செவ்வாய், 8 செப்டம்பர், 2020

கல்வித் தொலைக்காட்சியில் 03.09.2020 முதல் 06.09.2020 முடிய ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் தொகுப்பு

 கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

(தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்கநிலை)

03.09.2020 முதல் 06.09.2020 முடிய


1. எட்டாம் வகுப்பு -தமிழ் -உரைநடை


2. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல் -வர்த்தகம்


3. எட்டாம் வகுப்பு -கணிதம் -இயற்கணிதம்


4. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல் -குடிமையியல்


5. ஏழாம் வகுப்பு -சமூக அறிவியல் -குடிமையியல்


6. VIII STANDARD -ENGLISH -SUPPLEMENTARY


7. எட்டாம் வகுப்பு -கணக்கு -முற்றொருமைகள்


8. மூன்றாம் வகுப்பு -சமூக அறிவியல் -நமது நண்பர்கள்



9. நான்காம் வகுப்பு -சமூக அறிவியல் -நில அமைப்புகள்


10. எட்டாம் வகுப்பு -தமிழ் -சொற்பூங்கா


11. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல் -வானிலை மற்றும் காலநிலை


12. ஆறாம் வகுப்பு -கணிதம் -எங்களின் மதிப்பீடுகள்


13. ஏழாம் வகுப்பு -கணக்கு -சேர்ப்பு பண்புகள்


14. நான்காம் வகுப்பு -கணக்கு -முப்பரிமாண வடிவங்கள்


நன்றி: கல்வி தொலைக்காட்சி

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

பள்ளிக் கல்வி - கோவிட் - 19 - பள்ளிகளில் இணைய வழி கல்வி கற்றல் - வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள்: 05.09.2020.*

*பள்ளிக் கல்வி - கோவிட் - 19 - பள்ளிகளில் இணைய வழி கல்வி கற்றல் - வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள்: 05.09.2020.*


click here

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் முன் ஆளுநர்களிடம் கருத்து கேட்பதா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் முன் ஆளுநர்களிடம் கருத்து கேட்பதா?
 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சனி, 5 செப்டம்பர், 2020

*🖥️தொடக்கக்கல்வி -2020-2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை -EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🖥️தொடக்கக்கல்வி -2020-2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை -EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  செயல்முறைகள்.*

*🌟தொடக்கக்கல்வி-ஊராட்சி /அரசு/நகராட்சி/துவக்க/நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை/சிறப்புநிலை வழங்குதல் மாவட்டக்கல்வி அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுக்க உரிய அறிவுரைகள் வழங்குதல் சார்பான தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*

*🌟தொடக்கக்கல்வி-ஊராட்சி /அரசு/நகராட்சி/துவக்க/நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை/சிறப்புநிலை வழங்குதல் மாவட்டக்கல்வி அலுவலர்கள்  துரித நடவடிக்கை எடுக்க உரிய அறிவுரைகள் வழங்குதல் சார்பான தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*

புதியகல்விக்கொள்கை குறித்து மாநில ஆளுநர்களிடம் கருத்துக்கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல்!தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும்,திராவிட முன்னேற்றக்கழகத்தின்தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அறிக்கை!

புதியகல்விக்கொள்கை குறித்து மாநில ஆளுநர்களிடம் கருத்துக்கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் 
முனை முறிக்கும் செயல்!
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும்,திராவிட முன்னேற்றக்கழகத்தின்
தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அறிக்கை!
****************************
நாடாளுமன்றம் கூடும் முன்பே புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசின் பிரதிநிதிகளான மாநில ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல்! 

மாநில உரிமைகள் குறித்தெல்லாம் கவலையற்ற அதிமுக அரசு, புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராயக் கல்வியாளர்கள் கூட இன்றி ஒப்புக்கு குழுவை அமைத்துள்ளது - குழுவின் பரிந்துரைகள் மீது பாரத்தைப் போட்டு தப்பி விடும் கண்துடைப்புத் தந்திரம் இது!

தமிழக அரசே!மீண்டும் தகுதித்தேர்வு எனும் முடிவினை திரும்பப்பெறுக!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர்.மன்றம். நா.சண்முகநாதன் கோரிக்கை!

தமிழக அரசே!
மீண்டும் தகுதித்தேர்வு எனும் முடிவினை திரும்பப்பெறுக!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர்.மன்றம். நா.சண்முகநாதன் கோரிக்கை!
*************************

மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவினை திரும்பப்பெற வேண்டும்'- நா.சண்முகநாதன் கோரிக்கை!

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மேல் செல்லாது அவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற  தமிழக அரசின் முடிவினை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: "பொதுக் கல்வித் தகுதியோடு பிளஸ் டூ, பிஏ, பி.எஸ்சி போன்றன படிப்புகளை படித்து ஆசிரியர் பணிக்கென்றே உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாண்டு ஆசிரியர் தொழில்கல்விப் பயிற்சி படித்து தேர்ச்சி பெற்று ஆசிரியர் வேலைக்கு காத்திருக்கையில், மேலும் ஒரு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பது வேதனையானதாகும்.

 

ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதிட வேண்டும் என்னும் தமிழக அரசின் அறிவிப்பானது, ஆசிரியர் பயிற்சி முடித்து பத்தாண்டு காலத்திற்கும் மேலாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் தலையில் இடியை இறக்கியதற்கு ஒப்பானதாகும். இருந்தாலும் தகுதித் தேர்வினை எழுதினார்கள். அதிலும் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் 80 ஆயிரம் பேரின் தேர்ச்சி சான்றிதழ் காலம் டிசம்பருடன் முடிவடையும் நிலையில் உள்ள பொழுது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அத்தேர்ச்சி ஏழாண்டு காலத்திற்குத்தான் செல்லுபடியாகும் என கூறுவது “பெரிய குழிவெட்டி அக்குழியில் குதிரையை குப்புறத்தள்ளி மண்போட்டு மூடியதற்கு” இணையானதாகும்.

எனவே ஆசிரியர் பயிற்சி முடித்தும்,பி.எட் படிப்பு முடித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணி நியமனம் கிடைக்கப்பெறாமல் காத்திருப்போர் குடும்பங்களின் மனநிலையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவினை முற்றிலுமாக திரும்பப்பெறவேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

https://www.nakkheeran.in/

தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித்தலைவரும்,திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் "ஆசிரியர்நாள்" வாழ்த்துச்செய்தி ...

தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித்தலைவரும்,
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் "ஆசிரியர்நாள்" வாழ்த்துச்செய்தி  ... 

'மன்னர்களிடையே ஒரு தத்துவ ஞானியாகவும்; தத்துவ ஞானிகளிடையே ஒரு மன்னராகவும் திகழ்ந்து' இந்தியத் திருநாட்டிற்குப் பெருமை சேர்த்து வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் நாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது!

அறிவார் சமுதாயத்தை உருவாக்கத் தங்கள் வாழ்நாளை வகுப்பறைகளில் அர்ப்பணித்து அரும்பாடு படும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் 'ஆசிரியர் தின' நல்வாழ்த்துகள்!

ஆசிரியர் சமுதாயத்திற்காகவும், அவர்களது நலத்திட்டங்கள் - உரிமைகளுக்காகவும் என்றைக்குமே தி.மு. கழகம் பாதுகாப்பு அரணாகத் திகழும்!

*🌟அக்டோபரில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும்-தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் தேவை-மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்.*

*🌟அக்டோபரில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும்-தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் தேவை-மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்.*

அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது! முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கருத்து...

அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது! 

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கருத்து...

புதுதில்லி , செப் . 4 நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் கைவிடப்பட்டிருப்பது . அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்று குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியுள்ளார் . 

இது தொடர்பாக இன்றைய ' தி இந்து ' நாளிதழில் கட்டுரை ஒன்றை அவர் எழுதி யுள்ளார் . அதில் அவர் கூறியிருப்பதாவது : 

இந்திய மக்களாகிய நாம் , நாமாகவே ஏற்படுத்திக்கொண்ட அரசமைப்புச்சட்டம் , நம்முடைய ஜனநாயகத்திற்காக , ஒரு நாடாளுமன்ற வடிவத்திலான அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளவும் , அதன்படி அரசாங்கம் நாடாளுமன்றம் சட்டமன்றங்கள் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குப் பதில் சொல்லக்கடமைப்பட்டது என்றும் வரையறுத்திருக்கிறோம் . அரசாங்கம் இவ்வாறு பொறுப்புடன் இருப்பது என்பதுதான் ஜனநாயக அரசாங்கத்தின் இதயமாகும் . இது நாடாளுமன்ற சட்டமன்றங்களின் நடைமுறைகள் மூலமாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது . நாடாளுமன்ற சட்டமன்றங்களின் நடைமுறைகள் என்பனவற்றில் சட்டமியற்றுதல் , நாட்டின் நிதிநிலைமைகளைக் கட்டுக்குள் வைத்தல் , வரி விதிப்புக் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் பொதுநலன் சார்ந்த பிரச்சனைகள் மீது விவாதங்கள் நடத்தல் முதலியனவுமாகும் , இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் , நாடாளுமன்றம் சட்டமன்றங்கள் நடைபெறுகையில் தினந்தோறும் அல்லது குறிப்பிட்டக் கால இடைவெளியில் , கேள்விகள் கேட்பதன் மூலமும் , ஒத்திவைப்புத் தீர்மானங்கள் கொண்டு வருவதன் மூலமும் , கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதன் மூலமும் , அரை மணி நேர விவாதம் நடத்துவதன் மூலமாகவும் , நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதன் மூலமாகவும் மற்றும் உரிமை மீறல் பிரச்சனை தொடர்பான விஷயங்களை எழுப்புவதன் மூலமாகவும் நிறைவேற்றப்படுகின்றன . 

நாட்டின் நாடியை பிடித்துப் பார்க்க 

கேள்வி நேரம் என்பது அரசாங்கத்தைப் பொறுப்பாக்கும் கருவியாகும்.

 நாடாளுமன்ற சட்டமன்றங்களின் செயல்பாடுகளில் அரசாங்கத்தை நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பொறுப்பாக்கும் கருவியில் மிகவும் முக்கியமானது கேள்வி நேரம் ' என்பதாகும் . நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளில் இதற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு . இது அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் , அது உள்நாட்டுப் பிரச்சனையாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாட்டுப் பிரச்சனையாக இருந்தாலும் சரி , கேள்விக்கு உள்ளாக்குகிறது . இதன்மூலம் நாட்டின் நாடியைப் பிடித்துப்பார்க்க அரசாங்கத்திற்கு இது உதவுகிறது . மேலும் இதன்மூலம் மக்களும் , தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் , அமைச்சர்களும் செயல்படும் விதம் குறித்தும் அறிந்துகொள்ள முடியும் . உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறும்போது தடுமாறுகிறவர்கள் அரிதாகவே மறக்கப்படுவார்கள் . 

கேள்விகள் பொதுவாக ஒரு பிரச்சனை குறித்துக் குறிப்பாகவும் , கறாராகவும் கேட்கப்படுவதால் அதன்மீது அரசாங்கத்திடமிருந்து சரியான தகவல் எதிர்பார்க்கப்படுகிறது . நம் நாடாளுமன்ற வரலாற்றில் பல கேள்விகளுக்கு அரசாங்கம் அளித்துள்ள பதில்கள் விரிவான அளவில் விவாதங்கள் நடத்திடவும் , விசாரணைகள் நடத்திடவும் , ஏன் , நிர்வாக ஊழல்களை வெளிக்கொண்டு வரவும் இட்டுச் சென்றிருக்கின்றன . 

எனவேதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அறிவார்ந்த குடிமக்கள் , நாடாளுமன்றத்தின் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் . அதனால்தான் செப்டம்பர் 14 தொடங்கும் நடைபெறவிருக்கும் மழைக்காலம் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இல்லை என்று செய்தி வெளிவந்ததும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள் , 

இதற்கு அரசாங்கத்தின் தரப்பில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று உருவாக்கியுள்ள நிலை என்று கூறப்பட்டிருக்கிறது .

பொருத்தமற்ற காரணம் 

கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டுவது பொருத்தமற்ற ஒன்று . இதனைக் கூறி , கேள்வி நேரத்தை நீக்கியிருப்பது திகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது . அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை வெட்டிக் குறைத்திருப்பதாகவே கருதப்படுகிறது . இப்போது , நட்சத்திரக் குறியல்லாத கேள்விகள் ( unstarred questions ) தொடரும் | என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது . எனவே கேள்வி நேரத்தில் நட்சத்திரக் கேள்விக்கு அமைச்சர் பதிலளிப்பதும் அதன்மீது துணைக் கேள்விகள் எழுப்பப்பட்டால் அவற்றுக்குப் பதிலளிப்பதும் இல்லை என்பது தெளிவாகி இருக்கிறது . 

ஜனநாயகத்தின் செயல்பாட்டில் தன்னைச் சோதித்துப் பார்ப்பது என்பது , நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான திறமை தன்னிடம் இருக்கிறதா என்பதற்காகவேயாகும் . அது சமூகரீதியானதாகவோ , பொருளாதார ரீதியானதாகவோ அல்லது அரசியல்ரீதியானதாகவோ இருக்கலாம் . எத்தகைய நெருக்கடியாக இருந்தாலும் அதனைச் சரிசெய்யக் கோருவதுதான் ஜனநாயக நிறுவனங்களின் கடமைகளாகும் . அவ்வாறு கோருவதைத் தவிர்க்கும் விதத்தில் ஒருவிதமான தவிர்ப்பு அரசியலை ' ( ' politics of avoidance ' ) மேற்கொள்வது , எவ்விதத்திலும் உதவிடாது . 

இப்வாறு ஹமீத் அன்சாரி குறிப்பிட்டுள்ளார். ( ந.நி. )