புதன், 29 ஜூலை, 2020

ஜூலை 29, வரலாற்றில் இன்று. நாசா எனப்படும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பு தொடங்கப்பட்ட தினம் இன்று(1958).

ஜூலை 29,
வரலாற்றில் இன்று.


 நாசா எனப்படும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பு தொடங்கப்பட்ட தினம் இன்று(1958).


 இது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும்.

இது 1958ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.

 விண்வெளி ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வானூர்தியியல் ஆராய்ச்சிகளில் எதிர்காலத்துக்கான முன்னோடியாக இருத்தல் என்பது நாசாவின் தாரகமந்திரமாக
உள்ளது. பரிதியியற்பியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல், சூரியக் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றியும் ஆளற்ற விண்ணுளவிகள் அனுப்பி ஆராயந்தறிதல்,
பெருவெடிப்புக் கோட்பாடு போன்ற வானியற்பியல் கோட்பாடுகளை ஆராய்வது போன்ற பணிகளை நாசா செய்துவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக