செவ்வாய், 28 ஜூலை, 2020

ஜூலை 28,வரலாற்றில் இன்று. உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day) இன்று.

ஜூலை 28,
வரலாற்றில் இன்று.


உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day) இன்று.

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

திங்கள், 27 ஜூலை, 2020

🎯* தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு:*

🎯* தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு:*



*சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்ணில் 30 % கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.*

*நடப்பு பருவத்தில் அக மதிப்பீட்டிலிருந்து 70 % மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.*

*இவற்றை வைத்து முதன்மை, மொழி பாடங்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும்.*

*செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில்  மதிப்பெண் வழங்கப்படும்.*

*முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும்.*

*மருத்துவ கல்விக்கு பிறகு அரசு மருத்துவமனை. அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மோடி அரசு...

மருத்துவ கல்விக்கு பிறகு அரசு மருத்துவமனை...
-------------------------------------------------
அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மோடி அரசு...

இந்தியாவின் எட்டு பெரும் நகரங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் உள்ள வளாகத்தில் 50 அல்லது 100 படுக்கை வசதிக்கொண்ட கட்டிடத்தை தனியாருக்கு 30வருடங்களுக்கு கொடுக்க வழிவகை செய்யும் ஒரு ஓப்பந்தத்தை அனைத்து மாநில அரசுக்கும் மத்திய நிதி ஆயோக் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனுப்பியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நம்பிக்கொண்டு இருக்கும் அரசு மருத்துவமனைகளையே இல்லாமல் செய்யும் வேலையை மோடி அரசு செய்ய துணிந்திருக்கிறது.

இந்த ஓப்பந்ததில் உள்ளவை..

1.மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் உள்ள இடத்தில் தனியாருக்கு 50 அல்லது 100 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடத்தை அந்தெந்த மாநில அரசு கொடுக்க வேண்டும். அதாவது 50 படுக்கை வசதிக் கொண்ட மருத்துவமனையை தனியார் கட்ட முன் வந்தால் அதற்கு அரசு மருத்துவமனை வாளாகத்திலுள்ள இடத்தில் 30,000 சதுர அடி இடமும், 100 படுக்கைவசதிகொண்ட மருத்துவமனையென்றால் 60,000 சதுர அடி இடமும் மாநில அரசு கொடுக்க வேண்டும். மேலும் மருத்துவமனை கட்டத்தேவையான பணத்தின் ஒரு பகுதியையும் மாநில அரசே தனியாருக்கு ஒதுக்க வேண்டும்.

2.மாவட்ட மருத்துவமனைகளிலுள்ள இரத்த வங்கி சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், பிசியோதெரபி சேவைகள், மருத்துவ கழிவுகள் அகற்றும் முறை, பார்க்கிங் வசதி, மின்சாரம், பிணவறை, நோயாளிகள் பணம் செலுத்தும் கவுண்டர் மற்றும் செயூரிட்டி போன்ற அனைத்தையும் தனியாரும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

3.அரசு காப்பிடு திட்ட பயனாளிகளுக்கு இங்கு மருத்துவம் பார்க்கப்படும். ஆனால் படுக்கைக்கு (BED) பணம் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

4.மாநில காப்பீட்டு மற்றும் சுகாதார திட்டங்களின் மூலம் பயன்பெறும் நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படமாட்டாது. அப்படியே அவர்கள் வந்தாலும் முழுக்கட்டணமும் செலுத்தித்தான் பயன்பெறமுடியும்.

அதாவது அரசு மருத்துவமனை இடத்தையும் பெற்றுக்கொண்டு மருத்துவமனை கட்ட நிதியையும் அரசிடமே பெற்றுக்கொண்டு அரசு மருத்துவமனையிலுள்ள அனைத்து வசதிகளையும் வாட்ச்மேன் முதற்கொண்டு பெற்றுக்கொண்டு அரசு உதவிபெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டார்களாம். பின் எதற்கு இந்த புதிய நல்ல ஒப்பந்தமென்றால். அரசு மருத்துவமனை என்ற ஒன்றையே இல்லாமல் செய்ய வேண்டுமென்பது தான் இதன் பின்னுள்ள மோசமான  அரசியல். ஏற்கனவே 2012இல் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது புஜ் அரசு மருத்துவமனையை (Bhuj’s government hospital) அதானி குழுமத்தின் மருத்துவ கல்லூரிக்காக 99வருடத்திற்கு குத்தகைக்கு விட்டவர்தான் இப்போது நாட்டிலுள்ள ஓட்டுமொத்த மாவட்ட மருத்துவமனைகளையும் தனியாருக்கு கொடுக்க முன்வருகிறார்.

ஏற்கனவே ’நீட்’ எனும்  சட்டத்தினால் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்ட மோடி அரசு. இப்போது இந்த புதிய ஒப்பந்தத்தால் அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு கொடுக்க வேலை செய்கிறது.

இந்த  ஒப்பந்தத்திற்கு இரண்டு வார காலத்திற்குள் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நிதி அயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்திருக்கிறார். இந்த ஒப்பந்தத்தை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும்.

அதுபோலவே எல்லா மாநிலங்களும் இதனை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கவேண்டும். இல்லையென்றால் இதனால் வரக்கூடிய விளைவுகள் இந்திய சமூகத்தில் மிக மோசமானதாக இருக்கும்.

மொத்த நாட்டையே அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் சதித்திட்டம்- EIA2020: வலுக்கும் எதிர்ப்பு #SCRAPEIA2020

மொத்த நாட்டையே அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் சதித்திட்டம்- EIA2020: வலுக்கும் எதிர்ப்பு
 #SCRAPEIA2020



சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 - வரைவு அறிவிக்கைக்கு எதிராக ட்விட்டரில் #scrapEIA2020 என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி மோடி அரசு, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020” என்று வரைவு அறிவிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கின்றன என பலரும் எதிர்க்கத் துவங்கியுள்ளனர்.

அதன் ஒருபகுதியாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 - வரைவு அறிவிக்கைக்கு எதிராக ட்விட்டரில் #scrapEIA2020 என்ற ஹேஸ்டேக் மூலம் தங்களின் கருத்துக்களை பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது #scrapEIA2020, #WithdrawEIA2020 போன்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளனர்
இ.ஐ.ஏ 2020 சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்பு எழ என்ன காரணம்?

கடந்த 1986 இல் நடைமுறைக்கு வந்த சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1994 ஜனவரி 27 இல் வெளியிடப்பட்ட குறிப்பாணையின்படி, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை சட்ட ரீதியாக கட்டாயமாக்கப்பட்டது.

இதனையடுத்து நடைமுறையில் உள்ள சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006-ல், சில திருத்தங்களைச் செய்து) 2020 மார்ச் 23-ம் தேதி, ஒரு வரைவு அறிவிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு தயார் செய்தது. அந்த தயார் செய்யப்பட்ட அறிக்கையை ஏப்ரல் 11 ஆம் தேதி அரசு இதழிலும் வெளியிட்டுள்ளது.

இந்த வரைவு அறிவிக்கையின் மீது அரசு இதழில் அறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மக்கள் கருத்து தெரிவிக்கலாம். மாநில அரசுகளும் கருத்துகளை அளிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் கூறி இருந்தது.

பின்னர் சூழலியாளர்கள், கொரோனா தொற்று பாதிப்பு காரணம் வைத்து மோடி அரசு அவசரகதியாக சட்டத்தை திருத்தி தனக்கு சாதகமாக்கிக்கொள்ள பார்க்கிறது என குற்றம் சாட்டினார்கள். பின்னர் கால அவகாசத்தை 2020 ஜூன் 30 வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு.

இந்நிலையில், “சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020” என்று வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மூன்று முக்கியத் திருத்தங்கள் மத்திய அரசுக்கு எதேச்சதிகாரமான அதிகாரங்களை வழங்கும் வகையில் உள்ளதை சூழலியாளர்கள் கண்டிக்கத் துவங்கினார்கள்.

மோடி அரசு அறிக்கையில் திருத்தியவற்றில், முதலாவதாக சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை முன்வைக்காமலும், மக்களிடம் கருத்துக் கேட்காமலும் நடைமுறையில் செயல்பாட்டில் உள்ள புதிய திட்டங்கள், பழைய திட்டங்களின் விரிவாக்கங்கள் - கட்டுமானப் பணிகள் இவற்றை எவ்வித தடையுமின்றி தொடரலாம். அரசுக்கு தண்டத்தொகை செலுத்தினால் போதும் அனுமதி கிடைத்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, இரண்டாவதாக 70 மீட்டர் வரையிலும் சாலைகளை அகலப்படுத்துதல், விரிவாக்கத் திட்டங்கள், நீராதாரக் கட்டமைப்புகள், பெரும் கட்டுமானத் திட்டங்கள் போன்ற 14 வகையான பணிகளுக்கும், குறிப்பாக, “சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பவை என்று கருதப்படக்கூடிய திட்டங்களுக்கும்” கூட இனி சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை முன் வைக்கத் தேவை இல்லை. சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதி தேவை இல்லை.

இதன் தொடர்ச்சியாக மற்றொரு திருத்தமாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தோல் தொழில் மற்றும் கடலோரத் தொழில் மண்டலங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்கள் பற்றியும் விரிவாக்கப் பணிகளுக்கும் சுற்றுச் சூழல் அனுமதி தேவை இல்லை என்று திருத்தியிருக்கிறது.

இதனால் என்ன ஆகும் என்றால், மக்களிடம் கருத்துக்கேட்கும் உரிமை முற்றிலும் மறுக்கப்படும். எந்த திட்டத்தையும் மக்கள் அனுமதியின்றி செயல்படுத்த முடியும். மேலும் தொழிற்சாலை, நிறுவனங்கள் தங்கள் அறிக்கையை அளிக்க வேண்டிய தேவை இருக்காது. செயல்பாடுகள் குறித்த அறிக்கை ஆண்டுக்கு ஒருமுறை கொடுத்தால் போதும் என்ற நிலைமை உருவாகும். இதனால் நிறுவனங்கள் அனுமதியுடன் சட்ட மீறலில் ஈடுபடும்

மேலும், சுற்றுச் சூழலுக்குக் கேடு பயக்கும் திட்டங்கள் குறித்து சூழலியல் ஆர்வலர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் என எவரும் புகார் கூறவோ, கருத்துத் தெரிவிக்கவோ முடியாது. மத்திய அரசு தேவைப்பட்டால் விசாரணைக்குழு அமைத்தால் தான் கருத்துக்களை மக்கள் கூற முடியும்.

இதனால் தமிழகமும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கும். குறிப்பாக காவிரியில் மேகேதாட்டு அணை, தேனி நியூட்ரினோ ஆய்வகம், சேலம் - சென்னை 8 வழிச்சாலை மற்றும் காவிரிப் படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்திட இந்த சட்டம் உதவும். காடுகளில் வாழும் மக்கள் துரத்தியடிக்கப்படுவார்கள். இத்தகைய மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் சட்ட வரைவுக்குத் தான் தற்போது நாடுமுழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது

மறுகாலனியாக்கம் கல்வி பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு ! பள்ளிக் கல்வியை உலக வங்கியிடம் ஒப்படைப்பதற்கான புதிய திட்டத்தை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...

மறுகாலனியாக்கம் கல்வி

பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !
பள்ளிக் கல்வியை உலக வங்கியிடம் ஒப்படைப்பதற்கான புதிய திட்டத்தை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...

வினவு செய்திப் பிரிவு -July 27, 2020

அன்பார்ந்த நண்பர்களுக்கு,

பள்ளிக் கல்வியை உலக வங்கியிடம் ஒப்படைப்பதற்கான புதிய திட்டத்தில் கடந்த ஜூன் 24 ம் தேதி அன்று மோடி அரசு கையெழுத்திட்டுள்ளது. ‘மாநிலங்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்ச்சியை வலுப்படுத்துதல்’ ‘Strengthening Teaching-Learning and Results for States’ (STARS) என்ற இத்திட்டம் உலக வங்கியின் உதவியுடன் இந்தியாவின் ஆறு மாநிலங்களில் சோதனைத் திட்டமாக அமல்படுத்தப்படும்.

இதன் வாயிலாக அரசுப் பள்ளிகளின் நிர்வாகத்தை தனியார்களிடம் ஒப்படைப்பதற்கான வேலையை மோடி அரசு செய்துள்ளது. இதனை கண்டித்து கல்வி உரிமைக்கான அகில இந்தியக் கூட்டமைப்பு (All India Forum for Right to Education – AIFRTE) இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதம் ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளிவந்தது. இக்கடிதம் STARS திட்டம் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தை கொடுக்கும் என்பதால் அதனை தமிழில் மொழிப்பெயர்த்து தருகிறோம்.

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக்குழு – சென்னை 

***
பள்ளி கல்வியினை உலக வங்கியிடம் ஒப்படைக்கும் இந்திய அரசின் திட்டத்தை கண்டித்து கல்வி உரிமைக்கான அகில இந்தியக் கூட்டமைப்பு இந்திய பிரதமர்க்கு திறந்த கடிதம்

அன்புள்ள பிரதமர்க்கு,

“வாருங்கள் தன்னிறைவு கொண்ட பாரதத்தை உருவாகுவாம்”,  இது சமீபத்தில் நீங்கள் செய்த முழக்கம். பிறகு ஏன் இந்தியாவின் பள்ளி கல்வியை வடிவமைப்பதற்கும் கண்காணிப்பதற்கும் உலக வங்கிக்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள்?

கல்வி உரிமைக்கான அகில இந்தியக் கூட்டமைப்பு(All India Forum for Right to Education – AIFRTE), 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடிமை சமூக அமைப்புகளைக் கொண்ட கூட்டமைப்பாகும். இது ஜுன் 2009 முதல் 22 மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதசங்களில் செயல்பட்டு வருகிறது. இந்திய அரசு உலக வங்கியனை ‘மாநிலங்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்ச்சியை வலுப்படுத்துதல்’ ‘Strengthening Teaching-Learning and Results for States’ (STARS) என்ற திட்டத்தின் மூலம் பள்ளிக் கல்வியில் தலையிட கடந்த 2019 அக்டோப்பரில் அனுமதித்ததோடு இல்லாமல் உலக வங்கியுடன் கடன் ஒப்பந்தத்திலும் ஜூன் 24 ,2020 அன்று கையெழுத்திடுவதற்கான தயாரிப்பு வேலைகளை செய்து வருவதைக்  கண்டு AIFTRE பெரும் கலக்கத்தையும் வேதனையும் அடைந்துள்ளது. STARS திட்டம் ஆறு மாநிலங்களில் viz., ஹிமாசல் பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், மஹாராக்ஷ்ட்ரா, ஓடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சோதனைத் திட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது.

1. உலக வங்கியின் STARS திட்டமானது தந்திரமாக கீழே சொல்லப்பட்டுள்ளவற்றில் தலையிட சாமக்ரா சிக்க்ஷா அபியான் திட்டத்தின் (Samagra Siksha Abhiyan) சில குறிப்பிட்ட நிலைக்களை குறிவைத்துள்ளது.

Early Childhood Care Education -லிருந்து ஒட்டு மொத்த பள்ளி கல்விக்குமான கற்றல்-கற்பித்தலின் உள்ளடக்கம் (teaching-learning content), பயிற்சிகள் (practices) மற்றும் வெளிப்பாடுகளில்(outcomes) பங்கெடுப்பது,
மேற்கூறியவற்றைச் செயல்படுத்தவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் அவர்களை கண்காணிப்பது,
“தகுதி அடிப்படையிலான” கற்றல் மதிப்பீட்டு முறைகளை உருவாக்குதல்,
நிர்வாக சீர்திருத்தங்களை திட்டமிடுவது மற்றும் அமல்படுத்துவது. இது வெறும் நிர்வாகத்தோடு மட்டுமல்லாமல், திட்டத்தை அமல்படுத்துவதற்காக ஒருபுறம் கல்வி அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதில் தொடங்கி, மறுபுறம் பெற்றோரையும் அதில் பங்கேற்க வைப்பதற்கு பயிற்சியளிப்பது வரை உள்ளடக்கியது.

கல்வி கட்டமைப்பின் அனைத்து அம்சங்களிலும் முன்மொழியப்பட்டுள்ள இச்சீர்திருத்த நடவடிக்கைகளில் உலக வங்கியின் கட்டுப்பாடு மற்றும் தலையீடு, STARS திட்டத்தின் மொத்த செலவினங்களில் உலக வங்கியின் பங்கான 14.93%  ஒப்புக் கொண்ட  தேதியிலிருந்து ஆறு வருடங்களுக்கு உறுதிசெய்யப்படுகிறது.  இத்திட்டத்திற்கான மொத்த செலவில் மத்திய அரசு 53.43% -மும் மாநில அரசுகள் 31.64% மும் ஏற்றுக்கொள்ளும்.

மேலும், 2019-25 ஆம் ஆண்டுக்கான  சமக்ரா சிக்க்ஷா அபியான் (இதில் STARS ஒரு அங்கமாக இருக்கும்) திட்டத்திற்காக இந்திய அரசு செலவிடப் போகும் மொத்தத் தொகை 36 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது (பிரிவு 14, பக்கம் 7, ஜூன் 3, 2020 தேதியிட்ட STARS திட்ட தகவல் ஆவணம்).  STARS திட்டத்தில் உலக வங்கியின் பங்களிப்பானது  மத்தியஅரசு  மற்றும் மாநில/யூனியன் பிரதேச அரசாங்கங்கள் சேர்ந்து பள்ளி கல்விக்காக (சமக்ரா சிக்க்ஷா அபியான்) செலவழிக்கும் தொகையில் வெறும் 1.4% மட்டுமே. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு  தேவையான 98.6% நிதியை அரசாங்கத்தால் திரட்ட முடியும் போது, கூடுதல் 1.4% நிதியை ஏன் திரட்ட முடியாது?[1]

இதே விகிதத்திலான  பங்களிப்பைத்தான்  1990 -களில் அமல்படுத்தப்பட்ட மாவட்ட ஆரம்ப கல்வித் திட்டத்திற்கு (District Primary Education Program – DPEP) உலக வங்கி செய்தது. உலக வங்கியால் வடிவமைக்கப்பட்டு நிதியுதவி செய்யப்பட்ட DPEP திட்டம், 1993-2002 ஆண்டுகளுக்கிடையில் 18 மாநிலங்களில், கிட்டத்தட்ட இந்தியாவிலுள்ள பாதி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் அரசு நிதியளிக்கும் தொடக்கப்பள்ளிகளின் (வகுப்பு I-V) தரம் விரைவாக மோசமடைய வழிவகுத்தது. பொது மக்களிடையே, குறிப்பாக எஸ்சி / எஸ்டி / ஓபிசி / முஸ்லிம் /பழங்குடியினர் மற்றும் சமூகத்தின் பிற வறிய பிரிவினரிடையே அரசு தொடக்கப் பள்ளிகள் மீதான நம்பகத்தன்மையை இழக்க செய்தது. இதன் விளைவாக, பள்ளி கல்வியில் தனியார்மயம் மற்றும் வணிகமயமானது DPEP க்கு முந்தைய காலங்களில் இருந்ததை விட DPEP க்கு பிந்தைய காலத்தில் அதிவேகத்தில் அதிகரித்தது.

இதுவே உலக வங்கியின் மைய கோட்பாட்டு திட்டமாகும். உலக வங்கி என்பது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அதன் முன்னேற்றத்திற்காகவும்  உருவாக்கப்பட்ட நிறுவனமாகும்.  உலக வங்கியின் DEPE திட்டத்தின் நோக்கமே  6-14 வயதுக்குட்பட்ட 20 கோடி குழந்தைகள் படிக்கின்ற இந்திய தொடக்கப் கல்வியை (I-VIII வகுப்பு) கார்ப்பரேட் முதலீட்டாளர்களுக்கான ‘சந்தையாக’ மாற்றுவதும் , அதன் மூலம் கல்வியை வணிகமயமாக்குவதும் தான். இந்திய அரசு மீது சர்வதேச நாணய நிதியம் (Internationl Monetry Fund – IMF) திணித்த ‘கட்டமைப்பு சரிசெய்வதற்கான சீர்திருத்தங்களின் (Structural Adjustment Reforms)’ காரணமாக 1990 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% மாக இருந்த கல்விக்கான ஒதுக்கீடு படிப்படியாக குறைந்து 2003 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5% க்கும் குறைவான அளவுவே ஒதுக்கப்பட்டது.

இதன் விளைவுகளை உலக வங்கியானது  தனது நோக்கத்தை அடைவதற்கு பயன்படுத்திக்கொண்டது. இதனால் பள்ளிகளிலிருந்து ஏராளமான குழந்தைகள் தொடர்ந்து வெளியேற்றப்படுவது மட்டுமல்லாமல், அடிப்படை உரிமையாக இருந்த கல்வியானது,  தற்போது அவர்கள் நெருங்கமுடியாத அளவிற்கு “மிகவும் விலை உயர்ந்ததாக” மாறியது.   இந்தியாவின் ஆரம்பக் கல்வியில் புகுத்தப்பட்ட DPEP திட்டத்தின் எதிர்மறை அனுபவம் புறக்கணிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல்  சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abiyan – SSA)  திட்டத்தில்  உலக வங்கியின் தலையீடு 2002 லிருந்து  தற்போது வரைத் தொடர்கிறது.

2. STARS திட்டத்தின் மூலம் இந்திய கல்வித்துறையில் உலக வங்கியின் தலையீடு மூன்றாவது முறையாக அனுமதிக்கப்படுகிறது. இந்த முறை உங்கள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ‘பண்டைய காலத்திலிருந்தே இந்தியா உலகிற்கே குருவாக  இருந்துள்ளது (Vishwa Guru since ancient times)’ என்று உங்கள் அரசாங்கம் கூறிக்கொண்டாலும், 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சமூக மாற்றத்திற்கான கல்விக் கோட்பாடுகளையும் முன்முயற்சிகளையும் கொண்ட சிறந்த மரபு இருந்துள்ளதை பற்றி தெரியாமல் உள்ளீர்கள்.

சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலங்களிலிருந்தே கல்வியை ஜனநாயகப்படுத்துவதற்காக நடைப்பெற்ற சாதி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சோசலிச ஆரதவு மரபுகளிலிருந்து உங்கள் அரசாங்கம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டது. உதாரணமாக ஜோதிராவ் பூலே, சாவித்ரிபாய் மற்றும் பாத்திமா பி, தாதாபாய் நவ்ரோஜி, சத்ரபதி ஷாஹுஜி மகாராஜ், கோபால்கிருஷ்ணா கோகலே மற்றும் கர்மவீர் பாகுராவ் பாட்டீல் (மகாரஷ்டிரா); அயோதி தாஸ், சிங்காரவேலர் மற்றும் பெரியார் (தமிழ்நாடு); நாராயண் குரு மற்றும் அய்யங்காலி (கேரளா); குண்ட்குரி வீர்சலிகம் மற்றும் குராஜாதா அப்பராவ் (பிரிக்கப்படாத ஆந்திரா); குட்முல் ரங்க ராவ் மற்றும் கிருஷ்ணராஜா வாடியார் IV (கர்நாடகா); ஈஸ்வர்சந் வித்யாசாகர், தாகூர் மற்றும் ரோக்கியா பேகம் (மேற்கு வங்கம்); சையத் அஹ்மத் கான் மற்றும் மதன் மோகன் மால்வியா (உத்தரபிரதேசம்); லாலா லஜ்பத் ராய் மற்றும் ஷாஹித் பகத் சிங் (பஞ்சாப்); டாக்டர் ஜாகிர் ஹுசைன் (டெல்லி); சயாஜிராவ் கெய்க்வாட் III மற்றும் கிஜுபாய் பதேகா (குஜராத்); Rev. தாமஸ் ஜோன் மற்றும் ராம்கே டபிள்யூ மோமின் (மேகாலயா); Rev. எஃப். டபிள்யூ. சாவிட்ஜ் (மிசோரம்); ஹிஜாம் இராபோட் (மணிப்பூர்); குய்சாங் மேரு ஜெலியாங் (நாகாலாந்து); சுதந்திர மாநிலங்களின் முற்போக்கு ஆட்சியாளர்களான பரோடா மற்றும் கோண்டல் மகாராஜாக்கள், கோலாப்பூர், மைசூர் மற்றும் திருவிதாங்கூர் மகாராஜாக்கள் மற்றும் போபாலின் பேகம்ஸ்; இறுதியாக, 1930 களில் காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு இடையே நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதி பற்றிய விவாதங்கள் மேலும் அவர்கள் இருவரும் தனித்தனியா சமூக மாற்றத்திற்கான கல்வி பற்றி முன்வைத்த யோசனைகள் எனக் கூறலாம்.

கல்வி சார்ந்த  இந்த உரையாடல்கள் சுதந்திர போராட்டத்தின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1920 ல் நாக்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் ஏகாதிபத்திய நிறுவன அமைப்புகளை புறக்கணிக்கவும் சொந்த நிறுவன அமைப்புகளை  உருகவாக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1938 ல் நடைபெற்ற ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் சுயசார்பான இந்திய கல்வியை ஒரு புதிய அடித்தளத்தின் மீது நிறுவவேண்டுமென  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இது சுதந்திர போராட்ட இயக்கங்களில் மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பங்களிப்பிற்கும் வழிவகுத்தது. 1944 ஆம் ஆண்டில், கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழுவானது (Central Advisory Board of Education – CABE) கல்வியின் நோக்கம் முழுமையானது – தனிநபரின் ஆளுமை மற்றும் திறமைகளை வளர்பது, வாழ்வாதாரத்திற்கான அடிப்படையை உருவாக்குவது மற்றும் நவீன ஜனநாயக அரசுக்கான  சுகந்திர குடிமக்களை வளர்ப்பது எனக் கூறியது.

செழிப்பான, பல்வகைப்பட்ட மற்றும் எதிர் நிலைப்பாடுகளைக் கொண்ட இக்கருத்துக்கள் அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அரசியலமைப்பின் நெறிமுறைக் கேட்பாடு 45 க்கு பொருத்தமாக அனைவரும்  தரமான கல்வி பெறுவதற்கான சம உரிமையை உறுதிப்படுத்துவதை இந்திய அரசின் பொறுப்பாக்கியது. 1993 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் வழக்கில் தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்றம் கல்வி என்பது அடிப்படை உரிமை என்றும் அதனை அமல்படுத்துவது அரசின் கடமை என்றும் கூறியது.

3. நிதியாதாரங்களின் பற்றாக்குறை அல்லது கற்பித்தல் முறையில் போதிய நிபுணித்துவமின்மை போன்ற காரணங்கள்தான் உலக வங்கியால் கட்டுப்படுத்தப்படுகின்ற STARS இந்திய அரசு ஒப்புக்கொள்ள தூண்டுதலாக இருந்தது என்பது பொய் என மேற்கண்ட தரவுகளே உணர்த்துகின்றன. உண்மை என்னவென்றால், உங்கள் அரசாங்கமும், 1990 களில் இருந்து அடுத்தடுத்த வந்த மற்ற மத்திய அரசாங்கங்களைப் போல, உலக வங்கியின் சந்தை சித்தாந்தத்துடன் முற்றிலும் உடன்படுகிறது. ஆகையால், சமூக நீதி மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமத்துவ கல்வி முறையை உருவாக்க வேண்டுமென்ற அரசியலமைப்பின் முக்கியத்துவத்துற்கு எதிரானதாக உள்ளது

உலக வங்கியைப் போலவே, உங்கள் அரசாங்கமும் அரசு கல்வி முறையை (state-funded education system) அகற்றிவிட்டு அதற்கு பதிலாக  கார்பரேட்மயமாக்கப்பட்ட  மற்றும் மேல்தட்டுக்கான கல்வி முறையாக  மாற்ற விரும்புகிறது,  இக்கல்வி முறை நம் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 85% உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முஸ்லிம்கள், பழங்குடியினர், பெண்கள் மற்றும், உடல் ஊனமுற்றோர்களுக்கு எட்டாததாகவே இருக்கும். இவ்வாறு  கல்வியிலிருந்து அதிக அளவில் வெளியேற்றப்படுவது – வர்க்கம், சாதி, இனம், மதம், பாலினம், மொழி, பிறந்த இடம், இயலாமை; தகுதி, குறைந்த செயல்திறன்,; குறைந்த வருகை பதிவு; சமூக நீதித் திட்டங்களைத் திரும்பப் பெறுதல் (மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொள்கை, மற்றும் போதுமான கல்லூரி விடுதிகள், மற்றும் கல்வி உதவித்தொகை); பெரும்பான்மை மக்களை டிப்ளமோ படிப்புகளுக்கு தள்ளுப்படுவது போன்ற சாக்குகளின் அடிப்படையில் அமல்படுத்தப்படும்.

4. கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்த நாடும் நாட்டு மக்களும் முற்றிலுமாக மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிற நிலையில், இந்திய அரசும் உலக வங்கியும் STARS திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு தீவிரம் காட்டுகின்றன. நிர்வாக முன்னேற்பாடுகள் இல்லாமல் நான்கு மணி நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் திட்டமில்லாமல் செய்த ஊரடங்குத் தளர்வுகளால் நோய் தொற்றானது வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நோய் உருவாகியுள்ள பயமும் துன்பங்களும் இந்தியாவின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினசரி கூலிகள், சுயதொழில் செய்பவர்கள், வீடற்றவர்கள் மற்றும் வேலை இழந்த லட்சக்கணக்கானோர் என யாரையும் விட்டுவைக்கவில்லை.

மேலும் புலம் பெயர் தொழிலாளர்களின் மோசமான நிலையானது 1947 பிரிவினையில் இடம் பெயர்ந்த மக்கள் அடைந்த வேதனையோடு ஒப்பிடக்கூடியதாக உள்ளது. பொதுசுகாதார அவசரநிலை நிலவும் இச்சூழலில் மக்களின் முதன்மையான கவனமும் STARS திட்டத்தை நோக்கி இருக்காதென்பதால் இத்திட்டத்தினை கிடப்பில் போடுவதே சரியானதாகும். STARS திட்டத்தின் விளைவுகளை மதிப்பிடுவதற்கும், அதனை முன்னெடுத்துச் செல்வதற்கும் இத்திட்டத்தின் மீதான மக்களின் கருத்துகளையும் கேட்டவில்லை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இத்திட்டம் பற்றி விவாதங்களையும் நடத்தப்படவில்லை. இத்திட்டத்தை பற்றிய ஒரு திறந்த  தேசிய அளவிலான விவாதம் இல்லாமல், இதனை இந்திய மக்கள் மற்றும் குழந்தைகள் மீது திணிப்பதற்கான  அதிகாரமோ அல்லது தார்மீக உரிமையோ இந்திய அரசுக்கு கிடையாது. இந்த திட்டதின் பேராபத்தை பார்க்கும் போது STARS திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்து திட்டங்களையும் அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்று கோருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

5. இந்திய அரசு, மேற்சொன்ன கருத்துக்களை புறந்தள்ளுவதாளும் உலக வங்கியோடு முழுசக்தியுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டிருப்பதாலும், STARS திட்டத்தின் சில முக்கிய குறைபாடுகளையும் அது எவ்வாறு இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ள அடிப்படை உரிமையான அனைத்து குழந்தைகளும் தரமான கல்வி பெறுவதற்கான உரிமைக்கு பேராபத்தாக உள்ளது என்பதை கோடிட்டுக்காட்ட வேண்டியுள்ளது.

5.1 நெருக்கடிகளுக்குள்  நிறைந்துள்ள தற்போதைய கல்வி அமைப்பை  சீர்திருத்துவதற்கு “அரசு சாராத அமைப்புகள் (Non-sate actors) ” பங்கு முக்கியமானது என்று STARS திட்டம் கருதுகின்றது.  இதில் தனியார் கார்ப்பரேட் முதலீட்டாளர்கள்; தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடிமை சமூகம் / தொண்டு / மத அமைப்புகள்; கல்விக் கட்டணம் செலுத்தும் பெற்றோர்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் போன்றவை அடங்கும். அதேவேளையில் கல்வி அமைப்பின் குறைபாடுகளை சரி செய்வதில் இந்திய அரசுனுடைய கடப்பாடு இல்லை என்று மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மாநில அரசும், அதன் ஆலோசனை பெறாமல் வடிவமைக்கப்பட்ட STARS திட்டத்தினை அமல்படுத்துவதை கண்காணிக்க மட்டும் செய்ய முடியும்.

5.2 உலக வங்கி மற்றும் கார்ப்பரேட்களால் ஊக்குவிக்கப்பட்ட பல்வேறு வகையான PPP (Public Private Partnership – அரசு தனியார் கூட்டு) திட்டங்களின் எதிர்மறையான விளைவுகளை  இந்தியா ஏற்கனவே கண்டிருக்கிறது.  PPP -ன் செயல்தந்திரங்கள் கல்வியை தனியார்மயமாக்கியுள்ளன மற்றும் கல்வி செலவுகளால் உண்டாகும் பொருளாதார சுமையை குடும்பத்தின் மீது திணித்துள்ளது. கல்வி வணிகத்திற்கான ஒரு “சந்தையை” உருவாக்கியுள்ளதின் மூலம்  பொது சொத்துக்கள் மற்றும் நமது இளைஞர்களின் வாழ்க்கையின் மீது தங்கள் பிடியை வலுப்படுத்தியுள்ளார்கள். இவர்கள், பட்ஜெட் நிதி வெட்டுக்கள், பள்ளிகள் இணைப்பு / மூடுவதற்கான திட்டங்கள், கல்வி வணிகமயத்தை ஊக்குவிக்க வவுச்சர் திட்டங்கள்,  குறைந்த பட்ஜெட்டிலான தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பணம் திருப்பிச் செலுத்தும் திட்டங்கள் போன்றவை மூலம் பொது கல்வி முறையை அழிப்பதற்கான முயச்சிகளை முன்னெடுத்து செல்கிறார்கள்.

5.3 PPP சிறந்த தரமான கல்வியை வழங்காது. இது பின்தங்கிய மற்றும் விளிம்புநிலையில் உள்ளவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றுவதை அதிகப்படுத்துகிறது.  துரதிஷ்டவசமாக இதற்கான சட்ட அங்கீகாரம் RTE ACT 2009 மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் படி தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் 25% மாணவர்கள் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே பள்ளிகளில் செலுத்தும். இதன் வாயிலாக அரசு நிதி தனியாருக்கு மடைமாற்றப்படுகிறது.

5.4 STARS திட்டம்  கல்வியின் “உள்ளடக்கம்” மற்றும் கற்பித்தல்-கற்றல் செயல்முறை ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் தறாமல் “செயல் திறன்களுக்கே (competencies)” முக்கியத்துவம் தருகிறது. இத்திட்டத்தின் படி கல்வியின் நோக்கமானது வேலைவாய்ப்பு சந்தையில் கார்ப்பரேட் நிதி நிறுவனங்கள், தொழிற்சாலைகள்  மற்றும் உற்பத்தித் துறைகளுக்குத் தேவையான “திறமைகளால்” தீர்மானிக்கப்பட வேண்டியதாகக் காண்கிறது.

5.5 STARS திட்டம் முன்னரே தீர்மானிக்கப்பட்ட கற்றல் வெளிபாடுகளுக்கான (outcomes) அளவுகோல்களைக் கொண்டு கல்வியின் சாதனைகளை கண்காணிப்பதற்கான மதிப்பீடு முறைகளை உருவாக்குவதற்கு கவனம் தருகிறது.  இது சமூகவயப்பட்ட கற்றல்-கற்பித்தல் செயல்முறைக்கு பதிலாக ஆசிரியர்கள்  முன்னமே தயாரிக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பை வழங்குபவராகவும் மாணவர்கள் அதனை  பெறுபவர்களாகவும்  சுருக்குகிறது.

5.6 கல்வி முறையிலுள்ள(education system) அனைத்து சிக்கல்களுக்கும் தொழில்நுட்ப உதவியுடன் விரைவான – தீர்வுகளை வழங்க STARS திட்டம் முக்கியத்துவம் தருகிறது. கல்வி முறையிலுள்ள சிக்கல் அனைத்தும் பல பத்தாண்டுகளாக பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, கற்பித்தல் உபகரணங்களில் குறைபாடு,  சிறந்த ஆசிரியர்  பயிற்சியினை வழங்குவதில் தோல்வி, போதுமான நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காதது,  ஆகியவற்றின் விளைவாக உருவாக்கப்பட்டது தான்.

5.7 தற்போது பிரபலமாக உள்ள இணையதள கற்றல்-கற்பித்தல் முறையை அனைவருக்கும் கல்வி கொடுப்பதற்கான ஒரு தீர்வாகவும் அறிவை (homogenizing knoeledege) டிஜிடல் நுகர்வு அலகுகளாகவும் (digitally consumable units) மாற்றுவதற்கு  STARS திட்டம் தீவிரமாக பரிந்துரைக்கிறது. இணையதள  கற்பித்தல் முறையின் வரம்புகள் (pedagogical limitations) பற்றியோ அல்லது 5 முதல் 24 வயது வரையிலான குழந்தைகள் உள்ள குடும்பங்களில் 8% வீடுகளில் மட்டுமே கணிணி போன்ற மின்னனு சாதனம் மற்றும் இணைய இணைப்பு இரண்டும் உள்ளதால் மிக அதிக அளவில் கல்வியிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட வாய்புள்ளதைப் பற்றியோ STARS திட்டத்திற்கு எந்தவிதக் கவலையும் இல்லை. இணைய வழிக் கற்றல் என்பது தற்போதுள்ள வகுப்பறை அடிப்படையிலான கற்றல்-கற்பித்தல் முறைக்கு கூடுதல் உதவியாக மட்டுமே  இருக்க முடியும். பெரும்பான்மை குழந்தைகள் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய மற்றும் விளிம்பு நிலை பிரிவுகளிலிருந்து படிக்க வருவதினால் இணையக்  கல்வி முறையானது  வகுப்பறை அடிப்படையிலான கற்றல்-கற்பித்தல் முறைக்கு மாற்றாக முடியாது.

5.8 கல்வி வெளிப்பாடுகள்(outcomes) மற்றும் சாதனைகளை மதிப்பீடு செய்வதற்கு “தகுதி அடிப்படையிலான” அமைப்புகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதாக STARS கூறுகிறது. இருப்பினும் சாதி, அந்தஸ்து, பாலினம் மற்றும் மத ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடு ஆகியவற்றை கல்விக் கொள்கைகளால் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. தகுதி(merit) என்பது வெறும் சலுகையாக இருக்குமானால் அது அகற்றப்பட வேண்டும்.

6. அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை உத்தரவாதம் செய்துள்ள இந்திய அரசின் அரசியலமைப்புக்கு STARS திட்டம் ஒரு நேரடி சவாலாகும். அரசியலமைப்பு சோசலிச மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்திய அரசின் கொள்கைகள் அனைவருக்குமான சமூக நீதி மற்றும் சமூக நலன்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதன் பொறுப்புகளை உலக வங்கியிடமோ அல்லது “அரச சார்பற்ற அமைப்புகளிடமோ” தள்ளிவிட முடியாது.

7. ஆகவே, உலக வங்கியுடன் இணைந்து STARS திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்தையும் இந்திய அரசு செய்யக்கூடாது. மேலும் இத்திட்டத்திற்காக உலக வங்கியிடமிருந்து கடனாக எந்த நிதியையும் ஏற்கக்கூடாது என்று AIFRTE கோருகிறது.

நன்றி மற்றும் அன்புடன்.

[பேராசிரியர். ஜக்மோகன் சிங், தலைவர் AIFRTE;
Dr. விகாஸ் குப்தா, அமைப்பு செயலாளர் AIFRTE.]

*உரிய முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த 5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது?கல்வித்துறை குழப்பத்துறையாக மாறி அச்சுறுத்துகிறதா?

தமிழ்நாட்டின் முன்னாள் கல்விஅமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்களின் முகநூல் பதிவிலிருந்து...


“மரமேறி விழுந்தவனைக் கடா ஏறி மிதிச்சதாம்!”

“ எங்களிடம் கேட்காமல் உயர்கல்வி படித்துவிட்டார்கள்”,  என்று ஏறத்தாழ 5000 ஆசிரியர்கள் மீது தொடக்கக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக வந்துள்ள செய்திகளைப் பார்க்கும் போது, எனக்கு மேலே இருக்கும் பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது.

ஆசிரியர்கள் கூடுதலாகக் கல்வி கற்றுவிட்டார்கள் என்று காரணம் சொல்லி, அவர்கள் மீதுக் கல்வித்துறையே நடவடிக்கை மேற்கொள்வதென்பது நகை முரணாகத் தோன்றினாலும், அனுமதி பெறவில்லையெனச் சில விதிகளைச் சுட்டிக்காட்டி, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஏற்கனவே இந்த அரசால், ஆசிரியர் சமுதாயம் பல வழிகளில் பழிவாங்கப்பட்டு, பலர் மீது குற்ற வழக்குகள் புனையப்பட்டு, மிகுந்த துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றது. அவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என எவ்வளவோ வலியுறுத்தியும் ஏற்றுக்கொள்ளாமல்  இன்றுவரை தமிழக அரசு பாராமுகமாகப் பிடிவாதப் போக்குடன் நடந்து கொள்கிறது.

இப்போது “ கொரொனா” நோய்த்தொற்றால் கடந்த நான்கு மாதங்களாக நாடே அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில், ஏதோ ஒரு சப்பைக் காரணத்தைக் காட்டி ஐயாயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது கொஞ்சமும் மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல; ஈர நெஞ்சம் படைத்த எவராலும் எப்போதும் ஏற்க முடியாத செயலும் கூட!

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடனே தலையிட்டு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஏற்கனவே அவதிக்கு ஆளாகி இருக்கும் ஆசிரியர்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கிடும் தொடக்கக் கல்வித்துறையின் இந்த ஆணையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

கல்வித்துறை, ஒருபோதும் கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது!

“வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்”

நினைவிற் கொள்க!

செய்தி: தினகரன் / தந்தி டிவி

*🌟உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பாடப்பிரிவு தேர்வு செய்ய உதவி எண்கள் அறிவிப்பு.*

*🌟உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பாடப்பிரிவு தேர்வு செய்ய  உதவி எண்கள் அறிவிப்பு.*

NHIS - New Claim Form...

ஜூலை 27, வரலாற்றில் இன்று.இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று (1922).

ஜூலை 27, வரலாற்றில் இன்று.

இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று (1922).

உண்ணும் உணவு குளுக்கோஸ் எனும் சர்க்கரையாக ரத்தத்தில் சென்று மாற்றமடைகிறது என்பதையும், அந்தச் சர்க்கரையின் அளவை கணையத்தில் சுரக்கும் இன்சுலின் கட்டுப்படுத்துகிறது என்பதையும் 1869ம் ஆண்டு ஜெர்மனை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் பால் லாங்கர்ஹேன்ஸ் என்பவர்தான் முதலில் கண்டுபிடித்தார். சாதாரணமாக இறந்தவர்களின் உடலையும் நீரிழிவு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலையும் ஆராய்ச்சி செய்தபோது நீரிழிவாளர்களின் கணையத்தில் இருந்து ஏதோ ஒரு திரவம் குறைவாக சுரப்பதைக் கண்டுபிடித்தார்.

பால் லாங்கர்ஹேன்ஸின் கருத்தை உறுதிப்படுத்துவதற்காக, 1889ல் ஜெர்மனியை சேர்ந்த ஆஸ்கர் மின்கோவ்ஸ்கி மற்றும் ஜோசப் வான்மெரிங் ஆகிய இரு மருத்துவர்கள் ஒரு நாய்க்கு கணையத்தை அகற்றிவிட்டு, நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள். கணையத்தை இழந்த பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, நாய் இறந்துபோனது. கணையத்தில் சுரக்கும் ஏதோ ஒரு வேதிப்பொருள்தான் இதற்குக் காரணம் என்று தெரிந்தது.

1910ம் ஆண்டு சர் எட்வர்ட் ஆல்பர்ட் ஷார்பே என்பவர், இந்த வேதிப்பொருளுக்கு இன்சுலின் என்று பெயர் வைத்தார். லத்தீன் வார்த்தையான Insula என்பதில் இருந்து Insulin என்ற வார்த்தையை உருவாக்கியவர் இவர். 1921ம் ஆண்டு டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் ஃப்ரெடரிக் பேண்டிங், சக மருத்துவர் சார்லஸ் பெஸ்ட் இருவரும் 10 நாய்களின் கணையத்தை அகற்றிப் பாதுகாத்து வைத்து விட்டு, அவற்றுக்கு சர்க்கரை அளவு அதிகமாகும் என்பது தெரிந்தே காத்திருந்தார்கள்.

சர்க்கரை அளவு அதிகமானவுடன் அகற்றப்பட்ட கணையத்தில் இருந்து இன்சுலினை எடுத்து, நாய்களுக்கு ஊசியின் வழியாக செலுத்தினார்கள். இன்சுலின் செலுத்தியவுடன் நாய்கள் ஆரோக்கியமாக இருந்தன. ஆகவே, இன்சுலின் சுரப்பு குறைந்தால் ஊசியாகப் போட்டுக்கொண்டு சமாளித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். அடுத்து முயல் குட்டி, பசு, பன்றி என விலங்குகளின் கணையத்தில் இருந்து இன்சுலினை தயாரிக்க ஆரம்பித்தனர்.

1922ல், டொரோண்டோ மருத்துவமனையில் நீரிழிவுக்காக சிகிச்சைக்கு வந்த லியானார்ட் தாம்ஸன் என்ற டீன் ஏஜ் பையன்தான் இன்சுலின் ஊசி பயன்படுத்திய முதல் பயனாளர்! நாளடைவில் மிருக வதைக்கு எதிரான குரல்கள், அறிவியலின் வளர்ச்சி, இன்சுலினின் பிரமாண்ட தேவை போன்ற காரணங்களால் பயோடெக்னாலஜி, வேதியியல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் ஆய்வகத்திலேயே இன்சுலின் தயாரிக்கும் முறை இப்போது உருவாகிவிட்டது!

ஜூலை 27, வரலாற்றில் இன்று. ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று(1967).

ஜூலை 27,
வரலாற்றில் இன்று.

ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று(1967).

                 
ஏ.டி.எம்மை முதன் முதலில் உருவாக்கியவர் ”ஜான் ஷெப்பர்ட் பாரன்”. இந்த ஏ.டி.எம் இயந்திரம் உருவான கதை சுவராஸ்யமானது.
ஒரு நாள் அவசரத் தேவைக்காக வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது,வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார் பாரன்.
வீடு திரும்பிய பாரன் குளிக்க சென்றார்.
குளித்துகொண்டிருந்த பாரனுக்கு இன்றைக்கு அவசரதேவைக்கு பணம் எடுக்கமுடியாமல் போனதைப் பற்றிய சிந்தனையே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த சிந்தனையின் போது உதித்ததுதான் இந்த ஏ.டி,எம், இயந்திரம்.


1967ஆம் ஆண்டு ஜூலை் 27 அன்று வடக்கு லண்டனில் “பார்கிளேஸ் வங்கியில்” பாரன் உருவாக்கிய ஏடிஎம் முதல் முதலில் நிறுவப்பட்டது.

 ரசாயனக் குறி இடப்பட்ட சிறப்புக் காசோலையையும்,
ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” எண்ணையும் கொண்டு அந்த இயந்திரத்தில் இருந்து பணம் பெற முடிந்தது.
ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” நம்பரை நினைவில் வைத்துக்கொள்வது சற்று சிரமமாக இருக்கிறது, எனவே அதை 4 இலக்கம் கொண்ட எண்களாக மாற்றி தாருங்கள் என்று மனைவி ”கரோலின்” கூறியதை ஏற்று, ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” நம்பரை நான்கு இலக்கமாக குறைத்தார் பாரன்.

இத்தனைக்கும் சொந்தக்காரரான ”ஜான் ஷெப்பர்ட் பாரன்” இந்தியாவில் ஷில்லாங்கில் பிறந்தவர் என்பது மற்றுமொரு சிறப்பு.