உங்களிடம் கேட்கும், இது உங்கள் முந்தைய பதிவேற்றங்களை உயர் தரமாக மாற்றும் மற்றும் இடத்தை சேமிக்க உதவும்.*

*🟣DSE - ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை பாடங்களை வீடியோ படப்பதிவு செய்ய ஆசிரியர்களை தெரிவு செய்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*










*🟣DSE - ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை பாடங்களை வீடியோ படப்பதிவு செய்ய ஆசிரியர்களை தெரிவு செய்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*

*🌷ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப விநியோகம்: தனியார் கலைக்கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு*

*🌷ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப விநியோகம்:  தனியார் கலைக்கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு*

*தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டுமென கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.*

*தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்து, அந்த திட்டத்தையும் 15ம் தேதி தொடங்கி வைத்தார்.*

*இதையடுத்து, கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 20ம் தேதி முதல் பெறப்படும் என்றும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.*

*இந்நிலையில், தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் நேற்று காலையில் இருந்தே அச்சிட்ட விண்ணப்பங்களை விற்கத் தொடங்கி விட்டன.*

*இதை வாங்குவதற்காக மாணவர்கள் குவிந்தனர். கொரோனா தொற்றுக்காக அறிவிக்கப்பட்ட சமூக இடைவெளியை பின்பற்றாமல், கூட்டமாக விண்ணப்பங்களை வாங்கினர்.*

*இது  குறித்து பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.*

*அதன்பேரில் கல்லூரிக் கல்வி இயக்ககம் நேற்று அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.*

*தமிழகத்தில் உள்ள 109 அரசு கல்லூரிகளில் 20ம் தேதி முதல்  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.*

*இந்நிலையில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகங்கள் அச்சிட்ட விண்ணப்பங்களை தங்கள் விருப்பம் போல விற்பனை மற்றும் வினியோகம் செய்து வருவதாக புகார் பெறப்பட்டுள்ளது.*

*அதனால், உடனடியாக தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் அச்சிட்ட விண்ணப்பங்களை வினியோகம் செய்வதை நிறுத்த வேண்டும்.*

*மேலும், 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் தான் விண்ணப்பங்களை பெற வேண்டும்.*

*இது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.*

*இதற்கிடையே, தனியார் கல்லூரிகள் நேற்று மதியத்திற்குள் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை விற்று தீர்த்தன.*

*இந்த உத்தரவு வந்ததும் விண்ணப்ப விநியோகத்தை நிறுத்தி வைத்துள்ளன.*

*🟣ஜூலை 18,* *வரலாற்றில் இன்று:கவிஞர் வாலி நினைவு தினம்.*

ஜூலை 18, வரலாற்றில் இன்று.



கவிஞர் வாலி நினைவு தினம் இன்று.

தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட உலகில் புகழ்பெற்று விளங்கிய பாடலாசிரியருமான கவிஞர் வாலி  15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி திரைப்பட உலகில் சாதனை படைத்த கவிஞர்.  பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், ஓவியர் என பன்முகம் கொண்டவர்

 திருச்சி,  திருவரங்கத்தில் 29 அக்டோபர், 1931இல் பிறந்த இவரது இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன். வாலியின் காதல் மனைவி பெயர் ரமணத்திலகம். ரமண திலகம் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். வாலி-ரமண திலகம் தம்பதிக்கு பாலாஜி என்ற ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார்.
சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். 

ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது.

திரைப்படஙகளுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். அவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டிக் கண்ணன், ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி, ஒரே ஒரு கிராமத்தில் இப்படி எழுதிக் கொண்டே போகலாம். மாருதிராவோடு சேர்ந்து டைரக்ட் செய்த ஒரே படம் வடை மாலை!

இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
அவர் நடித்த திரைப்படங்களுள் பொய்க்கால் குதிரை, `சத்யா’, `பாத்தாலே பரசவம்’, `ஹே ராம்’, ஆகியவை குறிப்பிடத்தக்கவை . மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் திருவரங்கத்தில் தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர்  கல்கி அன்றுதிருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.
திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா. வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!

தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.

சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ்க்கு எழுதி அனுப்பியது தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ பாடல் இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர். எம்.ஜி.ஆர்.எப்பவும் `என்ன ஆண்டவனே’ என்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி `என்ன வாத்தியாரே’!

வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தை விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!
வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை, சில்க்காக இருந்தால் சந்தன நிறம், இவை தவிர வேறு விருப்பம் இல்லை!

எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு சென்றதில்லை கவிஞர் வாலி, பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்! வாலியின் பாடல்கள் வயதானவர்களை மட்டுமின்றி இன்றைய 20 வயது இளைஞர்களையும்  கவரும் வண்ணம் இருக்கிறது. இது அவரது வெற்றியாகும்

5 முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்று இருக்கிறார்.
பத்மஸ்ரீ, பாரதி விருது முரசொலி அறக்கட்டளை விருது, கலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழி, உலகத்தமிழ் மாநாடு போன்றவற்றின் இவரது பங்கும் உண்டு!

 மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார்.

*🌐ஜூலை 18, வரலாற்றில் இன்று:இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளான ரோகிணி விண்ணில் செலுத்தப்பட்ட தினம் இன்று (1980).*

ஜூலை 18, வரலாற்றில் இன்று.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளான ரோகிணி விண்ணில் செலுத்தப்பட்ட தினம் இன்று (1980).

 அப்துல்கலாம் நகத்தைக் கடித்துக்கொண்டு டென்ஷனாக இங்கும் அங்குமாக அலைந்துக் கொண்டிருந்தார்.

“எல்லாம் தயாரா? பிரச்சினை ஒன்றுமில்லையே?” திரும்பத் திரும்ப உதவியாளர்களை கேட்டுக்கொண்டே இருந்தார்.

“எல்லாம் சரியாக இருக்கிறது சார். நிச்சயமாக நாம் வெல்வோம்” அவர்களது பதிலில் திருப்தியடைந்தாலும் ஏதோ ஒன்று அவருக்கு இடித்துக்கொண்டே இருந்தது.

ஆகஸ்ட் 10, 1979. ஸ்ரீஹரிகோட்டா. முப்பத்தைந்து கிலோ எடையுள்ள ரோகிணி பூமியின் சுற்றுப்பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். ரோகிணி என்பது சோதனை சேட்டிலைட். பிற்பாடு இந்தியா செலுத்த திட்டமிட்டிருக்கும் சேட்டிலைட்டுகளின் தலைவிதியை இந்த நாள்தான் தீர்மானிக்கப் போகிறது. திட்ட இயக்குனராக இருந்த அப்துல்கலாமும் அவரது குழுவினரும் ஏழு ஆண்டுகளாக இரவுபகல் பாராமல் இந்நாளுக்காக காத்திருந்தார்கள். 1980ல் ரோகிணியை நிலைநிறுத்த வேண்டுமென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் ஓராண்டு முன்பாகவே தயாராகி விட்டார்கள்.

ஏவுதளத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தார் கலாம். ரோகிணியை ஏவுவதற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்பாக எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஆராய்வதற்காக கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்தார். கலாம் நினைத்ததைப் போலவே ஏதோ வில்லங்கம். ‘சில கட்டுப்பாட்டு கருவிகள் முறையாக இல்லை’ என்று கம்ப்யூட்டர் ஆட்சேபம் தெரிவித்தது. இந்த நாளின் வெற்றிக்காக நாடே காத்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை. தன்னுடைய குழுவில் இருந்த நிபுணர்களை கலந்தாலோசித்தார்.

“கவலைப்படாதீர்கள் சார். ஒன்றுக்கு நாலு முறை ரோகிணியை பரிசோதித்துவிட்டோம். தேவையான அளவு எரிபொருள் இருக்கிறது. எல்லாம் சரியாகவே இருக்கிறது. கம்ப்யூட்டரில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம்”

அரைமனதுடனேயே கம்ப்யூட்டரின் ஆட்சேபணையை புறந்தள்ளிவிட்டு, ரோகிணியை ஏவினார் கலாம். முதல் கட்டத்தில் எல்லாமே சரியாக அமைந்தது. குழுமியிருந்த அறிவியலாளர்கள் முகத்தில் வெற்றிக்களிப்பு. இரண்டாவது கட்டத்தில் ஏதோ பிரச்சினை. சுற்றுப்பாதையில் ரோகிணி நிலைநிறுத்தப்படாமல் வீழ ஆரம்பித்தது. அன்று வங்காளக்கடலில் வீழ்ந்தது ரோகிணி மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களின் ஏழாண்டு பிரதிபலன் பாராத உழைப்பும், இலட்சியமும் கூடத்தான். கலாம் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

காலை ஏழு மணிக்கு இச்சம்பவம் நடக்கிறது. ஏழேமுக்கால் மணிக்கு பத்திரிகையாளர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் பிரத்யேக பத்திரிகைச் சந்திப்புக்காக குவிந்துவிட்டார்கள். இந்தியப் பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அவர்களில் சர்வதேசப் பத்திரிகையாளர்களும் கலந்திருந்தார்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) அப்போதைய தலைவர் பேராசிரியர் சதிஷ் தவான் பத்திரிகையாளர்களை எதிர்கொண்டார். ரோகிணியின் தோல்விக்கு தானே தார்மீக பொறுப்பேற்றுக் கொண்டார்.

“எங்கள் குழுவினர் மிகக்கடுமையாக உழைத்தனர். அவர்களுக்கு இன்னும் கூடுதலான தொழில்நுட்ப ஆதரவு தேவைப்படுகிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஒரே ஆண்டில் எங்கள் குழு மாபெரும் வெற்றியை ஈட்டும்”

கலாமுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது. திட்ட இயக்குனர் என்கிற அடிப்படையில் இத்தோல்விக்கு அவர்தான் பொறுப்பு. நிறுவனத்தின் தலைவர் என்கிற அடிப்படையில் தன்னுடைய குழுவினரை காப்பாற்றும் வகையில் நாகரிகத்தைக் காட்டிய தவான் அவரது மனதில் உயர்ந்து நின்றார்.

மீண்டும் ஆரம்பத்தில் இருந்து உழைக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு நாளின் ஒரு நொடியையும் வீணாக்காமல் அசுரத்தனமான உழைப்பு. ஜூலை 18, 1980ல் தயாரானார்கள். உலகமே ஸ்ரீஹரிகோட்டாவை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இம்முறை நாடே போற்றும் வெற்றி. இனி விண்வெளியையும் ஆள்வோம் என்று இந்தியா உலகுக்கு அறிவித்தது. வெற்றிச் செய்தியை நேரிடையாக கேட்க இம்முறை முன்பைவிட கூடுதலாக பத்திரிகையாளர்கள் சதீஷ்தவானை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். தவான் கலாமை அழைக்கிறார்.

“உன் வாயால் வெற்றியை சொல்லு”

தழுதழுத்த நிலையில், கண்களில் ஈரம் கசிய அன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் கலாம். எப்படி வென்றோம் என்று ஒட்டுமொத்த கதையையும் சொன்னார்.

பின்னாளில் இந்த நிகழ்வைப் பற்றி சொல்கிறார் கலாம்.
“அந்நாளில் நான் ஒரு முக்கியமான பாடத்தை கற்றேன். ஒரு நிஜமான தலைவன் தோல்வி காணும்போது அத்தோல்வியை தன்னுடையதாக கருதுவான். வெற்றி எனும்போது அது தன்னுடைய குழுவின் வெற்றியாக கொண்டாடுவான். உலகின் மிகச்சிறந்த நிர்வாகவியல் பாடமான இதை நான் எந்தப் புத்தகத்திலும் வாசித்ததில்லை. என்னுடைய அனுபவத்தின் வாயிலாக கற்றேன்”

*🟡ஜூலை 18,* *வரலாற்றில் இன்று:1967ஆம் ஆண்டு சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட நம் மாநிலத்தின் பெயரை "தமிழ் நாடு" என்று மாற்ற வேண்டும் என்று அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தினம் இன்று.*

ஜூலை 18,
வரலாற்றில் இன்று.

1967ஆம் ஆண்டு சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட நம் மாநிலத்தின் பெயரை   "தமிழ் நாடு"  என்று மாற்ற வேண்டும்  என்று அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தினம் இன்று.

வெள்ளி, 17 ஜூலை, 2020

*✍️பழங்குடியின மாணவர்களுக்கு இலவச கல்வியியல் பட்டயப் பயிற்சி (D.T.Ed.,)க்கு விண்ணப்பிக்க அழைப்பு!!!*

*✍️பழங்குடியின மாணவர்களுக்கு இலவச கல்வியியல் பட்டயப் பயிற்சி (D.T.Ed.,)க்கு விண்ணப்பிக்க அழைப்பு!!!*

*✍️80 மற்றும் அதற்கு மேல் வயது முதிர்வடைந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழகுவது குறித்து தெளிவுரை வழங்குதல் தொடர்பாக நிதித்துறை செயலாளர் கடிதம்.நாள்:19.05.2017.*

*✍️80 மற்றும் அதற்கு மேல் வயது முதிர்வடைந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல்  ஓய்வூதியம் வழகுவது குறித்து தெளிவுரை வழங்குதல் தொடர்பாக நிதித்துறை செயலாளர் கடிதம்.நாள்:19.05.2017.*