பன்மொழிக்கற்றல்,
மும்மொழிக்கொள்கை,
சமசுகிருதம் திணிப்பு
போன்றவற்றை
தமிழகம் ஏற்குமா?
எல்லா உயர் படிப்புகளுக்கும்
நுழைவுத்தேர்வு
என்பது உயர்கல்வியை எட்டாக்கனி ஆக்காதா?
கல்விக்கட்டணங்கள்
விலைவாசியைப்போல,
பெட்ரோல்,டீசல் விலையைப்போல,
அன்றாடம் உயரும் ஆபத்து
கல்விகற்பதில் இருந்து குழந்தைகளை விரட்டி விடாதா?
#தேசமே!எழு!
-------------------------------------------
புதியகல்விக்கொள்கை-2020 இல்
சில குறிப்புகள்.
*34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.
*பன்மொழி கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை வழிவகை செய்கிறது.
*இந்திய மொழிகளுக்கான இலக்கியம், அறிவியல் பூர்வ வார்த்தைகளை கண்டறிய கவனம் செலுத்தப்படும்.
*மாநில மொழிகளுக்கு இணையாக புதிய கல்விக் கொள்கையில் பாடத் திட்டங்கள் இருக்கும்.
*மாநில மொழிகளில் கல்வி கற்க இணையதளம் மூலம் மாணவர்களுக்கு பாட திட்டங்கள் அறிமுகம்.
*புதிய கல்வி கொள்கை மூலம் 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும்.
*புத்தகம் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டு மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும்.
*மாற்றுதிறனாளிகள் எளிதாக கல்வி கற்க புதிய மென்பொருட்கள் மூலம் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
*மாற்று திறனாளி குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய புதிய பாட திட்டம் அறிமுகம்.
*12ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி அமலில் இருக்கும்.
*செயற்கை நுண்ணறிவு முறையில் மாணவர்கள் ரேங்க் கார்டு தயார் செய்யப்படும்.
*5ம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி கட்டாயம்.
*8 ம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வியில் கற்பிக்கப்படும்.
*மாணவர்கள் உள்ளூர் கைவினை தொழில்களை கற்றுக்கொள்ள நடவடிக்கை.
*இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் கல்வி கற்க வைப்பது ஆசிரியர்களின் பொறுப்பாக்கப்பட்டு உள்ளது.
*குழந்தைககளுக்கு எளிதான வழிமுறைகள் மூலம் ஆரம்ப கல்விதரப்படும்.
*அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி முறை ஒரே மாதிரியாக இருக்கும்.
*தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு தர நிர்ணயம் செய்ய நடவடிக்கை.
* புதிய கல்விக் கொள்கையில்
கல்வித் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
*2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த இந்த புதிய கல்விக்கொள்கை வழி வகைசெய்கிறது.
*முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக் கொள்கை நடைமுறையில் இருக்கும்.
*இரண்டாம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறையில் இருக்கும்.
*தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
*இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்
*மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும்.
*5 + 3 + 3 + 4 என்ற முறையில் பள்ளி வகுப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
*6ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் கற்பிக்கப்படும்.
*பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை தொடரவழிவகை உண்டு.
* உயர்கல்வியில் எம்.பில் படிப்புகள் நிறுத்தப்படும்.
*15 ஆண்டுகளில் இணைப்பு கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.
*உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குப்படுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்.
*நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை.
*கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் அமைக்கப்படும்.
* உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள். 2035 க்குள் 50% மொத்த சேர்க்கை இலக்கு நிர்ணயம்.
* 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்தவே புதிய கல்விக் கொள்கை.
* நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக அமைய செய்யப்படும்.
* தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விரிவாக்கப்பட்டு சமூக அறிவியல் கள ஆய்வுகளுக்கு அனுமதி.
* கல்வித் துறைக்கான புதிய ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பு தரும்.
* கல்வித் துறையில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்
* அனைவருக்குமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.
* தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கும், இலக்கியப் படைப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கப்படும்.
* பள்ளிப்படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தொழில்திறன் இருக்கும்.
*புதிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம்.
*என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும்.
*பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் விருப்ப மொழியாக இருக்கும்.
*பள்ளிகள் மற்றும் உயர்கல்வியில் விருப்ப மொழியாக சமஸ்கிருதம் சேர்க்கப்படும்.
*சமஸ்கிருதம் மட்டுமல்லாமல், இதர தொன்மையான மொழிகளும் வழங்கப்படும்.
*நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக இருக்கும்.
*கல்விக் கட்டணங்கள் குறித்து கல்விக் கொள்கையில் வரிகாட்டல் செய்யப்பட்டுள்ளது.
*தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கும் கட்டணங்கள் வெளிப்படையாகவும், முழுமையாகவும் வெளியிடப்படும்.
*கல்விக்கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது.