வியாழன், 22 அக்டோபர், 2020

அக்டோபர் 22,வரலாற்றில் இன்று.முன்னோடி தமிழ் எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா அவர்களின் நினைவு தினம் இன்று.

அக்டோபர் 22,
வரலாற்றில் இன்று.

முன்னோடி தமிழ் எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா 
அவர்களின் நினைவு தினம் இன்று.


திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் (1872) பிறந்தார். அங்கு பள்ளிப் படிப்பை முடித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதல் மாணவராகத் தேறி, அக்கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார்.

நீச்சலில் கில்லாடி. ஒருமுறை சென்னையில் போலீஸ் அதிகாரி பவனந்தம் பிள்ளையுடன் பந்தயம் கட்டி கடலில் ஒரு மைல் தூரம் நீந்தி வெற்றி பெற்றாராம். குற்றால அருவியின் உச்சியில் 3 ஆங்கிலேயர்கள் கடக்க முயன்று வழுக்கி விழுந்து இறந்த 3-ம் நாளில், அதே இடத்தில் அருவியைக் கடந்து சாதித்துக் காட்டினார்.

உப்பு சுங்க இலாகா தேர்வில் முதலிடம் பெற்றவர், ஆந்திராவின் கஞ்சம் மாவட்டத்தில் உப்பு ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். பணி நிமித்தமாக குதிரையில் பல மைல்கள் பயணம் செய்வார். குதிரை சவாரி மிகவும் பிடிக்கும்.

கடமை வீரர், கடும் உழைப்பாளி, கொடையாளி, நகைச்சுவை உணர்வு உடையவர். ‘மாதவையா களங்கமற்ற அதிகாரி. ஒரு எலுமிச்சை பழத்தைக்கூடக் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டார்’ என்பார்களாம் சக ஊழியர்கள். கர்னாடக சங்கீதம், நாட்டுப்புற இசை இரண்டையும் விரும்பிக் கேட்பார்.



இவர் பணியாற்றிய பல ஊர்களில் மருத்துவ வசதி கிடையாது என்பதால், தன் பிள்ளைகளுக்கு இவர்தான் குடும்ப வைத்தியர். மருத்துவப் புத்தகம், முதலுதவிப் பெட்டி, மருந்துகள் எந்நேரமும் அவரது வீட்டில் இருக்குமாம்.

தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். தெலுங்கும் தெரியும். 20 வயது முதல் பத்திரிகைகளுக்கு எழுதினார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். சங்க இலக்கியம் முதல் அனைத்து செவ்வியல் படைப்புகள், அரிய ஆங்கில இலக்கிய நூல்கள் என ஒரு நூலகம் வைக்கும் அளவுக்கு நூல்களை சேகரித்திருந்தார்.

இவரது நண்பர் சி.வி.சுவாமிநாத ஐயர் தொடங்கிய ‘விவேக சிந்தாமணி’ பத்திரிகையில் ‘சாவித்திரியின் கதை’ என்ற தொடரை எழுதினார். இது 1903-ல் ‘முத்துமீனாட்சி’ என்ற நாவலாக வெளிவந்தது. தனது புகழ்பெற்ற ‘பத்மாவதி சரித்திரம்’ நாவலின் முதல் 2 பகுதிகளை 1898-1899ல் எழுதினார். 1924-ல் எழுதத் தொடங்கிய 3-ம் பாகம் முழுமை அடையவில்லை.

 ‘இந்திய கும்மி’ என்ற கவிதைப் போட்டி 1914-ல் நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ பாடலுக்காக பாரதிக்கு 2-ம் பரிசு கிடைத்தது.

 ‘பஞ்சாமிர்தம்’ என்ற பத்திரிகையை 1925-ல் தொடங்கினார். நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள், ஏராளமான கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.



சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 53.

அக்டோபர் 22,வரலாற்றில் இன்று.இந்தியா நிலவை நோக்கி சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவிய தினம் இன்று(2008).

அக்டோபர் 22,
வரலாற்றில் இன்று.

இந்தியா நிலவை நோக்கி 
சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவிய தினம் இன்று(2008).

தமிழ்நாட்டின் மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் தாயார் திருமதி .இராசாமணி தங்கபாண்டியன் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் .மன்றம். திரு.நா.சண்முகநாதன் அவர்களுடன் மாநிலச்செயலாளர் திரு.முருகசெல்வராசன் அஞ்சலி செலுத்துதல்.

தமிழ்நாட்டின் மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் 
திரு.தங்கம் தென்னரசு அவர்களின் தாயார்  
திருமதி .இராசாமணி தங்கபாண்டியன் அவர்களுக்கு  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் .மன்றம். திரு.நா.சண்முகநாதன் அவர்களுடன் மாநிலச்செயலாளர் திரு.முருகசெல்வராசன் அஞ்சலி செலுத்துதல்.

பகை உணர்வோடுதமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு அன்றாடம்புதிய, புதிய பாதிப்புகளை, இழப்புகளை ஏற்படுத்தும் அரசாணைகள் வெளியிடுவதை கைவிடுக!தமிழ்நாட்டு ஆசிரியப் பெருமக்கள் காலம் காலமாக தொடர்ந்து அனுபவித்து வரும் உரிமைகளை பறிப்பதை கைவிடுக!தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!

பகை உணர்வோடு
தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு  அன்றாடம்
புதிய, புதிய பாதிப்புகளை, இழப்புகளை ஏற்படுத்தும் அரசாணைகள் வெளியிடுவதை கைவிடுக!

தமிழ்நாட்டு ஆசிரியப் பெருமக்கள் 
காலம் காலமாக தொடர்ந்து அனுபவித்து வரும் உரிமைகளை பறிப்பதை கைவிடுக!

தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!

தமிழ்நாட்டு ஆசிரியப்பெருமக்களின் மீதுபழிவாங்கும் வகையில் பொய்யாக சோடிக்கப்பட்ட குற்றவியல் வழக்குகளை ,ஒழுங்கு நடவடிக்கைகளைமுற்றாக திரும்பப்பெறுக!தமிழ்நாடுதொடக்கப் பள்ளி ஆசிரியர்மன்றம் வேண்டுகோள்!

தமிழ்நாட்டு ஆசிரியப்பெருமக்களின் மீது
பழிவாங்கும் வகையில் பொய்யாக சோடிக்கப்பட்ட குற்றவியல் வழக்குகளை ,
ஒழுங்கு நடவடிக்கைகளை
முற்றாக திரும்பப்பெறுக!


தமிழ்நாடு
தொடக்கப் பள்ளி ஆசிரியர்மன்றம் வேண்டுகோள்!

தமிழக அரசே!உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை ஆசிரியப் பெருமக்களுக்கு தொடர்ந்து வழங்குக!தமிழ்நாடுதொடக்கப் பள்ளி ஆசிரியர்மன்றம் வேண்டுகோள்!

தமிழக அரசே!
உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை 
ஆசிரியப் பெருமக்களுக்கு தொடர்ந்து வழங்குக!

தமிழ்நாடு
தொடக்கப் பள்ளி ஆசிரியர்மன்றம் வேண்டுகோள்!

10.03.2020 க்கு முன்னர் அதாவது 09.03.2020 வரை உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் - ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*

10.03.2020 க்கு முன்னர் அதாவது 09.03.2020 வரை உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் - ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

புதன், 21 அக்டோபர், 2020

முன்னாள்பள்ளிக்கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களின் தாயார் திருமதி .இராசாமணி தங்கபாண்டியன் 20.10.2020 நினைவேந்தல் நிகழ்வுகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  மாநிலத் தலைவர் திரு .நா.சண்முகநாதன் ,மாநிலச்செயலாளர் திருமுருகசெல்வராசன்,மாநில அமைப்புச் செயலாளர் கோ. சிவக்குமார், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் திரு.சீனி. சின்னசாமி, புதுக்கோட்டை மாவட்டச்செயலாளர் திரு .கே.செல்வராசன், தேனி மாவட்ட செயலாளர் திரு ராஜவேல் மற்றும் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி சிவகங்கை திருச்சி மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 20.10.2020அன்று முன்னாள்பள்ளிக்கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களின் தாயாரின்திருமதி .
இராசாமணி தங்கபாண்டியன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

🌟ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளில் இருந்து ஆயுட்காலமாக (Life Time) மாற்றிட NCTE பொதுக்குழு கூட்டத்தில் முடிவு !!!.

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளில் இருந்து ஆயுட்காலமாக (Life Time) மாற்றிட NCTE பொதுக்குழு கூட்டத்தில் முடிவு !!!.*

NCTE பொதுக்குழு கூட்ட முடிவுகளைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.
click here.

அக்டோபர் 21,வரலாற்றில் இன்று.உலகின் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசை உருவாக்கியவரும் ஸ்வீடன் நாட்டு அறிவியலாளருமான ஆல்ஃபிரெட் நோபல் (Alfred Bernhard Nobel) பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 21,
வரலாற்றில் இன்று.


உலகின் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசை உருவாக்கியவரும் ஸ்வீடன் நாட்டு அறிவியலாளருமான ஆல்ஃபிரெட் நோபல் (Alfred Bernhard Nobel) பிறந்த தினம் இன்று. 
 ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் பிறந்தார் (1833). தந்தை கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியியலாளர். இதனால் இயல்பாகவே இவருக்கும் பொறியியலில் குறிப்பாக வெடிபொருட்கள் தொழில்நுட்பத்தில் ஆர்வம் இருந்தது. ராயல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் இவருக்கு கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்தது.

தந்தையுடன் இணைந்து ஆய்வகத்தில் பரிசோதனைகளில் உதவினார். இவரது தந்தை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்று அங்கு இயந்திர கருவிகள் மற்றும் வெடி உற்பத்தியாளராக வெற்றிகரமாகத் திகழ்ந்தார். எனவே தன் மகனை தனிப்பட்ட முறையில் பல ஆசிரியர்களிடம் அனுப்ப முடிந்தது.

இதனால், வேதியியல் மற்றும் மொழிகளில் சிறந்து விளங்கினார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி மற்றும் ரஷ்ய மொழிகளில் சிறந்து விளங்கினார். 1850-ல் பாரீஸ் சென்றார். 18 வயதில் கண்டுபிடிப்பாளர் ஜான் எரிக்சன் என்பவரின் கீழ் சிறிது காலம் பணிபுரிந்தார். அமெரிக்காவில் 4 ஆண்டுகள் வேதியியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

1857-ல் எரிவாயு மீட்டர் குறித்த தனது கண்டுபிடிப்புகளுக்கான முதல் காப்புரிமையை பெற்றார். குடும்பம் மீண்டும் ஸ்வீடன் திரும்பியது. இவர் வெடிபொருட்கள் குறித்த ஆய்வில் முழு மூச்சாக ஈடுபட்டார். குறிப்பாக நைட்ரோகிளிசரினின் பாதுகாப்பான உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் அதிக ஆர்வம் காட்டினார். 1863-ல் வெடி மருந்தைக் கண்டுபிடித்தார்.

பல சிறிய பெரிய விபத்துகளை சந்தித்தாலும் மனம் கலங்காமல் தன் கண்டுபிடிப்புகளின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த தொழிற்சாலைகளை உருவாக்கினார். பல முயற்சிகளுக்குப் பிறகு நைட்ரோகிளிசரினை விட எளிதாகக் கையாளக் கூடிய மற்றும் பாதுகாப்பான டைனமைட்டையும், சேஃப்டி பவுடரையும் 1867-ல் இவர் கண்டுபிடித்தார்.

இதற்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றார். 1875-ல் டைனமைட்டை விட மேலும் ஸ்திரத்தன்மை வாய்ந்த பிளாஸ்டிக் ஜெலட்டினைக் கண்டுபிடித்தார். சிறிய ஆயுதங்களுக்குத் தேவைப்படும் புகை வெளியிடாத பாலிஸ்டைட் வகை கன் பவுடரையும் கண்டுபிடித்தார். ஆயுதத் தயாரிப்பாளராகவும் விளங்கினார்.

இவரது கண்டுபிடிப்புகள் மூலம் அளவற்ற செல்வத்தை ஈட்டினார். போஃபர்ஸ் என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளரானார். இவரது நினைவாக நோபலியம் என்று ஒரு தனிமத்துக்கு பெயரிடப்பட்டது. எண்ணெய் கிணறுகளில் முதலீடு செய்ததன் மூலமும் ஏராளமான செல்வத்தை குவித்தார்.

 சர்வதேச அளவில் 350 காப்புரிமைகளைப் பெற்றார். சமாதானத்தைப் பெரிதும் விரும்புபவராக இருந்தாலும், இவரது மரணத்துக்கு முன் 90 ஆயுத தொழிற்சாலைகளை நிறுவினார். இதனால் இவரை ‘மரணத்தின் வியாபாரி’ என்று கூட பலர் குறிப்பிட்டனர். 1884-ல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமியில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது கடைசி உயிலின் மூலம் தான் ஈட்டிய செல்வத்தில் பெரும் பகுதியை தன் பெயரிலான அறக்கட்டளைக்கு வழங்கினார்.

இதன் மூலம் கிடைக்கிற வருவாயைக் கொண்டு வேதியியல், இயற்பியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளில் சிறப்பான சேவைகளையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்துபவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.

உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த அறிவியலாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவும் புகழடையவும் காரணமாக இருந்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட ஆல்ஃபிரெட் நோபல் 1896-ல் பெருமூளை ரத்தக் கசிவு காரணமாக 63ஆவது வயதில் காலமானார்.