சனி, 1 ஆகஸ்ட், 2020
வெள்ளி, 31 ஜூலை, 2020
ஜூலை 31, வரலாற்றில் இன்று.இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் இன்று
ஜூலை 31, வரலாற்றில் இன்று.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் இன்று
.
பாண்டிய மண்டலத்தின் படைத்தளபதியாக இருந்த கரியான் சர்க்கரை என்ற தளபதிக்கு பாண்டி வேந்தன் காங்கயத்தை ஒட்டிய நத்தக் கரையூரை பரிசாக அளித்தான். இந்த சர்க்கரை மரபில் பிறந்தவர்தான் சின்னமலை. பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தகிரி. பழையகோட்டைக்குப் பக்கத்தில் மேலப் பாளையத்தில் 1756 ஏப்ரல் 17ஆம் தேதி பிறந்தார் என்று பழையகோட்டை ஜமீன் பரம்பரைக் கணக்குப் பிள்ளையின் வீட்டில் அண்மையில் கிடைத்த ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன.
1760இல் மைசூர் மன்னர் ஆனார் ஹைதர் அலி. அப்போது கொங்குநாடு மைசூரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த்து. தென் கொங்கு மண்டலத்தில் வசூலிக்கப்படும் வரிப்பணம் மைசூருக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆங்கிலேயருக்கு எதிராகப் போரில் தோற்று விட்டார் ஹைதர் அலி.
மைசூருக்குச் செல்ல வேண்டிய வரிப்பணத்தைப் பறித்து ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார் தீர்த்தகிரி. திவானுக்கு என்ன பதில் சொல்வது என்று சிப்பாய்கள் கேட்டதற்கு, “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவே ஒரு சின்னமலை பறித்துக்கொண்டான்” என்று சொல் என்றாராம் தீர்த்தகிரி. அது முதலாக, சின்னமலை என்ற பெயர் நிலைத்து விட்டது.
ஹைதர் அலிக்குப் பிறகு பதவியேற்ற திப்பு சுல்தானை சந்திக்கச் சென்ற சின்னமலை அங்கேயே போர்ப் பயிற்சி பெற்றார். பின்னர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் சின்னமலையை தளபதியாக்கினார் திப்பு சுல்தான்.
மாலஹள்ளி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் 40,000 சிப்பாய்களை விரட்டியடித்தார் சின்னமலை. பின்னர் 1799ஆம் ஆண்டு நான்காவது மைசூர் போரில் திப்பு சுல்தான் சேனை வீழ்ந்த்து. தப்பிவந்த சின்னமலை, நொய்யல் ஆற்றின் கரையில் ஓடாநிலை என்னும் இடத்தில் வலுவான கோட்டை ஒன்றை அமைத்துக் கொண்டார்.
கோவை கோன் என்றழைக்கப்பட்ட சின்னமலை ஐந்தாண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்தார். திப்புவின் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளும் ஆங்கிலேயர் வசமாகி விட்டன. ஆனால் கொங்கு மண் மட்டும் அவர்களுக்கு பெரிய சவாலாக இருந்த்து.
சின்னமலையை வீழ்த்த வேண்டும் என்று கர்னல் மேக்ஸ்வெல் தலைமையில் திரண்டு வந்த ஆங்கிலேயப் படைக்கும் சின்னமலையின் படைக்கும் இடையே 1801ஆம் ஆண்டு முதல் போர் நிகழ்ந்தது. வெற்றி சின்னமலைக்கே கிடைத்த்து. 1802ஆம் ஆண்டு மேக்ஸ்வெல் மீண்டும் படை திரட்டி வந்தான். அவனுடைய தலையைக் கொய்து காட்சிக்கு வைத்தார் சின்னமலை.
சின்னமலையின் படைத்தலைவர் கருப்பச் சேர்வை பிரெஞ்ச் மொழி பயின்றிருந்தார். பிரெஞ்சுக்காரர்களை வரவழைத்து துப்பாக்கிப் பயிற்சிகள் தரப்பட்டது. பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும் அறிந்து கொண்டார் சின்னமலை.
1804ஆம் ஆண்டு கர்னல் ஹாரிஸ் தலைமையில் ஆங்கிலேயப் படை சின்னமலையுடன் மோதியது. அப்போதும் சின்னமலை வெற்றி பெற்றார். ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் பெரும்பெரும் பீரங்கிகளுடன் புறப்பட்டனர். பீரங்கிகளை எதிர்த்துப் போரிட முடியாது என்பதால், பழனி மலைப்பகுதியில் இருந்த கருமலையில் தஞ்சம் புகுந்து விட்டார் சின்னமலை. அவரது கோட்டை தகர்க்கப்பட்டது.
வீரத்தால் அவரைப் பிடிக்க முடியாத ஆங்கிலேயர்கள் தமது வழக்கமான சூழ்ச்சியைப் பயன்படுத்தினர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் வாய்த்தது போல, சின்னமலையைக் கைது செய்ய அவருடைய சமையல்காரனாக இருந்த நல்லப்பன் வாய்த்தான். சூழ்ச்சியால் சின்னமலையைக் கைது செய்த ஆங்கிலேயர்கள் 1805 ஜூலை 31ஆம் நாள் அவரைத் தூக்கிலிட்டனர்.
வெள்ளையரை எதிர்த்து போரில் மூன்றுமுறை வெற்றி பெற்ற சின்னமலையின் வரலாறு இன்னும் பலருக்கும் தெரியாது, முழுமையாகவும் தெரியாது.
சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

ஜூலை 31, வரலாற்றில் இன்று. உத்தம் சிங் நினைவு தினம் இன்று (1940).
ஜூலை 31, வரலாற்றில் இன்று.
உத்தம் சிங் நினைவு தினம் இன்று (1940).
ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும்...
இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.
1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.
2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.
ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.
"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.
இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..
ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற பஞ்சாப் இளைஞன் சபதம் செய்தான்...
சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங்.
உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் இதை “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறி காந்தி அறிக்கை வெளியிட்டார்.
இதனை கடுமையாக எதிர்த்து, உத்தம் சிங்கின் செயலைப் பாராட்டி கடிதம் எழுதினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.
"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்து விடுங்கள்.
இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக் கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"
என்று முழங்கினர் உத்தம் சிங்.
ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தே மாதர கோஷத்துடன் தூக்குக் கயிறை முத்தமிட்டார்.
“தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங்,
“உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்து வர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம் மீதி எலும்புக் கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.
உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜ மரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.
தேசத்தை நேசிக்கும் அனைவரும் அவரது தியாகத்தைப் போற்றுவோம். எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் உத்தம்சிங் பற்றி? இந்த பதிவைப் படித்தறிந்து இக்கால தலைமுறையினரையும் உத்தம் சிங் பற்றி தெரிந்து கொள்ள செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு வீர வரலாற்றை உணர்வாக சொல்லிக் கொடுங்கள்.

ஜூலை 31, வரலாற்றில் இன்று.இந்தியாவில் செல்போன் சேவை தொடங்கிய தினம் இன்று (1995).
ஜூலை 31,
வரலாற்றில் இன்று.
இந்தியாவில் செல்போன் சேவை தொடங்கிய தினம் இன்று (1995).
1995 ஆம் ஆண்டு இதே நாளில் முதன் முதலாக மக்களுக்கான செல் போன் சேவை இந்தியா- கொல்கத்தாவில் துவங்கியது....
1995 ஜூலை 31 அன்றே மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் சுக்ராம் அவர்கள் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்களுடன் செல்போனில் பேசி தொடங்கி வைத்தார்.

ஜூலை 31, வரலாற்றில் இன்று. சாரணர் இயக்கம் தொடங்கப்பட்ட தினம் இன்று.
ஜூலை 31,
வரலாற்றில் இன்று.
சாரணர் இயக்கம் தொடங்கப்பட்ட தினம் இன்று.
சாரணர் இயக்கம் உலகளாவிய அளவில் செயல்படும் ஓர் இளைஞர் இயக்கமாகும். இது 1907 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி சர் பேடன் பவல் பிரபு என்பவரால் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் இளைய சமூகத்தினர் மத்தியில் உடல், உள, சமூக ரீதியான பல மேம்பாடுகளை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சாரணர் இயக்கம் ஆண்கள் மட்டும் இந்த இயக்கத்தில் இருந்தனர். அதன்பின் 1910 ஆம் ஆண்டில் பெண்களுக்காக இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது உலகின் 216 நாடுகளில் 8 மில்லியனுக்கும் அதிகமான சாரணர்கள் உள்ளனர்.

இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை வெளியீடு _ தமிழக பள்ளிக்கல்வித்துறை
இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை வெளியீடு _
தமிழக பள்ளிக்கல்வித்துறை........
Click here to G.O
தமிழக பள்ளிக்கல்வித்துறை........
Click here to G.O
புதியகல்விக்கொள்கை-2020 வெளியீடு! மத்திய அரசின் கல்வித்துறை வலைத்தளத்தில் பதிவேற்றம்!
புதியகல்விக்கொள்கை-2020 வெளியீடு!
மத்திய அரசின் கல்வித்துறை
வலைத்தளத்தில் பதிவேற்றம்!
For English Version Click Here
For Tamil Version Click Here
மத்திய அரசின் கல்வித்துறை
வலைத்தளத்தில் பதிவேற்றம்!
For English Version Click Here
For Tamil Version Click Here
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)