வியாழன், 3 செப்டம்பர், 2020

கல்வித் தொலைக்காட்சியில் 31.8.2020 முதல் 02.09.2020 முடிய ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் தொகுப்பு

கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
(தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்கநிலை)

1. II STANDARD - ENGLISH - OUR SWEET HOME


செப்டம்பர் 3,வரலாற்றில் இன்று.ராஜேஸ்வரி சட்டர்ஜி நினைவு தினம் இன்று (2010).

செப்டம்பர் 3,
வரலாற்றில் இன்று.

ராஜேஸ்வரி சட்டர்ஜி நினைவு தினம் இன்று (2010).


ராஜேஸ்வரி சாட்டர்ஜி  இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர். இவர் நுண்ணலை மற்றும் உணர் பொறியியல் முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் 1949ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டத்தை மின் பொறியியல் துறையில் பெற்றார் . இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பேராசிரியரான இவர் அக்கழகத்தின் மின் தொடர்பு பொறியியல் துறையின் தலைவராக ஓய்வு பெற்றார்.


விருதுகள்


மவுண்ட்பேட்டன் பரிசு (இங்கிலாந்து) - சிறந்த கட்டுரைக்காக மின் மற்றும் வானொலி பொறியியல் கழகம் வழங்கியது.


ஜே.சி. போஸ் நினைவு பரிசு - சிறந்த ஆராய்ச்சி கட்டுரைக்காக பொறியாளர்கள் நிறுவனத்தின் மூலம் வழங்கபட்டது.


ராம்லால் வாத்வா விருது - சிறந்த ஆராய்ச்சி மற்றும் விரிவுரையின் மூலம் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பெற்றார்.

செப்டெம்பர் 3,வரலாற்றில் இன்று.சிறந்த தமிழ் அறிஞருரும், படைப்பாளியுமான பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு தினம் இன்று.

செப்டெம்பர் 3,
வரலாற்றில் இன்று.

சிறந்த தமிழ் அறிஞருரும், படைப்பாளியுமான பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு தினம் இன்று.

1. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில் (1909) பிறந்தார். தந்தை குறுநிலக்கிழார். மளிகைக் கடையும் வைத்திருந்தார். 4ஆவது வயதில் தந்தையை இழந்தவர், உள்ளூர் திண்ணைப் பள்ளியிலும், பிறகு அரசு தொடக்கப் பள்ளியிலும் படித்தார்.

2. படிப்பைத் தொடர முடியாததால் அண்ணனுக்கு உதவியாக வயல் வேலை செய்தார். மாடு மேய்த்தார். தாயின் விருப்பத்தால், ராஜாமடம் என்ற இடத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 8ஆம் வகுப்பு படித்தபோது லட்சுமணன் என்ற இவரது பெயரை ‘இலக்குவன்’ என மாற்றினார் தமிழ் ஆசிரியர். அதுமுதல் தமிழ் மீதான ஆர்வம் அதிகமானது.

3. தமிழில் பிறமொழிக் கலப்பைத் தவிர்த்தார். ஒரத்தநாட்டில் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றார். 1936இல் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்று, அங்கேயே 
விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆங்கிலப் பாடத்திலும் தேர்ச்சி பெற்று பிஓஎல் பட்டம் பெற்றார். தமிழ் மொழியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து எம்ஓஎல் பட்டமும் பெற்றார்.

4. குலசேகரன்பட்டினத்தில் தொடங்கப்பட்ட தமிழ் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். பின்னர், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் தமிழ் துறைத் தலைவராகவும் பணிபுரிந் தார். அரசியல் காரணங்களால் அக்கல்லூரியில் இருந்து நீக்கப் பட்டார்.

5. தமிழ் வளர்ச்சிக்காக 1962இல் தமிழ்க் காப்புக் கழகத்தை தொடங்கினார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பணியாற்றியபோது 1963இல் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தான் பணியாற்றிய இடங்களில் தமிழ் மன்றங்களை நிறுவினார்.

6.இலக்கியம், திராவிடக் கூட்டரசு, குறள்நெறி, சங்க இலக்கியம் என்பது உள்ளிட்ட பல்வேறு இதழ்களை நடத்தினார். ஆங்கில இதழ்களையும் வெளியிட்டார். சங்கப் பாடல்களை சிறுகதை வடிவிலும், ஓரங்க நாடகங்களாகவும் அறிமுகம் செய்தார். 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

7. ‘மாணவர் ஆற்றுப்படை’, ‘துரத்தப்பட்டேன்’, ‘தமிழிசைப் பாடல்கள்’, ‘என் வாழ்க்கைப் போர்’, ‘பழந்தமிழ்’, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ போன்ற தமிழ் நூல்கள், ‘தமிழ் லாங்வேஜ்’, ‘மீனிங் ஆஃப் தமிழ் கிராமர்’ என்பது போன்ற ஆங்கில நூல்களை எழுதியுள்ளார்.

8.தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் தங்களது வருகைப் பதிவை ‘யெஸ் சார்’ என்று ஆங்கிலத்தில் கூறிவந்ததை மாற்றி, ‘உள்ளேன் ஐயா’ என்று கூறவைத்தவர். இதுதான் பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பரவியது.

9. சிங்கப்பூர், மலேசியாவில் 1971இல் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தமிழகம் முழுவதும் சொற்பொழிவாற்றி, தமிழை வளர்த்தார். முத்தமிழ் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர் தளபதி, இலக்கணச் செம்மல் என்பது போன்ற ஏராளமான பட்டங்கள் இவரைத் தேடி வந்தன.

10. யாருக்கும் அடிபணியாத தன்மான உணர்வு, அஞ்சா நெஞ்சம், தமிழ் உணர்வு மிக்கவர். வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட இலக்குவனார் 64ஆவது வயதில் (1973) காலமானார்.

புதன், 2 செப்டம்பர், 2020

*🌟பிற்பட்டோர் நல இயக்ககம். -மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்-2020-21 கல்வியாண்டிற்கு +1 பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க தேவைப்பட்டியல் கோருதல் சார்பு..*

*🌟பிற்பட்டோர் நல இயக்ககம். -மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்-2020-21 கல்வியாண்டிற்கு +1 பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க தேவைப்பட்டியல் கோருதல் சார்பு..*

*பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - கணினி பயிற்றுநர் நிலை 2லிருந்து கணினி பயிற்றுநர் நிலை 1ஆக 12.02.2019 முதல் முன்கூட்டியே பதவி உயர்வு வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி ) உத்தரவு!!!*

*பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - கணினி பயிற்றுநர் நிலை 2லிருந்து  கணினி பயிற்றுநர் நிலை 1ஆக 12.02.2019 முதல் முன்கூட்டியே பதவி உயர்வு வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி ) உத்தரவு!!!*

*🌟தமிழகத்தில் 100 சதவீத கட்டணம் செலுத்த வரும் தனியார் பள்ளிகள் புகார் அளிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர்கள் தனியாக ஒரு ஈமெயில் ஐடி உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு. வேலூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை பத்திரிக்கைச் செய்தி மற்றும் வேலூர்/கடலூர்/இராணிப்பேட்டை முதன்மைக்கல்வி அலுவலர் ஜிமெயில் முகவரி.*

*🌟தமிழகத்தில் 100 சதவீத கட்டணம் செலுத்த வரும் தனியார் பள்ளிகள் புகார் அளிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர்கள் தனியாக ஒரு ஈமெயில் ஐடி உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு. வேலூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை பத்திரிக்கைச் செய்தி மற்றும் வேலூர்/கடலூர்/இராணிப்பேட்டை  முதன்மைக்கல்வி அலுவலர் ஜிமெயில் முகவரி.*

*🖥️ஆன்லைன் வகுப்புகளில் அக்கறை காட்டாத மாணவ மாணவிகள்-பெற்றோர்களுக்கு மனஉளைச்சல்.

🖥️ஆன்லைன் வகுப்புகளில் அக்கறை காட்டாத மாணவ
மாணவிகள்-பெற்றோர்களுக்கு மனஉளைச்சல்.

தமிழகத்தில் 100 சதவீத கட்டணம் செலுத்த வரும் தனியார் பள்ளிகள் புகார் அளிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர்கள் தனியாக ஒரு ஈமெயில் ஐடி உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது மேலும் புகார்கள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 100 சதவீத கட்டணம் செலுத்த வரும் தனியார் பள்ளிகள் புகார் அளிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர்கள் தனியாக ஒரு ஈமெயில் ஐடி உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது மேலும் புகார்கள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக் இடையே அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு 07.09.2020முதல் அனுமதி ! தமிழ்நாடு மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து 07.09.2020முதல்செயல்பட அனுமதி!தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக் இடையே  அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு 07.09.2020முதல் அனுமதி !

 தமிழ்நாடு மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து 07.09.2020முதல்
செயல்பட அனுமதி!
தமிழக அரசு அறிவிப்பு!

செப்டெம்பர் 2, வரலாற்றில் இன்று. பிரிட்டிஷார்,1947 இல் இந்தியாவுக்கு முழு விடுதலை அளிக்க முடிவு செய்ததை முன்னிட்டு 1946 செப்டெம்பர் 2ம் நாள் இந்தியாவில் இடைக்கால அரசு ஒன்று ஏற்படுத்தப்பட்ட தினம்.

செப்டெம்பர் 2, 
வரலாற்றில் இன்று.

 பிரிட்டிஷார்,1947 இல் இந்தியாவுக்கு முழு விடுதலை அளிக்க முடிவு செய்ததை முன்னிட்டு 1946 செப்டெம்பர் 2ம் நாள் இந்தியாவில் இடைக்கால அரசு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 

இந்த இடைக்கால அரசுக்கு  வைஸ்ராயின் நிர்வாகக் குழு (Viceroy’s Executive Council) என்று பெயரிடப்பட்டது. இதன் தலைவர் வைஸ்ராய் ஆன மவுண்ட் பேட்டன் பிரபு. துணைத் தலைவர் ஜவஹர்லால் நேரு. 

பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையில் தீவிரமாக இருந்த முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி இந்த இடைக்கால அரசில் பங்கேற்க மறுத்துவிட்டது