எங்களுக்கென ஒரு மொழி இருக்கிறது !அந்த மொழிக்கு ஆட்சி மொழிப் பட்டியலில் இடம் தந்தாக வேண்டும்!
இடம் தரப்படும் வரை ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருந்து வரட்டும்!
ஆங்கிலம் தொடர்ந்து நீடிப்பதால், தெரிந்தோ தெரியாமலோ
இந்தி வருவதால் இழைக்கப்படும் ஏற்றத்தாழ்வு இருக்காது!
நாடாளுமன்ற விவாதத்தில் பேரறிஞர்.அண்ணா அவர்களின் உரை!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அண்ணா: எங்களுக்கென ஒரு மொழி இருக்கிறது . அந்த மொழிக்கு ஆட்சி மொழிப் பட்டியலில் இடம் தந்தாக வேண்டும் என்றுகேட்கிறோம் : ' அவ்வாறு இடம் தரப்படும் வரை, ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருந்து வரட்டும்' என்று கூறுகிறோம்.
ஆங்கிலம் தொடர்ந்து நீடிப்பதால், தெரிந்தோ தெரியாமலோ இந்தி வருவதால் இழைக்கப்படும் ஏற்றத்தாழ்வு இருக்காது; அரசாங்கத்தில் குழப்பம் வராது ; ஒரு வட்டாரம் மற்ற வட்டாரங்களை அடக்கி ஆளுகிறது என்ற அச்சம் நிலவாது!
அடிப்படைத் தத்துவத்தைக் கவனிக்க மறுக்கின்றனர்
"ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டது போல், இந்தியையும் ஏன் கற்றுக் கொள்ளக்கூடாது?" என்று சிலர் எங்களைப் பார்த்துக் கேட்கிறார்கள். ஒருகணம் நினைத்துப் பார்த்தால், என்னுடைய மகன்கள்--இன்னும் சொல்லப்போனால் என்னுடைய பேரப் பிள் ளைகள்-இந்தி எழுத்துக்களைத் தடுமாறி உச்சரிக்க ஆரம்பித்தால், அதேபோல் திரு. வாஜ்பாயின் பேரப் பிள்ளைகள்.......
ஏ. டி. மணி :- " வாஜ்பாயிக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை ."
அண்ணா:-" இப்பொழுது புரிகிறது - ஏன் வாஜ்பாய் இப்படிப் பேசினார் என்று. அவருக்குச் சொல்வேன்-இந்தியை ஆட்சிமொழியாக்குவது பிறகு இருக்கட்டும்; முதலில் இன்னொரு மொழி பேசும் பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள்ளும்."
அநீதியால் வேதனை-உணர மறுப்பானேன்?
இந்தி பேசுகிற பகுதியில் பிறந்து வளரும் குழந்தை கள், தாயின் மடியிலேயே இந்திப் பாடல்களைக் கேட் கின்றன ; வயலிலும் வரப்பிலும், வீட்டிலும் தோட்டத்திலும், அங்காடி வீதியிலும், ஆற்றோரத்திலும், வாழ்வின் எல்லாப் பக்கத்திலும், நாள் முழுவதும் இந்தி மொழிப் பயிற்சி அவர்களுக்குக் கிடைக்கிறது! புத்தகங்களைப் புரட்டுவதால் அவர்கள் இந்தி கற்றுக்
கொள்ளவில்லை; இந்தி பேசும் இடத்தில் பிறந்ததாலேயே அவர்கள் இந்தியைக் கற்றுக்கொண்டு விடுகிறார்கள்! உங்களுக்குப் பரம்பரைச் சொத்தாக வருவது, எங்களுக்குப் பள்ளிக்கூடத்து அறிவாகக் கிடைக்க வேண்டும். ஒத்தமுறையில் இதில் எப்படிப் போட்டியிட முடியும்?
ரோமப் பேரரசு காலத்தில் ரோம் நாட்டுப் பிரபுக்கள் மேலேயிருந்து வேடிக்கை பார்க்க, கீழே மைதானத்தில் கோரப் பசியுடன் பாய்ந்துவரும் சிங்கங்களுடன் அடிமை வீரர்கள், வெறும் கைகளுடன் சண்டை போடுவார்களாம். அப்படிப்பட்ட சண்டை களிலிருந்து ஒரு சில அடிமைகள் உயிருடன் திரும்பியிருக்கக்கூடும்-நமது நண்பர் சத்தியநாராயணா இந்தி பேசவில்லையா, அதைப்போல! ஆனால் மற்றவர்கள், சிங்கங்களிடம் சிக்கி, சின்னாபின்னமாகக் கிழித்து எறியப்பட்டிருப்பார்கள் !
எங்களுக்கும் அத்தகைய கதி வரவேண்டுமென ஏன் நினைக்கிறீர்கள்? நாங்கள் என்ன குற்றம் செய்து விட்டோம்--இப்படிப்பட்ட தண்டனைகளுக்கு ஆளாக?
உங்களுடைய மொழியை நாங்கள் படித்து, உங்களுடன் நாங்கள் எப்படிப் போட்டி போட முடியும் ? அது பெரிய அநீதி- சித்திரவதை!
ஒரு மொழியை ஒரு வட்டார மொழியை மற்றெல்லா மொழிகளுக்கும் மேலாக ஆட்சிமொழியாக ஆக்க நினைப்பதில் உள்ள அநீதி உங்களுக்குப் புரியவில்லையா? எங்களுக்கு எவ்வளவு மனவேதனையை அது தருகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா ? இந்திக்காக எவ்வளவுதான் பிடிவாதமாக நீங்கள் வாதாடினாலும்--
ஆற அமர நீங்கள் யோசித்தால் நான் கூறுவது உங்களுக்குப் புரியும் என்று நம்பு கிறேன்.
[04-03-6195-இல் மாநிலங்களவையில், பேரறிஞர் அண்ணா அவர்கள் குடியரசுத் தலைவர் உரையின்
மீது நடைபெற்ற விவாதத்தில் ஆற்றிய உரையில் இருந்து ]