புதன், 29 ஜூலை, 2020

*🟣ஊடங்கு தளர்வுகள் என்னென்ன? மத்திய அரசு அறிவிப்பு.-MHA - Unlock 3 Order and Guidelines Dated 29.7.2020.*

*🟣ஊடங்கு தளர்வுகள் என்னென்ன? மத்திய அரசு அறிவிப்பு.-MHA - Unlock 3 Order and Guidelines Dated 29.7.2020.*

*ஊரடங்கு தளர்வுகள்... மத்திய அரசு அறிவிப்பு..!*

ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு

நாடு தழுவிய அளவில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளை அளித்து மத்திய அரசு அறிவிப்பு

3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது

யோகா, ஜிம் பயிற்சி மையங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திறக்க அனுமதி

தனிநபர்கள் இரவு நேரங்களில் நடமாட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்

பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான தடை
தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிப்பு

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்

சுதந்திர தின நிகழ்ச்சியில் ஏற்கனவே உள்ள அளவீடுகளை விட, கூடுதல் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

எவை, எவை இயங்காது....

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை
மூடப்பட்டிருக்கும்

மெட்ரோ ரயில், தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள் இயங்குவதற்கு தடை தொடர்கிறது

நீச்சல் குளங்கள், மதுபான பார்களை திறப்பதற்கான தடை தொடரும் என அறிவிப்பு

மத நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை நீடிப்பதாக அறிவிப்பு

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்

எவற்றிற்கு அனுமதி உண்டு.!

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கியிருப்போர் தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளுடன் அனுமதி

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப
விருப்பம் தெரிவிப்போர், குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்படுவர்

மாஸ்க் அவசியம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின நிகழ்வுக்கு அனுமதி

மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும், சரக்குப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கிடையாது

மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும், தனிநபர் போக்குவரத்து பற்றி மாநிலங்கள் முடிவெடுக்க அனுமதி








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக